Thiruchchikkaaran's Blog

“மேலை நாட்டில் ஒரே ஆபாசம்”, மதப் பிரச்சாரகர் மன வருத்தம், இந்தியாவிலே மக்கள் கருணையும் பக்தியும் உள்ளவராக உள்ளனர் என்று ஆறுதல்!

Posted on: March 16, 2011


மதப் பிரச்சாரகரும் , கல்வி நிறுவனங்களை  நடத்துபவருமான திரு. பால் தினகரன் கல்கி இதழுக்கு அளித்த பேட்டி என்பதாக tamilchristians.com  தளம் கட்டுரை வெளியிட்டு உள்ளது.

அதில் ஒரு பகுதியை இங்கே கீழே மேற்கோள் காட்டி இருக்கிறோம்.

//யதார்த்த வாழ்வில் பிரார்த்தனையின் பங்கு என்ன? தனி மனித ஆறுதலுக்கு வேண்டுமானால் பயன்படலாம் – நாட்டு வளர்ச்சிக்கு இது என்ன செய்யக்கூடும்? எல்லாவற்றுக்குமா பிரார்த்தனை?

நான் உலக நாடுகள் முழுக்கப் பயணப்பட்டுவிட்டேன். ஐரோப்பிய, கனடா நாடுகளில் பிரார்த்தனை என்றால் சிரிப்பார்கள். பல நாடுகளில் கடவுள் நமக்குத் தேவையில்லை என்ற கருத்து பரவி வருகிறது. காலை எழுந்தது முதல் படுக்கப்போகும் வரை ரேடியோ, டி.வி.யில் ஆபாசம்… ஆபாசம்தான். இந்தியாவில்தான் ஊடகங்களில் பக்திப் பாடல்கள் காலையும் இரவும் ஒலிக்கிறது. பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றியதுகூட இந்திய மக்களின் இறைபக்திதான் – அது கிறிஸ்துவாக இருக்கட்டும். கிருஷ்ணனாக இருக்கட்டும். இந்த இறை பக்தி, பயபக்திதான் நம்மை உலக நாடுகளுக்கான கருணை தரும் நாடாக மாற்றும். அனைத்துக்குமான அரிய மருந்து பிரார்த்தனைதான்.”//

 

http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=5&topic=2006&Itemid=287

 

என்று  பால் தினகரன் பேட்டி யில் சொல்லியதை சிவப்பு  வண்ண எழுத்துக்களில் தந்து இருக்கிறோம்.

பல்லாயிரம் வருடங்களாக  ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்  படும் என்கிற கோட்பாட்டைப் பின்பற்றி வாழ்ந்த மக்கள் இந்திய மக்கள்.

ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சாகும் வரை அவளுடன் நேர்மையான குடும்ப வாழ்க்கை நடத்துவதுதான் இன்றும் பெரும்பாலான இந்தியர்கள்  பின்பற்றும் வாழ்க்கை முறை, பண்பாடு , கலாச்சாரம் எல்லாம்.

இதே கோட்பாட்டையே இயேசு கிறிஸ்து தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்க கூடாதே என்றார்

ஒரு பெண்ணைத் தவறான எண்ணத்துடன் நோக்கினாலேஅவளுடன் விபச்சாரம் செய்தாயிற்று என்றார் இயேசு கிறிஸ்து.

இயேசு கிறிஸ்துவின் பிரச்சாரம் செய்த பெரும்பாலான கோட்பாடுகள் இந்திய சமூகத்தினர் பல்லாயிரம் வருடங்களாக பின்பற்றி வந்த கோட்பாடுகளாகவே உள்ளன, எனவே இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார், நாம் அவரோடு இருக்கிறோம், அவரை போற்றி , வாழ்த்தி , வணங்க  இந்தியர்கள் தயங்குவதில்லை.

ஆனால் இயேசு கிறிஸ்துவின் விட்டுக் கொடுக்கும் கருத்துக்களை சரியாகப் புரிந்து கொள்ளாத சிலர், அவர் பெயராலே அவருக்கு முற்பட்ட காலத்தில் சொல்லப் பட்ட சமரச மறுப்பு, சகிப்புத் தன்மை மறுப்பு மத வெறிக் கோட்பாடுகளை  அவர் பெயராலே பரப்பினார்கள். பாவம் செய்யாதே என்று இயேசு கிறிஸ்து அறிவுறுத்தி இருக்கையில், பாவம் செய்யாமல் இருக்க முடியாது , நீ ஏற்கெனவே பாவிதான் , இயேசு மூலம் பாவத்துக்கு மன்னிப்பு பெற்றுக் கொள்ளலாம் என்கிற ரீதியில் பிரச்சாரம் செய்தனர், செய்கின்றனர். இந்தப் பாவப் பிரச்சாரத்தால் பீடிக்கப் பட்ட மேலை நாட்டு சமுதாயம் குடும்ப வாழ்க்கையை கை விட்டு கண் போன வாக்கில் கால் போகும் வழியில் சென்றது.

இதை நாம் சுட்டிக் காட்டி மேலை நாடுகளில் செய்தது போல பூமியையும் , சமுத்திரத்தையும் சுற்றிக் கொண்டு இந்தியாவிலும் வந்து இந்தியர்களை பாவியாக்க வேண்டாம், என்றோம். இதைப் படித்தவுடன் நமது மதிப்பிற்குரிய சகோதர சகோதரிகள் நம் மீது கோவம் கொண்டு, என்ன அளந்து பேசும் … என்று அதே தளத்திலே நம்மை கட்டம் கட்டினார்கள்.

சாதாரண மக்கள்சொன்னால் சிலிர்த்து சீறுவார்கள்! இப்போது செல்வாக்கு பெற்ற பிரச்சாரகர் சொல்லும் போது அதற்கு கண்டனம் எதுவும் இல்லை.

5 Responses to "“மேலை நாட்டில் ஒரே ஆபாசம்”, மதப் பிரச்சாரகர் மன வருத்தம், இந்தியாவிலே மக்கள் கருணையும் பக்தியும் உள்ளவராக உள்ளனர் என்று ஆறுதல்!"

/சாதாரண மக்கள்சொன்னால் சிலிர்த்து சீறுவார்கள்! இப்போது செல்வாக்கு பெற்ற பிரச்சாரகர் சொல்லும் போது அதற்கு கண்டனம் எதுவும் இல்லை./

இப்படித்தான் தோழர்,நம்ம எது சொன்னாலும் இப்படித்தான் சொல்ராங்க.பேசாமல் இயேசு பதிவிடுகிறார் என்று பக்கத்தின் பேரை வைத்தால் வைய மாட்டார்களோ

அன்புக்குரிய திரு. சங்கர் அவர்களே, வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி. அதிரடி பஞ்ச டயலாக் தலைப்பை தந்து இருக்கிறீர்கள். என்ன பேர் வைத்தாலும் பில்லியன் கணக்கிலே சொத்து இருந்தால் தான் மதிப்பு கிடைக்கும் என நினைக்கிறேன்.

ஆனால் இந்த கிறிஸ்தவர்கள் தான் கட்டிப்பிடி கல்யாண கலாச்சாரத்தை வளர்க்க பார்க்கிறார்கள் இந்தியாவில். டைனமிக் மேரேஜாம்.

அன்புக்குரிய திரு. ராம் அவர்களே, வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

டைனமிக்குக்கும் கிருத்துவத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று நினைக்கிறேன். பால் தினகர் மீது எனக்கு விருப்பு இல்லாவிட்டாலும், அவர் கூறுவதாக இந்தப் பதிவு சொன்ன விடயங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்கிறது மனம். மிக்க நன்றிகள் !!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: