Thiruchchikkaaran's Blog

இந்துக்களுக்கு, இந்து மத்தைப் பற்றி தெரியவில்லையா?

Posted on: March 17, 2011


பெரும்பாலான இந்துக்கள் இந்து மதம் சம்பந்தமான எந்த ஒரு நூலையும்  படித்து தேர்ச்சி  பெறுவதில்லை. தங்கள்  மதத்திற்கு என்று ஒரு நூல், அதை  அப்படியே ஏற்றுக் கொண்டு அடி பணிய வேண்டும் … என்பது போன்ற நிர்ப்பந்தங்கள் எல்லாம் இந்து மதத்தில் இல்லை.

அப்ப எப்படித் தான் ஒரு இந்து, இந்து மத்தைப் பற்றித் தெரிந்து கொள்கிறான். ஒரு இந்து தன் பெற்றோரிடம் இருந்து, தன் அண்ணன், அக்காளிடம் இருந்து உறவினர்களிடம் இருந்து, நண்பர்களிடம் இருந்து தான் பெற்ற சிந்தனைகளால் இந்துவாக இருக்கிறான்.

File:HinduDevoteeNepal.jpg

ஒரு இந்துவின் பெற்றோர் அம்மனையோ, முருகனையோ, கண்ணனையோ… கடவுளாக காட்டி, கும்பிட்டுக்க என்கிறார்கள். தான் காட்டும் கடவுளைத் தவிர பிற வடிவத்தில்  கடவுள் இல்லை என்றோ, வேறு வடிவத்திலோ , வடிவமற்ற முறையிலோ கடவுளைக் கும்பிடக்கூடாது, அப்படிக் கும்பிடும் முறைகளை வெறுத்து கண்டித்து ஒழிக்க வேண்டும் என்கிற சகிப்புத் தன்மை அழிப்புக் கோட்பாட்டை ஒரு இந்து பெறுவது    இல்லை.

இந்து மதத்தின் மிக  முக்கிய நூல்களில் ஒன்றாக கருதப்படும் பகவத் கீதையில் சொல்லப் பட்ட ஒரு செய்யுளை இங்கே

//அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)

சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன் )

நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )

ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

ஸந்துஷ்ட: ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

யோகி (யோக நெறியில் நிற்பவன்)

யதாத்மா (அமைதியான ஆத்ம நிலையில் நிற்பவன்)

த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )

ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்).//

இந்தக் கருத்துக்களைப் பெரும்பாலான இந்துக்கள் படித்து தெரிந்து கொள்வது இல்லை, ஆனால் ஒரு இந்து படிக்காமலே , கேட்காமலே, இந்து மதத்தின் முக்கியக் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறான்.

மேலே குறிப்பிடும் சிந்தனைகளை, செயல் பாட்டை எந்த அளவுக்கு ஒருவன் கடைப் பிடிக்கிறானோ அவன் அந்த அளவுக்கு இந்து தன்மை உள்ளவனாக இருக்கிறான் என்கிறதை   என்னுடைய பாயின்ட் ஆப் வியூவாக இங்கே சொல்கிறேன்.

இந்த சிந்தனைகளை ஒருவர் நூல்களைப்  படிப்பதன் மூலம் மாத்திரமே பெற முடியும்  என்று அவசியம் இல்லை.

Advertisements

3 Responses to "இந்துக்களுக்கு, இந்து மத்தைப் பற்றி தெரியவில்லையா?"

எல்லா மதத்திலேயும் இதே பிரச்னைதாங்க..

அருமையான வாழ்வியல் விளக்கங்கள் தான்.. ஆனா மத வெறியானது அவற்றை மறக்கடிக்க செய்யுது…

நல்ல கருத்துகள்..

/ஆனால் ஒரு இந்து படிக்காமலே , கேட்காமலே, இந்து மதத்தின் முக்கியக் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறான்./

சில‌ மதத்தவர் படித்தும் , [யாராவது உங்களைப் போல் கூறினால்] கேட்டும், அந்த‌ மதத்தின் முக்கியக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதில்லை.

நண்பர்கள் jmms மற்றும் சங்கர் ஆகியோருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் பின்னூட்டங்கள் சிந்தனையைத் தூண்டுபவையாக உள்ளன.

//சில‌ மதத்தவர் படித்தும் , [யாராவது உங்களைப் போல் கூறினால்] கேட்டும், அந்த‌ மதத்தின் முக்கியக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதில்லை.//

படிப்பதாலோ, கேட்பதாலோ உருவாகும் உணர்ச்சியை விட ஒருவர் அதைப் பின்பற்றுவதைக் காணும் போது உருவாகும் உணர்ச்சி ஒருவரை மற்றக் கூடியதாக உள்ளது.

உதாரணமாக உலக அரசியல் சிந்தனையாளர்கள் மத்தியில் காந்தியின் அஹிம்சைக் கோட்பாடுகள் முக்கிய இடம் பிடித்து விட்டன. குறிப்பாக மேலை நாடுகளில் காந்தியின் அரசியல் மிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு புகழப் படுகிறது. காந்தி வெறுமனே புத்தகங்களை எழுதி பிரச்சாரம் செய்து இருந்தால், இந்த விளைவு உருவாக்கி இருக்குமா என்பது ஐயமே. அவர் வாழ்ந்து காட்டினார்.

அதைப்போல ஆன்மீகத்திலும் வாழ்ந்து காட்டக் கூடிய ஆன்மிக ஞானிகள் இன்றைய தேவையாக உள்ளனர். தியாகராஜ சுவாமிகள், சுவாமி விவேகானந்தர், பட்டினத்தார், அப்பர், சங்கராச்சாரியார், இராமானுஜர், சாக்ரடீஸ், இயேசு கிறிஸ்து, புத்தர், அசோகர், அக்பர் ,,,இவர்களைப் போல இன்றைக்கு வாழ்ந்து கட்டினால் மக்கள் மனதில் அது மற்றங்களை உண்டு பண்ணும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: