Thiruchchikkaaran's Blog

மகாத்மாவின் வழியில் வெற்றிக் கொடி நாட்டிய மாமனிதர் மார்டின் லூதர் கிங்

Posted on: January 18, 2011


 

               File:Martin-Luther-King-1964-leaning-on-a-lectern.jpg

ஜனவரி மாத மூன்றாம் திங்கள் கிழமை நாளானது மார்டின் லூதர் கிங் நாளாக அனுசரிக்கப் படுகிறது.

மனித உரிமை, சுதந்திரம் , ஜனநாயகம் என்றெல்லாம் இன்று உபதேசம் செய்யும் அமெரிக்க சமுதாயம், அன்பு சகோதர கறுப்பின மக்களை விலங்குகளை விட மோசமாக நடத்தி அடிமைப் படுத்தி வந்தது!

File:Cicatrices de flagellation sur un esclave.jpg

16ம் நூற்றாண்டில் இருந்து 19ம் நூற்றாண்டு வரை ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வாங்கப் பட்டு அமெரிக்காவில் விற்கப் பட்டனர்.  கறுப்பின மக்கள் காலில் இரும்பு குண்டு கட்டப் பட்டு அவர்கள் விலங்கை விட மோசமாக நடத்தப் பட்டனர். ஒரு அமெரிக்க  எஜமானிடம் வேலை செய்யும் கறுப்பின ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு பிள்ளை பெற்றால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை எஜமாரைக்கு சொந்தம். எஜமானுக்கு பண நெருக்கடி வந்தால் மனைவியை மட்டும் தனியே விற்று விடுவான். குழந்தையையும் யாருக்காவது விற்று விடுவான். கண்ணீருடன் தவிப்பதன்றி வேறு எதுவும் செய்ய முடியாது.

மாமனிதர் ஆபிரகாம் லிங்கன் இந்த முறையை ஒழித்து சட்டம் கொண்டு வந்தாலும் அரசாங்க இயந்திரமும் அமெரிக்க சமுதாயமும் கறுப்பின மக்களை மாற்றந்தாய் போக்கிலேயே நடத்தி வந்தன. இந்த அவல  நிலையை போக்க மார்டின் லூதர் ஆயுதத்தைக் கையில் எடுக்காமல் மகாத்மா காந்தியின் அஹிம்சை முறை போராட்டத்தைக் கையில் எடுத்தார்.

மார்ட்டின் லூதர் வன்முறையை தேர்வு செய்து இருந்தால் ஏற்கெனெவே கறுப்பின மக்களை விலங்குகள் போலக் கருதி நடத்தி வந்த அமெரிக்கர்கள்,  இதையே காரணமாக வைத்து கறுப்பின மக்களை விலங்குகளை விடக் கொடியவர்கள் என்று பட்டம் கட்டி குற்றம் சாட்டி கொன்று குவித்து இருக்க கூடும்.

மகாத்மா காந்தியை சரியாகப் புரிந்து கொண்ட மார்ட்டின் லூதர் அவரது சீடனாக செயல் பட்டு, அஹிம்சை முறையிலே போராடி அமெரிக்க கறுப்பின மக்களுக்கு   உரிமையை வாங்கிக் கொடுத்தார்.

மார்ட்டின் லூதர் கிங் இந்தியாவிற்கு வந்த போது சொன்னது,

 “Since being in India, I am more convinced than ever before that the method of nonviolent resistance is the most potent weapon available to oppressed people in their struggle for justice and human dignity. In a real sense, Mahatma Gandhi embodied in his life certain universal principles that are inherent in the moral structure of the universe, and these principles are as inescapable as the law of gravitation.”[

அன்னாரை இந்நாளில் நினைவு கூர்வோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: