Thiruchchikkaaran's Blog

யார் எந்தக் கூட்டணியில் ? மொத்தம் எத்தனை கூட்டணிகள்?

Posted on: March 9, 2011


” எல்லாமே ஒரே குட்டையில் வூறிய மட்டைகள்” என்றார் காமராஜர்-கருணாநிதி கட்சியில் இருந்து பிரிந்து சென்று எம்.ஜி.ஆர் தனிக் கட்சி துவங்கிய போது அது குறித்து நிருபர்கள் காமராஜிடம் கேட்டபோது அவர் மேல் சொன்னவாறு குறிப்பிட்டார்.

Va Vu Chidambaram PIllai  - Unseen Photos of Known Persons

வ. வு. சி

உலகுக்கே அமைதியான அரசியல் பாதையை கற்றுக் கொடுத்த காந்தியும், அசோகரும் வாழ்ந்த நாடு இந்தியா. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்த தலைவர்கள் பலரும் சுயநலம் இல்லாத தங்கங்களாக இருந்தனர். செக்கிளுத்தனர். வெள்ளைக்காரனிடம்  குண்டாந்தடியால் மண்டையில் அடி வாங்கி செத்தனர்!

இன்றைக்கு யாரையும் நாம் செக்கிளுக்கவோ, மண்டையில் அடி வாங்ககவோ வேண்டும் என்று எதிர்பார்க்கவோ, விரும்பவோ இல்லை. அரசியலில் எதிரிகளை எதிர் கொள்ள அவர்கள் மண்டையில்  அடித்து தீர்க்காமல் இருந்தால் போது ம் என்று நினைக்கிற நிலையிலே உள்ளது.

File:MKGandhi.jpg

காந்தியும், சுபாஷ் சந்திர போசும், அம்பேத்கர் … இவர்கள் எல்லாம் அரசியலில் கருத்து வேறுபாடு கொண்டவரகளாக இருந்த போதிலும், அடிப்படையான ஒரு ஒற்றுமை இருந்தது. அதாவது இவர்கள் எல்லாம் நேர்மையானவர்கள், நாட்டு மக்களுக்காக தங்கள் சொந்த வாழ்க்கை முன்னேற்றத்தை விட்டுக் கொடுத்தவர்கள், தியாகிகள், அரசியல் செல்வாக்கை வைத்து தங்களுக்கு சொத்து சேர்க்க முயற்சி செய்யாதவர்கள்.

File:Subhas Bose.jpg

காந்தியைப் போல, அம்பேத்கரைப் போல தங்களுக்கு சொத்து சேர்த்துக் கொள்ள விரும்பாத , தங்கள் வாரிசுகளை தங்களுக்கு பின் பதவிக்கு வைக்க விரும்பாத அரசியல்வாதிகள், மக்களைப் பற்றிய கவலை, அக்கறை, நாட்டை முன்னேற்ற விரும்பும் ஒரே குறிக்கோளை உடைய தலைவர்கள்   இன்றைக்கு யாராவது இருக்கிறார்களா,  இருந்தால் சொல்லுங்கள் , தெரிந்து கொள்கிறோம்!

File:Ambedkar speech at Yeola.gif

எனவே இருப்பது இரண்டே கூட்டணிதான். எப்படியாவது ஆட்சியைப் பிடித்து, வாரிசுகளை பல்வேறு பதவிகளில் அமர்த்தி, பல செயலபாடுக்ளைனால தங்கள் வாழ்க்கையை வளப் படுத்திக் கொள்வோர் ஒரு கூட்டணியாகவும்,

ஓட்டைப் போட்டு விட்டு மயங்கி நிற்கும் அப்பாவி ஏமாளிகள் இன்னொரு கூட்டணியாகவும் உள்ளனர்.

இதிலே தலைவனோ , தலைவியோ எது செய்தாலும் சரி என்று ஜால்ரா அடித்துக் கொண்டு, தேனை எடுத்து புறங்கையை நக்கும் போது, ஏதாவது ஒன்னு ரெண்டு துளி கீழே சிந்தாதா என்று ஏ ங்கியோ , ஏங்காமலோ ஏய் தலையை ஒன்னும் சொல்லாதே என்று விளக்கையும் , குச்சியையும் கையில் வைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றி வந்து காவல் காப்போரும் ஆட்சிக் கூட்டணிதான்.

நீங்கள் எந்தக் கூட்டணி என்று நீங்களே  முடிவு செய்து கொள்ளுங்கள்.

Advertisements

2 Responses to "யார் எந்தக் கூட்டணியில் ? மொத்தம் எத்தனை கூட்டணிகள்?"

நண்பரே
அரசியல் சாக்கடை என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான். நீங்கள் யாருக்கு ஓட்டு போடச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. கொஞ்சம் தெளிவாக கூறுங்கள்.

நண்பரே

“இந்த டீலிங்ஸ் உனக்கு பிடிச்சிருக்கா? இந்த தேர்தலில் மக்கள் எதிர் கொள்ளும் முக்கிய கேள்வி அல்லது டீலிங்ஸ் என்ன?”

https://thiruchchikkaaran.wordpress.com/2011/03/10/tn-election-2011-2/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: