Thiruchchikkaaran's Blog

பாமக அனுதாபிகள் எப்படி வாக்களிப்பார்கள்?

Posted on: March 14, 2011


இதென்ன கேள்வி, பாமக இம்முறை திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. எனவே திமுக கூட்டணிக்கே பாமகவினர் வாக்களிப்பார்கள்.  பாமக போட்டியிடும் தொகுதியில், திமுக அனுதாபிகள் யாருக்கு வாக்களிப்பார்கள் – பாமக வேட்பாளருக்கு தானே திமுகவினர் வாக்களிக்கப் போகின்றனர்,  அது போலத் தான் இதுவும் என்று தோன்றுகிறது அல்லவா?

கூட்டணியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பாமக கட்சிக்காரர்களுக்கும் திமுக வினருக்கும் இடையே உள்ள உறவு டாம் அண்ட் ஜெர்ரி இடையில் உள்ளது போன்ற உறவு என்பதாக சொல்லப் படுவதை அவர்களே மறுக்க மாட்டார்கள்.

ஜெயாவோடு கூட்டணி அமைப்பது என்பது வேறு விடயம். ஜெயாவுடன் கூட்டணி அமைத்தால் தேர்தல் முடிந்தவுடன் ஜெயாவை சந்திப்பது பிரம்மப் பிரயத்தனம். ஜெயா முதல்வராக இருந்தாலாவது கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பொது மக்களோடு பொது மக்களாக சென்று  மனு குடுக்கும் கியூவில் நின்றாவது பார்த்து விடலாம். ஆனால் ஜெயா ஆட்சியில் இல்லை என்றால்,  அடுத்த நாளே கொட நாடு,  அப்புறம் அவரை சந்திப்பது அத்திப் பூவைப் பார்ப்பது போலத்தான்.

ஆனால் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டலும் கருணாநிதியை சந்திக்க முடியும், மரியாதை குடுப்பார், பாராட்டுவார்….

ஆனால் பாமக வளர வேண்டும் என்றால் அது திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் ஆதரவாளர்களை தன பக்கம் இழுத்துதான் வளர முடியும்!

இதிலும் குறிப்பாக பாமக வளர வேண்டும் என்றால், அது திமுக வாக்கு வங்கி குறைப்பதாகவே அமையும். ஏனெனில் பாமக  மக்களின் முன் வைப்பது பெரும்பாலும் அண்ணாதுரையும், கருணாநிதியும் முன்பு  மக்கள முன்  வைத்த கோட்பாடுகள் தான். அதாவது , தமிழர் நலம், பிற மாநிலத்தவர் தமிழ் நாட்டில் சொத்து சேர்ப்பது,இட ஒதுக்கீடு ….இப்படியான கருத்துக்களையே முன் வைக்கிறது.

இவை எல்லாம் இன்றைய கால கட்டத்தில் அழுத்தம் இல்லாத கோட்பாடுகள் ஆகி விட்டன. 1950முதல் 1980 வரை இட ஒதுக்கீடு  பெரும் பிரச்சனை ஆக இருந்தது. 1980ல்தமிழ் நாட்டில் மொத்தம்14 பொறியியல் கல்லூரிகள் 40, பாலிடெக்னிக்குகள் தான் இருந்தன. இப்போது டீக்கடை, பெட்டிக் கடை போல பொறியியல் கல்லூரிகள். இன்ஜினீயரிங் இடம் காலியாக இருக்கிறது.

முன்பு எல்லாம் அரசாங்க வேலை உயர்வாக கருதப் பட்டது. இப்போது தனியார் நிருவனங்களில் வேலை செய்வதும், சுய தொழில் செய்வதும் விரும்பப் படுகிறது. மக்களின் எண்ணங்கள் மாறுகின்றன.முன்பு எல்லாம் டாக்டர் (மருத்துவர்) என்றால் கடவுளைப் போலப் பார்ப்பார்கள்.  இப்போது மருத்துவப் படிப்பை  பலரும் முக்கியக் குறிக்கோளாக வைப்பதில்லை.

இப்படிப் பட்ட கால  கட்டத்தில் இராமதாஸ், அவர் கால முக்கியக் கோட்பாடுகளான இட ஒதுக்கீடை, இன்றும் முக்கியமாகக் கருதி இட ஒதுக்கீடுக்காக பல வகையிலும் தொடர்ந்து போராடிஅகில இந்திய அளவில் அன்பு மணி இராமதாஸ் மூலம் மருத்துவ உயர் படிப்புக்கு பிற்படுத்தப் பட்டோருக்கு தனி ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்தார்.

ஆனாலும் (ஒரு காலத்தில்  இட ஒதுக்கீட்டு போராட்டக் களமாக இருந்த)  தமிழ் நாட்டில் பாராள மன்றத்துக்கு நடை பெற்ற தேர்தலில் பாமக தோல்வி அடைந்தது.

எனவே இட ஒதுக்கீடு போராட்ட வீரராக முன்னிலைப் படுத்திக் கொள்வது  முன்னைப் போல வலுவான ஆயுதமாக இல்லை. யார் வந்தாலும் இட ஒதுக்கீட்டில் கை வைக்க முடியாது என்பதை மாணவர்கள் உணர்ந்து உள்ளனர்.  பார்ப்பன என சொல்லப் படும் சமுதாயத்தைச் சேர்ந்தவராக கருதப் படும் ஜெயா கூட இட ஒதுக்கீட்டை நிலை நிறுத்துவதில் கடும் பிரயத்தனம் செய்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இன்னும் சொல்லப் போனால் மருத்துவ உயர் படிப்பில் பிற்படுத்தப் பட்வருக்கு தனி ஒதுக்கீடு பெற்றுத் தந்த  கையோடு அன்புமணி இராமதாசால் அறிமுகப் படுத்தப் பட்ட ஹவுஸ் சர்ஜன்கள்  கட்டாய கிராம சேவை முறைக்கு மிகப் பெரிய எதிர்ப்பு தமிழக மருத்துவ மாணவர்களிடம் இருந்து வந்தது. இதை பாமக எதிர்பார்க்கவில்லை.

தமிழ் நாட்டில் உள்ள மருத்துவ மாணவர்களில் பெரும்பாலோனார் பிறபடுத்தப் பட்ட சமூகம் எனப் படும் சமூகப் பிரிவுகளை சார்ந்தவர்கள், இவரக்ளுடைய மேல் படிப்புக்கு உதவும் வகையிலே பாமக அகில இந்திய அளவில் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது என்பதாகக் கூட பாமக தரப்பில்  சுட்டிக் காட்டி போராட்டத்தைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டதை போராட்ட மாணவர்கள் கண்டு கொள்ளவில்லை. எனவே படித்த மாணவர்கள், இளைங்கர்  மத்தியில் ஒட்டு மொத்த  பிறபடுத்தப் பட்ட சமுதாயத்தின் காவலராக, நலம் விரும்பியாக பாமக தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதில் வெற்றி பெற இயலவில்லை.

ஜெயாவின் ஒட்டு வாங்கி வேறு, திமுகவின் ஓட்டு வங்கி வேறு. ஜெயாவின் ஓட்டு வங்கி எம்ஜி ஆரின் “தாய்குலம்” அடிப்படியிலான ஓட்டு வங்கி. ஆயிரம் ஆனாலும் கணிசமான  பெண்களுக்கு ஜெயா  மீது சாப்ட் கார்னர் உள்ளது.

எனவே பாமகவின் வளர்ச்சி ஜெயாவை விட திமுகவையே அதிகம் பாதிக்கும் என்று கருதிய திமுக, பாமகவின் முன்னேற்றத்தை ரசிக்கவில்லை.

பாமகவின் முக்கிய “செயல் வீர”ரான காடு வெட்டி குரு வன்னியர்கள்  அதிகமாக வசிக்கும் அரியலூர் பகுதிகளில் திமுகவை விட, பாமகவை முக்கிய கட்சியாக நிலை நிறுத்த முயன்றார். முதல்வரைக் கடுமையாக விமரிசிக்கவும் செய்தார். பல ஆண்டுகளுக்கு முன் குரு ஜெயாவை விமர்சித்த கேசை தூசி தட்டி எடுத்து தி.முக அரசு குருவை குண்டர் சட்டத்திலே சிறையில் அடைத்தது . ஒருதலைப் பட்சமாக பாமகவை கூட்டணியில் இருந்தும் வெளியேற்றியது.

இத்தகைய சூழலில் மீண்டும் பாமக திமுக கூட்டணி அமைந்துள்ளது.

பென்னாகரம் இடைத் தேர்தலில்  இரண்டாம் இடத்தைப் பிடித்து, அதிமுகவை அம்போ ஆக்கி  தாங்கள் வட மாநிலங்களில் முக்கிய சக்தி என்பதை பாமக நிரூபித்து விட்டது!  பாமகவை அதிமுக தன் பக்கம்  இழுத்து, விஜயகாந்தையும் சேர்த்து விட்டால், வட மாநிலங்களில் அத்முக கூட்டணி பெரும்  வெற்றி அடைவதை தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்த கருணாநிதி, பாமகவை தங்கள் அணியில் இழுப்பதில் வெற்றி பெற்று தான் மிகச் சிறந்த ஸ்டேரடஜிஸ்ட் என்பதைக் காட்டி விட்டார். இவ்வளவு வலிமை உள்ள கட்சிக்கு 40 இடம் தர அதிமுக தயங்கியிருக்கது, திமுகவுடன் கூட40 சீட்டுக்களை கேட்டுப் பெரும் அளவுக்கு வாங்கு வங்கி வலிமையையும், நடப்பு அரசியல் வாய்ப்பு உள்ள நிலையில் வெறும் 31 சீட்டுக்கு ஒத்துக் கொண்டது பல அரசியல் நோக்கரகளையும் வியப்பில் ஆழ்த்தியது.

பாமகவை எதிர்த்து அதிமுக வேட்பாளர் நின்றால் , எப்படியாகிலும் அதிமுக வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் திமுக அனுதாபி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  நிச்சயம் பாமக வேட்பாளருக்கு  தன் ஓட்டைப் போட்டு விடுவான்!

இப்போது பாமக அனுதாபி கையில் வாக்கு சீட்டை வைத்துக் கொண்டு என்ன யோசிப்பான்?

பாமக் கட்சி வேட்பாளர் நின்றால் கண்டிப்பாக அவருக்கு வாக்களித்து விடுவான். ஆனால் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதினால், எவன் ஜெயித்தால் நமக்கு என்ன என்ற எண்ணம் பாமக அனுதாபிக்கு தோன்றினால் ஆச்சரியம் இல்லை. எப்படி இருப்பினும் இந்த தேர்தல் பாமக வுக்கு ஒரு பெரிய திசை திருப்பும் தேர்தல் அல்ல. இதிலே ஜெயித்து அன்பு மணியோ, மூர்த்தியோ, மந்திரியாகப் போவதும் இல்லை.

பாமக அனுதாபிகள் தங்களை அவ்வப் போது அவமானப் படுத்தி வரும் திமுக வுக்கு முழு மனதுடன் வாக்களிப்பார்களா? கூட்டணி தர்மத்துக்கு   கட்டுப்  பட்டு  திமுகவுக்கு வாக்களிப்பார்களா?

தேர்தலில் அவர் எப்படி வாக்களிப்பார் என்பது மின்னணு வாக்கு பெட்டிக்கே வெளிச்சம்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: