Thiruchchikkaaran's Blog

ஜெயாவுக்கு கிடைத்த ரெட் அண்ட் பாலோ ஆன்! காங்கிரஸ் தி.மு.க உடன் கூட்டணி அமைத்தது ஜெயாவுக்கு அட்வாண்டேஜா ?

Posted on: March 11, 2011


File:Jjkumar.JPG

இரண்டு வாரங்களுக்கு முன்னால் கேட்டிருந்தால் தமிழ் நாட்டில் எந்த ஒரு அரசியல் ஆய்வாளரும், ஜெயா தேர்தலில் வெல்ல வாய்ப்பு இல்லை என்றே சொல்லி இருப்பார்கள்.

இப்போது அப்படி என்ன பெரிதாக நிலைமை மாறி விட்டது?

மிகப் பலம் வாய்ந்த கூட்டணியை கட்டி இருக்கிறார் கருணாநிதி. பாராளு மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கூட்டணியில் இப்போது பா ம கவும் சேர்ந்துள்ளது . கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் போன்ற பிராந்திய அடிப்படையில்  வலிமை உள்ள கட்சிகளையும் இணைத்து இரும்புக் கோட்டை போல அணியை  உருவாக்கியுள்ளார் கருணாநிதி.

இடையிலே கொஞ்சம் சண்டித் தனம் செய்த காங்கிரசுக்கும் மூக்கானாங் கயிறு போட்டு விட்டார். மத்தியிலே அமைச்சரவையில் இருந்தும் விலகவில்லை, காங்கிரஸ் உறவும் முறியவில்லை, தொகுதிகளும் நாங்கள் சொல்லும் தொகுதியைத் தான் கொடுக்க வேண்டும் என்ற நிலையை இனி காங்கிரஸ் எடுக்கவும் போவதில்லை … இப்படியாக ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்து இருக்கிறார் மூவேந்தர் வழி வந்த முத்தமிழ்  வித்தகர் , தமிழினத் தலைவர், டாக்டர் கலைஞர் என்று தி.மு.க வினர் மகிழ்ச்சிப் புளங்கிதம் அடைகின்றனர் அல்லவா?

File:Mgre34wk3wk.jpg

நாம் ஒன்று நினைக்க மக்கள ஒன்று நினைக்கும் பழமொழியாக உள்ளது. இதிலே ஜெயாவுக்கு பின்னடைவு தானே என்கிறீர்களா? தமிழ் நாடு மக்களின் சிந்தனை ஓட்டளிக்கும் விதம் ஆகியவற்றை எண்ணிப் பார்ப்போம். தமிழ் நாட்டு மக்கள எப்போதுமே டிசிஸிவ் ஆக ஓட்டளிப்பவர்கள் என்று அகில இந்திய தேர்தல் கணிப்பாளர்களே சொல்லுகின்றனர்.

70 க்குப் பிறகு தமிழக வாக்களர்களின் வாக்குகள் எம். ஜி.ஆர் கருணாநிதி ஆகிய இருவரையும் மையமாக கொண்டே அமைந்தன.  எம்.ஜி.ஆர் ஆதரவு ஓட்டு, கருணாநிதி ஆதரவு ஓட்டு, எம்.ஜி.ஆர் எதிர்ப்பு ஓட்டு, கருணாநிதி எதிர்ப்பு ஓட்டு … இந்த அடிப்படையிலே அமைந்தன.

எம்.ஜி.ஆர் ஆதரவு ஓட்டு + கருணாநிதி எதிர்ப்பு ஓட்டு அதிகமாக இருந்தது.  கருணாநிதி ஆதரவு ஓட்டு +எம்.ஜி. ஆர் எதிர்ப்பு ஓட்டு குறைவாக இடுந்த்து. எனவே சட்ட மன்றத் தேர்தல் எதிலிலும் தோல்வியே அடையாமல் முதலமைச்சர் பதவியில் ஏறிய நாள் முதல் மரணமா அடையும் வரை முதல் அமைச்சர் பதவியில் இருந்து அவரை அசைக்க முடியவில்லை.

ஆனால் எம்.ஜி. ஆரை போல ஜெயா அடக்கி வாசிக்கவில்லை. நகைகளை எல்லாம் போட்டுக் கொண்டு ,அவரும் தோழியும் சென்னை தெருவிலே ராஜ நடை பயின்றனர்.

இதைப் போலவும் இன்னும் பல செயலபாடுகளின் காரணமாகவும் ஜெயலலிதா ஆதரவு ஓட்டு குறைந்து எதிர்ப்பு ஓட்டு பெருகி , ஜெயாவும் கருணாநிதியும் கிட்டத் தட்ட சம  நிலைக்கு வந்தனர்.

ஜெயா எதிர்ப்பு ஓட்டு சிதறாமல் அப்படியே கருணாநிதிக்கு போய் சேர்ந்து விடு ம். ஆனால் கருணாநிதி எதிர்ப்பு ஓட்டு அப்படியே ஜெயாவுக்கு வந்து சேர்வதில்லை. சென்ற தேர்தலில் கருணாநிதி எதிர்ப்பு ஓட்டுக்களில் கணிசமானவற்றை விஜயாகாந்த் பெற்று விட்டார்.  இந்த தேர்தலில் கன காரியமாக ஜெயா விஜயகாந்தை அழைத்து 41 சீட்டுகளைக் கொடுத்து கேரத்தில் ரெட் காயினைப் போட்டது போல சரியாக விளையாடினார். ஜெயா , விஜயகாந்த் கூட்டணியில் தேர்தலுக்கு முன்பு ஏதாவது பிரச்சினை வந்து விஜயகாந்த் வெளியேறினாலும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் கருணாநிதி போல ஜெயலலிதா விட்டுக் கொடுத்து, அன்பொழுக பேசி சாமர்த்தியமாக நடந்து கொள்ள மாட்டார்.

ஆனால் முதல் மூவை சரியாக விளையாடி விட்டார் ஜெயா. அடுத்த திருப்பமாக காங்கிரஸ் தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறு மோ என்கிற நிலை தோன்றியது. கருணாநிதி அதையும் சரிக் கட்டி காங்கிரசை கூட்டணியில் நிலை நிறுத்தினார். இதுதான் ஜெயாவுக்கு கிடைத்த அட்வான்டேஜ்.

“துடிப்பான” இளைஞர் ராகுல் பீகார்  போல தமிழ் நாட்டிலும் தனியே நின்று பார்க்கலாம், வருகிற  வரை லாபம், பீஹாரைப் போல நாலைந்து சீட்டு மட்டுமே தேறினாலும் ஒன்னும் குடி முழுகி விடாது என்று முடிவு எடுத்து இருந்தால், கருணாநிதி எதிப்பு ஓட்டுக்களை காங்கிரஸ் பிரிக்கும்  வாய்ப்பு இருந்தது. அதனால் காங்கிரசுக்கு பெரிய வெற்றி கிடைக்காவிட்டாலும் , ஜெயாவுக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுக்கள் குறையும் வாய்ப்பு இருந்தது.

காங்கிரஸ் தனித்து நின்றால், அது கலைங்கருக்கு மாற்றான ஒன்றாக கருதிக் கொண்டும், காமராஜ், மூப்பனாரை நினைத்துக் கொண்டும் இன்றைய கால கட்டத்திலும் பலர் கருணாநிதி எதிர்ப்பு வாக்குகளை காங்கிரசுக்கு போடும் வாய்ப்பு உள்ளது.

இப்போது காங்கிரஸ் , திமு க கூட்டணி உறுதியாகி விட்டதால், கருணாநிதியின் “வாரிசு அரசியல் புரட்சி” உட்பட அவருடைய செயல்பாடுகளைப் பிடிக்காதவர்கள், வாக்களிக்க வேண்டியது அதிமுக அணிக்கே என்கிற கிளியர் கட் நிலை உருவாக்கி விட்டது.

இவ்வாறாக கருணாநிதி எதிர்ப்பு ஓட்டுக்களை தன்னிடம் கொண்டு வருவதில் விஜயகாந்த் கூட்டணி மூலம் ரெட் அடித்த ஜெயாவுக்கு,  காங்கிரஸ் திமுக கூட்டு மூலம் சோனியா பாலோ ஆன் அடித்துக் கொடுத்து இருக்கிறார்.

காங்கிரசை திமுக கூட்டணியில் நிறுத்தியதன் மூலம் ஜெயாவுக்கு கலைஞர் இன்னும் ஒரு மிகப் பெரிய உதவியை செய்து இருக்கிறார், அது என்னவென்று அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

Title:ஜெயாவுக்கு கிடைத்த ரெட் அண்ட் பாலோ ஆன்! காங்கிரஸ் தி.மு.க உடன் கூட்டணி அமைத்தது ஜெயாவுக்கு அட்வாண்டேஜா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: