Thiruchchikkaaran's Blog

மத நல்லிணக்கம் நடை முறையில் சாத்தியமா?

Posted on: February 19, 2011


 

                         

மத நல்லிணக்கம் நடை முறையில் சாத்தியமா?  

உலகெங்கும் பலர்  தங்கள் மதம் மட்டுமே உண்மையான மதம் என்றும், பிற மதங்கள் பொய்யானவை என்றும், பிற மதங்களை அங்கீகரிக்கக் கூடாது எனவும், பிற மதங்கள் மீது  வெறுப்புணர்ச்சியை தூண்டி விட்டு தங்கள் மதத்தவரிடையே பிரச்சாரம் செய்வதை நாம் காண்கிறோம் அல்லவா?

அந்த நிலையில் மத நல்லிணக்கம்  சாத்தியமாகுமா என்றும் கேள்விகள் எழுப்பப் படுவதைக் காண்கிறோம்.

சிறுவர் சிறுமியர் மனங்களில் மதப் பிரச்சாரம் என்ற பெயரில் பிற மதங்களுக்கு எதிரான வெறுப்புக் கருத்துக்களை சிறு வயதிலேயே அவர்கள் மனதில் புகுத்துகின்றனர்.  
                           
இது விடயமாக திரு. தருமி அவர்கள் எழுதியதை இங்கே மேற்கோள்  காட்டுகிறோம்.

//Each religion,at least the major religions of the day, teaches man that THAT is the true religion; the only true religion. Preaching are drilled into the minds and dogmas are poured into their growing minds from the very childhood. This and the environment the children have in their early days make them grow very strong in their faith. The greatest horror is that children growing in one religion always gets tutored to hate other religions. Religion possesses them//

இதிலே சொன்னபடி //Each religion,at least the major religions of the day, teaches man that THAT is the true religion; the only true religion.//உலகில் உள்ள எல்லா முக்கிய மதங்களும் பிற மதங்களை வெறுக்க சொல்லிப் போதிக்கிறதா அப்படிப் பிரச்சாரம் செய்யப் படுகிறதா என்கிற கேள்வியை  நான் முன் வைத்த போது நான் முன் வைத்த போது திரு. தருமி அவர்கள் பதிலாக,

//the major religions of the day, = abrahamic religions, especially christianity and islam.//

 என்கிற கருத்தை எழுதினார்.

                        File:SiegeofAntioch.jpeg

உலகில் உள்ள முக்கிய மதங்கள் கிறிஸ்தவமும், இஸ்லாமும் மட்டும் தானா, இந்து மதமும் , புத்த மதமும் உலகின் முக்கிய மாதங்களாக உள்ளனவே என்பதைப் பற்றி நாம் இந்தக் கட்டுரைத் தொடரின் முக்கியப் பொருளாக விவாதிக்கப் போவதில்லை. (வேண்டுமானால் அதை தனிக் கட்டுரையாக விவாதித்துக் கொள்ளலாம்).

 நம்முடைய இந்தக்  கட்டுரை தொடரின் முக்கியப் பொருள் ஒருவர்  கிறிஸ்தவராக இருந்தாலும், இஸ்லாமியராக இருந்தாலும் , இந்துவாக இருந்தாலும்… அவரை நல்லிணக்கப் பாதைக்கு அழைத்து  வருவது பற்றியதே.

தருமி ஐயா சொன்ன பதிலில் இருந்தே எவரும் அறிந்து கொள்ளக் கூடியது என்னவன்றால், இந்து, புத்த, சமண மதங்கள் பிற மதங்கள் எல்லாம் பொய்யானவை என்று சாதிக்க வேண்டும் என்றோ, தங்கள் மதம் மட்டுமே இத உலகில் இருக்க வேண்டும் என்கிற உணர்ச்சியை உருவாக்கும் கருத்துக்களை போதிக்கவில்லை என்பதே.

எனவே உலகில் கணிசமான  மக்களை  மத நல்லிணக்கப் பாதைக்கு கொண்டு வருவதற்கான களம் உள்ளது.   ஆனால் மத நல்லிணக்கவாதிக்கு உண்மையான சவால் ஆபிரகாமிய மதங்கள் என அழைக்கப் படும் மதங்களான  யூத மதத்தின் கோட்பாட்டை ஒட்டி அமைக்கப்பட்ட இஸ்லாம் மற்றும் பைபிள் அடிப்படையிலான மதங்கள்தான்.

ஆனால் இம்மதத்தை சார்ந்தவர்களை நல்லிணக்கப் பாதைக்கு கொண்டு வருவது முடியாத் காரியம் என்று பெரு மூச்சு விட விட வேண்டியதில்லை. 

 இஸ்லாத்தை சேர்ந்த மகா அக்பர், மகான் கபீர் ஆகியோரின் மத நல்லிணக்க  வாழ்க்கையும் கொள்கையும் வரலாற்று சான்றாக  உள்ளது.  

பைபிள் அடிப்படையிலான மதங்களை சேர்ந்த அறிஞர்கள் மத்தியில் மத நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுவதில் சுவாமி விவேகானந்தர் வெற்றி பெற்று இருக்கிறார்.

(தொடரும்)

Advertisements

19 Responses to "மத நல்லிணக்கம் நடை முறையில் சாத்தியமா?"

This was the third time that month that evangelists had come knocking on my door and disturbing me so I decided to teach them a lesson. ‘Good morning’ they said. ‘Good morning’ I replied. ‘Have you heard about the Lord Jesus Christ’? They asked. ‘I know something about him but I am a Buddhist and I’m not really interested in knowing more’ I said. But like all evangelists, they took no notice of my wishes and proceeded to talk about their beliefs.

So I said, ‘I don’t think you are qualified to speak to me about Jesus’. They looked very astonished and asked, ‘Why not’? ‘Because’, I said, ‘you have no faith’. ‘Our faith in Jesus is as strong as a rock’ they insisted. ‘I don’t think it is’ I said with a smile. ‘Please open your Bible and read the Gospel of Mark, chapter 16, verse 16, 17 and 18’ I said and while they flicked through their Bibles I went quickly inside and came out again.

One of them found the passage and I asked him to read it out loud. It said, ‘He who believes and is baptized will be saved but he who does not believe shall be condemned. And these signs will follow those who believe in my name. They shall cast out devils, they shall speak in tongues, they will handle snakes and if they drink poison it will not hurt them and they will lay hands on the sick and they will recover’.

When he finished I said, ‘In that passage Jesus says that if you have real faith you will be able to drink poison and not die’. I took a bottle of Lankem from behind my back, held it up and said, ‘Here is some poison. Demonstrate to me the strength of your faith and I will listen to anything you have to say about Jesus’.

You should have seen the looks on their faces! They didn’t know what to say. ‘What’s the problem’? I asked. ‘Is your faith not strong enough’? They hesitated for a few moments and then one of them replied, ‘The Bible also says that we must not test God’. ‘I’m not testing God’, I said, ‘I’m testing you. You love to witness for Jesus and now is your big opportunity’ .

Finally one of them said, ‘We will go and speak to our pastor about this matter and come back and see you. ‘Ill be waiting for you’ I said as they scurried away. Of course they never came back again. Here is a bit of advice.

Keep a copy of this Bible reference and a bottle of Lankem ready and every time the evangelists come to your door to harass you give them this test. You might like to have a polanga ready as well.

………………….
………………..
………………..

The three boys were now listening to our discussion very intently. ‘Alright’! I said. ‘Do you believe that the world is going to come to a complete end in the year 2000’?

‘Absolutely’ ! said the man. ‘The Bible predicts it and I believe it will happen’. ‘Okay’ I said. ‘I have a friend who is a lawyer. I will ask him to come here tomorrow and you and I will draw up a proper legally binding contract in which you will agree to give me all your property – your house, your business and all your assets – in the year 2001. Do you agree to do that’?

The man was flabbergasted. He didn’t know what to say. ‘Come on’, I said. ‘If you are right, and you insist you are, in 2001 I will be in hell and you will be in heaven with Jesus where you wont need all your worldly goods’. ‘This is just silly’ said the man now very flustered.

Now one of the boys joined in. ‘Its does not seem silly to me. It seems like a good chance for you to prove you beliefs’. ‘I agree’ I said. ‘Now is your big chance to demonstrate how genuine you and strong your faith is. These boys might be so impressed that they might become Christians. Put your faith where your mouth is’.

The man became very angry, got up and walked away. The three boys were smiling and the one who had been a little frightened about the end of the world was smiling the most.

http://www.hvk. org/articles/ 1004/122. html

வரும் பதிவுகளுக்குக் காத்திருக்கிறேன்.

மத சகிப்பு, மத நல்லிணக்கம் – இரு தலைப்புகள்! இதில் எதை நோக்கிய பயணம் இந்தக் கட்டுரைக்கு?

அன்புக்குரிய தருமி ஐயா,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

மத சகிப்புத் தன்மை என்பது மத நல்லிணக்கத்தின் முதல் படியாகும் . மத சகிப்புத் தன்மை இல்லாமல் மத நல்லிணக்கம் வர முடியாது. பிற மதங்களை எண்ணும் போது மனதிலே குரோதமும் ஆக்ரோஷமும் கொப்பளிக்க, அவற்றை எல்லாம் அழித்து, ஒழித்து தன் மதத்தை மட்டுமே எல்லோரும் பின்பற்றுவதாக அமைய வேண்டும் என்கிற ஆவேசம் இல்லாமல், ஏதோ இன்னொரு மதத்துக்காரன் அவன் மன அமைதிக்கு வேண்டி விட்டுப் போகிறான் என்று பிற மதங்களை சகித்துக் கொள்ளும் மன நிலையே மத நல்லிணக்கத்தின் முதல் படியும், முக்கியப் படியும் ஆகும். இதுவே என்னுடைய தாழ்மையான கருத்து.

முஸ்லீம்கள் இப்படி இருந்தால் எப்படி நல்லினக்கம்வரும்!

http://hayyram.blogspot.com/2011/02/blog-post_18.html

அன்புக்குரிய நண்பர் இராம் அவர்களே, ,

வருக. கருத்துக்கு நன்றி.

இதுதான் இந்தக் கட்டுரையின் முக்கிய பேசு பொருளே!

இஸ்லாமிய சமுதாய சகோதரர்களும், பைபிளை பின்பற்றும் சகோதரர்களும் மத நல்லிணக்கத்துக்கு தயாராக இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை. அவர்களையும் மத நல்லிணக்கப் பாதைக்கு கொண்டு வருவதில் தான் இந்தியாவின் வெற்றி இருக்கிறது. இந்தியாவின் வெற்றி மட்டும் அல்ல, உலகத்தின் அமைதி, மனிதத்தின் வாழ்வு இவை எல்லாம் சிறக்க மத நல்லிணக்கம் முக்கியமாகும். நீங்கள் எத்தனயோ பீர்பால் கதைகளை உங்கள் தளத்தில் எழுதுகிறீர்கள். அக்பர் எப்படி மத நல்லிணக்கப் பாதைக்கு வந்தார் என சிந்தித்துப் பாருங்கள்.

நான் சிந்திப்பதற்கு என்ன இருக்கிறது. அதைப்பற்றி சிந்திக்க வேண்டியது முஸ்லீம்கள் தான். இந்துக்களை பொறுத்தவரை கல்லும் மண்ணும் கூட சாமி தான்.

வாங்க இராம்,

//நான் சிந்திப்பதற்கு என்ன இருக்கிறது. அதைப்பற்றி சிந்திக்க வேண்டியது முஸ்லீம்கள் தான். //

முஸ்லீம்கள் சிந்திக்க வேண்டும், அவர்கள் சிந்திக்கட்டும் என்று சொல்லிக் கொண்டு இருப்பதை விட இன்னும் கொஞ்சம் அதிகமாக நாம் முயலக் கூடுமா என்று சிந்தியுங்கள். இந்தியா உலகிற்கு தரும் கொடைகளில் முக்கியமானது மத நல்லிணக்கம் ஆகும். மத வெறி சண்டைகளில் சிக்கிய உலகத்தி மீட்டு, இந்த உலகத்தில் எல்லா மதங்களும் சமரசமாக இயங்க முடியும் என்பதைக் காட்டக் கூடியது இந்தியாவே. அதில் (மத நல்லிணக்கத்தில்) முன்னணியில் இருந்து வழி நடத்தி செல்ல இந்துக்கள் ஆர்வத்துடன் செயல் பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

//இந்துக்கள் ஆர்வத்துடன் செயல் பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்// இந்துக்களுக்கு இப்படி புத்தி சொல்ல கொடிப்பேர் இந்தியால இருக்காங்க. ஆனா இதையே முஸ்லீம்ங்ககிட்ட யார் சொல்றது?

//இந்துக்கள் ஆர்வத்துடன் செயல் பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்// இந்துக்களுக்கு இப்படி புத்தி சொல்ல கொடிப்பேர் இந்தியால இருக்காங்க. ஆனா இதையே முஸ்லீம்ங்ககிட்ட யார் சொல்றது?//

இந்துக்கள்

//இந்துக்கள்// அதை ஒரு முஸ்லீம் சொல்லட்டும்!

////இந்துக்கள்// அதை ஒரு முஸ்லீம் சொல்லட்டும்!// அதாவது இந்துக்கள் சொன்னால் கேட்டுக்கொள்வோம் என்று முஸ்லீம்கள் சொல்லட்டும்.

இராம்,

ம‌னித‌த்தின் ந‌ம்பிக்கை ம‌த‌ ந‌ல்லிண‌க்க‌மே. ம‌த‌ வெறியை குண‌ப் ப‌டுத்த‌ ம‌ருந்தாக‌ மத ந‌ல்லிண‌க்கமே உள்ள‌து. ந‌ல்லிண‌க்க‌த்திற்க்கு மாற்றாக‌ வேறு ஏதாவ‌து வ‌ழி இருந்தால் சொல்லுங்க‌ளேன்.
ஒருவர் சகிப்புத் தன்மை உடையவராக மாறுவது, பிறரின் மத
சுதந்திரத்தை மதிப்பவராவது இவை எல்லாம் ஒரே நாளில் நடை பெறாது. நீங்கள் உங்களின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்,

நீங்களோ வேறு யாரோ, ஆபிரகாமிய மதத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தில் பிறந்து இருந்தால் நீங்கள் எப்படி இருந்து இருப்பீர்கள்? அப்போது உங்களுடைய குடும்பத்தவரும் , குருமார்களும் பிற மதங்கள் பொய்யானவை என்றே போதித்து இருப்பார்கள். ஒரு சிறுவன் வளரும் சூழ்நிலை, கேட்கும் பேச்சு, படிக்கும் நூல் இவற்றை வைத்துதான் அவன் குணாதிசயங்கள் உருவாகிறது.

என‌வெ சிறுவ‌ர்களின் ம‌ன‌ங்க‌ளில் காட்டு மிராண்டிக் கோட்பாடுக‌ளுக்கு மாற்றான‌ நாகரீக‌ கோட்பாடுக‌ளை புகுத்த‌ வேண்டும்.

நீங்க‌ள் ரிஷித்துவ‌ம் அடைந்த‌வ‌ராக‌ இருந்தால் (ஆன்மீக‌ முன்னேற்ற‌ம் பெற்ற‌வ‌ராக‌) நீங்க‌ள் சொல்வ‌தை ம‌ற்றவர்க‌ள் கேட்பார்க‌ள் என்று சுவாமி விவேகான‌ந்த‌ர் சொன்ன‌தை குறிப்பிட‌ விரும்புகிரேன்

//அப்போது உங்களுடைய குடும்பத்தவரும் , குருமார்களும் பிற மதங்கள் பொய்யானவை என்றே போதித்து இருப்பார்கள். ஒரு சிறுவன் வளரும் சூழ்நிலை, கேட்கும் பேச்சு, படிக்கும் நூல் இவற்றை வைத்துதான் அவன் குணாதிசயங்கள் உருவாகிறது.// இந்தக் கூற்று முற்றிலும் உண்மை இதை நான் ஒத்துக்கொள்கிறேன். நிஜம் தான், எப்படி மூலைச்சலவை செய்யப்படுகின்றனரோ அப்படி நடந்து கொள்கிறார்கள். ஆனால் நாம் போதிக்கச் சென்றால் நம்மை விரோதியாக அல்லவா பார்க்கிறார்கள்.

http://hayyram.blogspot.com/2011/02/blog-post_20.html

நீங்களே பாருங்கள், இந்த வெறியர்களின் கொடுமைக்கார செயலை. இவர்களிடம் போதித்து தெளியவைக்க முடியும் என்று எப்படி நம்பமுடியும்?

திரு. இராம் அவர்களே,

இந்த நிலையில் இருந்து மாற வேண்டும், காரும் , செல் போனும், இன்டெர் நெட்டும் இருந்தால் மட்டும் நாகரிக சமூகம் ஆக முடியாது, சகிப்புத் தன்மை, சமரசம், நல்லிணக்கம், சமத்துவம், அன்பு ……இவற்றின் மூலமே நாகரிக சமுதாயத்தை அமைக்க முடியும் என்றுதான் இவ்வளவும் எழுதுகிறோம்.

மத நல்லிணக்கத்துக்கு மாற்றாக நீங்கள் எதையாவாது முன் வைக்கிறீர்களா என்று கேட்டு இருக்கிறோம். அதற்கு நீங்கள் பதில் தரவில்லை. இந்தியாவிலே குஜராத் கலவரங்களிலும் இதைப் போல நடைபெற்று இருக்கிறது ஆனால் இந்தியாவில் சட்டத்தை மீறி அப்படி செய்கிறார்கள். நீங்கள் காட்டிய சுட்டியில் நட பெறுவது சட்டப் படியா என்று தெரியவில்லை.

மொத்தத்தில் மத வெறிக்கு மாற்று நாகரீகத்தை, அன்பை உருவாக்கும் கல்வியே. வெறுமனே அவர்கள் காட்டு மிராண்டித் தனமாக நடந்து கொள்வதாக சொல்லி க் கொண்டே இருப்பதால் நிலைமை மாறி விடுமா?

// நீங்கள் காட்டிய சுட்டியில் நட பெறுவது சட்டப் படியா என்று தெரியவில்லை// தெரியவில்லை என்று சொல்வதற்கு என்ன இருக்கிறாது. இஸ்லாத்தின் ஷரியத் சட்டத்தின் படி இப்படித்தா கொல்ல வேண்டும் என்று தெரிந்தே, மனமுவந்தே கொல்கிறார்கள். இத்தனை கொலை பாதகத்தை மதத்தின் அடிப்படை வாதமாகவே வைத்திருப்பவர்கள் இஸ்லாம் மார்க்கமே அமைதி மார்க்கம் என்று கூறுவது வடிகட்டின பொய் என்பது தெரியவருகிறது. உணர்ச்சி வசப்பட்டு கொலை செய்யும் கூட்டம் உணர்ச்சிக் கொதிப்பை அடக்கினால் மாறிவிடும். ஆனால் எமது மதமே கொல்லச் சொல்லி இருக்கிறது என்று கூறி சக மனிதனை அதுவும் தன்மத மனிதனையே கொடூரமாக அவர்களின் கடவுளின் பெயரால் செய்பவர்களிடம் என்னத்தை சொல்ல! நீங்கள் கேட்பது போல மத நல்லிணக்கம் தான் இதற்கு ஒரே மாற்று என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் முஸ்லீமகளிடம் அந்த எண்ணம் இருக்கிறதா? அவர்களிடம் மத நல்லினக்கம் என்று இந்துக்கள் பேசினால் கேட்க அவர்கள் தயாரா? அது பற்றி உங்களுக்குத் தெரியுமா? உங்கள் மதம் உங்களுக்கு எங்கள் மதம் எங்களுக்கு என்று கூறிவிட்டு வலை தளங்களில் இந்துக்கடவுளரையும், இந்து ஜாதிகளையுமெல்லாம் விமர்சிக்கும் இந்த போலிகளிடம் நல்லிணக்கத்தை எடுத்துக் கூறுவது செவிடன் காது சங்கு தானே! இவ்வாறு போலி அமைதி மார்க்கம் பேசும் இவர்கள் தான் குஜராத்தின் உணர்ச்சிப்பூர்வ செயல்பாட்டிற்கு காரணமாகிறார்கள்.

மேலும் நீங்களும் இந்து விரோத மீடியாவின் செயலைத் தான் செய்கிறீர்கள். குஜராத் வீடியோவைப் போடும் நீங்கள் அதர்கு மின்பாக ரயில் பெட்டியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மக்களை முஸ்லீம் கும்பல் எரித்துப் போட்ட நிகழ்வை பற்றி போடவே இல்லையே! குஜராத் கலவரத்திற்கு அடித்தளமே முஸ்லீம்களின் அந்த வெறியாட்டம் தானே! அதனை பேசாமல் நேராக அதன் எதிர்வினை பற்றி பேச்செடுப்பது பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு செய்யும் துரோகம். இப்படி ஒருதலைப் பட்ச்மாக நடந்துகொள்பவர்கள் தான் இரு மதத்தினரிடையேயும் பிரிவினை வளரக் காரணமாகிறீர்கள்!

இராம்

மத நல்லிணக்கத்திற்கு மாற்று இல்லை என்று உங்களுக்கே தெரிகிறது. மத வெறியை தனித்து இணக்கத்தை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கை சுவாமி விவேகானந்தரிடம் இருந்தது. மத வெறிக் கோட்பாடுகளை விலக்கி நல்லிணக்கத்தை போதிப்பதில் அவர் வெற்றியும் பெற்று இருக்கிறார். அவரிடம் இருந்த நம்பிக்கை நம்மில் பலரிடம் இல்லை. காரணம் அவரிடம் இருந்த ஆன்மீகம், கொள்கை தெளிவு , நம்பிக்கை இல்லை. குஜராத் விடயமாக search ல் தேடி கிடைத்த வீடியோ வை போட்டு இருக்கிறேன். அது நான் தயாரித்த வீடியோ அல்ல. அந்த வீடியோவில் ரயில் எரிப்பு நிகழ்வும் இருக்கிறது. நீங்கள் பொறுமையாக வீடியோவைப் பார்க்கவும்.

http://dharumi.blogspot.com/2008/03/254_18.html

அன்புக்கும், ம‌திப்பிற்க்கும் உரிய‌ம் திரு. த‌ருமி ஐயா அவ‌ர்க‌ளே,

நீண்ட‌ நாட்களுக்குப் பிறகு நம் த‌ளத்துக்கு வ‌ந்து க‌ருத்துப் ப‌திவு செய்த‌மைக்கு மிக்க‌ நன்றி. ”ராம ராஜ்ஜிய‌ம் வேண்டாம்” என்கிற‌ க‌ட்டுரையை ப‌டித்தேன். நீங்க‌ள் அனும‌தி அளித்தால் உங்க‌ளின் “ராம ராஜ்ஜிய‌ம் வேண்டாம்” க‌ட்டுரையை, உங்க‌ள் சார்பாக‌வே ந‌ம்முடைய‌ த‌ள‌த்தில் ப‌திவு செய்து, பிற்கு அது ப‌ற்றிய‌ என்னுடைய‌ சிந்த‌னையை, ப‌திலை அடுத்து வ‌ரும் க‌ட்டுரைக‌ளில் ப‌திவு செய்வேன்.

அல்லது உங்களுடைய‌ க‌ட்டுரையின் க‌ருத்துக்க‌ளை ஒவ்வொன்றாக‌ எடுத்துக் கொண்டு அது ப‌ற்றி விவாதிக்கலாம்.

அன்புட‌ன், திருச்சிக‌கார‌ன்.

மத நல்லிணக்கம் நடை முறையில் சாத்தியமா ? அப்ரஹாமிக் மதங்கள் இருக்கும் வரை சாத்தியம் இல்லை. இந்துகள் வேண்டுமானால் முட்டாள் தனமாக இதை பற்றி பேசிக்கொண்டு இருக்கலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 37 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: