Thiruchchikkaaran's Blog

யாகங்கள், சாஸ்த்ர படனம், தேவதா பக்தி இவையெல்லாம் எதற்கும் உதவாது என்று ஒரு pre conceived notion வைத்துக்கொண்டு இருக்கிறோமா?

Posted on: February 3, 2011


/யாகங்கள், சாஸ்த்ர படனம், தேவதா பக்தி இவையெல்லாம் எதற்கும் உதவாது என்று தாங்கள் ஒரு pre conceived notion வைத்துக்கொண்டு அதன் படி விவேக சுடாமணியை வாசித்தது போல் தெரிகிறது. Selective ஆக quotes உபயோகித்து இருக்கிறீர்கள்//

அன்புக்குரிய நண்பரே, கொஞ்சம் பிராக்டிகலாக சிந்தித்து பாருங்கள். முதலில் இந்த யாகங்களை செய்யப் போவது யார்? அப்படி செய்வதாக இருந்தாலும் உங்கள் அஸ்வ மேத யாகக் குதிரை சீனாவுக்குள் சென்று விட்டால், அவர்கள் அந்தக் குதிரையை அடித்து சாப்பிட்டு விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எனவே போகாத வூருக்கு நாம் வழி தேட வேண்டிய அவசியம் என்ன?

இராமர் கூட அஸ்வ மேத யாகம் செய்தார் என்று சொல்லப் பட்டுள்ளது. ஆனால் இராமரின் வாழ்வில் அந்த யாகம் எந்த அளவுக்கு முக்கியமானது. மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் துன்பம் ஏற்று வனம் சென்றார் இராமர், பதவியை தோளில் போடும் துண்டாக கருதி, கொள்கையை இடுப்பில் அணியும் வேட்டியாக உண்மையிலேயே வாழ்ந்து காட்டியவர் இராமர், தனக்கு எவ்வளவு கஷ்டம் வந்த போதிலும் நன்னெறியை விட்டு விலகவில்லை, தன மனைவியை தவிர பிற பெண்களை மனதாலும் எண்ணவில்லை… இவை போன்ற எண்ணற்ற சிறந்த குணங்கள், செயல் பாடு இவையே இராமரின் சிறப்பு, பெருமை எல்லாம். இராமர் அஸ்வ மேத யாகம் செய்ததால் அந்த யாகத்துக்கு தான் மதிப்பு, அவருக்கு ஒன்றும் இல்லை.

இந்து மதத்தில் யாகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த கால கட்டம் மலையேறி விட்டது. அந்தக் காலத்திலேயே கூட பக்தி வழியில் சிறந்து விளங்கியவர்கள் மார்க்கண்டேயன், துருவன், பிரஹலாதன் … இப்படிப் பலர் இருந்தனர். தனிப்பட்ட மனிதருக்கு யாகத்தினால் வரும் ஆன்மீக முன்னேற்றத்தை விட, பக்தியினால் ஆன்மீக அதிகமான முன்னேற்றம் வரும், யாகம் சிலருக்கு மாத்திரமே சாத்தியம், பக்தி எல்லோருக்கும் சாத்தியம் என்று பலரும் கருதுகின்றனர்.

சாஸ்திர பாடனம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை, முண்டக உபநிடதம், பிரஹதாரண்யா உபநிடதம் இப்படி பல உடநிடதங்களில் உள்ள சிறந்த கருத்துக்களை மேற்கோள் காட்டி இருக்கிறேன்.அந்த பாடங்களை புரிந்து ஒருவன் முன்னேற வேண்டும். அதை சொல்லிக் கொண்டே இருந்தால் தானாக ஏதாவது நடக்கும் என்று நினைக்க வேண்டாம் என்பதே நமது கருத்து.

அமைதியான பக்தியை, ஒருவரின் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்கும் பக்தியை, ஆன்மீக முன்னேற்றத்தை தரும் பக்தியை, பிற மார்க்கங்களின் மீது வெறுப்புணர்ச்சியை உருவாக்காத பக்தியை நாம் குறை சொல்லவில்லை, அது நல்லதே.

Advertisements

2 Responses to "யாகங்கள், சாஸ்த்ர படனம், தேவதா பக்தி இவையெல்லாம் எதற்கும் உதவாது என்று ஒரு pre conceived notion வைத்துக்கொண்டு இருக்கிறோமா?"

அன்புள்ள ஸ்ரீ திருச்சிக்காரன், நமஸ்தே

சங்கரருடைய க்ரந்தங்களை நான் படிப்பது போல ஒரு ஸஹ நண்பர் படிக்கிறார் என்ற படிக்கே நான் இதை எழுதுகிறேன்.கர்ம மார்க்கத்திற்கோ பக்தி மார்க்கத்திற்கோ விருத்தமாக அல்ல சங்கரரது மார்க்கம். மிகக் கடினமானதும் அடைவதற்கறிதான அத்வைதானுபூதி பெற விழைபவருக்கும் அவர்க்ளுக்கு வழி காண்பிப்பவரான குரு ஸ்தானத்தில் இருப்பவருக்கும் ஆன் லக்ஷணங்கள் விவேக சுடாமணியில் சங்கரரால் விவரிக்கப்பட்டது.

\\\\\\\\\\அந்த பாடங்களை புரிந்து ஒருவன் முன்னேற வேண்டும். அதை சொல்லிக் கொண்டே இருந்தால் தானாக ஏதாவது நடக்கும் என்று நினைக்க வேண்டாம் என்பதே நமது கருத்து.\\\\\\\\\\

அத்வைதானுபூதி மற்றும் பக்தி இவையிரண்டையும் ஒரே அலகீட்டால் நீங்கள் புரிந்து கொள்ள முனைவது போல் தங்கள் உத்தரங்கள் தென்படுகின்றன. வேதாந்த விஷயத்தில் படித்த பின் விசாரம் செய் படித்த விஷயத்தை அசை போட்டு அனுபவத்தில் கொணர முயற்சி செய் என்கிறார் சங்கரர்.

வேதாந்தார்த்த விசாரேண ஜாயதே க்ஞானமுத்தமம்
தேன ஆத்யந்திக ஸம்ஸார துஃகநாஸ: பவதி அனு

உபநிஷத்துகளீன் தாத்பர்யத்தை விசாரிப்பதால் ( படித்தாலன்றோ விசாரிக்க முடியும்?) சிறந்த அறிவு ஏற்படும். அதனால் உடனேயே ஸம்ஸாரத்தினால் ஏற்படும் துஃக நாசம் ஏற்படும். அதாவது அபுனர்பவம் கிட்டும் என்கிறார்.

ஆனால் பக்தி லக்ஷணம் வேறு. நாரத பக்தி ஸுத்ரத்தில் பக்த லக்ஷணஞ்சொல்லப்படுகிறது.

பக்தியை ப்ரவ்ருத்திக்கச் செய்யும் க்ரந்தங்களை மட்டும் படிக்கசொல்கிறார். பக்திக்கு வேறான விஷயங்களிலிருந்து விலகச்சொல்கிறார். மௌட்யம் (மூடத்தனம்) கூட பக்தியின் பாற்பட்டால் பக்த லக்ஷணமாகவே கருதப்படுகிறது.

\\\\\\\\\\\\\\நான் ஏற்கனவே தெளிவாக சொல்லி இருக்கிறேன்.
“இந்த மந்திரங்களை சொல்லுங்கள், இந்த பலன் கிடைக்கும்” என்று சங்கராச்சாரியார் சொல்லி இருக்கிறாரா? அதற்க்கு ஏதாவது மேற்கோள் காட்டி சொல்ல முடியுமா? \\\\\\\\\\\\

முடியும்.

சங்கரரால் அருளிச்செய்யப்பட்ட ஸம்ஸ்க்ருத ஸ்தோத்ர க்ரந்தங்களில் (எல்லாவற்றிலும் என்றில்லையானாலும்) பல ச்லோகங்களின் கடைசி அடிகள் பலச்ருதி என்ற படி ச்லோகம் படிப்பவர் அடையும் பயனை விளக்குகிறது.

உதாஹரணத்துக்கு தாங்கள் குறிப்பிட்ட ஸ்வர்ண வர்ஷம் ஸம்பந்தப்பட்ட கனகதாரா ஸ்தோத்ரம். கடைசி அடி

Sthuvanthi ye sthuthibhirameeranwaham,
Thrayeemayim thribhuvanamatharam ramam,
Gunadhika guruthara bhagya bhagina,
Bhavanthi the bhuvi budha bhavithasayo.

அர்த்தம். இதை படிப்பவர் நல்ல குணங்களையும் நல்ல ஸம்பத்தையும் வாழும் வரை அறிஞர்களால் மதிக்கப்பட்டும் இருப்பர்.
இருமல் உரோகம் முயலகன் வாதம் மற்றும் வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி போன்ற திருப்புகழ்களில் வள்ளல் அருணகிரிநாதரும் தனம் தரும் கல்வி தரும் என்ற பதிகங்களில் அபிராமி பட்டரும் ஏதோ எதுகை மோனைக்காகவோ தம் மேதாவிலாசத்தை தெரிவிப்பதற்காகவோ இந்த பாடல்களை செய்ததாக நான் நினைக்கவில்லை. மாறாக படிப்பவர் கஷ்டம் தீர மற்றும் ஸம்பத் பெறவேண்டி அருளாளர்களால் கடவுளருள் கொண்டு புனையப்பெற்ற மந்த்ர துல்யமான பாடல்கள்.கஷ்டம் தீர பக்தி செய்பவன் ஆர்த்தன் என அறியப்படுகிறான். ஸம்பத் பெற பக்தி செய்பவன் அர்த்தார்த்தி என அறியப்படுகிறான்.ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்ற ஸம்தர்சனம் உள்ள பக்தனை ஒப்பிடுகையில் ஒரு ஆர்த்தனும் அர்த்தார்த்தியும் முழுமையற்ற த்ருட விச்வாசமில்லாத பக்தர்களாக ஒருபடி கீழே என்று வேணுமானால் சொல்லலாம். ஆனால் எப்படியேனும் சரி பகவன் நாம உச்சாரணத்தாலும் க்ஷணமாத்ரமேனும் பகவத் ஸ்மரணையாலும் பக்தியில் ஈடுபடுவதால் ஆர்த்தனும் அர்த்தார்த்தியும் க்ருதார்த்தர்களே. பக்தர்களே. கசப்பு மாத்திரை சாப்பிட குழந்தைக்கு இனிப்பு பண்டம் தரும் தாயைப்போலத்தான் இந்த விஷயம். இப்படியெல்லாம் பக்தி செய்தாலும், முன்னேறி, ப்ரஹ்லாதனைப்போல், ந்ருஸிம்ஹரே என்ன வரம் வேண்டும் என்று கேழ்க்க வரமேதும் வேண்டாம் என்று சொல்லும் நிலைக்கு உயர பக்தி வழி செய்யும்.

\\\\\\அன்புக்குரிய நண்பரே, கொஞ்சம் பிராக்டிகலாக சிந்தித்து பாருங்கள். முதலில் இந்த யாகங்களை செய்யப் போவது யார்? அப்படி செய்வதாக இருந்தாலும் உங்கள் அஸ்வ மேத யாகக் குதிரை சீனாவுக்குள் சென்று விட்டால், அவர்கள் அந்தக் குதிரையை அடித்து சாப்பிட்டு விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எனவே போகாத வூருக்கு நாம் வழி தேட வேண்டிய அவசியம் என்ன?\\\\

யாகம் என்றாலே அஸ்வமேதம் என்று ஏன் நினைக்கிறீர்கள்? மேலும் அஸ்வமேதம் கலியுகத்தில் நிஷேதிக்கப்பட்ட யாகம். ஆதலால் குதிரை எங்கே போனால் என்னவாகும் என்ற கேழ்விகள் அவச்யமில்லை. மற்றபடி மற்ற யாகங்களின் செய்முறை அவற்றில் ப்ரயோகிக்கப்படும் மந்த்ரங்கள் இவை பற்றி எனக்கு பரிச்சயம் இல்லாமையால் அது பற்றி நான் கருத்து கூற இயலாது.

\\\\\\\\\யாகம் சிலருக்கு மாத்திரமே சாத்தியம், பக்தி எல்லோருக்கும் சாத்தியம் என்று பலரும் கருதுகின்றனர்.\\\\\\\\

மிகச்சரியான கருத்து. முழுதும் ஒப்புக்கொள்கிறேன்

\\\\\ஆபாச பேர்வழிகளையும், கிரிமினல் பேர்வழிகளையும் குருவாக வைத்துக் கொள்வதற்கு , \\\\\

துஷ்டர்களிடமிருந்து தூர இரு என்பது வசனம்.

\\\\\\குரு கிடைக்காத பட்சத்திலே,குரு இல்லாமலே இருப்பது நல்லது. \\\\\\\\

தவறு.

குரோர் அனுக்ரஹேணைவ புமான் பூர்ண : ப்ரசாந்தயே என்பது கண்ணன் வாக்கு.

ரஸ்கான் கபீர்தாஸ் போன்ற பல மஹான்கள் வலிய குருவை தேடி கிடைக்கவும் பெற்றார்கள். When there is a will there will certainly be a way. ஏதோ பணத்தாசை பிடித்து ஒரு சில நபர்கள் குருஸ்தானத்தில் இருந்து மக்களை ஏமாற்றியதால் குரு என்ற பெயரில் உலவுவர்களெல்லாம் போலி என்று நம்ப நான் தயாரில்லை.
அத்வைத க்ரந்தங்கள் பலவற்றை பற்றி ஸ்ரீ ராமக்ருஷ்ண மடத்தை சார்ந்த துறவிகளிடம் நான் அளவளாவியது உண்டு. தாங்கள் இருப்பது திருச்சி என்றால் திருப்பராய்த்துறை மிக அருகே. மறைந்த ஸ்வாமி சித்பவானந்தரின் ஆஸ்ரமம் ஆங்கே உண்டு. அங்குள்ள துறவிகளும் தெளிவான கருத்துகளை பகிர்கிறார்கள்.

\\\\\\\பட்டினத்தார் எந்த நியாய சாஸ்திரத்தைப் படித்தார். \\\\\\\\\

ஜடபரதர் ஆஜன்ம ப்ரம்மஞானி என்றறியப்படுகிறார்.பட்டினத்தார் ந்யாய சாஸ்த்ரம் படிக்கவில்லை தான். ஆனால் புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்ளலாமா? கடினமான ஒரு இலக்கை அடைய சங்கரர் தெரிவித்த தெளிவான பாதைகளில் ஒன்று இது. அவ்வளவே. அத்வைதானுபூதிக்கு அவச்யம் ஆத்மானாத்ம விசாரம் ஸ்வஸ்வரூபானுசிந்தனம். அது சித்தப்ப்டுவதற்கு இவைகளும் வழிகாட்டி. இவைகளே வழிகாட்டி என்று இல்லை. புராணாந்தரங்களின் மூலமும் இது சாத்யமே. ப்ரம்ம ஸூத்ர பாஷ்யத்தில் சங்கரரே இதைத் தெரிவிக்கிறார். தாயுமானவர், வள்ளலார், அருணகிரிநாதர், தேவார நால்வர் மற்றும் பற்பல அருளாளர்கள் தமிழில் செய்த நூற்களாலும் இது சாத்யமே.

\\\\\\\\கண்ணப்பர் எந்த வியாகரனத்தைப் படித்தார். தியாகராஜர் கூட தான் வேதங்களை, சாஸ்திரங்களி படிக்கவில்லையே என்று சொல்லி இருக்கிறார். சபரி எந்த சாஸ்திரத்தைப் படித்தார். \\\\\\\\\\\\

உண்மையே.

ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்மநிவேதனம்.

என்ற படி நவவித பக்தி ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படுகிறது. பக்தனுக்கு சாஸ்த்ர படனம் நிஷேதமில்லை. விதிதமும் இல்லை. optional.

\\\\\\\\கோயம்பெட்டில் வண்டி வலிப்பவர் கூட ஞானி ஆக முடியும். \\\\\\\\\\

நிச்சயமாக. கண்டிப்பாக சாத்யமே. அதில் என்ன சம்சயம்? தர்மவ்யாதர் என்ற கசாப்புக்கடைக்காரரை ப்ரம்மஞானியாக சாஸ்த்ரங்களே சொல்கின்றனவே.

\\\\\\\\ஆதி சங்கரர் அழுத்தம் கொடுத்து பக்தி மார்க்கத்துக்கு தான். \\\\\\\\\

தவறு நான் மாறுபடுகிறேன்.

\\\\\\\அதான் சம்ஸ்கிருத பாடத்தை உரு அடித்தவரைப் பார்த்து பார்த்து நஹி நஹி ரக்ஷதி\\\\\\\\\

have a contextual interpretation for the incident. not a literal interpretation. cause the summum bonum is different.

\\\\\\\\நீங்கள் தயவு செய்து ஆதி சங்கரரை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.\\\\\\\

நான் தத்சமயம் காஷ்மீரத்தில் வேலை நிமித்தம் வசித்து வருகிறேன். சங்கர பாஷ்ய பாடங்களை தகுந்த ஆசிரியரின் துணை கொண்டு படித்து வருகிறேன். தமிழகம் வரும்போதெல்லாம் சம்சயங்கள் தீர்த்துக்கொள்கிறேன். சங்கரருடைய works ஒரு ஸமுத்ரம். நான் படித்தது ஸ்வல்பமே. படிக்க வேண்டியது நிறைய உள்ளது. நான் படித்த வரையில் புரிந்து கொண்டதையே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அன்புக்குரிய திரு. கிருஷ்ணகுமார்,

வணக்கம்.

//அத்வைதானுபூதி மற்றும் பக்தி இவையிரண்டையும் ஒரே அலகீட்டால் நீங்கள் புரிந்து கொள்ள முனைவது போல் தங்கள் உத்தரங்கள் தென்படுகின்றன. //

நீங்கள் ஏன் அப்படி நினைக்கிறீர்கள் ? பக்தியும், ஏகத்துவ நிலையம் ( அத்வைதானுபூதி) ஒன்று என்று நான் சொல்லவில்லை. ஏகத்துவ நிலையை அடைய பக்தி எளிதான வழி என்பது சங்கராச்சாரியாரின் கருத்து என்றே சொல்கிறேன். மவுண்ட் ரோடு வழியாக ஏர்போர்ட் செல்லலாம் என்று சொன்னால் மவுண்ட் ரோடும், ஏர்போர்ட்டும் ஒன்று என்று அர்த்தம் இல்லை.

பக்தியாக இருந்தாலும் , கர்ம யோகமாக இருந்தாலும், கர்ம பலத்த தியாகமாக இருந்தாலும், தவமாக இருந்தாலும்…. எந்த வழியாக இருந்தாலும், தத்துவ விசாரணை- எது நிலையானது , எது நிலையற்றது வாழ்க்கை எப்படிப்பட்டது, அதில் உள்ள அபாயங்கள், வசதிகள் என்ன போன்ற தத்துவ விசாரணையை செய்வது ஒருவனுக்கு கட்டுப்பாட்டை, குறிக்கோளை நோக்கி செல்லும் முனைப்பை வைராக்கியத்தை தருகிறது என்பதை பல முறை சொல்லி இருக்கிறோம்.

தத்துவ விசாரணை இல்லாத பக்தியோ, தவமோ … குறிக்கோளை விட்டு விலகி விடும் வாய்ப்பு உள்ளது. மிகச் சிறந்த பக்திமான்கள் தத்துவ விசாரணையை முக்கியமாக வைத்து இருந்தனர். உதாரணமாக

தன சவுக்கியமு தா நெருகக லோகொர் தகு போதன சுகமா,
கன மகு புலி கோ ரூபமைதே தியாகராஜா
சிசு பாலு கல்குணா இராமா நீ எட

என்று பாடினார் தியாகராசர்.

செலவ சுகங்களை தேட சொல்லி இந்த உலகோர் தரும் போதனை உபயோகமா,
பசுத் தோல் போர்த்திய புலி பால் தருமா …

என்று படி இருக்கிறார்.

இந்த உலகப் பொருட்கள் தன்னைக் காக்காது து, அது மட்டுமல் , அவற்றை நம்பினால் ஆபத்துதான் .. புலி அடித்து சாப்பிட்டு விடுவதைப் போல .. தானும் அழிவோம் என்கிறார் தியாகராஜர். இக சம்சாரே பஹு துக் தாரே கிருபயா பாரே பாஹி முராரே என்றார் சங்கரர் . எனவே பகுத்தறிவு சிந்தனையின் அடிப்படியிலே அமைந்த பக்தி உறுதியாக நிற்கிறது.

பலரும் பக்தி மார்க்கத்தை சரியாகப் புரிந்து கொள்வதில்லை!

தத்துவ விசாரணை செய்ய புஸ்தகம் படித்துதான் ஆக வேண்டும் என்று இல்லை. வாழ்க்கையை பற்றி சிந்தித்தாலே தத்துவம் வரும். புத்தர் எந்த புத்தகத்தைப் படித்தார்.

உபநிடதங்க்களைப் படிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. நானே பல உபநிடதங்களி இருந்து மேற்கோள் கட்டி இருக்கிறேன். இதை எத்தனை முறை எழுத வேண்டும் என்று சொல்லுங்கள்.

உதாஹரணத்துக்கு தாங்கள் குறிப்பிட்ட ஸ்வர்ண வர்ஷம் ஸம்பந்தப்பட்ட கனகதாரா ஸ்தோத்ரம். கடைசி அடி

அர்த்தம். இதை படிப்பவர் நல்ல குணங்களையும் நல்ல ஸம்பத்தையும் வாழும் வரை அறிஞர்களால் மதிக்கப்பட்டும் இருப்பர்.//

சரி யாராவது உங்கள் காலில் விழுந்து வணங்கினால், என்ன சொல்வீர்கள், சகல சௌபாக்கிய பிராப்திரஸ்து, தீர்க்கயுஸ்மான் பவ … எல்ல்லா வளமும் பெற்று வாழ்க, ஆயிரம் பிறை கண்டு வாழ்க என்று எல்லாம் வாழ்த்துகிறார்கள். இது எல்லா ஆல் தி பெஸ்ட் என்று வாழ்த்துவது போல ஐயா, ஆர் ஆயிரம் பிறை கண்டு வாழ்வதற்கு வாழ்த்தியவர் கேரண்டி கொடுக்க முடியுமா? கனகதாரா ஸ்தோத்திரம் படிப்பவர்கள் நிச்சயம் வசதி வாய்ப்புடன் கூடிய வாழ்க்கைக்கு உயருவார்கள் என்று நீங்கள் கேரண்டி கொடுக்க முடியுமா. ஆதி சங்கரர் எந்த அளவுக்கு பகுத்தறிவுப் பாதைக்கு மக்களைக் கொண்டு சென்றாரோ, அந்த அளவுக்கு பலரும் அவர் பெயராலே பிற்போக்கு திசையில் செலுத்துகின்றனர்.

//ஆதி சங்கரர் அழுத்தம் கொடுத்து பக்தி மார்க்கத்துக்கு தான்.// \\\\\\\\\

தவறு நான் மாறுபடுகிறேன்,//// – சரி நீங்கள் உங்களுக்கு பட்டதை பிரச்சாரம் செய்யுங்கள். நான் எனக்குத் தோன்றியவற்றை ஆதி சங்கரரின் வார்த்தைகளையே மேற்கோள் காட்டி விளக்குவதில் தொடந்து ஈடுபடுவேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 39 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: