Thiruchchikkaaran's Blog

பார்த்துட்டான்…., பார்த்துட்டான்…., ஐயோ பார்த்துட்டான்….,புடவை கட்டி விடும்போது பார்த்துட்டான் ………….!

Posted on: March 12, 2011


அன்புக்குரிய நண்பர்களே, தலைப்பை பார்த்து விட்டு இது ஒரு காமெடி கட்டுரை என்றோ,  கிளுகிளுப்பு கட்டுரை என்றோ எண்ணி ஏமாற வேண்டாம். இது ஒரு சமூகக் கட்டுரையே  !

அர்ச்சகர்கள் கோவிலில் உள்ள அம்பாள் உள்ளிட்ட பெண் சிலைகளுக்கு சேலை கட்டி விடுகிறார்களே? இது சரியா என்று சிலர் கேள்வி கேட்கின்றனர்.

நம்முடைய தளத்திலே காஞ்சி தேவநாதன் பற்றிய கட்டுரைக்கு இட்ட பின்னூட்டத்தில் சில நண்பர்கள் அம்பாளின் மேனியை தொடுவதால், தேவநாதன் மனதில் ஆசை வந்து விட்டது என்றும் , இதுக்கு தானே சிலை வணக்கம் செய்யக் கூடாது என்று சொல்கிறோம், ஜீவனுள்ள  ஒரே தேவனை சிலை இல்லாமல் கும்பிட்டால் இந்தப் பிரச்சினை இல்லை என்ற ரீதியில் மற்ற கடவுள்கள் எல்லாம் பொய் என்கிற கோட்பாட்டுக்கு அச்சாரம் போட்டனர்.

https://i1.wp.com/www.lotussculpture.com/images/21b125/21b125b.jpg

அதற்க்கு பதில் தரும் விதமாக திரு. பாஸ்கர்   உள்ளிட்ட பலரும், நம் அன்னையை, அக்காளை வெள்ளம் அடித்துச் சென்றால் தொட்டுக் காப்பாற்ற  மாட்டோமா, அப்ப மனதிலே தவறான எண்ணம் வருமா, அம்பாளை தாயாக கருத வேண்டியவர்  தானே அரச்சகராக இருக்க வேண்டும், அவர் அம்பாளுக்கு அலங்காரம் செய்யும் போது மனதில் எப்படித் தவறான எண்ணம் வரும், என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

இந்த ரீதியிலே போனால் ஒரு பெண்ணைத் தொட்டால் தான் ஆசை வருமா, அழகிய பெண்ணைப் பார்த்தால் ஆசை வராதா, அப்ப எல்லா பெண்களும் கட்டாயம் பர்தா அணிய வேண்டுமா? அப்படி பர்தா அணிந்தாலும் அவர்கள் அங்கங்களின் பரிமாணங்கள் தெரிய வாய்ப்பு உள்ளதே, அதை பார்த்தால் ஆசை வராதா, அப்ப ஒவ்வொரு பெண்ணும் தன்னை  சுற்றி ரெக்டாங்கில் பாக்ஸ் போன்ற உடையை அணிந்து கொண்டு வர வேண்டும், அப்போதுதான் அவர்கள் அங்கங்கள் மற்றவருக்கு காம உணர்வைத் தூண்டாது … அல்லது பெண்கள் வெளியிலே வரவே கூடாது …. என்று பிற்போக்கு கற்கால பாதைக்கு தான் போக வேண்டும்.
எனவே ஆண்கள் காம உணர்வு பெற்றால் பெண்களிடம் எக்குத் தப்பாக நடந்து கொள்வார்கள், அதனால பெண்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வேணும்னா கூட்டுப் புழு போல தன்னை சுற்றி உடை அணிந்து கொள்ளட்டும்,  வீட்டை விட்டு வெளியே வராம இருக்கட்டும் என்று எல்லாம்  சொல்வது பெண்களுக்கு இழைக்கப் படும் அநீதி இல்லையா? ஆண்களுக்கு மனக் கட்டுப் பாடு இல்லை என்றால் அதற்காக பெண்கள் சுதந்திரம் பறிக்கப் பட வேண்டுமா?

இன்னா தாம்பா சொல்லுற, பொண்ணுங்க அழகா இருக்காங்க, நாங்க பார்த்தவுடனே எங்களை அறியாமலே  ஆசை வருதுப்பா,   மனசுக்குள்ள என்ன சுவிட்சா இருக்கு? மனுசன்தானே நீயும்?

நண்பர்களே, ஒரு புதிய மாடல் காரைப் பார்த்தவுடன் ஆசை வருகிறது, லோன் போட்டு வாங்கியும் விடுகிறோம், அந்தக் காருக்கு உயிர் இல்லை, பிரச்சினை இல்லை. ஆனால் பெண்ணுக்கு உயிர் இருக்கிறது , மரத்திலே தொங்கும் கனியில்ல அவர்கள், அவர்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு.அவர்களுக்கும் விருப்பம் என்ற ஒன்று இருக்கிறது. ஆனால் பல ஆண்கள் இதைப் புரிந்து கொள்வது இல்லை.

ஒரு ஆண் ஒரு பெண்ணின் மேல் வைக்கும் ஆசையானது அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு கஷ்டத்தை தொல்லைகளைத் தருகிறது என்பதைப் பல ஆண்கள் உணரவேயில்லை.

ஒவ்வொரு ஆணும் தன்னால் எந்த ஒரு பெண்ணுக்கும் தொல்லை விளையக் கூடாது என்கிற என்னத்தைக் கைக் கொண்டால், எவ்வளவு பேர் அப்படி நினைக்கிறார்களோ, செயல் படுகிறார்களோ, அந்த அளவுக்கு பெண்களுக்கு நல்லது, சமூகத்துக்கு  நல்லது.

அந்தக் காலத்தில் இருந்தே பெண்கள் ஆண்களால்  பல்வேறு விதமான அச்சுறுத்தல், அடி  பணிய வைக்கப் படுதல், பல வந்தப்   படுத்தப் படுதல், இகழப் படுதல், தங்கள் ஈகோவைக் காட்ட மட்டம் தட்டப் படுதல், தங்கள் மேட்டிமைத் தனத்தைக் காட்ட திட்டப் படுதல், அடிக்கப்  படுதல், விதம் விதமான சித்திர வதைகள்  இப்படிப் பட்ட பல்வேறு சொல்லொனாத்  துயரங்களை அனுபவித்து வருகின்றனர். உண்மையிலே    மனசாட்சி உடைய யாரும், பகுத்தறிவு அடிப்படையில் சிந்திக்கும் யாரும், மனதிலே கொஞ்சமாவது மனிதத் தன்மையைக் கொண்டு வந்து பெண்களுக்கு தாங்கள் தொல்லை தராமல் இருக்க முடிவு செய்வார்கள்.

என் வாழ்க்கையில் அனேகமாக என்னால் எந்தப் பெண்ணுக்கும் தொல்லை நேர்ந்து இருக்காது என எண்ணுகிறேன். மாணவனாக இருக்கும் போது ரஜினி, கமல், எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களைப் பார்த்து விட்டு பெண்களைக்  கிண்டல் செய்து பாடி ஆடி  அவர்களை விட ஆண்கள் மேலானவர்கள் என்று காட்டுவதுதான் ஆணுக்கு அழகு என்று எண்ணி இருந்தேன். பள்ளியில் முதல் மதிப்பெண் பெறுபவன் என்ற திமிருடன் நடந்து கொண்டிருக்கிறேன். ஆனால் ஏழாம்  எட்டாம் வகுப்பிலேயே மாற  ஆரம்பித்து விட்டேன். ஏன் நினைக்கிறேன்.    என்னுடைய குடும்ப வாழ்க்கையே நான் மாறியதற்கு  காரணம், எனக்கு அக்காள்  தங்கைகள் நால்வர். அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியான மன வாழ்க்கையில் நலமுடன் வாழ்கின்றனர். என்னுடைய அக்காவின் தோழிகளை யும்  நான் அக்கா என்றே அழைப்பேன், கருதுவேன். இன்றும் என் அக்காவின் தோழிகளைக் கண்டால்  அக்கா  என அழைத்து  வணக்கம் செலுத்தி நலம் விசாரிக்க தவற மாட்டேன்.

பின்னாளில் பாரதியார், விவேகானந்தர் ஆகியோரின் சிந்தனைகள் பெண்களை மதிக்க வேண்டும் என்கிற எண்ணப் போக்கை உறுதிப் படுத்தியது.

சமீபத்திலே  கண்ணகி, சீதை ஆகியோர் பற்றிய சிந்தனையில் மூழ்கிய போது, பெண்கள் ஆண்களை விட சிறந்தவர்கள் என்ற எண்ணத்துக்கே வந்து விட்டேன்.

ஆண்கள் பெண்களுக்கு எவ்வளவு கஷ்டத்தைக் கொடுக்கிறார்கள் என்பதை சீதையிடம்  இருந்தே நான் தெரிந்து கொண்டேன். தன் கணவனின் கஷ்டத்திலே பங்கெடுக்க காட்டுக்கு வந்த சுயநலமற்ற  அன்புக்கரசி சீதை. அவருக்கு வந்த முதல் துன்பம் காட்டுக்கு போக நேர்ந்தது இன்னொரு பெண்ணின் ஆசை யால் கைகேயியின் ஆசையால். காட்டிலே வாழ்ந்த அவரின்  அழகைப்  பார்த்து மயங்கிய இராவணன் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ளாமல் அவரைத் தூக்கி சென்று விட்டான். பிறகு மீண்டு வந்தாலும், அயோத்தியிலே வாழ்ந்த ஒரு சில ஆண்கள் அவ இன்னொருத்தன் வீட்டுல பல மாசம் இருந்தவதானே என்று பெண்களைக்  கொச்சைப் படுத்தி பேசுவதில்  மகிழும் சிலரின் பேச்சால் மீண்டும் வனம் போக நேரிட்டது, இந்த முறை கணவனைப் பிரிந்து நிரந்தரமாக.

சுவாமி விவேகானந்தர்  சீதையைப் பற்றி சொல்லும் போது, அவர் நமது அன்னை, நமக்கு இராமர் கூட ஐந்தாறு பேர் கிடைக்கலாம்.  ஆனால் இன்னொரு சீதை கிடைப்பது அரிது என்றார்.

சீதையின் படத்துக்கு அருகில் செல்லும் போதெல்லாம் என் மனதில், என்னால் வாழ்க்கையில் எந்த பெண்ணுக்கும் தொல்லை வரக் கூடாது என்கிற எண்ணம் உறுதிப் படுகிறது. இராமரோ, அனுமனோ வெளிப்படுத்துகிற கட்டுப் பாட்டை விட சீதை என் மனதில் அதைக் கட்டுப் பாட்டை உருவாக்குகிறார். எனவே சீதையின் அருகில் நிற்கும் போது, நான் உலகின் எல்லாப் பெண்களையும்  என் சகோதரியாக , அக்காவாக கருதும் எண்ணப் போக்கை அடைகிறேன் (மனைவியைத் தவிர மற்ற பெண்களை ) !

அப்படிப் பட்ட எண்ணத்தை உருவாக்கும் சீதையின் சிலைக்கு நான் அலங்காரம் செய்து புடவை அணிவித்தால் , என் மனதிலே தவறான எண்ணங்கள் வருமா? சீதையை கோட்பாட்டின் அடிப்படையில், பகுத்தறிவு சிந்தனையுடன் அணுகும் எந்த ஒரு மனிதத்  தன்மை உடைய ஆணுக்கும் அவருக்கு அலங்காரம் செய்வது அவன் கொள்கையை உறுதிப் படுத்துமா, இல்லையா?

அம்பாளுக்கு புடவை கட்டி அவரைக் கொச்சைப் படுத்தி விட்டான்  என்று எடுத்து விடுவது, கவுண்டமணி, கெளதமியின் முகத் திரையை விளக்கிக் காட்டச்  சொன்ன  வெண்ணிற ஆடை மூர்த்தியை கலாய்க்க தெருவுலே ஓடிச் சென்று உருண்டு புரண்டு பார்த்துட்டன், பார்த்துட்டான், அய்யோ பார்த்துதான் என்றே வூரே கலகலக்க சவுண்டு விடுவது  போல தோன்றுகிறது  என்பதாலேயே இந்த தலைப்பை வைத்தோம்.

https://i2.wp.com/www.lotussculpture.com/images/21b125/21b125c.jpg

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: