Thiruchchikkaaran's Blog

இலவச ஏர் கண்டிசனர் அல்லது பிரிட்ஜ் ….மாணவர்களுக்கு இலவச ஸ்போர்ட்ஸ் கார் …., கைக் குழந்தைகளுக்கு கதை சொல்லி சோறூட்டி விட தனி ஆயாக்கள் வீட்டுக்கு வருவார்கள் ….2021 தேர்தலில் பாசிபிள் வாக்குறுதிகள்!

Posted on: March 20, 2011


நாம கட்சி அமைத்து தேர்தலில் நின்றால் எந்த வகையான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கலாம்,  என நண்பர்களிடம் கேட்ட போது அவர்கள் இலவசமாக வழங்கிய ஆலோசனைகள்:

1) இலவச ஏர் கண்டிசனர் அல்லது பிரிட்ஜ் ….

File:Juliesfridge.jpg

2) மாணவர்களுக்கு இலவச ஸ்போர்ட்ஸ் கார் ….

File:LotusSuper7.jpg

3) எல்லா தொலைக் காட்சிகளையும் மக்கள் கண்டு களிக்கும் வகையில் கேபிள் அல்லது டி.டி.ஹெச் க்கான கட்டணத்தை அரசே அந்தந்த நிறுவனங்களுக்கு செலுத்தி விடும்……

4) மாணவர்கள் அட்டென்டன்சை தங்கள் கல்லூரியில் செலுத்தலாம்,  அல்லது தியேட்டர் டிக்கட் கவுண்டரிலோ அல்லது பெண்கள்  கல்லூரி வாசலிலோ செலுத்தலாம்.

5)தேர்வு கட்டாயம் இல்லை. மாணவர்கள் அவரவர் விருப்பமிருந்தால் பரிட்சை எழுதிக் கொள்ளலாம். மாணவர்கள் வினாத் தாளைத் தயாரிக்க ஆசிரியர் ஒவ்வொரு மாணாக்கருக்குமாக தானே பரீட்சை எழுதுவார்.

6)சரக்கடிக்கும் குடி மகன்கள் தள்ளாடி வழியி லே விழுவதால், சில பல  இடையூறுகள் உருவாகின்றன.  அவருக்கும், அவர்தம் அன்புக் குடும்பத்துக்கும் அவர் வாழ வேண்டியதாக உள்ளதால் , வீட்டுக்கு, நாட்டுக்கு நனமை செய்யும் வகையிலே சரக்கு  டோர் டெலிவரி செய்யப் படும். சரக்குக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும்.. டோர் டெலிவரி  இலவசம்.

7) மீனவர்களை சிங்களன் சுட்டுத் தள்ளுவதால், மீன்களை தரையிலே வளர்க்கும் விதமாக , செதில்கள் மூலமும் , நுரையீரல்  மூலமும் சுவாசிக்கும் ஹைபிரிட் மீன்களை உருவாக்க மீன் வளர்ச்சித் துறை ஆராய்ச்சி மேற்கொள்ளும்…….

Advertisements

3 Responses to "இலவச ஏர் கண்டிசனர் அல்லது பிரிட்ஜ் ….மாணவர்களுக்கு இலவச ஸ்போர்ட்ஸ் கார் …., கைக் குழந்தைகளுக்கு கதை சொல்லி சோறூட்டி விட தனி ஆயாக்கள் வீட்டுக்கு வருவார்கள் ….2021 தேர்தலில் பாசிபிள் வாக்குறுதிகள்!"

//சரக்கடிக்கும் குடி மகன்கள் தள்ளாடி வழியி லே விழுவதால், சில பல இடையூறுகள் உருவாகின்றன// அதனால் ஒவ்வொரு குடிமகன்கள் பின்னாடியும் இலவச தள்ளுவண்டிகள் பாடிகார்டுகளுடன் அனுப்பப்படும். கேழே விழுந்துவிட்டால் அவர்களை அதே வண்டியில் தூக்கிப் போட்டு இலவசமாக குடிமகன்ள் டோர் டெலிவரி செய்யப்படுவார்கள்.

//மாணவர்கள் அட்டென்டன்சை தங்கள் கல்லூரியில் செலுத்தலாம், அல்லது தியேட்டர் டிக்கட் கவுண்டரிலோ அல்லது பெண்கள் கல்லூரி வாசலிலோ செலுத்தலாம்// கட் அடிக்கும் மாணவர்களுக்கு சினிமா டிக்கெட்டுகள் இலவசமாக அரசே வாங்கிக்கொடுக்கும்.

ஓகே இராம், மிக்க நன்றி.

சினிமா டிக்கட்டுகளை அரசு வாங்கி அவற்றை மாணவருக்கு இலவசமாக உபயோகித்தால், ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக மாணவருக்கு சலுகையாக அமையும், ஓடாத படங்களை ஓட்டி கலைத்துறைக்கு செய்த சேவையாகவும் இருக்கும்.
உங்களின் மிகச் சிறந்த இலவச ஆலோசனைக்காக உங்களுக்கு ”கலைத்துறையை வாழ வைத்த பதிவரு”க்கான விருதை வழங்குகிறோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: