Thiruchchikkaaran's Blog

சங்கராச்சாரியாரின் கோட்பாடுகளை மடங்களுக்குள் முடக்கினார்களா?

Posted on: March 17, 2011


பிறந்தது முதல் இறப்பது வரை பல்வேறு வகையான இன்னல்களுக்கு ஆளாகிறோம். இன்னல்களுக்கு ஒட்டு மொத்த தீர்வு  ஒருவர் தன் உண்மை இயல்பை, முழு விடுதலை உடையவராக இருப்பதை அறிவதுதான் என்பதை ஆணித் தரமாக சொல்லி இருக்கிறார் சங்கராச்சாரியார். 

 மயக்கத்தினாலே ஒருவன் தன் உண்மை நிலையை உணராமல் இருக்கிறான் என்றும் , விழிப்புணர்வே பெற்று தன்னை ஒருவன் உணர்வதாலேயே அவன் விடுதலை பெறுகிறான் என்பதாகவும் சொல்லுகிறார்.

அவ்வாறு செய்யாமல் இன்னும் இன்னும் மயக்கத்தில் சிக்கி , ஆசை வலையில் மூழ்குவது, ஒருவனுக்கு சிக்கலை அதிகமாக்கவே செய்யும் என்பது அவரது கருத்து.

                             

தன்னுடைய கோட்பாடுகளை தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் பம்பரம் போலச் சுற்றிச் சுழன்று பரப்பினார் சங்கராச்சாரியார். பதினாறு  வருட காலத்தில் தான் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவும் செய்தார். தன்னுடைய கொள்கைகளை பரப்ப  நான்கு மடங்களையும் அமைத்தார். 

இவ்வளவு முக்கியமான கோட்பாடுகளை அவருடைய சீடர்களாக சொல்லிக் கொண்டவர்கள் எந்த அளவுக்கு மக்களிடையே பரப்பினார்கள்? 

சங்கராச்சாரியார் செயல் பட்ட வேகத்தில் செயல் பட்டு இருந்தால் இன்றைக்கு உலகில் எல்லோரும் சங்கராச்சாரியாரின்  கோட்பாடுகளை அறிந்திருக்க வேண்டும். அதனால் அவர்களுக்கு மன நிம்மதி கிடைத்திருக்க கூடும், அமைதி நிலவி இருக்க கூடும்!

சங்கராச்சாரியாரின் கருத்துக்களை உலகில் எல்லாரிடமு ம்  பரப்புவது என்றால், உலகில் உள்ள எல்லோரையும் இந்து மதத்திற்கு மாற்றுவது என்று அர்த்தம் இல்லை, சங்கராச்சாரியார் இப்படி சொல்லி இருக்கிறார், இதைக் கேட்பதால் , புரிந்து கொள்வதால் உங்களுக்கு நன்மை, அமைதி கிட்டுமானால் அது அவர்களுக்கு உதவட்டும் என்ற வகையிலாவது செயல் பட்டார்களா?

சங்கராச்சாரியாரிடம் நேரடியாக பழகும் வாய்ப்பு பெற்ற அவரது நான்கு முக்கிய சீடர்கள் -சங்கராச்சாரியாரால் நிறுவப் பட்ட 4   மடங்களின் ஆசிரியராக இருந்தவர்கள் – அவரைப் போலவே சுறுசுறுப்புடன் செயல்  பட்டதாகவே கருதலாம். ஆனால் காலப் போக்கில் இந்த மடங்கள் சடங்குகளுக்கும், வேள்விகளுக்கும் முக்கியத்துவம் குடுப்பவையாக ஆகி விட்டன.

எனவே பெரும்பாலான இந்துக்களுக்கு இந்த மடங்கள் இருப்பதே தெரியாமல் போய் விட்டது.  இன்றைக்கு இந்துக்களிடம் போய், ஆதி சங்கரர் நிர்மாணித்த  மடங்கள் எவை என்று கேட்டால், அவர்கள் பதிலுக்கு, ஆதி சங்ககரர்னா யாருங்க என்று  கேட்டால் வியப்பில்லை.

நீங்கள் விடாமல், “அதாங்க, சங்காராச்சாரியார்” என்று சொன்னால், “ஓ ஜெயேந்திரரா” என்று கேட்டாலும் வியப்பதற்கில்லை. 
 

அந்த அளவுக்கு ஆதி சங்கரர் என்றால யார் என்று தெரியாமலும், சங்கராச்சாரியார் என்றால் ஜெயேந்திரர் என்று சொல்லக் கூடிய நிலைமையிலே கொண்டு வந்து விட்டதும்தான் நான்கு மடங்களும் கடந்த 1200 வருடங்களாக செய்த மாபெரும் சாதனை.

இத்தனைக்கும் சங்கராச்சாரியார் (ஆதி சங்கரர்) இருந்திருக்கவில்லை என்றால்  இன்றைக்கு இந்து மதம் என்பது பாரசீகரின் சொராஸ்டிரிய  மதம் போல , மிகச் சிலரால் மட்டுமே பின்பற்றப் படுகிற, தேடி பிடிக்க வேண்டிய மதமாகவே இருந்திருக்கும்.  

எல்லா உயிரகளையும், இயற்கையையும் சிநேக பாவத்துடன் நட்புடன் அணுக சொல்லும்,  மனதிலே கருணை நிரம்பி உடையவராக இருக்க சொல்லும் , வெறுப்புணர்ச்சி  இல்லாமல்  எல்லாவற்றையும் அணுகும் மனப் பாங்கை யும்  சொல்லும் ஒரு மதம் இல்லாமலே போயிருக்கக் கூடும்.

அப்படிப் பட்டவரின் கோட்பாடுகளை எல்லோருக்கும் சொல்லி அன்பு வழியில், அறிவின் வழியில் உலகில் அனைவரையும் இணைக்க வேண்டிய பொறுப்பில் இருந்தவர்கள், மடங்களுக்குள் முடங்கிக் கொண்டார்கள்.

பணக்காரர்கள்    மடாதிபதிகளை எளிதில் பார்க்க முடியும் , மற்றவர்கள் அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது என்ற நிலையை உருவாக்கி விட்டனர்.

 பிராமணர்கள் என அழைக்கப் படுபவர்கள்  மட்டுமே மடங்களிலே  அதிகமாக வந்து போகும் படியாக ஆகி விட்டது.

இந்த நிலையிலே சங்கராச்சாரியார் நிறுவிய நான்கு  மடங்கள் மட்டும் அல்லாமல் இன்னும் பல மடங்கள் சங்கரர் பேரால் நிறுவப் பட்டன. அதில் எந்த தவறும் இல்லை, யார் வேண்டுமானாலும் சங்காரச்சாரியார் பேரால் மடம் ஆரம்பிக்கலாம்,  ஆனால் சங்கரரின் கோட்பாடுகளை உணர்ந்து கொண்டு ஆரம்பிக்க வேண்டும்.  இது முக்கியம், சங்ககரர் என்ன சொன்னார், எதற்காக சொன்னார் என்று உணராமல், வெறுமனே மடம் ஆரம்பித்து உபயோகம் இல்லை.

ஆனால் கழகம் என்று போட்டு கட்சி ஆரம்பிப்பது போல சங்கர மடம்  என்று போட்டு  சில பல மடங்கள்  என்று ஆரம்பிக்கப் பட்டது.

வெறுமனே அம்மாஞ்சிக்  கதைகளை உபன்யாசமாக  சொல்லிக் கொண்டு, காவித் துணியை தலையிலே சுற்றிக் கட்டிக் கொண்டவர்களை எல்லாம் பத்திரிகைகள் ஆஹா, ஓஹோ  என்று பில்ட் அப் கொடுத்து தங்கள் சர்க்குலேஷனை அதிகப் படுத்திக் கொண்டனர்.

இதிலே புதுப் புயலாக வந்த சிலர் நிர்வாகம்,   அரசியல் , பொருளாதாரம், சொத்துக் குவிப்பு என்று கழக பாணியிலேயே கலக்கினார்கள்.

மொத்தத்திலே ஆதி சங்கரரின் ஆன்மீகம் பின்னுக்குத் தள்ளப் பட்டு விட்டது.

இதை எடுத்து சொன்னால் “நீ விவரம் புரியாத ஆளாக இருக்கிறாய், பிராக்டிகலா தின்க்  பண்ணு” என்று உபதேசம் செய்தனர். ஆதி சங்கரர் அந்தக் காலத்தில் அப்படி செயல்  பட்டார் , இப்ப எல்லாம் இப்படி தான் செய்யணும் என்கின்றனர்.

அப்படியானால் இந்தக் காலத்தில் மனிதர்கள் துன்பத்தில்  துடியாத உறுதியான மன  வலிமை உடையவர் ஆகி விட்டார்களா? இண்டர்நெட்டும், மொபைலும், சொகுசுக் காரும்  மனிதனின் மனதில் அமைதியை , அன்பை உருவாக்குவதில் வெற்றி பெற்று விட்டனவா?  அப்ப கிருஷ்ணர், புத்தர், சங்கரர் … இவர்கள் எல்லாம் அவுட் டேட்டட் ஆகி விட்டனரா என்றால்,

அதைதான்  சொல்றோம் ஒனக்கு புரியவே இல்லை, நீ அந்தக் காலத்தையே பேசற என்கிறார்கள்.

அதாவது ஆச்சாரியாள், ஆச்சாரியாள என்று பலர் அங்க வஸ்திரத்தை அவிழ்த்து இடுப்பிலே கட்டிக் கொண்டு ஓடி வர, பில்லியநேர்களும், அரசியல்வாதிகளும் தன்னை சந்திக்க காத்திருக்க எல்லாவற்றையும் மேனேஜ் பண்ணும் குருவுடன் நீ சரணாகதி அடைந்து விட்டால் உனக்கு கஷ்டம் இல்லை என்பதுதான் இவர்களின் ஆன்மீகம்.

ஆனால் அது சரியா?

(தொடரும்)

சங்கராச்சாரியாரின் கோட்பாடுகளை மடங்களுக்குள்   முடக்கினார்களா.

 

Advertisements

2 Responses to "சங்கராச்சாரியாரின் கோட்பாடுகளை மடங்களுக்குள் முடக்கினார்களா?"

நீ விவரம் புரியாத ஆளாக இருக்கிறாய், பிராக்டிகலா தின்க் பண்ணு” /

விவரமான ஆளுதான்னு காட்டுங்க தோழர்.

/அதாவது ஆச்சாரியாள், ஆச்சாரியாள என்று பலர் அங்க வஸ்திரத்தை அவிழ்த்து இடுப்பிலே கட்டிக் கொண்டு ஓடி வர, பில்லியநேர்களும், அரசியல்வாதிகளும் தன்னை சந்திக்க காத்திருக்க எல்லாவற்றையும் மேனேஜ் பண்ணும் குருவுடன் நீ சரணாகதி அடைந்து விட்டால் உனக்கு கஷ்டம் இல்லை என்பதுதான் இவர்களின் ஆன்மீகம்./

எல்லாத்தையும் சுத்தி சுத்தி அடிக்கிறீங்க.

எனக்கு ஒரு கேள்வி நீங்கள் ஆத்திகரா? இல்லை நாத்திகரா?

தொடருங்கள் உங்கள் பணியை

அன்புக்குரிய திரு. சங்கர் அவர்களே, உங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

//எனக்கு ஒரு கேள்வி நீங்கள் ஆத்திகரா? இல்லை நாத்திகரா?//

நான் ஆத்திகனும் இல்லை, நாத்தீகனும் இல்லை, நான் உண்மையை தேடும் ஆராய்ச்சியாளன்.

https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/16/rationalism/ இக்கட்டுரையையும் படிக்குமாறு கோருகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: