Thiruchchikkaaran's Blog

மம்தா பானர்ஜி கம்யூனிஸ்ட்டுகளை வெல்வாரா? மொத்தமுள்ள 294 தொகுதியில், 64 மட்டுமே காங்கிரசுக்கு!

Posted on: March 19, 2011


தமிழ் நாட்டில்   உள்ள 234  தொகுதிகளில், 63 தொகுதிகளை கூட்டணியில் பெற்ற காங்கிரஸ், வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் நூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளைப் பெறலாம் என மனப்பால் குடித்தது.

வெறும் 64 சீட்டுகளை மட்டுமே கொடுத்து விட்டு தன்னுடைய வேட்பாளர் பட்டியலையும் அறிவித்து விட்டார் மம்தா பானர்ஜி.

அந்த 64ல் பாதி இடங்கள் திரிணமுல் காங்கிரஸ் கூட்டணி  வெல்லவே முடியாத இடங்கள் என கருதப்படுபவை.  காங்கிரசுக்கு செல்வாக்கு உள்ள கொல்கொத்தாவில் ஒரு இடம் கூட மம்தா கொடுக்கவில்லை.

இப்போது காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்! குடுத்த சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டு போட்டி இடுமா? அல்லது கூட்டணியில் இருந்து விலகி தனியாக போட்டி இட்டு மண்ணைக் கவ்வுமா? அல்லது மம்தாவை சரிக் கட்ட வாய்ப்பு எதுவும் உள்ளதா என்று தெரியவில்லை!

தனியாய் வாழ்ந்து வரும் செல்வி மம்தா பானர்ஜி, தன்னுடைய மாமன், மச்சான், சகோதரி, அத்தை, பாட்டி …… என வண்டி கொள்ளாத அளவுக்கு உறவினர்களை அரசியலில் கொண்டு வரவோ அவர்களை முக்கிய பதவிகளில் நிறுத்தவோ இல்லை.

இப்படியான சூழ்நிலையில் மம்தாவை   எப்படி சமாளித்து அதிக சீட்டுக்களைப் பெறவது என்று காங்கிரஸ் காரியக் கமிட்டி தலைகள் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றன.

Advertisements

1 Response to "மம்தா பானர்ஜி கம்யூனிஸ்ட்டுகளை வெல்வாரா? மொத்தமுள்ள 294 தொகுதியில், 64 மட்டுமே காங்கிரசுக்கு!"

இலவசம் என்கிற தூண்டில் போடப்பட்டு விட்டது எச்சரிக்கை எச்சரிக்கை.

http://hayyram.blogspot.com/2011/03/blog-post_19.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: