Thiruchchikkaaran's Blog

வீபிஷணன் செய்தது துரோகமா, நியாயமா?

Posted on: January 20, 2011


இராமயண விமர்சனங்களில்     அதிகம் விமரிசிக்கப் படுபவர் வீபிஷணன். இவர் இராவணனின் தம்பி.

தமிழ் நாட்டிலே வீபிசணன் என்கிற பெயர்  இலக்கிய வட்டாரத்திலும், அதை விட அதிகமாக அரசியல் வட்டாரத்திலும் சொல்லப் படும் பெயர். யாரவது கட்சியை விட்டுப் போனாலோ, கூட்டணியை விட்டு மாறினாலோ உடனே அவர்களை விபீசணன்… என்று வர்ணித்து திட்டித் தீர்ர்ப்பார்கள்.

இராவணன் கள்ளத்தனமாக சீதையை தூக்கி வந்து இலங்கையில் சிறை வைக்கிறான்.   பல பெண்களை இப்படி தூக்கி வருவது,  அவர்களை தொல்லைப் படுத்துவது, அவர்கள் வேறு வழியில்லாமல் அவனுடைய இச்சைக்கு இணைக்கும் படி செய்வது – இதை ஒரு எண்டர்டைன்மென்ட்  ஆக செய்து வந்து இருக்கிறான் இராவணன்.

அனுமன்  வந்து சீதையை விடுவிக்கும் படி சொல்லி இருக்கிறான். இராவணன் விடுவிக்கவில்லை.

அதற்குப் பிறகு இராமனும், சுக்கிரீவனின் படையும் இலங்கை வந்து சேர்கின்றன. எதிரிகள் இலங்கையை நெருங்கி விட்ட நேரத்திலே அவசரமாக ஆலோசனை அவையைக் கூட்டுகிறான் இராவணன்.  அந்த கூட்டத்தில் விபீடணன் சீதையை விட்டு விடும்படி சொல்கிறான். சீதையை  விட்டு விட்டால் பிரச்சினை அத்தோடு முடிந்து விடும் என்று விபீடணன் சொல்கிறான். இராமன் போர்த் திறம் மிக்கவன்,  குறைத்து எடை போட வேண்டாம். சுக்ரீவனின் வீரர்கள உடல் வலிமை உடையவர்கள் என்பதையும் சொல்கிறான்.

இராவணின் மகன் இந்திரஜித்தோ , விபீஷணனை கோழை என்று திட்டுகிறான். மகன் இந்திரஜித் தனக்கு சப்போர்ட் பண்ணி பேசுவதைக் கண்ட இராவணன், தான் சீதையை  தூக்கி வந்தது தவறு என்கிறதை வசதியாக மறந்து விடுகிறான். சீதையின் மேல் உள்ள ஆசை அவனுக்கு குறையவில்லை. தனக்கு பிடித்த பெண் யாராக இருந்தாலும் அவளை தான் அனுபவிக்க உரிமை உண்டு என்னும் சுயநல, காமக் கொடூர, காட்டுமிராண்டி எண்ணத்தில் வாழ்ந்த இராவணனுக்கு , விபீடணின் அறிவுரை கர்ண  கொடூரமாக இருந்தது.

                         

நீ இங்கே நில்லாதே, என்னுடன் இருக்காதே,எங்கேயாவது போ… என்று விபீடணனை விரட்டுகிறான் இராவணன். வேறு வழியில்லாமல் இராமனிடம் வருகிறான் விபீடணன்.

இதிலே என்ன தவறு என்று தெரியவில்லை. அடுத்தவன் மனைவியை அவள் விருப்பமில்லாமல் தூக்கி வந்து, அவளை தன்னுடன் உறவு கொள்ள சொல்லி கட்டாயப்படுத்துகிறான் இராவணன். என்னுடைய அண்ணன் யாரவாது இன்னொருவன் மனைவி மீது ஆசை வைத்து அவளைக் கடத்தி வந்தால் , அவனை செருப்பால் அடித்து அந்தப் பெண்ணை திரும்பக் கொண்டு பொய் அவள் வீட்டில் விடுவேன். நான் எந்த ஒரு பெண்ணை வலுக் கட்டாயமாக உடல் உறவு கொள்ள தொந்தரவு செய்தாலும், என் தம்பிகள் என்னை செருப்பால் அடித்து அந்தப் பெண்ணை விடுவிக்கக் வேண்டும் என்பதே என்னுடைய கோட்பாடு அறிவுரை எல்லாம்.

விபீடணன் செய்ததில் எந்த தவறும் இல்லை. வீபிடணன் செய்தது அவனது மனசாட்சிப் படி சரியே. அவனாக இராவணனை  விட்டு போகவில்லை. இராவணன் சீறி விழுந்து அவனை விரட்டி இருக்கிறான். சமுதாயத்தைப் பொறுத்த வரையில் வீபிடணன் செய்தது மிகச் சரியே. அண்ணனுக்கு தொழிலில் பிரச்சினை என்றால் உதவி செய்யலாம். அண்ணன் பசங்க படிக்க உதவி செய்யலாம். அண்ணன் மகளுக்கு திருமணம் நடத்த பணக் கஷ்டம் என்றால்  பணம் கொடுத்து உதவலாம். அண்ணன்  தெருவில்  போகும் போது ரவுடிகள் அவனை அடிக்க வந்தால் அவர்களை தடுக்கலாம்.

 ஆனால் இராமன் ரவுடித் தனம் செய்ய இலங்கை வரவில்லை. தன்னுடைய பொண்டாட்டியை கயவனின் கரங்களில் இருந்து மீட்க சென்று இருக்கிறான். இலங்கையைப் பிடிக்க வரவில்லை.  பிடிச்சு வச்சிருக்கும் என் பொண்டாட்டியை  விட்டுடு என்கிறதையே இராமன் சொன்னான். 

அண்ணன் இன்னொருவனின்  மனைவியை வலுக் கட்டாயமாக தூக்கி வந்து அடைத்து வைத்தால் கையில் கோலையும், விளக்கையும் ஏந்தி வெளியே காவல் காக்கும் செயலை, அண்ணன்தானே அடுத்தவன் பெண்டாட்டியை பலவந்தப் படுத்தினா  பரவாயில்லை என்கிற செயலை செய்ய,  நாகரீகமான  தம்பி முன் வருவான் என்று எதிர்பார்க்க முடியுமா?

Advertisements

2 Responses to "வீபிஷணன் செய்தது துரோகமா, நியாயமா?"

வான்மீகி வரைந்த இராமாயணத்தால்
ஆரியன் இராமன் ஆண்டவனான்
அயலவன் வாலி குரங்கானான் – என்
முப்பாட்டன் இராவண்ணன் அரக்கனானான்
ஆரியத்திற்கு நான் இராவண்ணன்

தென் திசை பார்க்கின்றேன் என் சொல்வேன் என்றன்
சிந்தை யெல்லாம் தோள்களெல்லாம் பூரிக்குதடா
அன்றந்த லங்கையினை ஆண்ட மறத் தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்
என் தமிழர் மூதாதை என் தமிழர் பெருமான்
இராவண்ணன் காண் அவன் நாமம் இவ்வுலகம் அறியும்

https://thiruchchikkaaran.wordpress.com/2010/01/04/raavanan/

இராவ‌ண‌ன் என்ப‌வ‌ன் ஒரு ச‌ர்வாதிகாரியாக‌, காமக் கொடூர‌னாக‌ இருந்திருக்கிறான். சிங்க‌ள‌ அர‌ச‌னாக‌ இருந்த‌ இவ‌ன் பிற‌ன் ம‌னை நோக்காப் பெருந்த‌கையாளனாக‌ இல்லாம‌ல் – பிற‌ன் ம‌னையை வ‌ற்புறுத்திப் பெண்டாளும் மிருக‌ குண‌ம் கொண்ட‌வ‌னாக‌ இருந்திருக்கிறான்.
மிக‌வும் வ‌ல்ல‌மை உடைய‌ அர‌ச‌னாக‌, த‌ன்னைத் த‌ட்டிக் கேட்க‌ ஆள் இல்லை என்ற‌ ம‌ம‌தையில், ப‌ல‌ பெண்க‌ளின் வாழ்க்கையை சூறையாடி இருக்கிறான் இந்த‌ குடி கேடி இராவ‌ண‌ன்.
த‌ன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள‌ வேட‌ங்களைப் போட்டு, துற‌வி போல‌ ந‌டித்து, இப்ப‌டியாக‌ ப‌ல‌ வ‌ழிக‌ளிலும் கோழைத் த‌னமாக‌ செய‌ல் ப‌ட்டு பெண்க‌ளைக் க‌வ‌ர்ந்து சென்று இருக்கிறான்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் அவ‌ர் விரும்பும் வாழ்க்கை துணையுட‌ன் வாழும் உரிமை உள்ள‌து.
எந்த‌ ஒரு பெண்ணிட‌மும், அவ‌ருடைய‌ விருப்ப‌த்துக்கு மாறாக ச‌ல்லாப‌ம் செய்ய‌ முய‌ல்வ‌து காட்டுமிராண்டித் த‌ன‌த்தை விட‌ கொடுமையான‌ குற்ற‌ம், நாக‌ரீக‌ ச‌மூக‌த்துக்கு எதிரான‌து.
ந‌ம் உள்ள‌ங்க‌ளில் இராவ‌ண‌த்த‌னமான‌ எண்ண‌ங்க‌ள் எழ‌ நாம் என்றும் இட‌ம் த‌ர‌க் கூடாது.

1.ராவணன் ஒரு தமிழன் – இராவணன் ஒரு தமிழன் இல்லை.

இராவணன் தமிழன் என்றால் அவனைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு கூட சங்க இலக்கியனக்களில் இல்லாதது ஏன்?

த‌மிழ்ப் பேர‌ர‌ச‌ர்க‌ளைப் ப‌ற்றி அவ‌ர‌வ‌ர்க‌ள் வாழ்ந்த‌ கால‌த்திலே எழுத‌ப் ப‌ட்ட‌ த‌மிழ் பாட‌ல்க‌ள் உள்ள‌ன‌.

க‌ரிகால‌னைப் ப‌ற்றி ப‌ட்டின‌ப்பாலையில் விரிவாக‌ கூற‌ப் ப‌ட்டுள்ள‌து. க‌லிங்க‌த்துப் ப‌ர‌ணியில் இராசேந்திர‌ சோழ‌னைப் ப‌ற்றி குறிப்பிட‌ப் ப‌ட்டுள்ள‌து.

தோல்வியுற்ற‌ அர‌ச‌ர்க‌ளைப் ப‌ற்றிக் கூட‌க் குறிப்பிட‌ப் ப‌ட்டுள்ள‌து. போரில் ச‌ண்டையிடும் போது எதிரி வீசிய‌ வேல், மார்பிலே பாய்ந்து முதுகு வ‌ழியாக‌ வெளியேறியும் ஒரு மன்ன‌ன் ம‌ர‌ண‌ம் அடையவில்லை. ஆனாலும், முதுகிலே ஏற்ப்பட்ட‌ புண்ணை இழிவாகக் க‌ருதி உண்ணா நோன்பிருந்து உயிர் துற‌ந்த‌ அந்த‌ ம‌ன்ன‌னைப் ப‌ற்றிக் குறிப்புக‌ள் உள்ளன‌.

இன்னொரு ம‌ன்ன‌ன் எதிரியால் பிடிக்க‌ப் ப‌ட்டு, சிறையில் அடைக்க‌ப் ப‌ட்ட‌தாக‌வும், தாக‌த்துக்கு நீர் கேட்ட‌ போது, சிறைக் காவ‌ல‌ன் இழிவாக‌ப் பேசிய‌தால் அவ‌ன் அளித்த‌ த‌ண்ணீரை ப‌ருகாம‌ல் உயிர் விட்ட‌ அர‌ச‌னைப் ப‌ற்றிக் குறிப்புக‌ள் உள்ள‌ன‌.

ஆனால் பெரும் வெற்றிக‌ளைக் குவித்து, பேர‌ர‌ச‌னாக‌ வாழ்ந்த‌ இராவ‌ண‌னிப் ப‌ற்றி எந்த‌ ஒரு சிறு குறிப்பும் எந்த‌ ப‌ண்டைய‌ த‌மிழ் இல‌க்கிய‌த்திலும் காணப் படவில்லையே? இராவ‌ண‌ன் வாழ்ந்த‌ கால‌த்தில் அவ‌னைப் ப‌ற்றி ஒரு த‌மிழ்ப் புல‌வ‌ரும் ஒரு பாட‌லும் எழுத‌வில்லை.

இராவ‌ண‌ன் த‌மிழ‌னாக இல்லாத‌ கார‌ண‌த்தால், அவ‌ன் எவ்வ‌ள‌வு வெற்றி பெற்ற‌ போதிலும் அவ‌னைப் பாடுவ‌தில் த‌மிழ்ப் புல‌வ‌ர்க‌ள் க‌வ‌ன‌ம் செலுத்த‌வில்லை என்ப‌தே உண்மை. என‌வே இராவ‌ண‌னுக்கும் த‌மிழ் ச‌முதாய‌த்துக்கும் யாதொரு தொட‌ர்பும் இருப்ப‌தாக‌ எந்த‌வொரு ஆத‌ராமும் இல்லை.

2.ராவணனின் பரம்பரையினர் இன்னும் இருக்கின்றார்கள். – யார் வேண்டுமானாலும் தன்னை இராவணன் பரம்பரை என்று சொல்லிக் கொள்ளலாம். இராவணன் என்ற பெயரை உடைய நண்பர்களுடன் நான் பள்ளியில் படித்து இருக்கிறேன்.

3.ராவணன் தன் கைப்பட தமிழை எழுதியுள்ளான்.
அந்த நூலின் பெயர் என்னவோ ? ஒரு தோட்டமும் சில பூக்களும் என்ற ஹைக்கூ கவிதை தொகுப்பா?

//4.தமிழர்களின் முறைப்படி கவர்ந்து சென்று திருமணம் செய்வது வழக்கம்.//

அடுத்தவன் மனைவியைக் கவர்வது தமிழரின் பண்பாடு இல்லை. பிறன் மனை நோக்கப் பெருந்தன்மையே தமிழர் பண்பாடு.

//5.ராவணன் பிராமணன் இல்லை.// இராவணனின் தந்தை பார்ப்பன முனிவர் என்றே சொல்லப் பட்டுள்ளது. தாயார் அரக்கர் குலம் என்று கூறப்பட்டுள்ளது. சிங்கள அரக்கர் குலமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

//6.ராவண காவியத்தை படிக்கவும்.// இராவணன் நல்லவனாக வாழ்ந்திருந்தால் அவனுக்கு நானே காவியம் பாடி இருப்பேன். அதிகார மமதையில் , ஆசை வெறியில் தவறான வழியில் வாழ்ந்து இருக்கிறான்.

//7.ராவணன் தான் உண்மையாக சீதையை காதல் செய்தவன்.//அது சரி அடுத்தவன் மனைவியைக் காதலிப்பதில் உண்மை இருந்தால் என்ன? பொய் இருந்தால் என்ன?

//8.ராவணன் சீதையை வன்புணர்ச்சி செய்யவில்லை.// ஆனாலும் சீதைக்கு உருவான கெட்ட பேர் அவள் வாழ்க்கையை நாசமாக்கி விட்டது. காம வெறி பிடித்த கயவர்களால் அப்பாவிப் பெண்களுக்கு எவ்வளவு கஷ்டம் வருகிறது என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: