Thiruchchikkaaran's Blog

வாக்குத் தத்தம் செய்யப் பட்ட நிலமும் , உலக அமைதிக்கு வைக்கப் பட்ட ஆப்பும்!

Posted on: February 23, 2011


உலகில் அன்று முதல் இன்று வரை மிகவும் சர்ச்சைக்குரிய இடமாக ,  பல போர்கள் நடைபெறுவதற்கும், பல இன அழிப்புகள் நடைபெற்று வருவதற்கும்   காரணமான கோட்பாடாக இருப்பது பராமிஸ்டு லேண்ட் – வாக்குத் தத்தம் செய்யப் பட்ட நிலம் – கோட்பாடு ஆகும்

ஆபிரகாமின் சந்ததியார் என சொல்லப் படும் இஸ்ரவேலர்கள் (யூதர்கள்) வாழ்வதற்கு நிலத்தை தருவதாக ஆபிரகாமுக்கு வாக்களிக்கப் பட்டதாக சொல்லப் படுகிறது.

புதிய இடத்திலே அவர்களைக் குடி அமர்த்தினால் அதில் நாம் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை. ஏற்க்கனவே குடி இருந்த மக்களை  அழித்து விட்டு அடந்த இடத்தை யூதர்களுக்கு தருவதாக வாக்களிக்கப் பட்டதாக சொல்லப் படுகிறது

//18. அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்
In the same day the LORD made a covenant with Abram, saying, Unto thy seed have I given this land, from the river of Egypt unto the great river, the river Euphrates:

19. கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,
The Kenites, and the Kenizzites, and the Kadmonites,

20. ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,
And the Hittites, and the Perizzites, and the Rephaims,

21. எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.
And the Amorites, and the Canaanites, and the Girgashites, and the Jebusites.//

(ஆதியாகமம் அதிகாரம் 15)

 

இதில் வேடிக்கை என்னவென்றால் ஆபிரகாமுக்கு அப்போது பிள்ளையே பிறக்கவில்லை.

2. அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக் கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.
And Abram said, Lord GOD, what wilt thou give me, seeing I go childless, and the steward of my house is this Eliezer of Damascus?

3. பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திர சந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்.
And Abram said, Behold, to me thou hast given no seed: and, lo, one born in my house is mine heir.

(ஆதியாகமம், அதிகாரம் 15)

இன்னும் பிள்ளையே பிறக்காத ஒருவரின் சந்ததிக்காக பத்து இனங்களை சேர்ந்த மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் இடத்தை இவருடைய சந்ததியாருக்கு தரப் போவதாக வாக்குத் தத்தம் செய்து இருக்கிறார்.File:Greater Israel map.jpg

                                

நைல் நதிப் பகுதியில் எகிப்தியர்கள் செழித்து வாழ்ந்தார்கள். யூப்ரடிஸ் டைக்ரிஸ் நதிப் பகுதியில் சுமேரியர்கள் வளமுடன்  வாழ்ந்தனர். தன்னுடைய இனமாகிய யூத இனம் வாழ நிலம் தேடிய மோசாஸ், லார்ட் ஆப் இஸ்ரேலை சந்திக்கிறார்.

அவர் ஏத்தியர்,  எபூசியர் உள்ளிட்ட பல இனங்களும்  வாழும் பகுதியை  மோசசுக்கு தருவதாக வாக்குத் தத்தம் செய்கிறார்.  

எதையும் முதல்ல பிளான் பண்ணிப் பண்ணனும் என்று சொல்வது போல, கொஞ்சம் கூட இரக்கம் காட்டாமல் அந்த பகுதியில் குடி இருக்கும் மக்களைக் கொன்று குவித்து   இனங்களை முற்றாக அழிக்கும் இனப் படுகொலைக்கான திட்டம் தயாரானதாக விவிலியம், பரிசுத்த வேதாகமம் என்றெல்லாம் அழைக்கப் படும் நூலின் மூலம் அறிகிறோம்.

(தொடரும்)

 

Advertisements

1 Response to "வாக்குத் தத்தம் செய்யப் பட்ட நிலமும் , உலக அமைதிக்கு வைக்கப் பட்ட ஆப்பும்!"

annpu sakotharare muthalil theva gnaththota bible – la patiththuvittu ezhuthunga

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: