Thiruchchikkaaran's Blog

அவுரங்கசீப் ஆட்சியில் கட்டாய மத மாற்றம் நடந்ததா?ஏழை திம்மிகள் மீது சுமத்தப்பட்ட கட்டாய மத வரி!

Posted on: January 31, 2011


பாட்டனார் அக்பரின் நல்லிணக்கக் கோட்பாடுகளை அவுரங்கசீப் காற்றில் பறக்க விட்டதாகவே வரலாறு சொல்லுகிறது.

அவுரங்கசீப் பிற மதத்தை சேர்ந்தவர்களின் மீது ஜிசியா எனப் படும் தனி வரியை விதித்து இருக்கிறார். ஜிசியா எனப் படும் வரி இஸ்லாமிய மார்க்கத்தை சேராதவர்கள் மீது விதிக்கப் படும் வரி என்பதாக இருந்திருக்கிறது.

இஸ்லாத்தை சேராதவர்கள் “திம்மி” என்று சொல்லப் பட்டனர். ஒவ்வொரு ”திம்மி”யும் மாதா மாதம் ஜிசியா வரி கட்ட வேண்டும். இதிலே அதிகம் பாதிக்கப் பட்டது ஏழைகள்தான்.

ஒரு திம்மி இருநூறு ரூபாய் வரையிலான நிலத்தை வைத்து இருந்தால் அவன் மாதா மாதம் ஒரு ரூபாய் ஜிசியா வரி கட்டினால் போதுமாம். இருநூறு ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வைத்திருப்பவனுக்கு மாத வருவாயாக ஐந்து ரூபாய்க்கு மேல் வருமானம் வர வாய்ப்பில்லை.

அந்தக் காலத்தில் பத்துப் பதினைந்து பிள்ளைகளைப் பெற்ற ஏழை  திம்மி தனக்கு மாத வருமானமாக வரும் ஐந்து ரூபாயில் தன்னுடைய குடும்பத்தைக்   கவனிப்பதே மிகவும் கஷ்டம்.

இந்தக் கஷ்டத்தில் அவன் மாதம் எப்படி ஒரு ரூபாயை வரியாக குடுக்க முடியும். அதெல்லாம் உன் பிரச்சினை , நீ திம்மியாக இருந்தால் வரி கட்ட வேண்டும் அப்படி வரி கட்டாமல் இருக்க வேண்டும் என்றால் திம்மியாக இருக்காதே, மாறி விடு என்பதுதான் கோட்பாடு.

ஒரு ஏழை திம்மியாக இருந்தால் அவன் கஞ்சி குடிக்க வைத்திருக்கும் காசும் சுரண்டப்படும். அதுவும் அந்த திம்மியின் குடும்பத்தில் வயதுக்கு வந்தவர்கள் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும்  ஜிசியா வரி கட்ட வேண்டும். அதே ஏழை திம்மியாக இல்லாவிட்டால், மாறி விட்டால் அவன் வரி கட்ட வேண்டியதில்லை.

From Aurangzeb’s Fatwa:

[Jizyah] refers to what is taken from the Dhimmis, according to [what is stated in] al-Nihayah. It is obligatory upon [1] the free, [2] adult members of [those] who are generally fought, [3] who are fully in possession of their mental faculties, and [4] gainfully employed, even if [their] profession is not noble, as is [stated in] al-Sarajiyyah. There are two types of (jizyah). [The first is] the jizyah that is imposed by treaty or consent, such that it is established in accordance with mutual agreement, according to (what is stated in) al-Kafi. (The amount) does not go above or below (the stipulated) amount, as is stated in al-Nahr al-Fa’iq. (The second type) is the jizyah that the leader imposes when he conquers the unbelievers (kuffar), and (whose amount) he imposes upon the populace in accordance with the amount of property [they own], as in al-Kafi. This is an amount that is pre-established, regardless of whether they agree or disagree, consent to it or not.

The wealthy (are obligated to pay) each year forty-eight dirhams (of a specified weight), payable per month at the rate of 4 dirhams. The next, middle group (wast al-hal) [must pay] twenty-four dirhams, payable per month at the rate of 2 dirhams. The employed poor are obligated to pay twelve dirhams, in each month paying only one dirham, as stipulated in Fath al-Qadir, al-Hidayah, and al-Kafi. (The scholars) address the meaning of “gainfully employed”, and the correct meaning is that it refers to one who has the capacity to work, even if his profession is not noble. The scholars also address the meaning of wealthy, poor, and the middle group. Al-Shaykh al-Imam Abu Ja‘far, may Allah the most high have mercy on him, considered the custom of each region decisive as to whom the people considered in their land to be poor, of the middle group, or rich. This is as such, and it is the most correct view, as stated in al-Muhit. Al-Karakhi says that the poor person is one who owns two hundred dirhams or less, while the middle group owns more than two hundred and up to ten thousand dirhams, and the wealthy (are those) who own more than ten thousand dirhams…The support for this, according to al-Karakhi is provided by the fatawa of Qadi Khan (d. 592/1196). It is necessary that in the case of the employed person, he must have good health for most of the year, as is stated in al-Hidayah. It is mentioned in al-Idah that if a dhimmi is ill for the entire year such that he cannot work and he is well off, he is not obligated to pay the jizyah, and likewise if he is sick for half of the year or more. If he quits his work while having the capacity (to work) he (is still liable) as one gainfully employed, as is [stated in] al-Nihayah. No jizyah is imposed upon their women, children, ill persons or the blind, or likewise on the paraplegic, the very old, or on the unemployed poor, as is stated in al-Hidayah.

http://en.wikipedia.org/wiki/Aurangzeb

அன்புக்குரிய நண்பர்களே, இன்றைக்கு நம்முடைய சகோதரர்களாக உள்ள அப்பாவி இஸ்லாமியர்களுக்கும்,  அவுரங்கசீப் போட்ட ஜிசியா வரி கொடுமைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  இன்றைக்கு ரிக்ஷா வலிக்கும்,  துணி விற்கும்… இப்படி பல தொழில் செய்யும்  இஸ்லாமியர் ஒவ்வொருவரையும் அன்புடன் நோக்குவதே நமது பண்பாகும். அவர்கள் நமது சகோதரர்களே, அவர்களில் பலருக்கு இந்த ஜிசியா பற்றி எல்லாம் தெரியக் கூடத் தெரியாது.

நாம் விரும்புவது என்னவென்றால், நம்முடைய இஸ்லாமிய  சகோதர்கள் அக்பரைப் போல முற்போக்கு சிந்தனையும், பரந்த மனப் பான்மையும், மத சகிப்புத் தன்மையும், மத நல்லிணக்கமும் உடையவராக இருக்க வேண்டும், மத அடிப்படையிலான  அடக்கு முறைகள்,மனிதத்துக்கு விரோதமானவை என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எதை எல்லாம் எழுதுகிறோம்.

எல்லாம் சரிதான் போய்யா என்று சொல்லி விட்டு மத அடிப்படை வாத காட்டு மிராண்டிதனத்தை மீண்டும் நிலை நிறுத்த இப்போதும் முயலும் சக்திகளின் பிடியில் இருந்து அப்பாவிகளை மீட்பது அவசியம் ஆகும்.

ஒவ்வொரு இந்தியனும், சக இந்தியரை நல்லெண்ணத்துடன் நோக்கி அவருக்கு உதவி செய்யவே முயலுவோம். எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு இந்தியர் இன்னொரு இந்தியரை காக்கவே முயல வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் , இன்னொரு மனிதனைக் காக்கவே முயல வேண்டும் என்பது நம்முடைய மனப்பூர்வமான கோட்பாடு. இதில் நாம் உறுதியாக இருக்கிறோம்

Advertisements

25 Responses to "அவுரங்கசீப் ஆட்சியில் கட்டாய மத மாற்றம் நடந்ததா?ஏழை திம்மிகள் மீது சுமத்தப்பட்ட கட்டாய மத வரி!"

//அவர்களில் பலருக்கு இந்த ஜிசியா பற்றி எல்லாம் தெரியக் கூடத் தெரியாது// ஐயோ பாவம்.

ராம், உங்களின் வருகை மகிழ்ச்சி தருகிறது. படிப்பறிவற்ற பல இஸ்லாமிய சகோதர சகோதரிகள் இந்த ஜிசியா போன்றவற்றைப் பற்றி அறிந்திருப்பார்களா?

//படிப்பறிவற்ற பல இஸ்லாமிய சகோதர சகோதரிகள் இந்த ஜிசியா போன்றவற்றைப் பற்றி அறிந்திருப்பார்களா?// படிப்பறிவற்ற இந்துக்களின் பலருக்கே இவை பற்றி தெரிந்திருக்கும் போது இஸ்லாமியர்களுக்கு தெரியாமல் இருக்குமா?

சரியடி ராம்…

http://vanjoor-vanjoor.blogspot.com

Dear Truchikkaaran Sir, Please publish this

CLICK TO READ


அவுரங்கசீப்…. ? !!! இந்து மத்தினர் மீது விதித்த ( ஜஸியா ) வரி.


ஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா? கண்காட்சி பெயரால் மதவெறி!

வாஞ்சூர்,

“‘இவைரை மிஞ்சிய சிறந்த ஆட்சியாளர் எவருமில்லை ‘ என்று புகழ்பாடுபவர்களும் உண்டு. (வந்தார்கள் வென்றார்கள் – மதன் P.167)” என்று வந்தார்கள் வென்றார்கள் என்ற புத்தகத்தில் இருந்து எடுத்து சொல்லியுள்ளீர்கள். அந்த புத்தகத்தில் இருக்கும் மற்ற விஷயங்களை பற்றியும் பகிர்ந்தால் நன்று 🙂

அன்புக்குரிய திரு. வாஞ்சூர் அவர்களே,

அஸ்ஸலாமு அலைக்கும், உங்களை வரவேற்கிறோம்.

//ஜஸ்யா வரி குடுத்து இந்துக் குலமே போண்டியாகி விட்டது என்று நீலிக் கண்ணீர் வடிப்பவர்களுக்கு விளக்கம் சொல்வதும் வீண்//

என்று எழுதி உள்ளீர்கள்!

ஏழை திம்மிகளின் மீது விதிக்கப் பட்ட கட்டாய கொடுங்கோல் மத வெறி வரியின் கொடுமையை உணராமல் நீலிக் கண்ணீர் என்று எழுதுவது எந்த அளவுக்கு சரி என எண்ணிப் பாருங்கள். அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் பற்றி எழுதுவது உங்களுக்கு நீலிக் கண்ணீராக இருக்கிறது, இதுதான் மனித நேயமா? மனித நேயம் என்பது அவரங்கசீப் மீது உள்ள பற்றின் காரணமாக சுருங்கி விடுமா?

ஜகாத் வரி என்பதை முஸ்லீம்களின் மீது கடமையாக விதித்து இருந்தனர் இந்துக்களுக்கு ஜிசியா வரி, முஸ்லீம்களுக்கு ஜகாத் வரி, இதில என்ன இருக்கு, என்பது போல எழுதுகிறீர்கள்.

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய வாஞ்சூர் அவர்களே, நீங்கள் இப்படி எழுதியது சரியா என்று மீண்டும் ஒரு முறை சிந்தித்து பாருங்கள். அவரங்கசீபை நல்லவராக சித்தரிக்கும் அவசரத்தில் இஸ்லாத்தின் கோட்பாடுகளை இடறி விடுவது போல உங்களுக்கு தோன்றவில்லை?

பணக்கார முஸ்லீம்கள தங்கள் சொத்தில் பத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்பதுதானே ஜகாத். இது சரியா இல்லையா. இது கட்டாயமா என்பது வேறு விடயம்.

ஆனால் வசதி படைத்த முஸ்லீம்கள் தங்கள் சொத்தில் ஒரு பங்கை ஏழை முஸ்லீமுக்காக தர வேண்டும். அந்த சொத்து, பணம் ஏழைகளுக்கு பங்கிட்டு தரப்பட வேண்டும். இது சரியா இல்லையா?

இந்த நிலையில் ஏழை முஸ்லீம்கள் மீது கட்டயாமாக ஜகாத் வரி விதிக்கப் பட்டதா? அவரங்கசீப் ஏழை முஸ்லீம்கள் மீது கட்டாய ஜகாத் வரி விதித்தரா? உலகில் எந்த ஒரு இஸ்லாமிய அரசும் ஏழை முஸ்லீம்கள மீது கட்டாயமாக ஜகாத் வரி விதித்ததாக சரித்திரம் இல்லை, எனக்குத் தெரிந்த அளவில் இல்லை.
ஆனால் ஏழை திம்மிகள் மீது கட்டாயமாக ஜிஸியா வரி விதிக்கப் பட்டுள்ளது. இதை வசதியாக மறைத்து விட்டீர்கள்
.

ஏழை முஸ்லீம் மீது ஜகாத் என்பது கட்டாய வரியாக விதிக்கப் பட்டது என்பதாக அவுரங்கசீப் கால வரலாற்றில் ஒரு சிறு குறிப்பு கூட இல்லை. எந்த ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளரும், ஏழை திம்மிக்கு விதிக்கப் பட்ட கட்டாய மத வரியைப் போல,அவ்ரங்கசீப் ஆட்சிக் காலத்தில் ஏழை இஸ்லாமியருக்கு சகாத் வரி விதிக்கப் பட்டதாக எழுதவில்லை என்பதை முக்கியமாக சொல்ல விரும்புகிறோம்.

எப்பொழுதெல்லாம் கட்டாய மத வரியான ஜிசியாவைப் பற்றி எழுதினாலும் உடனே அதை சமாளிக்கும் விதமாக சகாத் பற்றி பலரும் எழுதுகிறார்கள். ஜகாத் பற்றி எல்லோருக்கும் தெரியாது என்று நினைத்து விட்டார்களா, அல்லது அவர்களே ஜகாத் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா என்பது நமக்கு தெரியாது.

ஒரு திர்ஹாம் தானே என்று எள்ளி நகையாடுகிரீர்கள், அது என்ன பெரிய தொகையா என்று கேட்கிறீர்கள். மொத்த சொத்தே இருநூறு திர்ஹாம் மட்டுமே உள்ள ஒரு ஏழை திம்மி வருடம் 12 திர்ஹாம் கட்ட வேண்டும். அதுவும் கட்டாய வரி, மறுத்தால் தண்டனை. திம்மியாக இல்லாமல் மதம் மாறி விட்டால் வரி கட்ட வேண்டாம். மனித நேயம், நீதி, நியாயம் ஆகியவற்றை மனதின் மேற்பரப்புக்கு கொண்டு வந்து , உங்கள் மனசாட்சியைத் தொட்டு இந்தக் கொடுமையை நியாயப் படுத்துவது சரியா என்று எண்ணிப் பாருங்கள்!

நண்பர் வாஞ்சூர்,(காரைக்கால் பார்டர் (எல்லையில்) உள்ள ஊர் தானே)
அவர்களே நீங்கள் அவுரங்கசிப் புகழ்பாட விரும்புகிறீர்கள் போல உள்ளது. அவருடைய ஜிசிய வரியை இல்லை என்று உங்களால் கூறமுடியுமா? எவ்வளவு சிறந்த ஆட்சியாளராக இருந்தாலும் மக்களை மதத்தின் பெயரால் கொடுமை படுத்திய ஒருவரை எப்படி புகழ் பாட உங்களுக்கெல்லாம் மனம் வருகிறது.இதிலிருந்தே நீங்கள் அவுரங்கசிப் போல எப்படியாவது இங்கு எல்லோரையும் மதம் மாற்றும் எண்ணம் கொண்டவர் என்பது வெளிபடுகிறது.
யாருக்கு தெரியும் உங்கள் முன்னோர் கூட இந்த ஜிசிய நிர்பந்தத்தால் மதம் மாறியவராக இருக்கலாம்.
உங்கள் வீடும் நாடும் இந்த பாரத தேசம், நீங்களும் ஒரு இந்திய பரம்பரை என்பதை மறக்கவேண்டாம்,நம் முன்னோர்கள் பிற நாட்டு மன்னனிடம் பட்ட வேதனையை உணர்ந்து கொள்ளவாவது முயலுங்கள்.உங்களின் மதத்தை இங்கு குறை சொல்லவில்லை சில மனிதர்களின் சகிப்பு தன்மையற்ற செயல்களைத்தான் குறிப்பிடபடுகிறது.
தயவு செய்து இனிமேலாவது மனசாட்சியுடன் எழுதுங்கள்.ராஜபுத்திர வீரன் பிரிதிவி ராஜனின் நியாயமான போர் தர்மமே இந்த நிலைக்கு காரணம் என்பது உங்களுக்கு தெரிந்தாலும் நீங்கள் ஒப்புகொள்ள போவது இல்லை.நம் முப்பாட்டன் ராஜேந்திர சோழன் சிந்து நதியை கடந்திருந்தாலும் இந்த நிலை வந்திருக்க போவதில்லை.

அன்புக்குரிய திரு. வாஞ்சூர் அவர்களே,

மீண்டும் உங்களை வரவேற்கிறோம். அஸ்ஸலாம் அலைக்கும்!

நாம் முந்தைய பின்னூட்டத்தில் விளக்கிய முக்கிய கருத்துக்கு சரியான பதிலை தரவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

அவரங்கசீப் முஸ்லீம்களிடம் இருந்து மட்டும் வரி விதித்து நாட்டை ஆண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லையே.

இந்து முஸ்லீம் , சீக்கியர் என்ற வேறுபாடில்லாமல் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவன் வருமானத்துக்கு ஏற்ப வரி என்று அவரங்கசீபார் ஆணை இட்டு இருந்தால் அதை யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை.

பணக்கார திம்மிகோ, பணக்கார முஸ்லீமுக்கோ அவரங்க சீப் வரி விதித்தால், அதில் நாம் அதிகம் குறை சொல்ல ஒன்றும் இல்லை, அது கூட பணக்கார முஸ்லீம், பணக்கார திம்மி என்கிற வேறுபாடில்லாமல் குடி மகனுக்கு இவ்வளவு வரி என்று விதிக்க வேண்டும்.

அவ்ரங்கசீப் ஏழை திம்மி மீது கட்டாய மத வரியை விதித்து இருக்கிறார். அந்த ஏழை திம்மி வரி கட்ட முடியாவிட்டால் தண்டனை பெற வேண்டும், இல்லை கசை அடியை , சிறை வாசக் கொடுமையை பொறுக்காமல் மதம் மாற வேண்டும்.

ஏனெனில் ஏழை திம்மி மதம் மாறி விட்டால் ஜிசியா வரி கட்ட வேண்டியதில்லை. இவ்வளவு தெளிவாக சொல்லி இருக்கிறோம். ஆனாலும் மத அடிப்படையிலான கொடுங்கோல் அடக்குமுறை கட்டாய மத வரியை ஆதரித்து, ஏழை திம்மிகள் பட்ட அவலத்தை கண்டுகொள்ளாமல் போய்யா என்று சொல்லும் வகையில் உங்கள் கருத்து இருக்கிறது.

மத ரீதியிலான அடக்குமுறை யை, அச்சுறுத்தலை , கசக்கி பிழியும் கொடுமைகளை சப்பைக் கட்டு கட்டி ஆதரிக்கும் வகையிலேயேஉங்கள் கருத்துக்கள் அமைந்து உள்ளன.

அன்புக்குரிய திரு. வாஞ்சூர் அவர்களே,

அஸ்ஸலாமு அலைக்கும், உங்களை வரவேற்கிறோம்.

//ஜஸ்யா வரி குடுத்து இந்துக் குலமே போண்டியாகி விட்டது என்று நீலிக் கண்ணீர் வடிப்பவர்களுக்கு விளக்கம் சொல்வதும் வீண்//

என்று எழுதி உள்ளீர்கள்!

ஏழை திம்மிகளின் மீது விதிக்கப் பட்ட கட்டாய கொடுங்கோல் மத வெறி வரியின் கொடுமையை உணராமல் நீலிக் கண்ணீர் என்று எழுதுவது எந்த அளவுக்கு சரி என எண்ணிப் பாருங்கள். அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் பற்றி எழுதுவது உங்களுக்கு நீலிக் கண்ணீராக இருக்கிறது, இதுதான் மனித நேயமா? மனித நேயம் என்பது அவரங்கசீப் மீது உள்ள பற்றின் காரணமாக சுருங்கி விடுமா?

ஜகாத் வரி என்பதை முஸ்லீம்களின் மீது கடமையாக விதித்து இருந்தனர் இந்துக்களுக்கு ஜிசியா வரி, முஸ்லீம்களுக்கு ஜகாத் வரி, இதில என்ன இருக்கு, என்பது போல எழுதுகிறீர்கள்.

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய வாஞ்சூர் அவர்களே, நீங்கள் இப்படி எழுதியது சரியா என்று மீண்டும் ஒரு முறை சிந்தித்து பாருங்கள். அவரங்கசீபை நல்லவராக சித்தரிக்கும் அவசரத்தில் இஸ்லாத்தின் கோட்பாடுகளை இடறி விடுவது போல உங்களுக்கு தோன்றவில்லை?

பணக்கார முஸ்லீம்கள தங்கள் சொத்தில் பத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்பதுதானே ஜகாத். இது சரியா இல்லையா. இது கட்டாயமா என்பது வேறு விடயம்.

ஆனால் வசதி படைத்த முஸ்லீம்கள் தங்கள் சொத்தில் ஒரு பங்கை ஏழை முஸ்லீமுக்காக தர வேண்டும். அந்த சொத்து, பணம் ஏழைகளுக்கு பங்கிட்டு தரப்பட வேண்டும். இது சரியா இல்லையா?

இந்த நிலையில் ஏழை முஸ்லீம்கள் மீது கட்டயாமாக ஜகாத் வரி விதிக்கப் பட்டதா? அவரங்கசீப் ஏழை முஸ்லீம்கள் மீது கட்டாய ஜகாத் வரி விதித்தரா? உலகில் எந்த ஒரு இஸ்லாமிய அரசும் ஏழை முஸ்லீம்கள மீது கட்டாயமாக ஜகாத் வரி விதித்ததாக சரித்திரம் இல்லை, எனக்குத் தெரிந்த அளவில் இல்லை.
ஆனால் ஏழை திம்மிகள் மீது கட்டாயமாக ஜிஸியா வரி விதிக்கப் பட்டுள்ளது. இதை வசதியாக மறைத்து விட்டீர்கள்.

ஏழை முஸ்லீம் மீது ஜகாத் என்பது கட்டாய வரியாக விதிக்கப் பட்டது என்பதாக அவுரங்கசீப் கால வரலாற்றில் ஒரு சிறு குறிப்பு கூட இல்லை. எந்த ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளரும், ஏழை திம்மிக்கு விதிக்கப் பட்ட கட்டாய மத வரியைப் போல,அவ்ரங்கசீப் ஆட்சிக் காலத்தில் ஏழை இஸ்லாமியருக்கு சகாத் வரி விதிக்கப் பட்டதாக எழுதவில்லை என்பதை முக்கியமாக சொல்ல விரும்புகிறோம்.

எப்பொழுதெல்லாம் கட்டாய மத வரியான ஜிசியாவைப் பற்றி எழுதினாலும் உடனே அதை சமாளிக்கும் விதமாக சகாத் பற்றி பலரும் எழுதுகிறார்கள். ஜகாத் பற்றி எல்லோருக்கும் தெரியாது என்று நினைத்து விட்டார்களா, அல்லது அவர்களே ஜகாத் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா என்பது நமக்கு தெரியாது.

ஒரு திர்ஹாம் தானே என்று எள்ளி நகையாடுகிரீர்கள், அது என்ன பெரிய தொகையா என்று கேட்கிறீர்கள். மொத்த சொத்தே இருநூறு திர்ஹாம் மட்டுமே உள்ள ஒரு ஏழை திம்மி வருடம் 12 திர்ஹாம் கட்ட வேண்டும். அதுவும் கட்டாய வரி, மறுத்தால் தண்டனை. திம்மியாக இல்லாமல் மதம் மாறி விட்டால் வரி கட்ட வேண்டாம். மனித நேயம், நீதி, நியாயம் ஆகியவற்றை மனதின் மேற்பரப்புக்கு கொண்டு வந்து , உங்கள் மனசாட்சியைத் தொட்டு இந்தக் கொடுமையை நியாயப் படுத்துவது சரியா என்று எண்ணிப் பாருங்கள்

இந்து மக்களையும் இந்து மதத்தையும் காப்பற்றியவரே அவுரங்கசிப் தான்
இன்று எதாவது மத வரி உள்ளதா? சராசரி வீட்டு வரி, வணிகவரி ,சொத்துவரி,தொழில்வரி,சாலைவரி, விற்பனை வரி போன்ற நியாயமான எல்லோருக்கும் பொதுவான வரிகளை தவிர இந்த இந்த மதத்தினர் இவ்வளவு இவ்வளவு வரி தர வேண்டும் இதை வைத்துதான் அரசு நடத்தவேண்டும் என்று சொல்கிறார்களா? நீர்வளமும் நிலவளமும் இன்னும் மிகுந்து இருந்த அந்த காலத்தில் உடல் உழைப்பில் இன்னும் நம்மை விட பன்மடங்கு சிறந்து விளங்கிய மக்கள் வாழ்ந்த அந்த காலத்தில் விவசாயத்திலும் வாநிபத்திலும் இன்னும் சிறந்து விளங்கிய காலத்தில் எல்லா குடிமக்களுக்கும் பொதுவான சாதாரண வரிகளை கொண்டு அரசு நடத்த முடியாமல் இந்துக்களை காப்பாற்ற இவர் வரியை விதித்தாராம் என்ன சார் இது? .

அரசை சரிவர நடத்தமுடியாத நிர்வாக திறமையற்ற அரசரே புது புது வரிகளை கண்டுபிடித்து மக்கள் தலையில் விதிப்பார்கள் (23ஆம் புலிகேசி போன்றவர்கள்) அல்லது இது மத அடக்குமுறை வரி.
வரிச்சுமையை மக்கள் மேல் மத அடிப்படையில் மக்கள் மேல் திணித்த ஒரு அரசருக்கு வக்காலத்து வாங்குவது????

இஸ்லாமிய முறைப்படி இஸ்லாமிய நண்பர்களிடம் வாங்குவது நியாயமானதே.
இஸ்லாமியர் அல்லாதவருக்கு எதற்கு சார் இஸ்லாமிய சட்டப்படி வரி?
ஒன்று நிர்வாக திறமையின்மை அல்லது மத அடக்குமுறை வேறு என்ன?

அன்புக்குரிய திரு. சிவனடியான் அவர்களே,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

//இஸ்லாமிய முறைப்படி இஸ்லாமிய நண்பர்களிடம் வாங்குவது நியாயமானதே.//

நீங்கள் சொல்வது இஸ்லாமியர்கள் மட்டுமே வாழும் நாட்டிற்கு பொருந்தும். பல் மதத்தினரும் வாழும் நாட்டில் இது சரியாக வருமா?

இதிலே நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், ஒருவர் இந்துவோ, முஸ்லீமோ, சீக்கியரோ, கிறிஸ்தவரோ அரசாங்கம் அவர்களைக் குடி மகனாக மட்டுமே நோக்கி சமய வேறு பாடில்லாமல் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக வரி வசூலிக்க வேண்டும் என்கிற கோட்பாடு முக்கியம்.

மதக் காரணங்களுக்காக வரி விதிக்க வேண்டுமென்றால் அதை அந்த சர்ச்சோ, கோவிலோ, மசூதியோ , குருத்வாராவோ விதித்துக் கொள்ளட்டும். அதாவது அவர்கள் அந்த வழிபாட்டு தளத்துக்கு போக விரும்பினால் அவர்களின் சட்ட திட்டங்களின் படி நடக்க வேண்டும். வழி பாட்டு தளத்துக்கு போக விரும்பாதவனுக்கு எந்த வழி பாட்டு தளமும் வரி விதிக்க கூடாது. வரியே விதிக்காமல் வழிப்பட்டு தளம் நடத்துவது சிறந்தது. இப்போது இந்தியாவில் உள்ள பல கோவிலகளில் நுழையவோ, சாமி கும்பிடவோ கட்டணம் எதுவும் இல்லையே.

இயேசு கிறிஸ்து கூறிய ” இராயனுக்கு (அரசாங்கத்துக்கு) செலுத்த வேண்டியதை இராயனிடத்தும், ஆண்டவனுக்கு செலுத்த வேண்டியதை ஆண்டவனுக்கும் செலுத்துங்கள்” என்று சொன்னதை நினைவு கூர்கிறேன்.

இன்றுதான் உங்கள் பதிவுகளைப் பார்க்கும் வாய்ப்பு – இப்பதிவுக்கான பதில் பதிவின் மூலம் – தெரிந்து கொள்ள முடிந்தது. அப்பதிவிற்கு அதற்கான என் நன்றி.

நான் அங்கு 15 நிமிடங்களுக்கு முன் பின்னூட்டங்கள் இட்ட பின் இப்பதிவையும் பின்னூட்டங்களையும் பார்க்க முடிந்தது. நிறைய same blood!

அன்புக்குரிய திரு. Dharumi அவர்களே,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

Please visit our site regularly!

By the by, நிறைய same blood means?

ஜிஸ்யா வரியைப் பற்றிய மேலும் சில தகவல்கள்!
பேரரசர் அக்பரால் நீக்கப்பட்ட ஜெஸ்யா வரியை மீண்டும் கொண்டுவந்து இந்துக்களை துன்புறுத்தினான் அவுரங்கசீப் – இது ஒரு குற்றச்சாட்டு. ஜெஸ்யா வரி என்றால் என்ன ? இஸ்லாமிய ஆட்சியில் பாதுகாப்புக் கொடுக்கவேண்டிய மாற்று சமயத்தவர்களை ‘திம்மி ‘கள் என்று அழைக்கப்பட்டனர். அத்தகையவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக ஒரு வரி போடப்பட்டது. அதற்கு ஜெஸ்யா வரி என்று பெயர்.
அவுரங்கசீப் ஆட்சிக்கு வந்தது 1658. ஜெஸ்யா வரி போடப்பட்டது ஆட்சிக்கு வந்து 22 வருடம் கழித்து அதாவது 1679 ல். அவர் ஆட்சிக்கு வந்தவுடனேயே 80 க்கும்மேற்பட்ட வரிகளை நீக்கியிருக்கிறார். அவைகளில் சில: கங்கையில் புனித நீராட போடப்பட்டிருந்த வரி நீக்கப் பட்டது; அஸ்தியை கங்கையில் கரைக்கப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; மீன், காய்கறி போன்ற உணவுப்பொருள்களுக்குப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; சாலை வரி, தொழில் வரி, ஆடுமாடு மேய்ச்சல் வரி, விற்பனை வரி போன்றவைகள் நீக்கப்பட்டன; தீபாவளியின்போது செய்யப்படும் தீப அலங்கார வரி, முஸ்லிம்களின் பராஅத் இரவு செய்யப்படும் தீப அலங்கார வரி நீக்கப்பட்டன; விதவைகள் மறுமண வரி நீக்கப்பட்டது இப்படி 80 வகையான வரிகள் நீக்கப்பட்டன.
இத்தனை வரிகளை நீக்கியவர் ஜஸ்யா வரியை ஏன் போடவேண்டும் ? இதை ‘கரைகண்டம் கி. நெடுஞ்செழியன் ‘ சொல்வதை பார்ப்போம். ‘அதுவும் அவர் ஆட்சிக்கு வந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி. 1679 ல் ஜெஸ்யா வரியை விதிக்க முடிவு செய்தார். அதே நேரத்தில் ஏழைகள், பெண்கள், குழந்தைகள், உடல் ஊனமுற்றோர், அரசு பணியில் உள்ளோர், வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்வோர் என எண்ணற்றோர் இந்த வரியிலிருந்து விலக்குப் பெற்றனர். மொத்தத்தில் இந்த வரியைச் செலுத்தியவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன ‘ ‘.
‘இந்த வரி விதிப்பானது இஸ்லாமியர் அல்லாதோர் இஸ்லாமியராக மதம் மாறவேண்டும் என்ற நிர்பந்தத்திற்காகவோ, இஸ்லாத்தை இந்த வரிவிதிப்பின் மூலம் நாடு முழுவதும் பரப்பிவிடலாம் என்ற ஆசையினாலோ ஒளரங்கஜேப் இந்த வரிவிதிப்பை அமுல்படுத்தவில்லை. ஆனால் இந்த வரிவிதிப்பின் மூலம் அரசியல் ரீதியாகத் தன்னை எதிர்த்து கிளர்ச்சி செய்து வந்த தக்கான சுல்தான்களைத் திருப்தி படுத்திவிடலாம் என்று ஒளரங்கஜேப் ஒரு அரசியல் கணக்கைப் போட்டார் என்கிறார் பேராசிரியர் சதீஸ் சந்திரா. ‘ (முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்).
பொருளாதார சீர்திருத்தத்திற்காவே ஜெஸ்யா வரி விதிக்கப்பட்டதாகவும் 1705 ம் ஆண்டு இந்த வரியினை அவுரங்கசீப் அடியோடு நீக்கிவிட்டார் என்றும் இந்திய சரித்திரத்தில் மாற்றம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக முதன் முதலில் எழுதிய சர் எலியட் என்ற ஆங்கிலேயே வரலாற்றாசிரியர் கூறுகிறார்.
இந்த வரி யாருக்கு எப்படி போடப்பட்டது ?
எல்லா செலவுகளும் போக ஆண்டொன்றுக்கு வருமானத்தில் ரூபாய் 52 மிஞ்சினால் அதற்கு வரி ரூ.3/4. ரூபாய் 250 மிஞ்சினால் வரி ரூ61/2. ரூபாய் 2500 மிஞ்சினால் வரி ரூ 13. அதற்குமேல் வரி இல்லை. இதை நடுத்தர வர்க்கமாக இருந்தால் இரண்டு தவணைகளிலும் சாதாரண வர்க்கமாக இருந்தால் மூன்று தவணைகளிலும் செலுத்தலாம்.
வரி விலக்கு அளிக்கப்பட்டவர்கள்:
ஆறு மாதங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவருக்கு வரி இல்லை; உழவருக்கு வரி இல்லை; தச்சருக்கு வரி இல்லை; பொற்கொல்லருக்கு வரி இல்லை; கருமாருக்கு வரி இல்லை; கொத்தனாருக்கு வரி இல்லை; கூலி வேலை செய்பவருக்கு வரி இல்லை; அரசாங்க ஊழியருக்கு வரி இல்ல அவர் எந்த பதவியில் இருந்தாலும்; அர்ச்சகர், புரோகிதர், துறவிகள் இவர்களுக்கு வரி இல்லை. (அப்போதெல்லாம் டை கட்டிக்கொண்டு ஆபிஸிலும் பேங்கிலும் உத்தியோகம் பார்க்காத காலம்)
அப்படியானால் வரி வசூலித்தது எவ்வளவு ? ஒரு புள்ளி விபரம்:
1680-81 ம் ஆண்டில் பாதுஷாபூர் என்ற பட்டணத்தில் வாழ்ந்த மக்களின் முஸ்லிம் அல்லாதோர் எண்ணிக்கை 1855. அதில் வரி விலக்கு அளிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 1320. வரி அளித்தவர்கள் 535 பேர் மட்டுமே. வசூலிக்கப்பட்ட மொத்தத் தொகை ரூபாய் 2950.

யார் பாது காப்பு அளிப்பது. கொடுங்கோலனிடம் இருந்துதான் மக்கள் பாதுகாப்பு தேடி தவித்து உள்ளனர்.

ஏழை திம்மிகளுக்கு மட்டும் தான் பாது காப்பு தேவையா? திம்மி அல்லாதவருக்கு ஏன் பாதுகாப்பு வரி இல்லை.

தீபாவளி அலங்கார விளக்குக்கு வரி விளக்கு அளிக்கப் பட்டது, அஸ்தியை கங்கையில் கரைக்க போடப் பட்ட வரி நீக்கப் பட்டது,,, என்று எல்லாம் ரெட்டியார் பாளையத்துக்கு வழி எப்படி என்றால், கொட்டைப் பாக்கு எட்டணா எகிற ரீதியில் பதில் சொல்கிறீர்கள்.

மத அடிப்படையிலான வரிதான். கட்டிட்டுப் போப்பா என்கிற ரீதியிலே உங்க கருத்து உள்ளது. கொடுங்கோல் ஆட்சியை ஆதரிக்க இவ்வளவு ஆர்வம் காட்டும் போது மக்களின் நியாயத்துக்காக எழுதுவோர் வாளா இருப்பாரா?

உலகிலேயே அதிக செல்வம் உடைய கஜானாவை வைத்து இருந்திருக்கிறார் அவ்ரங்கக்சீப். ஆனாலும் அந்தப் பணம் எல்லாம் தொடர்ந்த போர்களில் செலவாகி இட்டது. விரைவில் பட்டியல் வெளியாகும்.

//ஆறு மாதங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவருக்கு வரி இல்லை;//அடேயப்பா, எவ்வளவு கருணை.

வெறுமனே முஸ்லீம்களிடம் இருந்து மட்டும் வரி விதிக்க முடியுமா என்று சொல்லுகின்றனர். அவரங்கசீப் முஸ்லீம்களிடம் இருந்து மட்டும் வரி விதித்து நாட்டை ஆண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லையே.

இந்து, முஸ்லீம் , சீக்கியர் என்ற வேறுபாடில்லாமல் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவன் வருமானத்துக்கு ஏற்ப வரி என்று அவரங்கசீபார் ஆணை இட்டு இருந்தால் அதை யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை.

பணக்கார திம்மிகோ, பணக்கார முஸ்லீமுக்கோ அவரங்கசீப் வரி விதித்தால், அதில் நாம் அதிகம் குறை சொல்ல ஒன்றும் இல்லை, அது கூட பணக்கார முஸ்லீம், பணக்கார திம்மி என்கிற வேறுபாடில்லாமல் குடிமகனுக்கு இவ்வளவு வரி என்று விதிக்க வேண்டும்.

அவ்ரங்கசீப் ஏழை திம்மி மீது கட்டாய மத வரியை விதித்து இருக்கிறார். அந்த ஏழை திம்மி வரி கட்ட முடியாவிட்டால் தண்டனை பெற வேண்டும், இல்லை கசை அடியை , சிறை வாசக் கொடுமையை பொறுக்காமல் மதம் மாற வேண்டும்!ஏனெனில் ஏழை திம்மி மதம் மாறி விட்டால் ஜிசியா வரி கட்ட வேண்டியதில்லை.

ஆனாலும் மத அடிப்படையிலான கொடுங்கோல் அடக்குமுறை கட்டாய மத வரியை ஆதரித்து, ஏழை திம்மிகள் பட்ட அவலத்தை கண்டுகொள்ளாமல் போய்யா, என்று சொல்லும் வகையில், மத ரீதியிலான அடக்குமுறையை, அச்சுறுத்தலை, கசக்கி பிழியும் கொடுமைகளை சப்பைக் கட்டு கட்டி ஆதரிக்கும் வகையிலேயே அவரங்க சீப் ஆதரவாளர்களின் கருத்துக்கள் அமைந்து உள்ளன!

//Please visit our site regularly!// இது பலர் நடத்தும் பதிவா?

the by, நிறைய same blood means?// = நிறைய ஒத்தக் கருத்துக்கள்

நம் நாட்டைப் படையெடுத்து நம்மைச் சுரண்டிய, ‘அடிமைப்படுத்திய’ அன்னியர்களுக்கு ஏனிந்த வக்காலத்து?

இதையும் பாருங்கள்.

அன்புக்குரிய திரு தருமி ஐயா அவர்களே,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

இந்த தளத்தைப் பலர் பதிவு இடும் தளமாக நடத்த வேண்டும் என்பதே என்னுடிய அவா. நண்பர்கள் பலரிடம் கட்டுரைகளை அனுப்புமாறு கோரி வருகிறேன். நம்முடைய அன்புக்குரிய நண்பர் திரு. தனபால் அவரகள் இட்ட ஒரு பின்னூட்டத்தை யே கட்டுரையாக வெளி இட்டு இருக்கிறோம் என்பதை தவிர வேறு எதையும் காட்ட இயலாது. பிற மதங்களின் வழிபாட்டு முறைகளின் மீது வெறுப்புணர்ச்சி காட்டாத வகையில் , பிற மத தெய்வங்களை இகழாத வகையில், இன, மத, மொழி, சாதீய, பிராந்திய , பாலிய அடிப்படையில் யாரையும் வெறுக்காத வகையில் மக்களின் சிந்தனைகளை, எண்ணங்களை மேம்படுத்தி சமத்துவத்தில் அவர்களை இணைத்து நாகரிக சமுதாயம் அமைக்கும் படிக்கான கட்டுரைகளை நண்பர்கள் அனைவரிடம் இருந்தும் வரவேற்கிறோம்.

இன்றுதான் உங்கள் தளத்துக்கு சென்று படித்தேன், நீங்கள் எங்களைவிட சீனியர் பதிவர், பல சிறந்த படைப்புகளை வெளியிட்டு உள்ளதாக அறிகிறேன். நீங்கள் உங்கள் கட்டுரைகளை நம்முடைய தளத்துக்கு அனுப்புமாறு கோருகிறோம்.

திரு சுவனப்பிரியன் அவர்களே,

///கங்கையில் புனித நீராட போடப்பட்டிருந்த வரி நீக்கப் பட்டது; அஸ்தியை கங்கையில் கரைக்கப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; ……………………….

ஆடுமாடு மேய்ச்சல் வரி, விற்பனை வரி போன்றவைகள் நீக்கப்பட்டன; தீபாவளியின்போது செய்யப்படும் தீப அலங்கார வரி, முஸ்லிம்களின் பராஅத் இரவு செய்யப்படும் தீப அலங்கார வரி நீக்கப்பட்டன; விதவைகள் மறுமண வரி நீக்கப்பட்டது இப்படி 80 வகையான வரிகள் நீக்கப்பட்டன.///

அடக் கொடுமையே ?! இதற்க்கெல்லாம் வரிபோட்டவர்களா இந்த இஸ்லாமிய மன்னர்கள்??? இவைகளெல்லாம் ஒரு வரிகள் என்று இவைகளை நீக்கியதற்கு பெருமை வேற……

ஆமாம் இந்த வரிகளைப் போட்ட அந்த சரித்திரப் புகழ் பெற்ற புண்ணியவாளன்!!! யார்????
தெரிந்து கொள்ள ஆசை.

மிக்க நன்றி.
வேண்டிய, விரும்பிய பதிவுகளை நீங்களே கூட எடுத்துப் போட்டுக்கொள்ளலாம்.

வணக்கம். வரிவிதிப்பதில் எல்லா மன்னர்களும் ஒரேமாதிரித்தான்.பத்மநாப கோவிலில் மூன்று லட்சம் கோடி மதிப்பில் நகைகள் உள்ளனவே அவை எப்படி வந்தன ? பெண்களின் மார்பு பெரிதாக இருந்தால் (தாழ்த்தப் பட்டமக்களுக்கு) அதற்கு வரி போட்ட மேதைகள்தான் திருவாங்கூர் மன்னர்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: