Thiruchchikkaaran's Blog

வெளிநாட்டு வங்கியில் இந்தியர் சிலரால் கமுக்கமாக சேமிக்கப் பட்டுள்ள பணக் கணக்கை வெளியிட முடியாதாம் ! வெள்ளைக்காரருக்கு வாக்கு கொடுத்து இருக்கிறோம் என்று நொண்டிச் சாக்கு சொல்லி கொள்ளைகாரருக்கு பாதுகாப்பா?

Posted on: January 26, 2011


 

    File:Bush meets Pranab Mukherjee.jpg

முதலில் பத்திரிகை செய்திகளை பாருங்கள்:

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=173839

“” சுவிட்சர்லாந்து உட்பட வெளிநாட்டு வங்கிகளின் ரகசிய கணக்குகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கறுப்புப் பண விவரங்களை வெளியிட முடியாது. இதற்கென சட்ட நடைமுறைகள் இல்லாததே காரணம்,” என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்தார்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர, மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என, சுப்ரீம் கோர்ட் விமர்சனம் செய்தது.

*இந்நிலையில், மத்திய அரசு நிலை என்ன என்பதை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி டில்லியில் நேற்று நிருபர்களை சந்தித்து விளக்கினார்.

அவர் கூறியதாவது: சுவிட்சர்லாந்து உட்பட வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் எவ்வளவு உள்ளது என்பது பற்றியோ, எவ்வளவு பதுக்கப்பட்டுள்ளது என்ற விவரமோ துல்லியமாக தெரியவில்லை. இருப்பினும் தோராயமாக இருபது லட்சம் கோடி ரூபாய் இருக்கலாம் என, சர்வதேச நிதி அமைப்பு மதிப்பீட்டின் படி அனுமானம் செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக ஐந்து அம்ச திட்டத்தை அரசு வகுத்துள்ளது. இதை செயல்படுத்துவது தொடர்பாக 65 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

கறுப்பு பணத்தை மீட்பது தொடர்பாக, பல்நோக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்றை நியமித்துள்ளோம். இந்த விஷயத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை, இவ்விஷயத்தில், பிரச்னையை புரிந்து கொள்ள வேண்டும். இதுவரையில், கறுப்புப் பணம் தொடர்பாக நாம் திரட்டியிருக்கும் தகவல்களை, வெளியிடுவதற்கு சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட சட்ட நடைமுறை இல்லை. தகவல்களை வெளியிட மாட்டோம் என்று உறுதிமொழி கொடுத்துவிட்டு விவரங்கள் சிலவற்றை வாங்கியுள்ளோம். இதை மதிக்காமல், வெளியிட்டால், மற்ற நாடுகளிலிருந்து எப்படி தகவல்களை பெற முடியும். இந்த அடிப்படையில்தான், தற்போது அரசு பெற்றிருக்கும் தகவல்களை வெளியிட முடியவில்லை. //

தகவல்களை வெளியிட மாட்டோம் என்று வெளி நாட்டு வங்கிக்கு இவர்கள் எந்த அடிப்படையில் உறுதி மொழி அளித்தார்கள்? 

 இந்திய அரசுக்கு கட்ட வேண்டிய வரியை ஏய்ப்பு செய்து விட்டு, இந்திய அரசாங்கத்திடம் சொல்லாமல் வெளி நாட்டுக்கு பணம் அனுப்புவது சட்டப் படி குற்றமா இல்லையா? அப்படி சட்டப் படி குற்றம் என்றால் அவர்கள் மேல் அரசு  வழக்கு தொடருமா, தொடராதா? 

அப்படி வழக்கு தொடர்ந்தால் அவர்கள் பெயரை கோர்ட்டிலே சொல்லிக் கூவுவார்களா  மாட்டார்களா?  அப்படி என்றால் விவரங்களை வெளியிட மாட்டோம் என்று எந்த அடிப்படையில் உறுதி மொழி அளித்தார்கள்?

இது எல்லாம் வெளிநாட்டு வங்கிக்காரருக்கு  தெரியாதா? அப்படி தெரிந்தும் உறுதி மொழி கேட்க அவர்கள் அந்த அளவுக்கு அப்பாவிகளா?

இந்திய அரசுப் பணியில் சேரும் சாதாரண பியூன் முதல் பெரிய அமைச்சர்கள், சாரி மாண்புமிகு அமைச்சர்கள் வரை எல்லோரும் இந்திய அரசாங்கத்துக்கு விசுவாசப் பிரமாணமும் , ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுக்க வேண்டும். 

இவர்கள் வெளி நாட்டு வங்கிக்காரரிடம்  ரகசியக் காப்பு பிரமாணம் கொடுத்து இருக்கிறார்களா?

அந்தக் காலத்தில வெள்ளைக்காரன் நம் நாட்டை ஆண்ட போதே கட்ட பொம்மனும், வ.உ.சியும் அவன் முன்பு அடி பணிய மறுத்தனர். இன்றைக்கு வெள்ளைக்காரர் நம் நாட்டை விட்டு வெளியேறிய பின்னும்  உறுதி மொழி அளிக்க வேண்டிய அவசியம் என்ன? யார் அப்பன் வீட்டு சொத்து? அவன் பணத்தையா கேக்குறோம்.  இந்திய நாட்டு குடிமகன் என்றால் இந்திய சட்டப் படி வரி கட வேண்டும். இந்திய அரசுக்கு வர வேண்டிய வரிதானே. நேர் வழியில் பணம் சம்பாரித்தல் அதிலே வரி கட்ட தயங்க வேண்டியதில்லை. எப்படியோ சம்பாரித்த பணத்தை தானே வெளி நாட்டில் பதுக்குகிறான்?

அவர் நமது நாட்டு கருப்பு பணத்தை வாங்கி அவர்கள் வங்கியில் வைத்தது தப்பு.

அப்படி வைக்கும் நாடுகளோடு இந்தியா பொருளாதார உறவுகளை வைத்துக் கொள்ளது என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், உடனே அண்ணே, வேணாம்னே…என்று நம்மிடம் வர வேண்டிய நிலையிலே இந்திய நிலையான, வளரும் பொருளாதாரமாக உள்ளது. அப்படிப் பட்ட நிலையிலே அவர்களிடம் உறுதி மொழி  கொடுத்தோம் என்று இங்கே வந்து முனகினால் அது எந்த  தைரியத்தில்?

  இந்தியப் பொது மக்கள் அப்பாவிகள், இங்கே மெத்தப் படித்து தளம் வைத்து நடத்துபவர்களில் கணிசமானவர்கள் கூட சினிமா செய்திகளை வெளியிடுவதிலும், சினிமா அழகி  படங்கள் என்பது போல பதிவுகளை வெளியிடுவதிலும் கவனம் செலுத்துகிறார்கள், நாம போயி கிட்டே இருப்போம் என்ற தைரியத்தில் தானே!  

சரி எந்த வகையிலான உறுதி மொழி? எழுத்து பூர்வமான உறுதி மொழி அளித்தார்களா? இல்லை துண்டைப் போட்டு தாண்டினார்களா? கேழ்வரகில் நெய்  வடிகிறது என்றால் கேட்கும் எங்களுக்கு மதி இல்லையா?

உங்களுக்கு என்ன, ஆட்சி கையில் இருக்கிறது. உலகின் முக்கியப் பொருளாதார நாடுகளில் ஒன்றாக, உலகின் மிகப் பெரிய சந்தைகளால் ஒன்றாக , உலகின் அமைதியான சமுதாயமாக உள்ள இந்தியாவின் ஆட்சி உங்களின் கையில். உங்களை யாரும் கேட்க முடியாது. யோவ், கணக்கு வைத்து இருப்பவர் பட்டியலை எல்லாம் வெளியிட முடியாது போய்யா, என்று கூட சொல்லலாம். இலவசத்தை அள்ளி விட்டால் ஓட்டுப் போடும் அப்பவிகள தானே!

ஆமாம் இந்த பி. ஜே.பி. காரங்க என்ன இவ்வளவு தைரியமா கேக்குறாங்க, ஆச்சரியமா இருக்கே,  இவங்க ஒருவேளை வெளி நட்டு வங்கியில் பணத்தைப் போடவில்லையா? 

சரி இவர்களிடம் வெளி நாடு வங்கிக் காரர்கள் இந்தியர்களின்  கணக்கு விவரங்களை தந்தார்கள் அல்லவா? அது என்ன கதைப் புத்தகமா? காமிக்சா, இவர்கள் மட்டும் படித்துப் பார்த்து விட்டு மூடி வைப்பார்களாம். வெளி நாட்டு வங்கிக்கு உறுதி மொழி கொடுத்த மாவீரர்களே,  இந்திய நாட்டில் உள்ள 120 கோடி மக்களின் பிரதிநிதியாக தேர்ந்து எடுக்கப் பட்டது  தானே இந்திய ஜனநாயக  அரசு.  இது மக்களாட்சி தானே. யாரைக் கேட்டு கள்ளப் பணக் கணக்கை வெளியிட மாட்டோம் என்று  வெளி நட்டு வங்கிக்கு உறுதி மொழி கொடுத்தீர்கள்.

அப்படி இந்திய நாட்டில் இருந்து திருட்டு தனமாக வெளி நாட்டுக்கு அனுப்பப் பட்ட பணக் கணக்கை வெளியிட மாட்டோம் என்று வெளி நாட்டு வங்கிக்கு உறுதி அளிக்க இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உங்களுக்கு உரிமை வழங்கி உள்ளதா? இந்திய சட்டம் உரிமை வழங்கி உள்ளதா?

என்னமோ நடத்துங்க, நாங்க என்ன செய்ய முடியும், வேடிக்கை பார்க்கிறோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: