Thiruchchikkaaran's Blog

நான் என் வாழ்நாளில் ஒரு நல்ல காரியம் கூடச் செய்ததில்லை – ஒளரங்கஜேப் உருக்கம்!

Posted on: February 4, 2011


எல்லா மதங்களுடனும் நல்லிணக்கத்தைக் கடைப் பிடிப்பதோடு, எல்லா  மதங்களிலும் நல்ல கருத்துக்கள் உள்ளன என்பதை சுட்டிக் காட்டி  அவற்றைப் பாராட்டுகிறோம். ஒவ்வொரு மதத்திலும் ஆன்மீக முன்னேற்றத்துக்கான சிந்தனை செயல்கள் உள்ளதை சுட்டிக் காட்டுகிறோம். எல்லா மத விழாக்களிலும் கலந்து கொள்கிறோம் . இது ஒரு விடயம்.

அதே நேரம் ஒருவர் இன்ன மதத்தைப் பின்பற்றுகிறார் என்பதற்காக அவர் மீது மத வரியைப் போட்டு துன்புறுத்தி கட்டாயப் படுத்தும் கொடுங்கோன்மைக்கு முன்  மண்டி இட இயலாது.

ஏழை  திம்மிகளுக்கு வரி போட்டா  தப்பு இல்லை, கட்டிட்டுப் போக வேண்டியதுதானே என்ற ரீதியில் ஒளரங்கஜேபின் கோட்பாட்டை பாராட்டி வரவேற்பதை என்னும் போது, மனதில் எச்சரிக்கை தோன்றுகிறது. மத வெறியை , மதக் கட்டாய வரியை திட்ட வட்டமாக எதிர்க்கிறோம். எல்லோருக்கும் வரி போட்டால் நாம் ஆட்சேபிக்க ஒன்றுமில்லை.  எருது நோவு காக்கைக்கு தெரியாது.

நம்முடைய அன்புக்குரிய நண்பர்கள், நாம் ஒளரங்கஜேபைப் பற்றி விவரமாக அறிந்து கொள்ள வேண்டும் என்ற  நோக்கில் அவருடைய உயில் என்பதாகக் குறிப்பிட்டு கீழே உள்ள விவரங்களை அளித்து உள்ளனர்.

ஒளரங்கஜேப்பின்் உயில் மௌலவி ஹமீதுத்தீன் என்பவரால் பாரசீக மொழியில் எழுதப்பட்ட சக்கரவர்த்தி ஒளரங்கஜேப்பின்் வாழ்க்கை பற்றிய நூலின் 8வது அத்தியாயத்தில் அவரது உயிலில் சொல்லப்பட்ட விஷயங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதிலிருந்து:

1. நான் இந்தியாவின் சக்கரவர்த்தியாக இருந்து இந்த நாட்டை ஆண்டேன் என்பது சத்தியமானது. ஆனால் நான் என் வாழ்நாளில் ஒரு நல்ல காரியம்கூடச் செய்ததில்லை என்பதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் இப்போது வருந்துவதனால் எந்தப் பயனுமில்லை. என் இறுதிச் சடங்குகளை என் அருமை மகன் ஆஸம்தான் செய்யவேண்டும் என்பது என் விருப்பம். வேறுயாரும் என்னுடலைத் தொடக்கூடாது.

ஆனால் நான் என் வாழ்நாளில் ஒரு நல்ல காரியம்கூடச் செய்ததில்லை என்பதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் இப்போது வருந்துவதனால் எந்தப் பயனுமில்லை’‘ இப்படி ஒரு ஒப்புதல் வாக்கு மூலத்தை இறுதிக் காலத்தில் அளித்து உள்ளார் ஒளரங்கஜேப். கடைசி காலத்தில் அவருக்கு புரிந்தது  இன்றைக்கு அவரது புகழ் பாடி அவரது மத அடிப்படைவாத கொடுங்கோன்மையை நியாயப் படுத்துவோருக்குப்  புரியுமா?

2. என் பணியாள் ஆயா பேக்கிடம் என் பணப்பை உள்ளது. அதில் கவனமாகச் சேமித்து வைத்த 04 ரூபாயும் 02 அனாக்களும் இருக்கின்றன. எனக்கு ஓய்வான நேரத்தில் நான் குர்ஆன் பிரதிகளை கையால் எழுதிக்கொடுத்தேன், தொப்பிகள் தைத்தேன். அந்த தொப்பிகளை விற்றுத்தான் நான் நேர்மையாக சம்பாதித்த பணம்தான் அது. அந்த பணத்தில்தான் (என் உடல்மூடும்) க·பன் துணி வாங்கப்பட வேண்டும். இந்த பாவியின் உடலை மூட வேறு எந்தப் பணமும் செலவிடப்படக் கூடாது. இது எனது இறுதி விருப்பம். (என் கையால் எழுதப்பட்ட) குர்ஆனின் பிரதிகளை விற்று நான் 305 ருபாய்கள் பெற்றேன். அந்தப் பணமும் ஆயாபேக்கிடம்தான் உள்ளது. இந்த பணத்தில் வாங்கப்படும் இனிப்பு சோறு ஏழை முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.

இதன் அடிப்படையில்தான் நம்முடைய எட்டாம் வகுப்பு வரலாற்று  பாட புத்தகத்தில் குல்லாய்க ளை  தைத்து விற்றும் , குரான்களின் கைப் பிரதிகளை எழுதி விற்றும் எளிய வாழக்கை வாழ்ந்தவர் என்று புகழ் மாலை சூட்டி உள்ளனர்.

ஆனால் உலகில் அக்காலத்தில் இருந்த அரசுகளிலே மிகவும் செல்முடைய கஜானவாக இருந்தது ஒளரங்கஜேபின் கஜானா!

Revenue administration

Emperor Aurangzeb’s exchequer raised a record £100 million in annual revenue through various sources like taxes, customs and land revenue, et al. from 24 provinces.[23] A pound sterling was exchanged at 10 rupees then.

No. Province Land Revenue (1697) Notes
Total £38,624,680
1 Bijapur £5,000,000
2 Golconda £5,000,000
3 Bengal £4,000,000
4 Gujarat £2,339,500
5 Lahore £2,330,500
6 Agra £2,220,355
7 Ajmere £2,190,000
8 Ujjain £2,000,000
9 Deccan £1,620,475
10 Berar £1,580,750
11 Delhi £1,255,000
12 Behar £1,215,000
13 Khandesh £1,110,500
14 Rajmahal £1,005,000
15 Malwa £990,625
16 Allahabad £773,800
17 Nande (Nandair) £720,000
18 Baglana £688,500
19 Tatta (Sind) £600,200
20 Orissa £570,750
21 Multan £502,500
22 Kashmir £350,500
23 Kabul £320,725
24 Bakar £240,000

அதில் பெரும்பாலான செல்வத்தை அவர் போருக்காக செலவிட்டு இருக்கிறார்.

3. என்னுடைய சாமான்கள் அனைத்தும் — துணிமணிகள், மைக்கூடுகள், எழுதுகோல்கள் மற்றும் புத்தகங்கள் அனைத்தையும் என் மகன் ஆஸமிடம் கொடுத்துவிட வேண்டும். என் சவக்குழி வெட்டுவதற்கான கூலியை இளவரசர் ஆஸம் கொடுப்பார்.

4. ஒரு அடர்ந்த காட்டில் எனக்கான குழி தோண்டப்பட வேண்டும். என்னைப் புதைத்த பிறகு, என்னுடைய முகத்தைத் திறந்து வைக்க வேண்டும். என் முகத்தை மண்ணுக்குள் புதைத்துவிட வேண்டாம். திறந்த முகத்தோடு நான் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறேன். அவனுடைய உச்ச நீதிமன்றத்துக்கு திறந்த முகத்தோடு போகின்றவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

File:Aurangzebs tomb.jpg

5. எனது க·பன் துணி தடித்த கதர்த்துணியால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.எனது உடலின் மீது விலையுயர்ந்த கம்பளம் எதையும் போர்த்த வேண்டாம். எனது சவஊர்வலம் செல்லும் வழியில் மலர்களைத் தூவவேண்டாம். என் உடல்மீதும் மலர்களை வைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது. எந்த இசையும் இசைக்கவோ பாடவோ கூடாது

6. எனக்காக கல்லறை எதுவும் கட்டக்கூடாது. வேண்டுமானால் ஒரு மேடை அமைத்துக்கொள்ளலாம்.

7. பல மாதங்களுக்கு என்னால் என் ராணுவ வீரர்களுக்கும் என் தனிப்பட்ட வேலைக்காரர்களுக்கும் என்னால் சம்பளம் கொடுக்க முடியவில்லை. நான் இறந்தபிறகு, என்னுடைய தனிப்பட்ட வேலைக்காரர்களுக்காவது அவர்களுக்கான முழு சம்பளங்களும் கொடுக்கப்பட வேண்டும், ஏனெனில் கஜானா காலியாக இருக்கிறது.

நிஅமத் அலீ எனக்கு மிகவும் நம்பிக்கையான ஊழியன். என் உடலை அவன்தான் சுத்தப்படுத்துவான். என் படுக்கை தூசியாக இருக்க அவன் அனுமதித்ததேயிலை.

8. என் நினைவாக எந்த கட்டிடமும் எழுப்பக் கூடாது. எனது கல்லறையில் என் பெயர் பொறிக்கப்பட்ட எந்தக் கல்லும் வைக்கக் கூடாது. கல்லறையில் அருகில் மரங்களை நடக்கூடாது. என்னைப் போன்ற ஒரு பாவிக்கு நிழல் தரும் மரங்களின் பாதுகாப்பைப் பெறுவதற்குத் தகுதியில்லை.

//என்னைப் போன்ற ஒரு பாவிக்கு நிழல் தரும் மரங்களின் பாதுகாப்பைப் பெறுவதற்குத் தகுதியில்லை.//

மக்களை வாட்டி வதைத்து கொடுமைப் படுத்தியதைக் கடைசிக் காலத்தில் உணர்ந்து இருக்கிறார் ஒளரங்கஜேப் . ஆனால் இன்றைக்கு மத வெறிக் கொடுமைகளை நியாயம் போல நிலை நிறுத்த நினைப்பவர்கள் அதை உணரவில்லை!

9. எனது மகன் ஆஸம் டெல்லியிலிருந்து ஆட்சி செய்வதற்கான அதிகாரம் பெற்றவனாகிறான். பிஜாபூர், கோல்கொண்டா ஆகிய மாகாணங்களை நிர்வகிக்கும் பொறுப்பு கம்பக்ஷிடம் விடப்பட வேண்டும்.

10. அல்லாஹ் யாரையும் சக்கரவர்த்தியாக்கக் கூடாது. சக்கரவர்த்தியாக இருப்பவன்தான் இந்த உலகிலேயே துரதிருஷ்டம் மிக்கவன். எந்த சமூக கூட்டங்களிலும் எனது பாவங்களை குறிப்பிடக்கூடாது. எனது வாழ்க்கையின் கதையை யாரிடமும் சொல்லக் கூடாது. கி.பி. 1658-லிருந்து 1707-வரை இந்தியாவை ஏறத்தாழ அரை நூற்றாண்டு ஆண்ட ஆறாவது முகலாய மகா சக்கரவர்த்தியின் மரண விருப்பங்கள் இவை! அவருடைய விருப்பப்படியே சாதாரண செங்கற்களால் கட்டப்பட்ட அவரது கல்லறையை இன்றும் ஔரங்காபாத்-தில் காணலாம்.

Courtesy: http://suvanappiriyan.blogspot.com/2011/02/blog-post.html

ஒரு அரசன் எந்த அளவுக்கு மக்களிடம் நியாயமாக நடந்து கொள்கிறான் என்பதுதான் பலகோடி மக்களின் வாழ்க்கையை தீர்மானிப்பதாக உள்ளது. மக்கள் மீது அநியாய வரி விதிப்பை, கொடுங்கோல் கட்டாயத்தை நிகழ்த்தி விட்டு, கல்லறையை எளிமையாகக் கட்டிக் கொண்டால் மக்களுக்கு உண்டான கஷ்டங்கள் சரியாகி விடுமா?

தான் நிகழ்த்திய பாவ செயல்களுக்காக வருத்தப் படுகிறார் ஒளரங்கஜேப்.  இறுதிக் காலத்தில் அவருடைய நிலை
பரிதாபமானது.

ஆனால் அவர் ஆட்சிக் காலத்தில் கோடிக் கணக்கான மக்களின் நிலை மிக மிக பரிதாபமானது.

ஒளரங்கஜேப்பின் கோட்பாடுகளை நியாயப் படுத்தி  நிலை நிறுத்ததுடிக்கும் நண்பர்களை எண்ணும் போது, நம்முடைய நிலையும் பரிதாபமானதே!
இதிலே முக்கியமான  விடயம் என்னவென்றால், ஒளரங்கஜேப் செய்தது சரிதான் என்று கொள்கை ரீதியில் இன்றும்  அவரை ஆதரிப்பது மிகஅபாயகரமானது. மத  ரீதியில் மனிதரைகளைப்  பிரித்து அடக்கு முறை வரி, கட்டாயப் படுத்தால் ஆகியவற்றை சந்திக்க நாம் விருபவில்லை. உலகில் எந்தொரு மனிதனும், மத ரீதியில் கட்டாயப் படுத்தப் பட்டு, துன்புறுத்தப் படக் கூடாது என்பதற்காக இவற்றை எழுதுகிறோம்.
புதிய பாதை என்ற படத்தில் ஒரு காட்சி  வரும். அதிலே பலரையும் அச்சுறுத்தி துன்புருத்திய ஒரு ரவடி அவன் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் மருத்துவமனையில் இருப்பான். அவனைப் பார்க்க யாரும் வர மாட்டார்கள். மருத்துவர்  அதை சுட்டிக் காட்டி பார்த்திபனிடம் , இவனைப்  போல நீயும் ஆகி விடக் கூடாது, உன்னை நேசிக்கும் சீதாவை மணந்து கொள், நல்லவனாகி விடு  என்பார்.
ன் வாழ்க்கையின் கடைசி க் கட்டத்தில் தன்னுடைய அடக்கு முறை கொடுமைகளை எண்ணி மனம்  வருந்தி இருக்கிறார் ஒளரங்கஜேப். அவருடைய அடக்கு முறை கொடுமைகளை கண்டிக்கிற எதிர்க்கிற அதே நேரத்தில் , கடைசி காலத்தில் அவர் ஓரளவுக்காவது தன்னுடைய தவறுகளை உணர்ந்து கொண்டதைப் பாரட்டுகிறோம்.
மத அடிப்படையில் மனிதரகளை கட்டாய வரி விதித்து கொடுமைப்படுத்தலாம், தவறில்லை என்று வாதாடும் நண்பர்கள் நியாயத்தை உணர்வார்களா, மனிதப் பண்பை மனதின் மேல் பரப்புக்கு கொண்டு வருவார்களா?

Title: நான் என் வாழ்நாளில் ஒரு நல்ல காரியம் கூடச் செய்ததில்லை – ஒளரங்கஜேப் உருக்கம்!
Advertisements

2 Responses to "நான் என் வாழ்நாளில் ஒரு நல்ல காரியம் கூடச் செய்ததில்லை – ஒளரங்கஜேப் உருக்கம்!"

சுவனப்பிரியன் இன்றைய இனவெறி சூடான் அதிபரையே முஸ்லீம் என்பதற்காக நல்லவர் என்பவர். சுவனத்துக்கு செல்ல அவர் செய்யும் முயற்சுகளில் சில இவை, அவருக்கு இறைவன் சொர்க்கத்தில் நிறைய கொடுக்கட்டும். மொகலாயர்கள் இந்தியாவை கொள்ளை அடிக்க வந்தவர்கள்தான் என்பது மிக எளிதாக புரியக்கூடியது.

அன்புக்குரிய‌ திரு. குடுகுடுப்பை அவ‌ர்க‌ளே,

உங்க‌ளின் வ‌ருகைக்கும், க‌ருத்துப் ப‌திவிற்க்கும் மிக்க‌ ந‌ன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: