Thiruchchikkaaran's Blog

விட்டலாச்சார்யா டைப் கதைகளை எல்லாம், நவீன சிந்தனையாளர் சங்கராச்சாரியார் பேரால் பரப்புவது சரியா?

Posted on: January 30, 2011


“நவீன இந்து மதத்தை ஸ்தாபித்தவர் ஆதி சங்கரர்”  என்று, ஆறாம் வகுப்பு வரலாற்று பாடத்தில் குறிப்பிடப் பட்டு இருந்தது. அவ்வாறு சொல்லப்பட்டது ஏன் என எனக்கு அப்போது புரியவில்லை.

இந்து மதத்தில் பல மூட நம்பிக்கைகள் உள்ளன என்றும், அவற்றை கிண்டல் செய்து சொல்லி உள்ளதை பற்றியும் என் அண்ணனின் நண்பர்கள் பேசிக் கொள்வதைக் கேட்டு இருக்கிறேன்.

இது என்னாடா, இந்து மதத்தின் பேரால் சொல்லப் படும் கதைகளில் இவ்வளவு ஓட்டைகள் உள்ளன. வரலாற்று புத்தகத்திலோ, நவீன இந்து மதத்தைப் பரப்பியவர் என்று சங்கராச்சாரியார் பேரை போட்டு இருக்காங்களே, இதுல என்ன நவீனம் இருக்கு, என்று ஒரே குழப்பமாக இருக்கும்.

குறிப்பாக இந்த சூரிய, சந்திர கிரகணங்கள் பற்றி உள்ள கதைகளை கேட்கும் போது எனக்கு ஆர்வமாகவும் இருக்கும், சிரிப்பாகவும் இருக்கும்.

ராகு , கேது .. .ஆகிய இரண்டு பாம்பு தேவர்கள், சூரியன், சந்திரன் ஆகியோரை விழுங்க முயற்சி செய்வதாகவும், அதனால் சூரியனும் சந்திரனும் அவர்கள் வாய்க்குள் மறைந்து விடுவதாலும், அதனால் கிரகணம் எனப் படும் எக்லிப்ஸ் நடைபெறுவதாகவும் கதைகள் சொல்வார்கள்.

அறிவியல் பாடத்திலே நாம்  படிக்கிறோம், சூரியன் சந்திரன் பூமி ஆகியவை நேர் கோட்டில் வருவதால் சூரியனின் ஒளியை சந்திரன் மறைக்கிறது. அதனால் சூரியனை நாம் பார்க்க முடியவில்லை. சூரியனின் கிரகணங்கள் பூமியை  வந்தடையவில்லை. உண்மையில்  சூரியனுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதை எல்லாம்  நாம் இன்று தெரிந்து கொள்கிறோம்.

ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்னாள் வாழ்ந்தவர்கள் ராகு , கேது….. சூரியனைப் பிடிப்பதை….. அப்படியே ஒத்துக் கொண்டு இருந்திருக்கக் கூடும். ஏனெனில் அக் காலத்தில் வான்வெளி அறிவு வளர்ச்சி அடையவில்லை. பெரிய தொலை நோக்கி கருவிகள் இல்லை. எனவே அவர்களை கிண்டல் செய்வதில் அர்த்தம் இல்லை.

ஆனால் இன்றைக்கு நாம் அறிவியல் வளர்ச்சி அடைந்த காலத்திலேயே இதோ எல்லாம் தெரிந்து கொள்கிறோம். அதான் தெரிஞ்சு போச்சு இல்ல, இந்து மதமே சும்மா  கட்டுக் கதை தானே, இதிலே என்ன நவீன இந்து மதத்தை ஸ்தாபித்தவர் ஆதி சங்கரர் என்ற பில்ட் அப் எல்லாம் என்ற கேள்வி எழுகிறது  அல்லவா??

ஆனால் இந்த நவீன இந்து மத ஸ்தாபகர் என்ற வர்ணனையை வழங்கியது வரலாற்று அறிஞர்கள் தான் , நாம் அல்ல.

என்னய்யா இது, இது எப்படி நவீனமாகும்?  எப்படி என்றால் ஆதி சங்கரர் இந்த பாம்பு கதைகளை எல்லாம் லட்சியம் செய்யவே இல்லை,  அவற்றை உபன்யாசம் செய்யவோ, பிரச்சாரம் செய்யவும் இல்லை.

ஆதி சங்கரரின் தத்துவம் வாழ்க்கையில் உள்ள துன்பங்களையும், யாக்கை நிலையாமை பற்றியும் ஒருவன் சிந்தித்துப் பார்த்து , தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளும் பகுத்தறிவு வழியிலே அமைந்து இருக்கிறது.

தான் சிந்திக்காத, தான் அறிந்து கொள்ளாத, தானே நேருக்கு நேராக உணராத எந்த ஒன்றையும் சங்கராச்சாரியார் அறிக்கை செய்யவோ,  அங்கீகரிக்கவோ , பிரச்சாரம் செய்யவோ இல்லை.

எனவே கிட்டத்தட்ட 1300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருந்தும்,  வெறும் நம்பிக்கை அடிப்படையிலான இந்த பாம்பு விழுங்கும் கதைகளை எல்லாம் அப்படியே ஒதுக்கி விட்டு உண்மையான ஆன்மீகத்தை நோக்கி சென்று விட்டார்  ஆதி சங்கரர்.

உண்மையில் ஆன்மீகம் என்பது மனிதன் மனம், உயிர் – உடல் இறந்த பின் அந்த உயிர் தொடர்ந்து வாழ்கிறதா என்பது பற்றி எல்லாம் ஆராய்கிறது.

பூமி சூரியனை சுற்றுகிறதா , எக்லிப்ஸ் எப்படி உருவாகிறது என்பதைப் பற்றிய ஆய்வுக்காக ஆன்மீகம் உருவாக்கப் படவில்லை. பூமி சூரியன் பற்றிய ஆராச்சி எந்த  ளவுக்கு முக்கியமானதோ, அந்த அளவுக்கு முக்கியமானது, மனித உயிர் பற்றிய ஆராய்ச்சி, இன்னும் சொல்லப் போனால் பூமி , சூரியனை பற்றிய அறிவை விட தன்னுடைய உயிரின் ரகசியம் மனிதனுக்கு முக்கியமானது.

உடல் இறந்த பின், உடல் அழிந்த பின், உயிர் என்ற ஒன்று தொடர்ந்து இருக்குமானால்,  பூமி சூரியனை சுற்றினாலோ,  சூரியனை பூமி சுற்றினாலோ அதைப் பற்றிய அறிவு அவனுக்கு என்ன உதவி செய்யப் போகிறது?  மாறாக தன் உயிரை சவுகரியப் படுத்தும் அறிவே அவனுக்கு அப்போது உதவும்.  மனிதனுக்கு என்ன பாதிப்பு?!

எனவே ஆன்மீகம் என்பது ஒரு அறிவியலே. அது மனிதனின் உயிரின் ,மனதின் தன்மை, முன்னேற்றத்தை ஆராயும் அறிவியல்.

ஆன்மீகம் என்பது என்ன என்று ஆதி சங்கரர், புத்தர்…ஆகியோர் சரியாகப் புரிந்து கொண்டு இருந்தனர். எனவே பொழுது போக்கு கதைகளை எல்லாம் ஏற கட்டி விட்டு உண்மையான ஆன்மீகத்தைக் கையில் எடுத்தனர்.

அது மட்டுமல்ல, இந்திரன் சந்திரன் உள்ளிட்ட எந்த   தேவர்களையும்,  ஆதி சங்கரர், விவேகானந்தர் உள்ளிட்ட பகுத்தறிவு சிந்தனையாளர்கள் புகழவோ, லட்சியம் செய்யவோ, அவர்கள் தயவைக் கோரவோ இல்லை.  ஒரு மனிதன் தன்னை எது காக்கும், எது காக்காது என்பதை உணர்ந்து தன் மன நிலையை தானே உயர்த்தி உண்மையை  உணரும்  பகுத்தறிவுப்  பாதையையே முன் வைத்தனர் என்பது தெளிவு.

ஆனால் ஆதி சங்கரர் மறைந்த சிறிது காலத்திலேயே மீண்டும் பல்வேறு கதைகளையும் பரப்ப ஆரம்பித்தனர். எல்லா மதங்களிலும் இப்படிக் கதைகள உண்டு. அவை நீதி நெறிகளை விளக்கும் படியாகவும், பொழுது போக்கு காரணங்களுக்கவும் சொல்லப் படுகின்றன.

என்னுடைய நண்பர்கள்  பலரும் டி. வி .யில் ஜகன் மோகினி போன்ற படங்கள் போடும் போது அவற்றை ரசித்துப் பார்க்கின்றனர்.  அதிலே நகைச் சுவை நடிகர் ஒருவர் ஒரு அழகான பெண்ணைப் பார்த்து காதலிக்கஆசைப் படுவார். அந்த அழகான பெண்ணின் அருகில் அமர்ந்து ஆசையுடன் அணைத்துக்  கண்ணை மூடுவார். கண்ணைத் திறந்தால் அவரது அணைப்பிலே அழகான பெண்ணுக்குப் பதில்முழுதும் வெள்ளையாக தலைவிரி கோலமாக உள்ள குட்டிப் பிசாசு பயமுருத்தும். அதாவது குட்டிப் பிசாசு அழகான பெண் வடிவம் எடுத்து அவரை ஏமாற்றி விட்டதாம். அதைப் பார்த்து அவர் அலறி அடித்துக் கொண்டு ஓடுவார். குட்டையாக  வெள்ளை உடை அணிந்து தலை விரி கோலமாக உள்ள உருவம் அவரை துரத்தும். நண்பர்கள் இதைப் பார்த்து சிரிப்பார்கள். என்னப்பா இப்படி என்றால்… இதெல்லாம் சும்மா டயம் பாஸ், சின்ன வயசில இந்த படங்களை ரசித்துப் பார்ப்போம். மறு படியும் இதைப் பார்க்கும் போது நமக்கு சின்ன வயசு போல ஒரு உணர்வு என்பார்கள். அந்த குட்டிப் பிசாசு அடுப்பின் முன் உட்கார்ந்து  அடுப்புக்கு விற்காக தன்னுடைய காலையே எரித்து சமைப்பது போன்ற போஸ்டர்கள் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது என்று சொல்லலாம்.

ஆனால் விட்டலாச்சார்யா டைப் சினிமாக்கள் லாபத்துக்காக எடுக்கப் படுகின்றன. பாம்பு ராகு , சூரியனை விழுங்குவது போன்ற கதைகள் அக்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி இல்லாத நிலையில் மக்களின் அசம்சனாக அமைந்து விட்டவை.

ஆனால் சங்கராச்சாரியார் போன்றவர்கள பகுத்தறிவு அடிப்படையில் ஆன்மீகத்தை அணுகியவர்கள். சரியான இந்து மதத்தை கொண்டு வர முயற்சி செய்தவர்கள். ஆனால் சங்கராச்சாரியாருக்கு பின் வந்தவர்கள், இந்து மதத்தின் பேரால் சொல்லப் பட்டுள்ள பல்வேறு கதைகளுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் சங்கராச்சாரியர் பேரையே உபயோகப் படுத்தி, அவர் பெயரை ஒரு ஸ்டாம்ப் போல முத்திரை குத்த ஆரம்பித்து விட்டனர்.

இக்காலத்திலாவது அப்போக்கை கை விட்டு சங்கராச்சாரியாரை சரியாகப் புரிந்து கொண்டு பகுத்தறிவு அடிப்படையிலான ஆன்மீகப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதே நண்பர்களுக்கு நமது வேண்டு கோள்.

Advertisements

2 Responses to "விட்டலாச்சார்யா டைப் கதைகளை எல்லாம், நவீன சிந்தனையாளர் சங்கராச்சாரியார் பேரால் பரப்புவது சரியா?"

வணக்கம் திரு.திருச்சியாரே,
தாங்களும் தங்கள் குடும்பமும் நலம் என்று நம்புகிறேன். நெடுநாட்களாக தங்கள் தளத்தில் பதிய முடியவில்லை. அவ்வபோது நேரம் கிடைக்கும் போது தங்கள் தளத்தை எட்டி பார்ப்பதுண்டு.
உங்கள் கட்டுரைகளில் நிறைய ஆன்மீக(?) சிந்தனையாளர்களை பற்றி எழுதுகிறீர்கள். அவர்கள் பல ஆன்மீக ஆராய்ச்சி செய்ததாகவும் அவர்களை போற்றுகிறீர்கள். ஆனால், அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சியின் procedure என்ன? அந்த ஆராய்ச்சியின் முடிவு (conclusion ) என்ன என்று தெளிவாக்கபடவில்லை.
நானும், நீங்கள் இப்போது எழுதுவீர்கள், அப்போது எழுதுவீர்கள் என்று காத்திருந்தேன், ஆனால் அப்படி ஒன்று வரவே இல்லை.
விவேகானந்தரை பற்றி சில வரிகள், சங்கரரை பற்றி சில வரிகள், அக்பரை பற்றி சிலவரிகள் என்று சென்று கொண்டிருக்கிறது உங்கள் தளம். சுருங்க சொன்னால், நுனிப்புல் மேய்வது மாதிரி உள்ளது. நான் உங்களை குறை சொல்ல இதை எழுதவில்லை. உங்கள் கருத்து சரியில்லை என்று சண்டையிட வரவில்லை, உங்கள் கருத்தின் அடிப்படை என்ன என்று அறியவே ஆவலாய் உள்ளேன்.
அன்புடன்,
அசோக்

அன்புக்குரிய திரு. அசோக் அவர்களே,

உங்களின் அன்புக்கும் , விசாரிப்புக்கும் நன்றி.
நீங்களும் உங்களின் குடும்பமும் நலமாக இருக்க வாழ்த்துக்கள்.

ஒரு இடை வேளைக்குப் பிறகு தளத்துக்கு வருகை தந்து இருக்கிறீர்கள். உங்களை வரவேற்கிறோம்.

நம்முடைய தளத்தின் நோக்கமும், கொள்கையும் நாகரிக சமத்துவ நல்லிணக்க சமூதாயமே என்பதை நீங்கள் அறிவீர்கள். மக்களை நல்லெண்ணத்தில் இணைய செய்யவே நாம் விரும்புகிறோம். இதை அடைய நம் வழி மக்களின் சிந்தனையை தூண்டுவதும், அவர்களின் மனதில் அன்பை உருவாக்குவதும் ஆகும். எனவே பகுத்தறிவுக் கருத்துக்களை, மத நல்லிணக்கக் கருத்துக்களை ஒட்டி பல கட்டுரைகள் வெளியாகி வருகின்றன.

முக்கிய நல்லிணக்க கருத்துக்களை கூறிய செயல் படுத்தியவர்கள் என்கிற வகையில் சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, மகா அக்பர் … உள்ளிட்டோரை பற்றி கட்டுரைகளை வெளியிட்டு வருகிறோம். விட்டுக் கொடுக்கும், சமரசக் கருத்துக்களை கூறிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் நம்முடைய தளத்திலே எழுதி வருகிறோம். இதிலே மூட நம்பிக்கைகளை விலக்கி பகுத்தறிவு அடிப்படையிலான ஆன்மீக கருத்துக்களை சொல்லியவர்கள் என்ற வகையிலே சுவாமி விவேகானந்தர், ஆதி சங்கரர்… ஆகியோரைப் பற்றி எழுதி வருகிறோம். இதில் தொடர்ச்சியாக ஆதி சங்கரர் பற்றியோ, சுவாமி விவேகானந்தர் பற்றியோ…. கட்டுரைகள் வெளி வருவது இல்லை என்பது உண்மையே. ஆதி சங்கரரின் தத்துவங்களை விளக்கும் கட்டுரைகளை வெளியிட முயற்சி செய்வோம். நீங்கள் சொல்வது போல ஒருவரின் தத்துவங்களை முழுதாக அறிந்து கொள்ளாமல் அதைப் பற்றி ஒரு முடிவுக்கு வர இயலாது என்பது சரியே.

உங்களின் வருகைக்கு மீண்டும் நன்றி செலுத்துகிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: