Thiruchchikkaaran's Blog

மத வெறிக் கொடுங்கோன்மையின் கோர முகத்தை ஒப்பனை செய்து நல்லது போலக் காட்ட முடியுமா?

Posted on: February 2, 2011


அவரங்கசீப்  ரொம்பப  நல்லவர் என்று காட்டும் முயற்சியில் நண்பர்கள் பல கருத்துக்களை எழுதி வருகின்றனர்.

ஜிசியா வரி இந்துக்களுக்கு, சகாத் என்பது முஸ்லீம்களுக்கு என்று சொல்லி அவரங்கசீப் எல்லோருக்கும் வரி போட்டு இருக்கிறார், நியாயமானவர் என்று சொல்லி முடிக்கலாம் என்று செயல் படுகின்றனர்.

அவர்களுக்கு நாம் அளித்த பதிலை கட்டுரையாக இங்கே தருகிறோம்.

//ஜஸ்யா வரி குடுத்து இந்துக் குலமே போண்டியாகி விட்டது என்று நீலிக் கண்ணீர் வடிப்பவர்களுக்கு விளக்கம் சொல்வதும் வீண்//

என்று எழுதி உள்ளார்கள்!

ஏழை திம்மிகளின் மீது விதிக்கப் பட்ட கட்டாய கொடுங்கோல் மதவெறி வரியின் கொடுமையை உணராமல் நீலிக் கண்ணீர் என்று எழுதுவது எந்த அளவுக்கு சரி என எண்ணிப் பாருங்கள். அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் பற்றி எழுதுவது உங்களுக்கு நீலிக் கண்ணீராக இருக்கிறது, இதுதான் மனித நேயமா? மனித நேயம் என்பது அவரங்கசீப் மீது உள்ள பற்றின் காரணமாக சுருங்கி விடுமா?

ஜகாத் வரி என்பதை முஸ்லீம்களின் மீது கடமையாக விதித்து இருந்தனர் இந்துக்களுக்கு ஜிசியா வரி, முஸ்லீம்களுக்கு ஜகாத் வரி, இதில என்ன இருக்கு, என்பது போல எழுதுகிறீர்கள்.

இப்படி எழுதியது சரியா என்று மீண்டும் ஒரு முறை சிந்தித்து பாருங்கள். அவரங்கசீபை நல்லவராக சித்தரிக்கும் அவசரத்தில் இஸ்லாத்தின் கோட்பாடுகளை இடறி விடுவது போல தோன்றவில்லை?

பணக்கார முஸ்லீம்கள தங்கள் சொத்தில் பத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்பதுதானே ஜகாத். இது சரியா இல்லையா. இது (ஜகாத்) கட்டாயமா என்பது வேறு விடயம்.

ஆனால் வசதி படைத்த முஸ்லீம்கள் தங்கள் சொத்தில் ஒரு பங்கை ஏழை முஸ்லீமுக்காக தர வேண்டும். அந்த சொத்து, பணம் ஏழைகளுக்கு பங்கிட்டு தரப்பட வேண்டும். இது சரியா இல்லையா?

இந்த நிலையில் ஏழை முஸ்லீம்கள் மீது கட்டயாமாக ஜகாத் வரி விதிக்கப் பட்டதா?

அவரங்கசீப் ஏழை முஸ்லீம்கள் மீது கட்டாய ஜகாத் வரி விதித்தரா?

உலகில் எந்த ஒரு இஸ்லாமிய அரசும் ஏழை முஸ்லீம்கள மீது கட்டாயமாக ஜகாத் வரி விதித்ததாக சரித்திரம் இல்லை, எனக்குத் தெரிந்த அளவில் இல்லை.


ஆனால் ஏழை திம்மிகள் மீது கட்டாயமாக ஜிஸியா” வரி விதிக்கப் பட்டுள்ளது. இதை வசதியாக மறைத்து விடுகிறார்கள்.

ஏழை முஸ்லீம் மீது ஜகாத் என்பது கட்டாய வரியாக விதிக்கப் பட்டது என்பதாக அவுரங்கசீப் கால வரலாற்றில் ஒரு சிறு குறிப்பு கூட இல்லை. எந்த ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளரும், அவ்ரங்கசீப் ஆட்சிக் காலத்தில் ஏழை திம்மிக்கு விதிக்கப் பட்ட கட்டாய மத வரியைப் போல,ஏழை இஸ்லாமியருக்கு சகாத் வரி விதிக்கப் பட்டதாக எழுதவில்லை என்பதை முக்கியமாக சொல்ல விரும்புகிறோம்.

எப்பொழுதெல்லாம் கட்டாய மத வரியான ஜிசியாவைப் பற்றி எழுதினாலும் உடனே அதை சமாளிக்கும் விதமாக சகாத் பற்றி பலரும் எழுதுகிறார்கள். காத் பற்றி எல்லோருக்கும் தெரியாது என்று நினைத்து விட்டார்களா, அல்லது அவர்களே காத் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா என்பது நமக்கு தெரியாது.

ஒரு திர்ஹாம் தானே என்று எள்ளி நகையாடுகிரீர்கள், அது என்ன பெரிய தொகையா என்று கேட்கிறீர்கள். மொத்த சொத்தே இருநூறு திர்ஹாம் மட்டுமே உள்ள ஒரு ஏழை திம்மி வருடம் 12 திர்ஹாம் கட்ட வேண்டும். அதுவும் கட்டாய வரி, மறுத்தால் தண்டனை. திம்மியாக இல்லாமல் மதம் மாறி விட்டால் வரி கட்ட வேண்டாம். மனித நேயம், நீதி, நியாயம் ஆகியவற்றை மனதின் மேற்பரப்புக்கு கொண்டு வந்து , உங்கள் மனசாட்சியைத் தொட்டு இந்தக் கொடுமையை நியாயப் படுத்துவது சரியா என்று எண்ணிப் பாருங்கள்!

அவரங்கசீப்  மத வரி போட்டது சரிதான் , வரி போடாமல் எப்படி அரசாங்கம் நடத்த  முடியும் என்று   சில நண்பர்கள்  கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெறுமனே முஸ்லீம்களிடம் இருந்து மட்டும் வரி விதிக்க முடியுமா என்று சொல்லுகின்றனர்.  அவரங்கசீப் முஸ்லீம்களிடம் இருந்து மட்டும் வரி விதித்து நாட்டை ஆண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லையே.

இந்து, முஸ்லீம் , சீக்கியர் என்ற வேறுபாடில்லாமல் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவன் வருமானத்துக்கு ஏற்ப வரி என்று அவரங்கசீபார் ஆணை இட்டு இருந்தால் அதை யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை.

பணக்கார திம்மிகோ, பணக்கார முஸ்லீமுக்கோ அவரங்கசீப் வரி விதித்தால், அதில் நாம் அதிகம் குறை சொல்ல ஒன்றும் இல்லை, அது கூட பணக்கார முஸ்லீம், பணக்கார திம்மி என்கிற வேறுபாடில்லாமல் குடிமகனுக்கு இவ்வளவு வரி என்று விதிக்க வேண்டும்.

அவ்ரங்கசீப் ஏழை திம்மி மீது கட்டாய மத வரியை விதித்து இருக்கிறார். அந்த ஏழை திம்மி வரி கட்ட முடியாவிட்டால் தண்டனை பெற வேண்டும், இல்லை கசை அடியை , சிறை வாசக் கொடுமையை பொறுக்காமல் மதம் மாற வேண்டும்!ஏனெனில் ஏழை திம்மி மதம் மாறி விட்டால் ஜிசியா வரி கட்ட வேண்டியதில்லை.

ஆனாலும் மத அடிப்படையிலான கொடுங்கோல் அடக்குமுறை கட்டாய மத வரியை ஆதரித்து, ஏழை திம்மிகள் பட்ட அவலத்தை கண்டுகொள்ளாமல் போய்யா, என்று சொல்லும் வகையில், மத ரீதியிலான அடக்குமுறையை, அச்சுறுத்தலை, கசக்கி பிழியும் கொடுமைகளை சப்பைக் கட்டு கட்டி ஆதரிக்கும் வகையிலேயே அவரங்க சீப் ஆதரவாளர்களின் கருத்துக்கள் அமைந்து உள்ளன.

நாம் மதப் பிரச்சாரகர்களிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால்,  நீங்கள்  மனிதத் தன்மைக்கு, மனித உரிமைக்கு, மனிதனின் சுதந்திரத்திற்கு , மனிதப் பண்புகளுக்கு மதிப்பு தருகிறீர்களா என்பதை முதலில் தெளிவு படுத்துங்கள். அதுதான் முதலில் மக்கள் உங்களிடம் இருந்து  தெரிந்து கொள்ள விரும்புவது.

பிற மனிதனை கட்டாயப் படுத்த விரும்பாத , துன்புறுத்த விரும்பாத, அச்சுறுத்த விரும்பாத நாகரிக மனநிலையை நீங்கள் பெற்று இருக்கிறீர்களா, அதை முதலில் உறுதிப் படுத்துங்கள். இந்த நூலில் சொல்லி இருக்கிறது, அந்த நூலில் சொல்லி இருக்கிறது என்பது எல்லாம் மனிதனுக்கு அப்புறம்தான். எந்த ஒரு நூலாக இருந்தாலும் சரி, எந்த ஒரு மதமாக இருந்தாலும் சரி, மனிதனின் சுதந்திரத்துக்கு தடை போட்டு, நான் சொன்ன படி நீ கேட்க வேண்டும் , இல்லாவிட்டால் தண்டனை என்று கூறும் எந்த ஒரு சட்டத்தையோ, நூலையோ மக்கள் எச்சரிக்கையுடன் நோக்குகிறார்கள்.

நீங்கள் முதலில் அடிப்படை மனிதப் பண்புகளைக்  கற்று வாருங்கள், பிறகு வந்து எங்களுக்கு மத உபதேசம் செய்யலாம் என்பதே மக்களின் கருத்து.

Advertisements

1 Response to "மத வெறிக் கொடுங்கோன்மையின் கோர முகத்தை ஒப்பனை செய்து நல்லது போலக் காட்ட முடியுமா?"

இது ‘அந்த’ பதிவில் போட்ட பின்னூட்டம், சுவனப்பிரியனுக்கு…

“இஸ்லாமியர்கள் என்றே ‘ஒரே’ காரணத்துக்காக முகலாயர்களுக்கு இவ்வளவு ஜல்லி அடிக்கிறீர்களே, உங்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. என்ன வோ முகலாய மன்னர்கள் எல்லாமே தேவ தூதர்கள் போலவும், அவர்கள் தான் நல்லாட்சியை கொடுத்தார்கள் என்பது போலவும் இப்படி ஜால்ரா அடிக்கறீங்காளே, கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையா?

‘ஒளரங்கஜேப்’ என்று அழைப்பதற்கு பதிலாக ‘ஒளரங்கசீப்’ என்று அழைக்கப்பட்டதால் நாங்களெல்லாம் பொய்யர்கள். வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்துக்கு ஒரு அதிகாரபூர்வ மறுப்பு வெளியிடுங்களேன், பார்க்கலாம்…”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: