Thiruchchikkaaran's Blog

குருவுக்கு மரியாதை என்ற பெயரில் நிர்வாணக் குளிப்பாட்டுதல் சரியா?

Posted on: February 28, 2011


குருஎன்கிற ஸ்தானத்துக்கு இந்தியாவில் மிக்க மரியாதை உண்டு. மீனைக் குடுத்தால் ஒரு நாள் உணவு, மீன் பிடிக்கக் கற்றுக் குடுத்தால் அவன் வாழ் நாள் முழுதும் உணவு கிடைக்கும் என்பது சீனப் பழமொழி.

இந்தியாவில் சீடன்  குருவின் மீது வைத்திருக்கும் மரியாதை அலாதியானது. பள்ளி வாத்தியாரைப் பல வருடம் கழித்து கண்டாலும் சிரித்து வணக்கம் சொல்ல தவறுவதில்லை.

இந்திய  ஆன்மீகத்தில் குருவுக்கு முக்கிய இடம் கொடுக்கின்றனர். ஆனால் பலர்  அதையே தவறாகப் பயன்படுத்தி கோடிகளைக் குவிக்கவும், இன்ன பிற “இனிய” செயலகளில் ஈடுபடவும் செய்து வருகின்றனர். இந்த குரு என்கிற ஸ்தானத்தை தவறாகப் பொருள் செய்து , குரு தான் எல்லாம் என்று ஜால்ரா போட்டு வயிறு வளர்ப்போரும் உள்ளனர்.

இந்து மதம் புராதனமான மதம். உலகின் மிகப் பழமையான மதம் இந்து மதம் என ஆக்ஸ் போர்டு பல்கலைக் கழகம்வெளியிட்ட பிரிட்டானிகா ஆப் வேர்ல்டு ஹிஸ்டரி என்னும் நூல் சொல்லுகிறது.

உண்மை நிலையை உணரும் முயற்சியில் ஒருவனை வூக்கப் படுத்தும் மதமாக இந்து மதம் இருக்கிறது. ஆன்மீக  முறையில் ஒருவன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள இந்து மதம் அறிவுறுத்துகிறது.

சமூகத்துக்கு, மனிதத்துக்கு, உலகுக்கு, தனக்கு கெடுதலை  தராத எந்த ஒரு ஆன்மீக முறையையும் முயற்சி செய்து பார்க்க இந்து மதம் தடை விதிப்பதில்லை.

பிராணாயாம என்னும் மூச்சுப் பயிற்ச்சியில் ஈடுபடலாம். தியானத்தில் ஈடுபடலாம். காட்டில் சென்று அமைதியான இடத்தில் வாழ்ந்து அங்கே இருக்கும் கனி, கிழங்குகளை மட்டுமே உண்டு மனக் குவிப்பில் ஈடுபடலாம், மக்களுக்காக  தன்னலமில்லாத தியாகத் தொண்டு ஆற்றலாம்,   …. இதைப் போல யார் வேண்டுமானாலும் புதிய ஆன்மீக முறைகளை முயற்சி செய்யலாம், ஆனால் அவை ஆக்க பூர்வமானதாக மனிதனை மேம்பட்டவனாக ஆக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஒருவன் எத்தனையோ செய்து ஆனால் அவன் மன நிலை உயர்ந்த மன நிலையாக முன்னேற வில்லை என்றால் அது ஆன்மீகம் இல்லை என்கிற கருத்தை நான் தைரியமாகச் சொல்லுவேன்.

இந்த வீடியோவில் இருப்பது ஆன்மீகமா ?

ஏழைகளை மீது, அப்பாவிகள் மீது, நசுக்கப் பட்டவர்கள் மீது தன்  இதயத்தில் இருந்து உண்டான அன்பை, அக்கறையை மக்கள மனதில் உருவாக்கியதன் மூலம் சுவாமி விவேகானந்தர் தன் ஆன்மீகத்தை மற்றவருக்கு அளித்தார். தூய்மையான, எளிய வாழ்க்கையை வாழ்ந்து காட்டி இசையின் மூலம் ஆன்மீகத்தைப் பரப்பினார் தியாகராஜர். வாழ்க்கை நிலையாமை தத்துவத்தை எடுத்துக் காட்டி ஆன்மீகத்தை மற்றவருக்கு அளித்தனர் சங்கரரும், புத்தரும்!

மற்றவரின் நன்மைக்காக தான் துன்பத்தை ஏற்றும், எந்த கஷ்டமான  நிலையிலும் தன் கொள்கையை, ஒழுக்கத்தைக் கைவிடாமலும் இருந்து ஆன்மீகத்தை வெளிப்படுத்தினார் இராமர். ஒரு நல்லவருக்கு நேர்ந்த துனப்ததைக் கண்டு அவருக்கு உதவி, நல்ல கொள்கைக்கு  தன்னை அர்ப்பணித்து தன் ஆன்மீகத்தை வெளிப்படுத்தினார் அனுமன்.

தன் கணவனுக்காக தன் சுகங்களை  எல்லாம் விட்டு, தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்  கொண்டதன் மூலம் தங்கள் ஆன்மீகத்தை வெளிப்படுத்தினர் சீதையும் , கண்ணகியும்.

சீதையை, கண்ணகியை நாம் தெய்வம் என்று சொல்லவில்லை, தெய்வம் என்று ஒன்று இருந்தால் அதற்கும் மேலானவர்கள் சீதையும் கண்ணகியும் என்று நான் சொல்வேன்.

இங்கே வீடியோவில் இருப்பது, இது  ஆன்மீகமா? இங்கே நாம் பார்ப்பவர்  நிர்வாணமாக குளிப்பது என்றால், பாத்ரூமில் குளித்துக் கொள்ளலாமே. ஒருவருக்கு கை கால் விளங்கவில்லை என்றால், மற்றவர் குளிப்பாட்டலாம், அது புரிந்து கொள்ளக் கூடியதே. இவருக்கு கை கால் செயல்பாடு இருப்பதாகவே தோன்றுகிறது. இவரை நிர்வாணமாக குளிப்பாட்டுவது,  எந்த முறை ? இது  முழு நிர்வாணமா, முக்கால் நிர்வாணமா என்பது சரியாகத் தெரியவில்லை,  எப்படி இருந்தாலும் இதற்கு என்ன அவசியம்?
இந்துக்கள் இப்படிப் பட்ட முறைகளை ஆதரிக்கக் கூடாது, இவற்றை விலக்கி விட வேண்டும். இப்படிப் பட்ட நபர்களுக்கு முக்கியத்துவம் குடுக்கக் கூடாது.  ஒரு ஆன்மீகவாதி தன் மனைவியைத் தவிர எந்த ஒரு பெண்ணையும் தன் அருகில் வர, தொட
அனுமதிக்க வேண்டியதில்லை!
(தொடரும்)

Advertisements

18 Responses to "குருவுக்கு மரியாதை என்ற பெயரில் நிர்வாணக் குளிப்பாட்டுதல் சரியா?"

stupidity,

Sivanadiyaan,
You and Thiruchikkaaran shared your opinions, but you expect the devotees of this man should stop this.
I too feel the same about Idol worship, like what you feel about this activity, but you guys get offended by that. Think guys…
Ashok

Ashok,

We have reasons as why this is not required. The bathing of a naked person by women does not help in uplifting one spiritually. The women need not have body contact with another person other than their husband

Where as Idol worship helps one to uplift himself spiritually. I explained more than 100 times, that when a person worship Rama, Seetha, laxman, Hanuman, he is induced with good qulaities as not to harm women, bear pains for others happiness etc…

In fact I also mentioned that whenever one looks upon with respect and garland the statue of Gandhi, he has the opportunity to be inducted with the good principles of Gandhi. The same is the Case for Buddha and Jesus Christ as well.

So our position is based on rational thinking.

They does not have hatred ness towards other religions. The idol worshipper does not have the zeal to obliterate all other religions and does not have intention to force each and every one to foll0w only his reigion.

Thus As per rational analysis, the idol worship has only good effects due to it!

Does your objection to Idol worship has any reasons?

Think Guy!

//சீதையை, கண்ணகியை நாம் தெய்வம் என்று சொல்லவில்லை, தெய்வம் என்று ஒன்று இருந்தால் அதற்கும் மேலானவர்கள் சீதையும் கண்ணகியும் என்று நான் சொல்வேன்.
//
நீர் எதை வேண்டுமானாலும் சொல்வீரைய்யா. உண்மையை மட்டும் சொல்ல மாட்டீர். மதுரையை எரிப்பதில் என்னய்யா ஆன்மிகம்? நீர் இதற்க்கு பதில் அளிக்காமல் உடனே யேகோவா செய்யாததா என்று வருவீர் என்பது தெரியும்.

//இந்துக்கள் இப்படிப் பட்ட முறைகளை ஆதரிக்கக் கூடாது//
அப்போ யாரெல்லாம் இதை ஆதரிக்கலாம்?

//மற்றவரின் நன்மைக்காக தான் துன்பத்தை ஏற்றும், எந்த கஷ்டமான நிலையிலும் தன் கொள்கையை, ஒழுக்கத்தைக் கைவிடாமலும் இருந்து ஆன்மீகத்தை வெளிப்படுத்தினார் இராமர். //
தன் சுயநலனுக்காக (நல்ல மகன் என்று பெயர் வாங்க) பெண்டாட்டியை காட்டுக்கு கொண்டு சென்று தொலைத்து. பின், தான் தன் பெண்டாட்டியுடன் சுகமாக வாழ, பல வானர பெண்களை விதவையாக்கியதில் என்ன ஆன்மிகம் இருக்கிறது. இதில் பேடியை போல் ஒருவனை பின்னாலிருந்து அடித்திருக்கிறார்.

அசோக், ஏன் இவ்வளவு கோவம், நாங்கள் உண்மையைத் தானே சொல்கிறோம். கண்ணகி தன கணவனுக்காக தன உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தவர், கண்ணகியைப் பற்றி தனிக் கட்டுரை வெளி இட்டு இருக்கிறோம். அதிலே எல்லாம் விவாதித்து இருக்கிறோம்.

//கண்ணகியின் சிறப்பை அவ்வளவு எளிதில் விவரிக்க முடியாது. கண்ணகியின் சிறப்பை விளக்கு முன் கோவலனின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். சோழ நாட்டின் மிகப் பெரிய பணக்கார வணிகக் குடும்பங்களில் ஒன்றில் பிறந்தவன் கோவலன்.
ஆசையின் பாதையில் மயங்கி விட்டதால் சொத்து பணம், தொழில், புகழ், நண்பர், உறவினர் அனைவரையும் இழந்து விட்டான். அந்தோ என்னும் கையறு நிலைக்கு வந்து விட்டான். யாருமே அவனுக்கு உதவி இல்லை. யாருமே அவனை நம்பவில்லை. அவனுக்கு கடன் கொடுத்தால் , உதவி செய்தால் … அந்தப் பணத்தையும் மாதவி போன்றவரிடம் கொடுத்து விடுவான் என்று பலரும் எண்ணி இருக்கக் கூடும். அதனால் நல்லவர்கள் கூட அவனை விட்டு விலகி விட்டனர்.
யாரையும் நெருங்கி உதவி கேட்கும் மன நிலையிலும் அவன் இல்லை. உதவி கேட்கும் தகுதியைக் கூட தான் இழந்து விட்டதாக கருதி விட்டான். வாழ்க்கையே அவனுக்கு முடிந்து விட்டது, தொழில், பணம் , உற்றார் , நண்பர் அனைவரையும் இழந்து விட்டான், நம்பிக்கையை இழந்து விட்டான். உணமையிலே கோவலனின் நிலை பரிதாபமானது.
ஆனால் அந்த நிலையிலும் அவனைக் கை விடவில்லை ஒருத்தி , அவனது கடந்த காலச் செயல்களால் அதிகம் பாதிக்கப் பட்டவள். அவளைப் பார்த்து அவன் காதல் மொழி பேசவில்லை,அவளை உதறிச் சென்று வேறு பெண்ணிடம் காதல் செய்தவன், அவளை தனிமையில் வாட விட்டவன், அப்படிப் பட்ட கோவலன், எல்லாவற்றையும் இழந்து ஒன்றும் இல்லாமல் வந்த போது, அவனிடம் முழு அன்பைப் பொழிந்து, அவன் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நம்பிக்கை வூட்டி, அவனுக்கு பொருளீட்ட தன்னுடைய சிலம்பையும் கொடுத்து அவன் வாழ்க்கையில் புதிய புத்துணர்ச்சியை அளித்திருக்கிறாள். உயிர் இருந்தும் உயிரற்ற நடை பிணமாக இருந்த கோவலனுக்கு உயிர் அளித்த உத்தமி கண்ணகி. கற்ப்புக்கரசி கண்ணகியே கோவலனின் தெய்வம்.

கற்ப்புக்கரசி கண்ணகி, அவளின் குழந்தைகளாகிய நம் அனைவரின் தெய்வம்!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த காவிய நாயகி கண்ணகியை வணங்க, அவளது கொள்கையினை நினைவு கூற நாம் தயங்கவே வேண்டியதில்லை நண்பர்களே.//

https://thiruchchikkaaran.wordpress.com/2010/06/24/kannagi/

மேலும் கண்ணகி தன கணவனை சதி செய்த செய்யாத குற்றத்துக்காக அநீதி அக்கிரமமாக கொன்று விட்டார்களே என்று ஆவேசப் பட்டது உண்மை. அதுதான் இந்தியப் பெண்மை. அப்போது மதுரையில் நடை பெற்ற தீ விபத்து ஒரு விபத்தாகவே இருந்திருக்கக் கூடும். கண்ணகி என்னவோ ஒவ்வொரு தெருவாகப் போய் நெருப்பு வைத்தது போல சிலர் எழுதுகின்றனர். இவ என்னைய்யா ஒரு புருசன் கூடத் தான் வாழ்வாளா, என்று சிலருக்கு கடுப்பு உண்டு.

தன் கணவனை அநீதிக்கு பறி கொடுத்த நிலையிலும், கண்ணகியார் மதுரை பற்றி எரிவதைக் கண்டு, குழந்தைகள, பெண்கள், முதியோர், கால்நடைகள் …. உட்பட தவறு செய்யாத அப்பாவிகள் காப்பாற்றப் பட வேண்டும் என வேண்டுகிறார்.

நல்ல மகன் என்று பெயர் வாங்க யாராவது காட்டுக்கு போவார்களா?

மரத்தில் இருந்த உரித்த நாரை உடையாக உடுத்த வேண்டும். சமைத்து உண்ண இயலாது, கிழங்குகளை, கனி காய்களை உண்டு வாழ வேண்டும்,

இரவில் விளக்கு இல்லை, பூச்சிகள் தொல்லை, பாம்புகள், மிருகங்கள்…. சிறை வாசத்தை விடக் கொடுமையானது வன வாசம். மேலு ம இராமன் தனியாக வே வன வாசம் செல்ல இருந்தான். சீதையே தன் கணவனின் துன்பத்தில் பங்கெடுக்க வனம் சென்றார். என்னவோ பேனாவைத் தொலைத்தது போல மனைவியைத் தொலைத்து விட்டார் என்று எழுதுகிறீர்கள். காமக் கொடூர கயவன் கொலைத் தனமாக ஏமாற்றிக் கடத்திச் சென்று. அந்த காமக் கொடூரனுக்கு வக்காலத்து வாங்க சிலர்!

வானரங்கள் அனைவரும்- காமக் கொடூர, எதேச்சதிகார, பயங்கரவாத மக்கள் விரோத கொடுங்கோலன் இராவணனை எதிர்க்கும் போராட்டத்தில் மனப் பூர்வமாக தங்களை ஈடு படுத்திக் கொண்டனர். இன்னொருத்தன் பொண்டாட்டி தானே, அவனைக் காமக் கொடூரன் கடத்தி என்றால் நமக்கு என்ன என்று அவர்கள் இருக்கவில்லை. நியாயத்துக்கான போராத்தில், நல்ல கொள்கைகளுக்கான போராட்டத்தில் அவர்கள் ஈடு பட்டு போர் புரிந்தனர்.

இதை எல்லாம் முன்பே விவாதித்து இருக்கிறோம்.,

அபத்தங்களை பிட்டு பிட்டு வைக்கின்றீர்கள்.. துணிவோடு.. நன்று

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post.html

பட்டது போதுமா ! பழ நெடுமாறா !

jmmsஅவர்களே,

உங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் ஆன்மீகமானது, அமைதியான எளிமையான ஆன்மீகம் ஆகும். உலகத்தில் பிற மார்க்கங்களை வெறுக்கச் சொல்லாத ஆன்மீகமாக, அரவணைக்கும் ஆன்மீகமாக இந்திய ஆன்மீகம் இருக்கிறது.

இதைப் பலர் காசுக்காகவும் விளம்பரத்துக்காகவும் உபயோகிக்கின்றனர்.
இதற்க்கு சரியான தீர்வு இந்து மதத்தின் உண்மையான ஆன்மீகத்தை , விவேகானந்தர், சங்கரர், தியாகராஜர் போன்றோரின் ஆன்மீகத்தை மக்களின் முன் வைப்பதே.

ஆனால் திடீர் சாமியார்கள் , குறிப்பாக பணக்கார சாமியார்களின் செல்வாக்கை பரப்புவதில் பலருக்கு லாபம் இருக்கிறது.

பணக்கார சாமியார்களிடம் பல கோடிகள் உள்ளன. அவர்களுக்கு அதிக ஆள் சேர்த்தால் அவர்களிடம் நன் மதிப்பைப் பெறலாம். இது கிட்டத் தட்ட கட்சி அரசியல் போல ஆகி விட்டது.

இந்த நிலைமை இது வரையில் இந்தியாவில் இருந்தததா என்பது சந்தேகமே. முன்பு சாமியார்களுக்கு உணவளித்தனர் .குடும்பஸ்தராய் இருந்து ஆன்மீகப் பணி செய்தவர்கள் அரிசி , பருப்பு, துணி இவற்றை தானமாகப் பெற்றுக் கொணடனர். இந்தியாவில்துறவிகள் ஒரு வேளை உணவைப் பெற்றுக் கொண்டு உலகில் எங்கும் கிடைக்காத மிகச் சிறந்த ஆன்மீக கல்வியை மக்களுக்கு தருகிறார்கள் என்று சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டார்.

இன்றைக்கு காலடியில் கோடிகளைக் கொட்டுகிறார்கள். பதிலுக்கு என்ன கிடைக்கிறது என்பதைப் பார்க்கிறோம்.

இந்த நிலையை மாற்ற உண்மையான ஆன்மீகத்தை மக்களுக்கு நினைவு படுத்துவோம்.

//அசோக், ஏன் இவ்வளவு கோவம், நாங்கள் உண்மையைத் தானே சொல்கிறோம். கண்ணகி தன கணவனுக்காக தன உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தவர், கண்ணகியைப் பற்றி தனிக் கட்டுரை வெளி இட்டு இருக்கிறோம். அதிலே எல்லாம் விவாதித்து இருக்கிறோம்//
அதாவது கண்ணகியும் சீதையும் மட்டுமே அத்தகைய அர்ப்பணிப்புடன் வாழ்ந்தார்களா? (அவர்கள் முதலில் வாழ்தார்களா என்பதே பெரிய கேள்வி). மற்ற பெண்களுக்கு அத்தகைய அர்பணிப்பு இல்லை என்று கூறுகிறீரா? தன்னை கணவனுக்கு அற்பநிக்காதவள் மனைவி என்ற தகுதியையே இழக்கிராளே. சீதையும், கண்ணகியையும் நல்ல மனைவிகள் என்று கூறுவதை நான் குறைசொல்ல போவதில்லை. அதற்காக அவர்களை இறைவனுக்கு மேலாக தூக்குவது சரி என படவில்லை.
//சீதையை, கண்ணகியை நாம் தெய்வம் என்று சொல்லவில்லை, தெய்வம் என்று ஒன்று இருந்தால் அதற்கும் மேலானவர்கள் சீதையும் கண்ணகியும் என்று நான் சொல்வேன்.//
உமக்கு இறைவனுடனும் தொடர்பில்லை, கண்ணகி மற்றும் சீதையும் நீர் அறிந்தவனில்லை. எதைக்கொண்டு இத்தகைய தீர்ப்பை நீர் வழங்குகிறீர்?
இப்போதைக்கு முடிக்கிறேன், மீண்டும் வருவேன்.
அசோக்

அசோக் ,

கண்ணகி , சீதை ஆகியோர் நிச்சயமாக வாழ்ந்தார்கள் என்று சொல்கிறோமா? சாட்சி குடுக்கிரோமா?

அவர்கள் ஒரு கற்பனைப் பாத்திரமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன.கண்ணகி சீதை ஆகியோர் வாழ்க்கை உண்மை நிகழ்வாக இருக்க, வரலாறாக இருந்திருக்க அதை விட அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. இதைப் பற்றி எல்லாம் பலமுறை விவாதித்து இருக்கிறோம்.

கடவுளுக்கான ஆதாரம் எதுவும் இல்லை, இது வரையில் யாரும் குடுக்கவில்லை. நீங்கள் கடவுள் என்று ஒருவர் இருப்பதாக் கருதிக் கொள்ளலாம், அமைதியாக வழி பட்டுக் கொள்ளலாம், நாங்கள் அதை இகழவோ, கண்டிக்கவோ இல்லை. ஆனால் நீங்கள் நம்புவது போல மற்றவரும் நம்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு சகிப்புத் தன்மையுடன் ,நாகரீகமாக நடந்து கொண்டால் யாரும் ஒன்றும் சொல்லப் போவது இல்லை.

இது வரை யாருமே காணாத கடவுளை இருக்கிறார் என்று நீங்கள் சொல்லும் போது – அப்படி ஒருவர் இருக்கிறார் என்று ஒரு assumption ஐ வைத்துக் கொண்டால் அவர்தான் மனிதரைப் படைத்தார் என்றால், எதற்கு ஒரு மனிதனைக் குருடனாகவோ, ஏழையாகவோ படைத்து கஷ்டப் பட வைக்க வேண்டும்? எதற்கு ஒவ்வொரு மனிதர் வாழ்விலும் எண்ணற்ற துன்பஙகள் நிகழ வேண்டும். இவ்வளவையும் நிகழ விட்டு அந்தக் கடவுள் மேலே இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்றால்- அப்போது கூட அவரை நாங்கள் இகழவில்லை- ஆனால் சீதை போனறவர்கள் இந்த உலகத்தில் எந்த ஒரு மனிதருக்கும் துன்பம் தராதவர், தான் குற்றமே செய்யாத போதும் , தனக்கு இழைக்கப் பட்ட அநீதியை , அதனால் ஏற்பட்ட துன்பத்தை மவுனமாக ஏற்றவர். அவரை கடவுளுக்குமேலானவராகவே கருதுவதில் என்ன தவறு?

https://thiruchchikkaaran.wordpress.com/2011/01/09/raamayana-fact-or-fictio/

இராமாயணம் ஒரு புனைவா அல்லது நடந்த நிகழ்வா?

அதாவது மதுரை எரிப்பு, யாருக்கும் தீங்கு தராத செயலா? அது விபத்தாக இருந்திருக்கலாம் என்று நீங்கள் சப்பை கட்டு கட்டுவீர்கள். ஆனால், நீங்கள் கண்ணகியை பற்றி படித்த சிலப்பதிகாரமே, “மதுரையை எரித்த கண்ணகி” என்றே கண்ணகியை குறிப்பிடுகிறது. ஒருவன் தன் உடல் வலிமையால் மற்றவனை துன்பப்படுத்தினால், அவனை ரவுடி என்கிறார்கள். மன்னன் செய்த தவறுக்கு மக்களை தன் கற்பின் வலிமையால் துன்பப்படுத்தியவள், யாருக்கும் தீங்கு செய்யாதவளா?

கடவுளை குறை சொல்ல உமக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை. உமக்கு, கடவுள் என்று ஒருவர் இருப்பதாகவே நம்பிக்கை இல்லை, மேலும் அவரை பற்றி முழுமையான தகவலும் இல்லை. உமக்கு கண்ணில் படும் சிலவிஷயங்களை மட்டும் கருத்தில் கொண்டு அரைகுறையாக ஏதோ எழுதுகிறீர்.

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். அதனால், கடவுளை பற்றி முழுதும் அறியும் வரை நீர் தீர்ப்பு சொல்லாதிருப்பதே நியாயம்.

உமக்கு பிடித்திருந்தால், நீர் சீதையையும் கண்ணகியையும் உயர்த்தி பேசலாம். ஆனால் கடவுளுடன் இணை வைக்க நினைத்தால், முதலில் கடவுளை அறிந்து கொண்டு பிறகு அதை செய்யலாம்.
I too personally respect and admire these charectors for some reasons. But, I dont compare them with GOD.
Thanks,
Ashok

//கடவுள் என்று ஒருவர் இருப்பதாகவே நம்பிக்கை இல்லை, //

ஐயா,

நம்பிக்கை என்பது நம்பிக்கை மாத்திரமே. உண்மை என்பது வேறு.எல்லா நம்பிக்கையும் உண்மையாக இருக்கும் என்று தீர்மானிக்க முடியாது . சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணம் இருந்தால் மாத்திரமே உண்மையாக முடியும். இருப்பதை இருக்கிறது என்றும், இல்லாததை இல்லை என்றும் சொல்லுகிறோம். பார்க்காத, உணராத ஒன்றை இருப்பதாக எப்படி சொல்ல முடியும்? காணாத ஒன்றை இருப்பதாக சொல்ல வேண்டுமா? பொய் சாட்சி கொடுக்க முடியுமா?

//அதாவது மதுரை எரிப்பு, யாருக்கும் தீங்கு தராத செயலா? அது விபத்தாக இருந்திருக்கலாம் என்று நீங்கள் சப்பை கட்டு கட்டுவீர்கள்.//

நீங்கள் பகுத்தறிவு அடிப்படையில் சிந்திக்க வேண்டும். பாண்டியன் அவையில் கண்ணகி உண்மையை நிரூபித்த போது மதுரையில் தீ பற்றி இருக்கிறது. இதை புலவர்கள் மதுரையை எரித்த கண்ணகி என்று சொல்லி இருக்கிறார்கள். இதிலே சப்பைக் கட்டு கட்ட என்ன இருக்கிறது. கற்பு என்பது ஒரு குண நலன், பெண்கள் கற்புடன் இருப்பது கணவனுக்கு, குடும்பத்துக்கு , சமூகத்துக்கு நாட்டுக்கு நல்லது. கள்ள உறவு வைப்பது பெரும்பாலும் கிரிமினல் பிரச்சினையில் முடிக்கிறது. எனவே கற்பு என்பது அமைதியை உருவாக்கும், சமூகத்தை உருவாக்கும் நல்ல சக்தியே ஆகும். அதிலே fire power இருப்பதாக சொல்ல முடியுமா?

//கடவுளை குறை சொல்ல உமக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை. //

கடவுளுக்கு பில்ட் அப் குடுக்க மட்டும் தான் அனுமதி உண்டா? செய்தால் குற்றம் இல்லை, அதை எடுத்து சொன்னால் குற்றமா? இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் எங்களிடம் எடுபடுமா?

//இது வரை யாருமே காணாத கடவுளை இருக்கிறார் என்று நீங்கள் சொல்லும் போது – அப்படி ஒருவர் இருக்கிறார் என்று ஒரு assumption ஐ வைத்துக் கொண்டால் அவர்தான் மனிதரைப் படைத்தார் என்றால், எதற்கு ஒரு மனிதனைக் குருடனாகவோ, ஏழையாகவோ படைத்து கஷ்டப் பட வைக்க வேண்டும்? எதற்கு ஒவ்வொரு மனிதர் வாழ்விலும் எண்ணற்ற துன்பஙகள் நிகழ வேண்டும். இவ்வளவையும் நிகழ விட்டு அந்தக் கடவுள் மேலே இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்றால்- அப்போது கூட அவரை நாங்கள் இகழவில்லை.//

இதற்க்கு என்ன பதில் ?

//முதலில் கடவுளை அறிந்து கொண்டு பிறகு அதை செய்யலாம்.//

முதலில் கடவுளை எங்களுக்குக் காட்டுங்கள், அப்புறம் இதை சொல்லுங்கள்.

என்னவோ கடவுளை இந்த உலகில் எல்லோருக்கும் காட்டி விட்டது போலவாம், எல்லோரும் பார்த்தும் ஒத்துக் கொள்ளாதது போலவும் இருக்கிறது. கடவுள் இருப்பதற்க்கான சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணத்தைக் கொடுங்கள் என்று பல முறை எழுதி விட்டோம்.

//ஆனால் கடவுளுடன் இணை வைக்க நினைத்தால்//

கடவுளைக் கெட்டவராக, இரக்கமற்ற கொடியவராக , பொறாமைக் காராரக சித்தரித்து தங்கள் வசதிக்காக அநியாய, அக்கிரமக் கோட்பாடுகளை உருவாக்கி அதைக் கடவுள் பேரில் கட்டி விட்டனர். அதை அப்படியே ஒத்துக் கொண்டு , அப்படி தான் செய்வாரு என்று சொல்லும் நீங்கள் தான் கடவுளை அவமதிக்கிறீர்கள்.

இந்து மதத்தின் அருமை பெருமைகளை வீடியோ போட்டு விளக்கிய திருச்சிக்காரன் அவர்களுக்கு நன்றி.

திரு. ராபின் அவர்களே,

தளத்திற்கு வருகை தந்து விவாதத்தில் பங்கெடுத்தற்க்கு மிக நன்றி. மக்களின், சமுதாயத்தின் நலனே நமக்கு முக்கியம்

ஆனால் இந்த வீடியோ- இது இந்து மதமல்ல , இந்து மதத்தின் பேரால் கல்லா கட்டும் கனவானகளின் கைங்கர்யம் என்பது எல்லோருக்கும் தெரியும் .

நூறு கோடிக்கும் மேலான இந்துக்கள் இது போல செய்வதில்லை. அமைதியான் ஆன்மீகத்தில் ஈடுபடுகிறார்கள். அமைதியாக கோவிலில் அவர்கள் வழிபாட்டை நடத்துகின்றனர்.

பிற மதங்களின் மேல் வெறுப்புணர்ச்சியை தூண்டும் கோட்பாடுகள் இல்லாத இணக்க முறையை, தன்னுடைய மதத்தை தவிர பிற மதங்களை அழித்து ஒழித்து தன மதத்தை மட்டுமே எல்லோரும் பின்பற்ற செய்ய வேண்டும் என்கிற மத வெறி இல்லாத அமைதியான முறையை இந்து மதம் அவர்களுக்கு தந்துள்ளது.

மீண்டும் ஒரு முறை உங்களின் வருகைக்கு நன்றி செலுத்துகிறேன்,

//ஆனால் இந்த வீடியோ- இது இந்து மதமல்ல , இந்து மதத்தின் பேரால் கல்லா கட்டும் கனவானகளின் // ஜெயின்மக்களின் திகம்பர சாமியார் என நினைக்கிறேன்

நண்பர் அசோக் அவர்களே,
சிலை வழிபாடு உணகளுக்கு பிடிக்கவில்லை. சிலையற்ற கடவுளை வழிபடுவதே உங்களுக்கு சிறந்ததாக தெரிகிறது.
சில சந்தேகங்கள்
உங்களின் தெய்வம்
உருவமற்றவரா? உருவமற்றவர் எனில் அவர் சொர்கத்திலே அல்லது வேறு எங்கோ இருக்கிறார்தானே? அப்படி இருக்கும் அவர் அங்கேயும் உருவமற்று உள்ளார? அல்லது அங்கே உருவத்துடன் தான் உள்ளாரா?
அவருக்கு அங்கேயும் உருவம் இல்லை என்று நீங்கள் சொன்னால் அவரை நீங்கள் எப்படி அடைவீர்கள்?
உருவமற்ற இறைவனோடு (இறைநிலையாடு ) கலந்து விடும் அத்வைதியா நீங்கள்? இறைவனை இறை நிலையை பரப்ரம்மமாக கருதுவது அவர்கள்தான்.அவர்களிலும் உருவ வழிபாடும் உருவமற்ற (சிலுவை கூட கிடையாது) ஆத்மாவே கடவுளாக கொண்ட உண்மையான அருவ வழிபாட்டாரும் உண்டு.
அல்லது ஒன்று மற்ற சூன்ய நிலையை உணரும் சூன்ய வாத வழிபாடா?
முற்றிலும் உருவற்ற நிலை ஒன்று எல்லாமுமான பரப்ரம்மம் அல்லது ஏதுமற்ற சூன்யம்.
அங்கே உருவத்துடன் தான் உள்ளார் அங்கே சென்று அவரை அங்கு சென்று உருவத்துடன் சந்தித்து சேவை செய்வேன் அவருள் நிதிரையடைவேன் என்றால் இங்கேயே அவனுக்கு ஓர் உருவை கண்டு கொண்டு வணங்குபவன் செய்வது என்ன தவறு?

அன்பு நண்பர் அசோக்,
என் சிவன் அலகினில் சோதியன், (சோதி உருவமற்றது.)
தனி நபர் அல்ல, யாதுமாகி நிறைந்து இவ்வுலகில் எல்லாமுமாக நிறைந்திருப்பது அவன்.எல்லம் வல்லவன் மட்டும் அல்ல,எல்லாமுமே அவனே.
தாமுகந்தது எவ்வுரு அவ்வுருவெல்லாம் அவன்.
அவனுக்கு உரு முக்யமல்ல ஏனெனில் உரு உருவற்ற நிலை ரெண்டுமே அவனே.
உருவினனாய் வழிபடுவோற்கும் உருவற்றவனாய் வழிபடுவோற்கும், வழிபாடு, சிவன், சீவன் மூன்றுமாய் இருப்பவன் அவன்.

அவன் அருள் இருப்பதால் அவன் தாள் வணங்கும் சிவனடியான் நான்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: