Thiruchchikkaaran's Blog

இந்து மதக் கோவில்களில் எல்லோரும் அர்ச்சகர் ஆவதை வரவேற்கிறோம், வலியுறுத்துகிறோம்!

Posted on: February 8, 2011


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது பற்றி பல பதிவுகள் இட்டு இருக்கிறோம்.

இந்து மதக் கோவில்களில் எல்லோரும் அர்ச்சகர் ஆவதை வரவேற்கிறோம், வலியுறுத்துகிறோம்!

இதிலே நம்முடைய அன்புக்குரிய சகோதரர்ர் முகி  , சகோதரர் தருமி ஐயா தளத்திலே  சில  கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அந்த பதிவு இது சம்பந்தப் பட்டது அல்ல என்பதால்,  அவரை நம் தளத்துக்கு வரவேற்கிறோம். இங்கே வந்து கேள்விகளை கேட்கலாம்.

நாமே   ஒரு கோவில் கட்டி அதிலே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கலாம்.  ஒருவரோ அல்லது நண்பர்கள் குழுவாகவோ சேர்ந்தது டிரஸ்ட் அமைத்து கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டால் அதற்க்கு நாம் நம்மால் இயன்ற நிதி உதவி செய்யலாம்.

அதோடு நின்று விடாமல் கோவில் கட்டி முடிந்தவுடன் பிராமணர் சமூகம்  உட்பட பல்வேறு சமூகத்தை  சேர்ந்த நண்பர்களையும்  அழைத்து வந்து அங்கே சாமி கும்பிட ஆரம்பிக்கலாம்.

ஒடுக்கப் பட்ட சமூகம் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக கர்ப்பக் கிரஹத்திலே அர்ச்சனை செய்யும் போது, பிராமணர் என்று சொல்லப் படுபவர் உட்பட அனைவரும் சந்நிதியில் நின்று சாமி கும்பிடுவதுதான் நாங்கள் காண விரும்பும் காட்சி, நிகழ்த்த விரும்பும் செய்கை எல்லாம்!

Advertisements

20 Responses to "இந்து மதக் கோவில்களில் எல்லோரும் அர்ச்சகர் ஆவதை வரவேற்கிறோம், வலியுறுத்துகிறோம்!"

ம்..ம்..எல்லோரும் இதை ஏற்றுக்கொண்டால் எவ்வளவு நல்லா இருக்கும்!

ஞாஞளஙலாழன், சீனு ஆகியோருக்கு நன்றி.

கோவில்களில் அனைத்து பிரிவினரும் அர்ச்சகர் ஆவது பற்றி நான் பதிவு இடும் போதெல்லாம் சீனு அதற்க்கு ஆதரவு தெரிவித்து பின்னூட்டங்கள் இட்டு வருகிறார். திரு. சீனுவைப் போலவே பலரும் இருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன். இதுதான் முக்கியம், மக்களின் மனதில் அன்பின் அடிப்படையில், நாகரீகத்தின் அடிப்படையில் மக்கள மனமார இணைவதுதான் உண்மையான சமத்துவத்துக்கு வழி வகுக்கும். இன்னும் இதை நடை முறைப் படுத்துவது பற்றி ஆராய வேண்டும். சிறிய கோவிலாகவாவது ஒன்றைக் கட்டி அதிலே சுழற்சி முறையில் எல்லோரும் அர்ச்சகர் ஆக பனி செய்வது பற்ற, நண்பர்கள் யோசித்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

//திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில், தட்டச்சர் ஜவான், பலவேலை, திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி, ஓடல் தீபம், ஓதுவார், மணியடி (தட்டு கும்பம்), யானைப்பாகன் உள்ளிட்ட 10 பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பை 05.01.2011 அன்று வெளியிட்டது இந்து அறநிலையத்துறை. அந்த அறிவிப்பு விளம்பரத்தில் திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பணியிடங்கள் சிலையை திருமுழுக்கு (அபிஷேகம்) செய்வது மற்றும் கோயில் பிரசாதம் தயாரிப்பதற்கான பணியிடங்களாகும். பார்ப்பனர்கள் அல்லாமல் வேறு சாதியினர் இந்த வேலைகளைச் செய்தால் ‘புனிதம்’ கெட்டுவிடும் என்று மற்ற சாதியினரை இழிவுபடுத்தும் பார்ப்பன சாதிவெறியை அப்பட்டமாக தோலுரித்துக்காட்டும் அந்த அறிவிப்பை வெளியிட்டது வேறுயாருமில்லை, இந்து அறநிலையத்துறைதான். ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி பெற்று அர்ச்சகர்களாக முடியாமல் தவித்துக்கொண்டிருந்த பார்ப்பனரல்லாத மாணவர்கள் இந்த ‘லட்டு’ செய்யும் பணியிலாவது சேரலாம் என்றெண்ணி அப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தனர்.
பெரியதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்
இதே பணியிடங்களுக்கு விண்ணப்பித்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு. அரங்கநாதன், உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்கு பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்கிற அறிவிப்பு சாதி வேற்றுமையை தூண்டுவதாகவும், ஆலயத்தீண்டாமையைக் கடைபிடிப்பதாகவும் அரசியலமைப்பு சட்டம் ஷரத்துக்கள் 14, 16 மற்றும் 17 ஆகியவற்றிற்கு எதிராகவும் இருப்பதால் அந்த பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என அறிவித்த அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுத்துக்கட்டளை மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு 07.02.11 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. உறுத்துக்கட்டளை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இடைக்கால தடைவிதிக்கக் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு ‘இத்தகைய’ பழக்கவழக்கங்களை அரசியலைப்பு சட்டம் ஷரத்து 13 அங்கிகரிப்பதாகவும் தெரிவித்தார். அரங்கநாதனுக்காக வழக்காடிய வழக்குரைஞர் சகாதேவன் சாதி வேற்றுமை மற்றும் தீண்டாமை காரணமாக பணிவழங்க மறுப்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கும் சமத்துவ வேலை வாய்ப்பிற்கான உரிமைக்கு எதிரானது என வாதிட்டதை ஏற்காமல் மத உரிமையில் சமத்துவம் (வெங்காயம்!) எல்லாம் கிடையாது என்பதை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 கூறியிருப்பதாகவும், உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு நிலுவையில் இருப்பதால் எதுவும் தற்போது செய்யவியலாது என தடையானை மனுவை தள்ளுபடி செய்து பார்ப்பன மேலாதிக்கத்திற்கு மயிலிறகால் வருடிவிட்டிருக்கிறார் நீதிபதி சுகுணா. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது என்பது வேறுவழக்கென்றும், அது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு. ஆனால், இந்தப் பணி கோயில் பணிவிடைகளுக்கான வேலை என்று வாதாடியதையும் நிராகாரிதுள்ளார் நீதிபதி.//
-நன்றி வினவு.

இந்த லட்சணத்தில் திருச்சிக்காரர் ‘எங்களிடம் இப்பொழுது சாதி பாகுபாடெல்லாம் அதிகம் பார்ப்பதில்லை. நானே ஒரு தனி கோவில் கட்டப் போகிறேன்’ என்கிறார். ஐயா….இது கோர்ட் கொடுத்த ஆணை. இதற்கு என்ன சொல்கிறீர்கள்.

சகோதரர்கள் சுவனப் பிரியன், லோகன் ஆகியோரின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

இந்து மத்தில் எந்த ஒரு கடவுளும் தனக்கு இவர்தான் பூசை செய்ய வேண்டும் என்றோ, மற்றவர் பூசை செய்யக் கூடாது என்றோ சொன்னதாக இல்லை. இந்து மதத்தின் ஸ்ருதி என சொல்லப் படும் முக்கிய நூல்களில் எதிலும் அப்படி சொல்லப் பாடவும் இல்லை. நான் எல்லோரிடத்தும் சமாக இருக்கிறேன். “சமோஹம் சர்வேஷு” என்றும், எனக்கு யாரும் வேண்டாதவர் இல்லை என்று தெளிவாக சொல்லப் பட்டு உள்ளது.

அர்ச்சகர் பணிக்கு நியமனம் தொடர்பான வழக்கு உச்ச நீதி மனறத்தில் உள்ளது. இந்த வழக்கில் முக்கிய வாதிகள் இப்போது அர்ச்சகர் பணியில் இருப்பவர்களே.

ஒரு காலத்தில் பிராமணர்கள் என்று சொல்லப் பட்டவ்ர்களிலேயே அர்ச்சகர் பணி அந்த அளவுக்கு சாட் ஆப்டர் பணியாக இல்லை. வேதம் ஓதி யாகங்கள் செய்வதே பலரும் விரும்பும் பணியாக இருந்தது. அர்ச்சகர என்றாலே, தேங்காய் மூடி, வாழைப் பழம் தான் என்ற நிலையே இருந்தது..

இப்போதோ கோவில்களை வருமானம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் வருமானம் ஈட்டும் பணியை விட அர்ச்சகர்கள் விரும்பவில்லை. இந்தியாவில் பரம்பரை உரிமை கோரும் பழக்கம் இன்னும் உள்ளது. நடிகர் மகன் நடிகன், பிரதமர் மகன் பிரதமர்…. என்கிற ரீதியிலே நம்ப புள்ள குட்டிங்க ஆண்டு அனுபவிக்கட்டுமே என்ற மனப் பாங்கு உள்ளது. ஆனால் இந்தக் கோட்பாட்டுக்கு நான் பல்லக்கு தூக்க விரும்பவில்லை.

அரசாங்கத்தின் கட்டுப் பாட்டில் அதாவது அறநிலையைத் துறையின் வசம் உள்ள பல் முக்கிய கோவில்கள் மன்னர்களால் கட்டப் பட்டவை, அவற்றில் இன்னார் பரம்பரையாக பூசனை செய்வார்கள் என்று சாசனமோ, கல்வெட்டோ கூட இருக்கலாம். இதில் தீர்ப்பு வழங்க போவது உச்ச நீதி மன்றமே. வழக்கு நடை பெரும் போது அது பற்றி நாம் ஒன்றும் சொல்ல இயலாது.

அற நிலைய துறையின் வசம் உள்ள பல முக்கிய கோவில்கள் உட்பட எல்லா கோவில்களிலும் எல்லா பிரிவினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பதே நமது அவா, மனப் பூர்வமான விருப்பம், கோட்பாடு ஆகும்.

நானோ , வேறு யாரோ கோவிலைக் கட்டினால் அதில் யாரை வேண்டுமானாலும் அர்ச்சகராக பணி செய்ய அழைக்கலாம். அப்போது அதற்க்கு எதிராக வழக்கு தொடர யாருக்கும் உரிமை இல்லை.

அரசே புதிய கோவில்களைக் கட்டி அதில் அனைத்து பிரிவினரையும் அர்ச்சகராக நியமிக்கலாம்.

I think whoever has the spirituality power can be a priest at a hindu temble,to atain this power, first of all One should love all lives as eaqual (insects, birds, animals, humans …). I don`t think most of our kurukkals have the spirituality power even though they all are from bramin cast by birth and be pure vegetarians and physically clean. So I feel “vananguvatharkku thkuthiyudaiya” any one can be an ARCHCHAKAR. I hope next time I can write in Tamil.

// ஒருவனிடம் ஒரு உருவத்தைக் காண்பித்து ”இதை வணங்கினால் இது உனக்கு உலகப்பொருளை அள்ளித்தரும்” என்று சொன்னவுடன் அவன் எந்த எதிர் கேள்வியும் கேட்காமல் வணங்கினானானால் அவன் இறைபக்தியுடையவனல்ல, அவன் இறைவன் வழியாக உலகப்பொருளைத் தேடுகிறவன். கடவுளைக் குறித்து ஒரு கேள்வியும் கேளாதவன் கத்திரிக்காய் வியாபாரியிடம் மணிக்கணக்காய் கேள்விகேட்டு பேரம் பேசி போராடுவான். இங்குதான் அவன் சாயம் வெளுக்கிறது காரணம் அவனது உண்மை தெய்வம் உலகப் பொருளே! அவனது தேடல் இரைதேடல்தானே தவிர இறைதேடலல்ல. சபைகளும்கூட இன்று இப்படிப்பட்ட மனதுடையவர்களால்தான் நிரம்பியிருக்கிறது. //

http://vijay76.wordpress.com/2011/02/04/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE/#comment-371

வரவேற்கிறோம், சகோதரர் சில்சாம் அவர்களே,

உங்களின் வருகைக்கும், கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி!

//கடவுளைக் குறித்து ஒரு கேள்வியும் கேளாதவன் கத்திரிக்காய் வியாபாரியிடம் மணிக்கணக்காய் கேள்விகேட்டு பேரம் பேசி போராடுவான். //

கடவுளைப் பற்றி நாங்கள் கேள்வி கேட்கிறோம். கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்று கேட்கிறோம். கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கான நிரூபணத்தை, சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணத்தை தர இயலுமா என்று கேட்டு இருக்கிறோமே!

பூஜாரிக்காக ஒரு கோவில், அதற்காக ஒரு சாமி.
Are you really serious about what you are writing? I guess that you are just kidding.

Thanks,
Ashok

அன்புக்குரிய திரு. அசோக்.

பூசாரிக்காக என்று கோவில் கட்டவில்லை.

கோவிலுக்கு வந்து செல்பவர் நல்ல எண்ணங்கள் மேம்படுத்தப் பட்டவராக திரும்பி செல்ல வேண்டும். அதுதான் ஆன்மீகம்.

சீதையைப் பார்க்கும் போது நாம் எந்தப் பெண்ணுக்கும் தொல்லை குடுக்கக் கூடாது என்ற எண்ணம் வலுப்பெற வேண்டும். அனுமனைப் பார்க்கும் போது அக்கிரமத்துக்க் அடி பணியக் கூடாது என்ற எண்ணம் வரும். அத்தகைய கோவில்களில் எல்லோரும் அர்ச்சகர் ஆக இருப்பதன் மூலம் சமத்துவத்தை , சமரசத்தை,மக்கள் இணைப்பை உறுதி செய்கிறோம்.

//கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கான நிரூபணத்தை, சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணத்தை தர இயலுமா என்று கேட்டு இருக்கிறோமே!//

//அத்தகைய கோவில்களில் எல்லோரும் அர்ச்சகர் ஆக இருப்பதன் மூலம் சமத்துவத்தை , சமரசத்தை,மக்கள் இணைப்பை உறுதி செய்கிறோம்.//

ரொம்பவும் குழப்புறீங்க திருச்சிக்காரன். குழம்பியும் இருக்கிறீர்கள். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது உங்களுக்காவது புரிகிறதா?

அன்புக்குரிய திரு. சுவனப் பிரியன் அவர்களே,

உங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. உங்களின் கேள்வியை வரவேற்கிறோம்.

உலகின் முக்கிய மதங்களாக உள்ளவற்றுள் இந்தியாவில் தோன்றிய மதங்களான இந்து, பவுத்த சமண மதங்கள் … இவை மனித உயிர், அதன் கஷ்டங்கள், கஷ்டங்களில் இருந்து மனிதன் விடுதலை அடைவது பற்றி பகுத்தறிவு ரீதியிலே சிந்தித்து கட்டுப்பாடு, மனக் குவிப்பு, துறவு போன்றவற்றின் மூலம், தங்களை தாங்களே உயர்த்துவது பற்றி ஆராய்கின்றன.

எனவே அடிப்படையிலே இந்த மதங்கள் பகுத்தறிவு ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் குடுப்பனவாகவே உள்ளன.

மனிதனை உயர்த்துவதுதான் முக்கியம், எனவே கோவில்கள் என்பன மனிதனின் மனதிலே நற்பண்புகளை அமைதியை உருவாக்கும் எண்ணத்திலே அமைக்கப் பட்டு உள்ளன.

அதே நேரம் இந்து மத்தில் நம்பிக்கைக்கும் இடம் இருக்கிறது, கஷ்டப் படுபவர், ஒரு பொருளை அடைய விரும்புபவர், உண்மையை அறிய விரும்புபவர், உண்மையை அறிந்தவர் ஆகியோர் என்னை வணக்குகினறனர் என்று சொல்லப் பட்டுள்ளது. எனவே தங்களுக்கு உள்ள கஷ்டங்கள் தீர வேண்டும் என்றும், தாங்கள் விரும்பும் பொருள் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் வேண்டித்தான் பலர் கோவிலுக்கு வருகின்றனர்.

இது ஆரம்ப நிலையே. தன் மன நிலையை தானே உயர்த்தி ஒருவர் மிகச் சிறந்த நிலையை அடையும் பகுத்தறிவு வழியே இறுதி நிலை!

இந்துக்களின் முக்கிய துறவிகளில் ஒருவரான சுவாமி விவேகானந்தரின் முக்கிய வாசகங்களில் ஒன்றை இங்கே தருகிறேன்.

ந‌ம்பிக்கை, ந‌ம்பிக்கை, ந‌ம்பிக்கை.உங்க‌ளிட‌த்தில் ந‌ம்பிக்கை, பிற‌கு க‌ட‌வுளிட‌த்தில் ந‌ம்பிக்கை. உங்க‌ள‌து முப்ப‌த்து முக்கோடி தேவ‌ர்க‌ளிட‌மும், மற்றும் பிற‌ நாட்டினர் அவ்வ‌ப் போது உங்க‌ளுக்கு அறிமுக‌ப் ப‌டுத்திய‌ தேவ‌ர்க‌ளிட‌மும் ந‌ம்பிக்கை வைத்து, உங்க‌ள் சொந்த‌ முய‌ற்சியில் ந‌ம்பிக்கை வைக்க‌வில்லை என்றால், அத‌னால் ப‌ல‌ன் எதுவும் இல்லை.

எனவே கடவுள் என்று ஒருவர் வானத்தில் இருக்கிறார் என்று நம்பிக் கொண்டு அவரைக் கும்பிடாவிட்டால் நம்மை நெருப்பிலோ போடுவாரோ என்று பயந்தோ, கும்பிட்டால் நாம தப்பிச்சிக்கலாம் என்ற எண்ணத்திலோ வழிபடுவது ஒரு வகையான வழிபாடு!

அன்பின் அடிப்படையிலே , கொள்கையின் அடிப்படையிலே அர்ப்பணிப்பில் வழிபாடு செய்வது இன்னொரு வகையான வழிபாடு.

உதாரணமாக அனுமனை எடுத்துக் கொண்டால் அனுமனைப் பொறுத்தவரையில் – இராமர் கடவுளா, கடவுளே மனித உருவில் வந்ததா, என்பது எல்லாம் அவருக்கு தெரியாது –

அனுமர் இராமரைக் காட்டிலே சந்திக்கிறார். இராமர் காட்டுக்கு வந்ததற்கான காரணம் என்ன என்று கேட்கிறார். தன்னுடைய தாயின் விருப்பத்தை நிறைவேற்ற , தந்தையின் சொல்லைக் காக்க, பதவி என்பதை தோளில் போடும் துண்டு போலவும், கொள்கையை இடுப்பில் அணியும் வேட்டி போலவும் கருதி காடு வந்தவர் இராமர் என்பதை அறிந்து கொள்கிறார்.

அட இப்படியும் இருக்கிறாங்களா என்று வியப்படைகிறார். அந்த அளவுக்கு தியாகம் செய்த நல்லவனைக் காட்டில கூட நிம்மதியா இருக்க விடாத படிக்கு அவர் மனைவியை தூக்கி சென்று விட்டானே என்று எண்ணி பார்க்கிறார்.

அநியாயத்தை தட்டிக் கேட்கும் மன உறுதி கொண்ட அனுமன், தான் தலைவனாக ஏற்க தகுதியான கொள்கையும், செயல் பாடும் உடையவர் இராமர் என்பதை புரிந்து கொள்கிறார்.

எந்தப் பதவியையோ சொத்து சுகத்தையோ எதிர்பார்த்து இந்த பணியில் அவர் இறங்கவில்லை. ஒரு நல்லவர், இவ்வளவு கஷ்டப்படுகிறாரே என்கிற நல்லெண்ணத்திலே இதை செய்திருக்கிறார்.

சுக போகங்களை நாடவில்லை, காட்டிலே இருக்கும் கனிகளையும் கிழங்கையும் மட்டுமே உண்டு, எந்த பிரதிபலனும் பாராமல் வியக்கத் தக்க ஒரு செயலை செய்திருக்கின்றனர் அனுமனும் அவரது குழுவினரும். ஜடாயு, குகன், சுமேந்திரர், சுக்ரீவன், நீலன், நலன், விபீடணன் …. உள்ளிட்ட பலரும் அப்படியே என்பதையும் இங்கே குறிப்பிடுகிறோம்- இராமர் கடவுளா, கடவுளே மனித உருவில் வந்ததா, என்பது எல்லாம் அவர்களுக்கு தெரியாது, அதைப் பற்றி அவர்கள் அக்கறையும் காட்டவில்லை, பிரதி பலன் எதிர்பாராத தூய்மையான அன்பை அவர்கள் செலுத்தினர்!

எனவே கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று ஒரு மனிதன் தான் பார்க்காத ஒன்றுக்கு சாட்சி கொடுத்து விட்டுத்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்று இந்து மதம் சொல்லவில்லை. கடவுளை பற்றி சாட்சி குடுக்கும் முன் நீ முதலில் நீயே அந்த ஒரு நிலையை அடைய முடியுமா என்று சிந்திப்பதில் தவறில்லை என்றும் இந்து மதம் சொல்லுகிறது. நீயே கடவுளாக இருக்கிறாய், ஆனால் நீ அதை உணராமல் மயக்கத்தில் இருக்கிறாய், அந்த நிலையை நீயே அடைய, உணர முடியும், இதை நான் சொல்லி நீ அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டாம், அமைதி வழியில் உன் மன நிலையை உயர்த்தத் முயற்ச்சி செய்து நீயே சரி பார்த்துக் கொள் என்கிறார் சங்கராச்சாரியார் (ஆதி சங்கரர்)!

ஆதி சங்கரர் சொல்லிட்டார் , அப்படியே நம்பு என நம்பவில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான் அறியாத ஒன்றை, உணராத ஒன்றை இருப்பதாக நான் சொல்லவில்லை, என் வழி பகுத்தறிவு வழியே!

கடவுள் என்று ஒருவர் இருப்பதாக சொல்லிப் போடப் பட்ட கட்டளைகளை எந்த விதக் கேள்வியும் இன்றி ஒத்துக் கொண்டு செயல் படும் வழியில் நீங்கள் இருக்கிறீகள் என்றே நினைக்கிறேன். ஆனால் நான் உங்களை கண்டிக்கவோ, ஏளனம் செய்யவோ இல்லை, பிற மதங்களையும் புரிந்து கொள்ளுங்கள், சகிப்புத் தன்மையுடன் இருங்கள் நல்லிணக்கத்தில் இணைவோம் என்றே சொல்லுகிறேன்.

கோவிலுக்கு வந்து செல்பவர் நல்ல எண்ணங்கள் மேம்படுத்தப் பட்டவராக திரும்பி செல்ல வேண்டும். அதுதான் ஆன்மீகம்.

சீதையைப் பார்க்கும் போது நாம் எந்தப் பெண்ணுக்கும் தொல்லை குடுக்கக் கூடாது என்ற எண்ணம் வலுப்பெற வேண்டும். அனுமனைப் பார்க்கும் போது அக்கிரமத்துக்க் அடி பணியக் கூடாது என்ற எண்ணம் வரும். அத்தகைய கோவில்களில் எல்லோரும் அர்ச்சகர் ஆக இருப்பதன் மூலம் சமத்துவத்தை , சமரசத்தை,மக்கள் இணைப்பை உறுதி செய்கிறோம்

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்றே தெரியாத, குழப்பமடைந்த ஒருவர், கோவில் கட்டுவது, அர்ச்சகர் அமைப்பது, வழிபாடு(?) செய்வது பற்றி பேசுவது, குழப்பத்தைத்தான் வரவழைக்கிறது.

அன்னை, தந்தை, மற்ற உயிருள்ள மக்கள் பார்க்கும் போது வராத நல்ல குணங்கள், சிலைகளையும் படங்களையும் காணும்போது வருவதாக நீங்கள் சொல்வது நம்பும்படி இல்லை.

குற்றம் கண்டுபிடிக்கிறேன் என்று நினைக்கவேண்டாம், உண்மையில் இங்கு பாராட்டும் படி ஒன்றும் இல்லை. ஒரு நல்ல நண்பன் முகஸ்துதி பாடமாட்டான்.

நன்றி,

அசோக்

அன்புக்குரிய நண்பர் அசோக் குமார்அவர்களே, வருக, உங்கள் கருத்துக்களை நீங்கள் எழுதலாம்.

கடவுள் விடயத்தில் நாங்கள் குழப்பம் அடையவில்லையே. நாங்கள் எந்தக் கடவுளையும் பார்க்கவில்லை. நாங்கள் காணாததை கண்டேன் என்று பொய் சாட்சி கொடுக்கவில்லையே. இந்த உலகத்தில் இன்று யாரும் கடவுளைப் பார்த்தாக சொல்லவில்லை . யாரும் பார்க்காத ஒன்றை , உணராத ஒன்றை நாங்களும் பார்க்கவில்லை என்கிறோம். இதில் என்ன குழப்பம்.

அப்படியானால் கோவிலுக்குள் இருப்பது யார்? வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவரே தெய்வமாக வணங்கப் படுகின்றனர். காந்தி சிலைக்கு மாலை போடுகிறோம், அவர் மீது மரியாதை வைத்து இருக்கிறோம், அவருடைய கொள்கையை நினைவு கூர்கிறோம். காந்தி வானத்திலே இருந்து இதை எல்லாம் பார்க்கிறாரா என்பதை பற்றி சிந்திப்பதை விட அவருடைய பாதையிலே நாம் போகிறோமா , எந்த அளவுக்கு அவரின் பாதையில் செல்கிறோம் என்பதுதான் முக்கியம்.

நான் ஒரு கோவில் கட்டினால் அதில் காந்தி சிலையும் இருக்கும், பெரியார் சிலை கூட இருக்கலாம். காந்தி சிலைக்கு, பெரியார் சிலைக்கு மாலை போடப் படுவது போல , இராமன், சீதை, இலக்குவன் , அனுமன் சிலைக்கும் மாலை மரியாதை செய்து பூ அலங்காரம் செய்யப் படுகிறது. அவர்களைப் போற்றி பாடல்கள் பாடப் படுகின்றன.

இவற்றை எல்லாம் செய்பவர்கள் தான் அர்ச்சகர் கள், அனைத்து பிரிவை சேர்ந்தவர்களையும் அர்ச்சகராக நியமிக்கப் படுகின்றனர். அந்தக் கோவிலில் வழிபாடு நடத்த வருபவர்கள் இராமரையோ, காந்தியையோ கொள்கை அளவில் உணர்வு பூர்வமாக அணுகி அவர்கள் கொள்கைகளை தங்கள் மனதில் கொள்ளலாம், அதுதான் நாம் முன்னிறுத்தும் கொள்கை ரீதியிலான பகுத்தறிவு அடிப்படையிலான வழி. அதே நேரம் இராமரையோ, காந்தியையோ கடவுளாக கருதி அவர்களை வேண்டினால் தங்களுக்கு துன்பம் தீரும் , நல்லது நடக்கும் என்று கோவிலுக்கு வருபவர்களும் உள்ளனர் என்பதை சொல்லி இருக்கிறோம். அது அவர்களின் நம்பிக்கை, அது நம்பிக்கை மாத்திரமே. அதற்க்கு நாம் சாட்சி கொடுக்கவில்லை. ஆனால் இராமர் என்பவர் பதவியை விட்டு, கஷ்டங்களை சுமந்து காட்டுக்கு சென்றதாக சொல்லப் படும் நிகழ்வு, ஆசையை விலக்கி , மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் துன்பம் ஏற்கும் தியாக கோட்பாடு பூசலை தவிர்க்கும் கோட்பாடே, தன மனைவியை தவிர வேறு பெண்ணை மனதாலும் என்னாத கோட்பாடும் நல்ல கோட்பாடே… அதே போலமகாத்மா காந்தி தன வாரிசுகளைப் பதிவியில் வைக்கவில்லை, மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சுவிஸ் வங்கியில் வைக்கவில்லை…. இவ்வாறாக நாம் கொள்கை அடிப்படையில் அணுகுகிறோம், இதில் எங்களுக்கு எந்த ஒரு குழப்பமும் இல்லை, உங்களுக்கு என்ன குழப்பமோ தெரியவில்லை!

நாங்கள் காணாத ஒன்றுக்கு சாட்சி கொடுக்கவில்லையே, பார்க்காத ஒரு கடவுளை இருப்பதாக சொல்லி, அவருக்காக சண்டை போட சொல்லவில்லையே பிற மதத்தவர் கடவுளாக கருதி வழிபடுபவரை இகழ சொல்லி எங்கள் கோவில்களில் இருக்காது. பிற மதங்களை வெறுக்க வேண்டாம் , வெறுப்புணர்ச்சி வேண்டாம் என்னும் கருத்துக்கள் அந்தக் கோவில்கள் மூலம் வலியிருத்தப் படும்.

அனேகமாக உங்களுக்குத் தான் குழப்பம் என்று நினைக்கிறேன். கடவுள் பொறாமைக்காரர், அவரைக் கும்பிடாவிடால் எரி நரகத்தில் போவாய் என்று சொல்லப் பட்ட கருத்துக்களையே கேட்டு வந்திருக்கக் கூடும். கொள்கை ரீதியில் , உணர்வு அடிப்படையில் அணுகுவதை, கோவிலுக்கு செல்வது என்பது மனதில் அமைதியை உருவாக்கி நற் பண்புகளை மேம்படுத்த என்கிற கோணத்தில் நீங்கள் சிந்திக்கவில்லையோ என நினைக்கிறேன், எனவே இதெல்லாம் புதியதாக இருப்பதால் உங்களுக்கு குழப்பம் உருவாக்கி இருக்கக் கூடும். சிந்தியுங்கள், தெளிவடைவீர்கள்.

//அன்னை, தந்தை, மற்ற உயிருள்ள மக்கள் பார்க்கும் போது வராத நல்ல குணங்கள், சிலைகளையும் படங்களையும் காணும்போது வருவதாக நீங்கள் சொல்வது நம்பும்படி இல்லை.//

அன்னை, தந்தையிடம் , நம்மோடு உள்ள மக்களிடம் இருந்து நல்ல குணங்களைக் கற்றுக் கொள்கிறோம். அதற்காக காந்தியிடம் இருந்து கற்றுக் கொள்ளக் கூடாது என்று இல்லையே. எனக்கு காந்தி சிலையை பார்க்கும் போது சுயநலம் இல்லாமல் மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. அம்பேத்கர் சிலையை பார்க்கும்போது ,அவர் இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியிலும் படித்து முன்னுக்கு வந்தது நினைவுக்கு வருகிறது. இயேசு வின் சிலையைப் பார்க்கும் போது கூட வருடைய நல்ல கருத்துக்கள் நினைவுக்கு வருகிறது. உங்களுக்கு அப்படி தோன்றுகிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது. உங்களுக்கு தோன்றவில்லை என்றால் அதில் நான் சொல்ல ஒன்றுமில்லை.

//குற்றம் கண்டுபிடிக்கிறேன் என்று நினைக்கவேண்டாம், உண்மையில் இங்கு பாராட்டும் படி ஒன்றும் இல்லை. //

நம்முடைய தளம் மத நல்லிணக்க தளம். எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களைச் சுட்டிக் காட்டும், பிற மதங்களிடம் சகிப்புத் தன்மையோடு நடந்து கொள்வதை வூக்கப் படுத்தும் தளம் நம்முடைய தளம், இப்படிப் பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டுரைகளை நாம் வெளியிடும் போது, உங்களிடம் இருந்து பாராட்டுக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவும் இல்லை.

இப்போ உங்களை பற்றி நல்ல புரியுதுங்க. அதாவது, உங்க கோயிலில் நீங்க வணங்க போறது (அல்லது வணங்குகிறது) கடவுளை அல்ல, உங்களின் வணக்கத்திற்குரிய(?) மனிதர்களை. அந்த கோயிலுக்குத்தான் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று பெரிய மனதுடன், அழைப்பு விடுக்கிறீர்கள். Superrrrr !!!
எனக்கு இருந்த குழப்பம், என்னை பற்றியோ நான் யாரை வணங்குகிறேன் என்பது பற்றியோ அல்ல, உங்களுடைய கடவுள் கோட்பாடு பற்றிதான். ஆனால், இப்போ நீங்கள் தெளிவாக்கி விட்டீர்கள். உங்கள் கடவுள் கோட்பாடு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது.

//நாங்கள் காணாத ஒன்றுக்கு சாட்சி கொடுக்கவில்லையே, பார்க்காத ஒரு கடவுளை இருப்பதாக சொல்லி//
நீங்கள் இராமனையும், அனுமனையும் பார்த்து கைகுலுக்கிய பின்னரே அவர்களுக்கு கோயில் கட்டுகிறீர்கள் என்று நம்புகிறோம்.

//அவரைக் கும்பிடாவிடால் எரி நரகத்தில் போவாய் என்று சொல்லப் பட்ட கருத்துக்களையே கேட்டு வந்திருக்கக் கூடும்.//
இப்படிதான் நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் என் தேவனை கும்பிட்டு நரகத்திற்கு தப்ப நினைக்கிறேன் என்று நீங்கள் நினைப்பது தவறு. அவர் என்னை நரகத்தில் இருந்து காத்ததால், நன்றியோடு அவரை துதிக்கிறேன். நான் அவரை பற்றி நினைப்பதற்கு முன்னமே, எனக்காக யாவையும் செய்து முடித்தார், அதற்காக நான் சொல்வது நன்றி மாத்திரமே. நீங்கள் கோவிலுக்கு சென்றால் உங்கள் மனம் அமைதி ஆகும் என்ற லாப நோக்கத்தோடு போகிறீர்கள். நான் என்னை காப்பாற்றிக்கொள்ள அல்ல (நான் already காப்பாற்றப்பட்டவன்), நன்றி சொல்லவே நான் என் தேவனிடம் செல்கிறேன்.

நமது இறை நம்பிக்கை பற்றி இங்கு வாதிட வரவில்லை, ஆனால் சந்தடி சாக்கில் நீங்கள் நீங்கள் பரிசுத்த வேதத்தை குற்றப்படுத்த முயல்வதாலேயே நான் சற்று நீண்ட பதில் தரவேண்டியதாய் போயிற்று.

அசோக்

அன்புக்குரிய நண்பர் அசோக் குமார்அவர்களே,
வருக!

//உங்க கோயிலில் நீங்க வணங்க போறது (அல்லது வணங்குகிறது) கடவுளை அல்ல, உங்களின் வணக்கத்திற்குரிய(?) மனிதர்களை. //

அசோக், நீங்கள் கடவுளுக்கு கொடுக்கும் விளக்கம் என்ன என்று எனக்கு தெரியாது. இல்லாத ஒன்றை கடவுளாக கருத வேண்டும் என்று சொல்ல வருகிறீர்களா?

//உங்களின் வணக்கத்திற்குரிய(?) மனிதர்களை. அந்த கோயிலுக்குத்தான் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று பெரிய மனதுடன், அழைப்பு விடுக்கிறீர்கள். Superrrrr !!!//

மக்கள் கடவுளாக வழிபடுபவர்கள் தான் எங்களுடைய கோவிலிலும் வழிபடப் படுவார்கள். இங்கே எல்லா பிரிவினருக்கும் கருவறையில் பூசை செய்ய வசதி தரப்படும். அரியலூர் பெருமாள் கோவிலில் உள்ள ராமர் ஒரு இராமர், எங்கள் கோவிலில் உள்ள இராமர் வேறு ஒரு இராமர் அல்ல. எல்லாம் ஒரே இராமர்தான். விஸ்வாமித்திரன் கண்ட இராமரும் அதே இராமர் தான், குகன் சந்தித்த இராமரும் அதே இராமர் தான், அனுமன் சந்தித்த இராமரும் அதே இராமர் தான். அரியலூர் கோவிலில் உள்ள இராமரைப் பார்த்தாலும், எங்கள் கோவிலில் உள்ள இராமரைப் பார்த்தாலும், பிறன் மனைவியை அடைய ஆசைப் படக் கூடாது என்கிற எண்ணம் தான் மனதிலே தோன்றும். எங்கள் கோவிலில் உள்ள இராமரைப் பார்த்தால் வேறு கொள்கை தோன்றப் போவது இல்லையே.

//அதாவது, உங்க கோயிலில் நீங்க வணங்க போறது (அல்லது வணங்குகிறது) கடவுளை அல்ல, உங்களின் வணக்கத்திற்குரிய(?) மனிதர்களை. அந்த கோயிலுக்குத்தான் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று பெரிய மனதுடன், அழைப்பு விடுக்கிறீர்கள். Superrrrr !!!//

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவரை தெய்வமாக வைப்பதே தமிழர் பண்பாடு. வானத்திலே கடவுள் இருப்பதாகவும் அவர் பல கட்டளைகளைப் போட்டதாகவும் சொல்லி இங்கே பல சண்டைகளைப் போட்டு பூமியை எரி நரகம் ஆக்கியதை வரலாறு சொல்லுகிறது.

சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணம் எதுவும் இல்லாத, இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறி கடவுளாக வணங்கும் போது (இந்தக் கோட்பாட்டைக் கூட நாங்கள் கண்டிக்கவில்லை, பிற மார்க்கத்தின் மீது வெறுப்புணர்ச்சியை தூண்டாமல் அமைதியாக வழிபடும் பட்சத்தில்), நல்ல கொள்கைகளுக்காக தியாக வாழ்க்கை வாழ்ந்து காட்டிய , மக்களின் நன்மைக்காக பாடுபட்ட நல்லவர்களை கடவுளாக வணங்குவதில் என்ன தவறு.

//நீங்கள் இராமனையும், அனுமனையும் பார்த்து கைகுலுக்கிய பின்னரே அவர்களுக்கு கோயில் கட்டுகிறீர்கள் என்று நம்புகிறோம்.//

நான் இராமனையோ, அனுமனையோ பார்த்துக் கை குலுக்கவும் இல்லை, சீதையையோ, கண்ணகியையோ பார்த்ததுதும் இல்லை. அதைப் போல காந்தியையோ, பெரியாரையோ பார்த்துக் கை குலுக்கவும் இல்லை. காந்தியையோ, பெரியாரையோ அனுமனையோ, இராமனையோ நான் பார்த்துக் கை குலுக்காததால் அவர்களுக்கு சிலை எழுப்பி மரியாதை செய்து அவர்களின் கொள்கையை நினைவு கூர்வதில் எந்த தவறும் இல்லை.

//இப்படிதான் நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் என் தேவனை கும்பிட்டு நரகத்திற்கு தப்ப நினைக்கிறேன் என்று நீங்கள் நினைப்பது தவறு. //

என்னுடைய ஆத்மா எரி நரகத்தில் இருந்து கேட்கும் , எனக்கு ஏன் எச்சரிக்கை செய்யவில்லை என்று- என்று எல்லாம் சொல்லப் பட்ட கருத்துக்களை படித்ததாலேயே இதை எழுதினோம்.

//ஆனால் சந்தடி சாக்கில் நீங்கள் நீங்கள் பரிசுத்த வேதத்தை குற்றப்படுத்த முயல்வதாலேயே நான் சற்று நீண்ட பதில் தரவேண்டியதாய் போயிற்று.//

இதிலே நான் என்ன குற்றப் படுத்தி விட்டேன். இரண்டு வகையான சிந்தனைப் பாதைகள் உள்ளன. ஒன்று பயத்தின் அடிப்படையில் சிந்திப்பது. இன்னொன்று பிறரின் மீதான அன்பின் அடிப்படையில் சிந்திப்பது.

இதில் எந்தக் குற்றச் சாட்டும் இல்லை. நான் சொல்லுகிறவரைத் தேவனாகத் தொழாமல் வேறு ஒருவரைத் தொழுதால் எரி நரகத்துக் போவாய் என்கிற கருத்து நீங்கள் குறிப்பிடும் பரிசுத்த வேதாகமத்தில் இருக்கிறதா இல்லையா? அப்படி இருக்கிறது என்றால், இல்லாத ஒன்றை நான் எழுதவில்லை. எனவே என் மீது குற்றம் சாட்ட எதுவும் இல்லை.

அப்படிப் பட்ட கருத்து பரிசுத்த வேதாகமத்தில் இல்லை என்றால் அதையும் தெளிவாக சொல்லி விடுங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும்.

மற்றபடி இயேசு கிறிஸ்துவின் சிறந்த கொள்கைகளுக்காக அவரை மதிக்கிறோம், அவர் மீது அன்பு செய்கிறோம், நல்லிணக்க அடிப்படையில் மனப் பூர்வமாக எல்லாப் பிரிவினருடனும் சேர்ந்து இயேசுவை வழி படத் தயார் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறோம்.

இயேசு கிறிஸ்துவின் முக்கியக் கோட்பாடுகளான கணவன் மனைவி பிரியாமல் வாழ வேண்டும் போன்றவற்றை உதாசீனம் செய்து , அதெல்லாம் முடியாது , கஷ்டம், என்றெல்லாம் பலரும் பின்னோட்டம் இட்டதை நினைவு கூர்கிறேன். இயேசு கிறிஸ்துவின் கற்பிதங்களை கனப் படுத்துவது யார் அவற்றை உதாசீனம் செய்து குற்றப் படுத்துவது யார் என்று நினவு படுத்திப் பாருங்கள்.

//அவர்களின் கொள்கையை நினைவு கூர்வதில் எந்த தவறும் இல்லை.//
உங்களுக்கு பிடித்ததெல்லாம் “தவறில்லை” பிடிக்காததெல்லாம் “தவறு”. ஆஹா…

“இது சரியல்ல”, “இது தவறல்ல” என்று நீங்கள் பாட்டுக்கு தீர்ப்பு சொல்கிறீர்களே. எந்த அடிப்படையில் நீங்கள் இப்படி தீர்ப்பு சொல்கிறீர்கள். நீங்கள் அனைத்தும் அறிந்தவரோ?
மேலும், மனித அறிவுக்கு அப்பாற்பட்டவனே இறைவன். இறையியலில் இறைவனை தேடாமல், அறிவியலில் (அறிவு + இயல்) தேடிக்கொண்டிருப்பதென்ன?

//
இதில் எந்தக் குற்றச் சாட்டும் இல்லை. நான் சொல்லுகிறவரைத் தேவனாகத் தொழாமல் வேறு ஒருவரைத் தொழுதால் எரி நரகத்துக் போவாய் என்கிற கருத்து நீங்கள் குறிப்பிடும் பரிசுத்த வேதாகமத்தில் இருக்கிறதா இல்லையா? அப்படி இருக்கிறது என்றால், இல்லாத ஒன்றை நான் எழுதவில்லை. எனவே என் மீது குற்றம் சாட்ட எதுவும் இல்லை.

//

நீங்கள் சொல்லுவது போல பரிசுத்த வேதாகமத்தில் இல்லை. ஆழமான வேதாகம ஞானம் இல்லாததால் உங்களுக்கு வந்த குழப்பம் இது.
நான் சொல்லுவது என்னவென்றால், நரகத்திற்கு பாத்திரனான பாவி, இயேசுவை சரணடைந்தால், அதிலிருந்து இரட்சிக்கப்படுவான் என்பதே.
நீர் பாவி அல்லவென்றால், நீர் இதை குறித்து கவலை படுவதென்ன? ஐயோ.. பாவிகளாய் இருக்கிறோமே, இதில் இருந்து ரட்சிப்பில்லையா என்று கவலை படுவோருக்கு எங்கள் செய்தி சென்று சேரட்டும்.
மேலும், எந்த ஒரு தவறும் செய்யாமல் தன் தாயோ தந்தையோ (அவர்கள் தவறினால்) பெற்றுக்கொண்ட AIDS நோய் அவர்களின் குழந்தைக்கு வரலாம். யார் ஒத்துகொண்டாலும், ஒத்துகொள்ளாவிட்டாலும் இது நடைமுலையில் உள்ள உண்மை.

ஆனால், பாவமும் அப்படி வர வாய்ப்பிருக்கிறதா என்று யோசித்து கூட பார்க்க பலரால் முடிவதில்லை.

அசோக்

ஐயா,

//இது சரியல்ல”, “இது தவறல்ல” என்று நீங்கள் பாட்டுக்கு தீர்ப்பு சொல்கிறீர்களே. எந்த அடிப்படையில் நீங்கள் இப்படி தீர்ப்பு சொல்கிறீர்கள். நீங்கள் அனைத்தும் அறிந்தவரோ?//

கொள்கையை ஆராய்ந்தே ஏற்றுக் கொள்கிறோம்.

பிறர் மனைவி மீது ஆசைப் படக் கூடாது, பிறரை இம்சிக்கக் கூடாது, உண்மையே பேச வேண்டும் – இவை எல்லாம் நல்ல கொள்கைகளா இல்லையா, இக் கொள்கைகளை பினபற்றுவதால் சமூகத்துக்கு தீங்கு எதுவும் இல்லையே. காந்தி , இயேசு , புத்தர் , இராமர் ஆகியோரின் உருவங்களைப் பார்க்கும் போது எனக்கு இந்தக் கொள்கைகள் மீது இன்னும் அதிக பற்று வந்தால் அதில் என்ன தவறு? தவறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.

//நீங்கள் சொல்லுவது போல பரிசுத்த வேதாகமத்தில் இல்லை.//

வேதாகமத்தில் இருக்கிறதா இல்லையா என்று கேட்டேன். இப்போது நீங்கள் ஒரு குறிப்பிட்ட தேவனை தொழாவிட்டால் அப்படித் தொழாத காரணத்தினால் அவன் எரி நரகம் செல்வான் என்று வேதாகமம் சொல்லவில்லை என்று சொல்கிறீர்கள்.விளக்கத்திற்கு நன்றி. இதை அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்.

//மேலும், எந்த ஒரு தவறும் செய்யாமல் தன் தாயோ தந்தையோ (அவர்கள் தவறினால்) பெற்றுக்கொண்ட AIDS நோய் அவர்களின் குழந்தைக்கு வரலாம். யார் ஒத்துகொண்டாலும், ஒத்துகொள்ளாவிட்டாலும் இது நடைமுலையில் உள்ள உண்மை.//

ஒரு சிறுவனுக்கு அம்மை நோய் வந்தால் அருகில் இருக்கும் சிறுவனுக்கும் அம்மை நோய் வரும் வாய்ப்பு உள்ளது. காலரா , மலேரியா போனறவையும் கண்டேஜியஸ் நோய்கள் தான்.

//தன் தாயோ தந்தையோ (அவர்கள் தவறினால்) பெற்றுக்கொண்ட AIDS நோய் அவர்களின் குழந்தைக்கு வரலாம். யார் ஒத்துகொண்டாலும், ஒத்துகொள்ளாவிட்டாலும் இது நடைமுலையில் உள்ள உண்மை.

ஆனால், பாவமும் அப்படி வர வாய்ப்பிருக்கிறதா என்று யோசித்து கூட பார்க்க பலரால் முடிவதில்லை//

ஒரு சிறுமியின் பாட்டனார் அவர் காலத்தில் பல பெண்களைக் கற்பழித்துக் கொன்றார் என்றால் , அ ந்தப் பாவத்திற்காக இந்த சிறுமியை கற்பழித்துக் கொலை செய்யலாம் என்று எந்த நீதிபதியாவது சொல்வாரா? மனிதர்களுக்கே இவ்வளவு நீதி நியாயம் தெரிந்து இருக்கிறது. அசோக் இதை எல்லாம் நாம் முன்பே விவாதித்து இருக்கிறோம்.

//மேலும், மனித அறிவுக்கு அப்பாற்பட்டவனே இறைவன். இறையியலில் இறைவனை தேடாமல், அறிவியலில் (அறிவு + இயல்) தேடிக்கொண்டிருப்பதென்ன//

அறிவியலோ, அவியலோ , இறைவன் என்று ஒருவர் இருப்பதற்கு எந்த ஒரு நிரூபணத்தையும் இதுவரை யாரும் தரவில்லை. நானும் பல முறை எழதி விட்டேன். ஒரு நிரூபணமும் இல்லாமல், யாரும் பார்க்காத ஒன்றை இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டால், அமைதியாக உங்கள் மதத்தைப் பின்பற்றிக் கொள்ளுங்கள், உங்களை யாரும் தடுக்கவோ, இகழவோ இல்லை. உங்களுக்கு இருப்பது போல அடுத்தவருக்கும் நம்பிக்கை இருக்கிறது. பிற மதங்கள் பொய்யானவை , என் மதம் மட்டுமே உண்மை என்று சொன்னால் அதற்கு ஆதாரத்தைக் கொடுங்கள். உங்களின் கடவுள் உண்மையானவர் என்றால் மாதத்தில் எல்லா நாட்களும் பவ்ர்ணமி முழு நிலவாக ஒளி விடும்படி செய்து காட்டுங்கள். எந்த வித நிரூபணமும் இல்லை என்றால் அடுத்தவரை வம்பிழுத்து வெறுப்புணர்ச்சியை தூண்டி இரத்த ஆறு ஓட விட வேண்டாம்.

உண்மைதான் தன் மனைவி தவிர மற்றவளை இச்சிப்பது பாவம்தான். ஆனால், சிலர் சொல்லுகிறார்கள், “அவர்கள் சும்மா அழகை ரசிக்கிறார்களாம்”, மேலும் “அழகை ரசிப்பதில் என்ன தப்பு” என்று கேட்கிறார்கள். உங்களுக்கும் எனக்கும் தெரிகிறது, அடுத்தவன் மனைவியை இச்சிப்பது பாவம் என்று, ஆனால் அவர்கள் அதை ஒத்துக்கொள்வதில்லை, புரிந்துகொள்வதில்லை. ஆனால், அவர்கள் ஒத்துக்கொள்ளாததால், அது பாவம் அல்ல என்று ஆகி விடாது.

பாவகாரியம் செய்பவன் ஒத்துக்கொண்டாலும், இல்லாவிட்டாலும், பாவம் பாவமே.

ஒரு திருடன் ஒத்துக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் திருட்டு பாவமே.

அதேபோல் உங்கள் பார்வையில் சரியானது எல்லாம் இறைவன் பார்வையிலும் சரியாய் இருக்கவேண்டியது இல்லை.
மேலும், ஒரு பாவியின் கண்களுக்கு பாவம் பாவமாக தெரிவதில்லை.
நன்றி,
அசோக்

பரிசுத்த வேதாகமம், பாவத்தை ஒரு நோயை போலவே அணுகுகிறது. ஒரு கொடியநோய் எப்படி மனிதனை மரணத்திற்கு கொண்டு செல்கிறதோ, அதேபோல் பாவமும் ஒருவனை நரகத்திற்கு கொண்டு செல்கிறது. ஒரு மருத்துவர் எப்படி நோயாளி மனிதனை மரணத்திலிருந்து காக்கிறாரோ, அதேபோல் தேவனும் பாவத்தில் சிக்கிய மனிதனை நரகத்திலிருந்து காக்கிறார். ஒரு நோய்வாய்ப்பட்ட மனிதன் மருத்துவரிடம் சென்று மருந்து உட்கொள்ளாமளிருந்தால், அந்த நோயே அவனை கொன்றுவிடும் (மருத்துவர் அதற்க்கு பொறுப்பல்ல). பாவத்தில் சிக்கிய மனிதன், பாவத்தின் பரிகாரியான ரட்சகர் யேசுவிடம் வராவிட்டால், அவனது பாவமே அவனை நரகத்திற்கு கொண்டு செல்லும் (இயேசு அதற்க்கு பொறுப்பல்ல).

//ஒரு சிறுமியின் பாட்டனார் அவர் காலத்தில் பல பெண்களைக் கற்பழித்துக் கொன்றார் என்றால் , அ ந்தப் பாவத்திற்காக இந்த சிறுமியை கற்பழித்துக் கொலை செய்யலாம் என்று எந்த நீதிபதியாவது சொல்வாரா?//

நீங்கள் சொன்ன இந்த கதை கிறிஸ்த்துவ ரட்சிப்பின் தத்துவதிற்கு பொருந்தவில்லை. அதற்க்கு பொருந்தும் படி நான் ஒன்று சொல்கிறேன்.

ஒரு பெண் தன் தவறான வாழ்க்கை முறையால் நோய்வாய்ப்படுகிறாள். இந்த நேரத்தில் அவள் கருவுற்று ஒரு பிள்ளையையும் பெறுகிறாள். தாய்க்கு இருந்த நோய் அவள் பிள்ளைக்கும் பரவுகிறது (நடை முறையில், இன்றைய உலகில் நீங்கள் இதை பார்த்திருப்பீர்கள்).
மருத்துவரை அணுகி தக்க மருத்துவம் செய்தால் அந்த பிள்ளையும் தாயும் பிழைக்கலாம்.

மருத்துவரை அணுகாமல், அவர்கள் இறக்கவும் செய்யலாம் (இதற்க்கு மருத்துவர் பொறுப்பாக முடியாது).

இங்கே:

நோய் = பாவம்

மருத்துவர் = தேவன்

இந்த உலக மருத்துவர்கள் உங்களை தேடி வந்து மருத்துவம் தருவதில்லை. ஆனால், தேவன் அனைவரையும் ஏதாவது ஒரு வழியில் தேடி வருகிறார்.
ஆனால், பலர் சுய பெருமை காரணமாக தனக்கு நோய் (பாவம்) இல்லை என்று, மருத்துவனை (தேவன்) சிகிச்சையளிக்க அனுமதிப்பதில்லை.

புரிந்ததா???
உங்களுக்கு புரிந்தாலும் புரியாவிட்டாலும் உண்மை மாறப்போவதில்லை. நான் செய்தியை கொடுத்துவிட்டேன், இஷ்ட்டம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள் (இதற்காக நிலவை எல்லாம் நிறுத்தி வைக்கப்போவதில்லை, அதைவிட பெரிய காரியங்கள் நிகழ்ந்த போதும், பலர் இறைவனை உணர்ந்துகொள்ளவில்லை).

Thanks,
Ashok

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: