Thiruchchikkaaran's Blog

ஆபிரகாம்!

Posted on: February 22, 2011


ஆபிரகாமிய மதங்கள் என்று சொல்லப் படும் யூத, கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய மதங்களோடு மத நல்லிணக்கத்தில் இணைவதில் இந்து , புத்த, சமண மதங்களை சேர்ந்தவர்கள் அதிகம் தயங்க மாட்டார்கள்.

ஆனால் ஆபிரகாமிய மதங்களை சேர்ந்தவர்களுக்கு முதலில் தங்களுடைய கோட்பாட்டின் அடிப்படையிலான மதங்களுடன் இணக்கமாக இருப்பதே பெரும்பாடாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் உலகிலே மத அடிப்படையில் நடத்தப் பட்ட பெரும்பாலான போர்கள் ஆபிரகாமிய மதங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் நடத்திக் கொண்டவையே.

இதற்க்கான காரணம் என்ன? ஒரே கோட்பாடு உடையவர்கள், எல்லோரும் ஒரே தகப்பனுக்கு பிறந்த சகோதரர்கள் – அதாவது எல்லோரும் ஆதாமின் சந்ததியார்கள், சகோதரத்துவம், எல்லோரின் மேலும் அமைதி உண்டாகட்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டாலும், அதே கோட்பாட்டை உடைய மற்றவர்களுடன் கூட இவர்களால இணக்கமாக இருக்க முடியவில்லையே அது ஏன்?

File:Abram (Biblical).jpg

ஒரு இந்து சர்ச்சுக்கு போவதோ, கிறிஸ்துமஸ் நிகழ்ச்சயில் கலந்து கொண்டு கேக் உண்ணுவதோ, மசூதிக்கு போவதோ, இப்தார் விருந்தில் கலந்து கொள்வதோ  சகஜமாக  நடக்கிறது.

முகமது நபி(PBUH) யின் பிறந்த நாளை மீலாடி நபி என பெருமைப் படுத்தும் இஸ்லாமிய சகோதரர்கள், இயேசு நபியின் பிறந்த நாளை ஏன் கேக் வெட்டிக் கொண்டாட மறுக்கின்றனர்? (இஸ்லாமியர்கள் மோசஸ், இயேசு … இவர்களும் எங்களுக்கு நபி தான் என்கிறார்கள்).

நான் பணி செய்த ஆலையில் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை  செய்கின்றனர். வேளாங்கண்ணி மாதா திருவிழாவை ஒட்டி ஆலையிலே ஒரு இடத்தில் மாதாவிற்கு ஒரு பூசை போடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இந்துக்கள் பலர் அதில் கலந்து   கொண்டனர்.  ஆனால் சிஎஸ்ஐ எனப் படும் பிரிவை சேர்ந்தவர் அந்த விழாவுக்கு வர மறுத்து விட்டார்.

அவருடைய கேபினில் இருந்து முப்பது அடி தொலைவில் தான் மேரி மாதா படத்தை வைத்து கேக் வெட்டி விநியோகம் செய்தனர். மேரியை வணங்கக் கூட கட்டாயமில்லை. சும்மா வந்து நின்றால் போதும். ஆனால் அவர் தான் வர மாட்டேன் என்று தெளிவாக சொல்லுகிறார், தான் வர மாட்டேன் என்பதை அழைத்தவர் களும், மற்றும் அனைவரும் தெரிந்து கொள்ளும்படி பட்டவர்த்தனமாக சொல்லிப் பெருமிதப் படுகிறார். இத்தனைக்கும் அவர் கையிலே வைத்திருக்கும் நூலிலே மரியே வாழ்க, பெண்களுக்குள்  ஆசீர்வதிக்கப் பட்டவள் நீரே,  உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்  பட்டவரே என்று எழுதி உள்ளது.

இந்த அளவுக்கு பிற மதங்களின் மீது வெறுப்புணர்ச்சி வரக் காரணம் என்ன, என்பதை நாம் அறிந்து கொண்டால் அவர்களின் மனதில் உள்ள வெறுப்புணர்ச்சியை விலக்கி அன்புப் பாதைக்கு நாம் இவர்களை  கொண்டு வர முடியும். இதைப் பற்றி நாம் தொடர்ந்து  ஆராய்வோம்.

(தொடரும்)

Advertisements

8 Responses to "ஆபிரகாம்!"

விடுங்க பாஸு. இதெல்லாம் சகசம் தானே? இவங்க எப்பவுமே இப்படித்தான்…

வாங்க, சீனு,

//இதெல்லாம் சகசம் தானே?//

“நம்ம தொழில்ல அடிக்குப் பயந்தா முடியுமா, இத்தனை வருசாமா ஒண்ணா தொழில் பண்ணுறோம் , ”

அதற்க்கு பதிலாக “யே நான் எப்ப ஒன் கூட சேர்ந்து தொழில் பண்ணினேன்”

என்று புலம்பிய கைப்புள்ளையின் நிலை நமக்கு வேண்டாம்,

அவர்களின் சண்டைகளை , புனித போர்களை எல்லாம் இங்கேயும் உருவாக்க வேனாடாம் , மாறாக அவர்களிடமும் சென்று சமாதானத்தை நல்லிணக்கத்தைப் பரப்புங்கள் என்று சொல்லுகிறோம்.

அன்பின் Thiruchchikkaaran,
//சிஎஸ்ஐ எனப் படும் பிரிவை சேர்ந்தவர் அந்த விழாவுக்கு வர மறுத்து விட்டார்//
சிஎஸ்ஐஎனப் படும் பிரிவு என்றால் என்ன ? அவர்கள் யார் தயவு செய்து தெரியபடுத்துங்கள்.

சர்ச் ஆப் சவுத் இந்தியா என்பதே சி எஸ் ஐ என சுருக்கமாக சொல்லப் படுகிறது.

ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள் என்ற காரணத்தால், ஒரு பெண் பலரை (ஒரு தாய் வாயிற்று பிள்ளைகள்) மணக்க முடியுமா?

அதே போல்தான், எங்கள் பக்திக்கும் கற்பு நெறி உண்டு. பலரை கணவனாக ஏற்ப்பதும், பலரை கடவுளாக ஏற்ப்பதும் ஒன்றே.

நன்றி,

அசோக்

//அதே போல்தான், எங்கள் பக்திக்கும் கற்பு நெறி உண்டு. பலரை கணவனாக ஏற்ப்பதும், பலரை கடவுளாக ஏற்ப்பதும் ஒன்றே.//

ஓ! உங்களுக்கு கடவுள் என்பவர் கணவர் போன்றவரா? அப்ப, ஒரு கணவருக்கு மட்டும் நிறைய மனைவிகள்(!) இருக்கலாமா? 🙂

கடவுள்கள் எங்களுக்கு நண்பன் போன்றவன். அதனால் எத்தனை நண்பனை வேண்டுமானாலும் இருக்கலாம், இல்லையா?

அசோக்கு ஏன் இன்னும் உங்களுக்கு பேதுரு அந்ததோணி இசுமாயில் போன்ற யூதப் பெயர்கள் சூட்டப்படவில்லையா? இந்திய பெயர்களையே வைத்துள்ளீர்கள். நிறத்துக்கும் சொந்த நாட்டிற்கும் பிறந்த இனத்திற்கும் ஏற்ற அல்லது சொந்த மதத்தை பின்ப்ற்றுங்கையா

//நிறத்துக்கும் சொந்த நாட்டிற்கும் பிறந்த இனத்திற்கும் ஏற்ற அல்லது சொந்த மதத்தை பின்ப்ற்றுங்கையா//

சரியா சொனீங்க , இந்துக்களே உங்களுக்கும் தான்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 37 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: