Thiruchchikkaaran's Blog

மந்திரத்தில் மாங்காய் விழாது – சங்கராச்சாரியார் அதிரடி !(சங்கராச்சாரியார் யார்- Part 4)

Posted on: January 15, 2011


இந்து மதம் ஆழமான ஆன்மீக சிந்தனைகளையும், விரிவான பல ஆன்மீக முன்னேற்ற முறைகளையும் உடையது.

தனக்கு எதுவுமே வேண்டாம் என்று காட்டுக்கு சென்று கனிகளையும், கிழங்குகளையும் உண்டு தவம் செய்யும் சித்தனும் இந்துதான், அவ்வப் போது கோவிலுக்கு சென்று வழிபடுபவனும் இந்துதான். எந்த வழிபாடும் செய்யாவிட்டாலும், யாருக்கும் தீங்கு நினைக்காமல், யாரையும் ஏமாற்றாமல், தானுண்டு தன் வாழ்க்கையுண்டு என்று இருப்பவனும் இந்துதான். இந்து மதம் ஒருவன் தன் கடமைகளை சிறப்பாக செய்தால் அதுவே சிறந்த ஆன்மீக முயற்சி என்கிறது. தியாகம், தியானம், தவம், பக்தி, யோகம்… இவ்வாறாக பல ஆன்மீக முறைகளை முன் வைக்கிறது. இவற்றில் ஒரு முறைதான் யாகம் அல்லது வேள்வி.

அவரவர்க்கு பொருத்தமானதை அவரவர் எடுத்துக் கொள்ளலாம்.

இந்து மதத்தின் மந்திரங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று அறிவைத் துலக்கி உண்மையை  தேடும் ஆராய்ச்சி, அவற்றில் கண்டுணர்ந்த முடிவுகள் ஆகியவற்றின் தொகுப்பான உப நிடத மந்திரங்கள்.

உதாரணமாக,

  உண்மையே  வெல்லும் – “சத்யமேவ ஜெயதே””என்பது முண்டக உபநிடதத்தின் ஒரு வாக்கியம் ஆகும்.

உத்திஸ்டத,  ஜாக்கிரதா, பிராப்யவரான்   நிபோதித”  – (எழுமின்,  விழிமின், குறி சேரும் வரை நில்லாது செல்மின்”) என்பது கட உபநிடத வாக்கியம்  ஆகும்.

இன்னொரு வகையான மந்திரங்கள் மக்கள நலனை முன்னிட்டும், சொந்த விருப்பத்தின் காரணமாகவும் தேவர்களை  நோக்கி வேண்டப்படுவதாக அமைந்து உள்ளது. இவைகள் யாகத்தின் போது சொல்லப் படுகின்றன.

யாகம் என்பது பெரும்பாலும் அரசர்களால் செய்யப் படுவது. யாகத்தின் போது ஏழை எளியவர்களுக்கு பல்வேறு தானங்களை வழங்குதல் முக்கிய மாக வற்புறுத்தப் பட்டுள்ளது. தானம் இல்லாத யாகம் வீண் என்று சொல்லி உள்ளனர்.

இந்துக்களின் அடிப்படையான புனித நூல்கள் ரிக், யஜூர், சாமம் , அதர்வணம் ஆகிய நான்கு வேதங்கள், மற்றும்பகவத் கீதை உள்ளிட்ட ஸ்ருதி எனப் படுபவை ஆகும்.

ஒவ்வொரு வேதத்திலும்,  யாகங்களை செய்ய வேண்டிய முறைகள் அவற்றை செய்யும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரங்கள், ஆகியவை தெளிவாக விளக்கப் பட்டு உள்ளன. 

உலகின் முதல் வாக்கியம் என்று ஜெர்மானிய அறிங்கர் மாக்ஸ் முல்லரால்  சொல்லப் பட்ட,  அக்னி மீலே புரோஹிதம்” என்று தொடங்கும் ரிக் வேதத்தின் முதல் செய்யுள், இந்த வேள்வி மந்திரங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்   

வேதங்களின் முடிவுப் பகுதியான வேதாந்தம், மனித வாழ்க்கை, மனித உயிர், அது விடுதலை பெற்ற நிலையை அடையும் முறைகள் ஆகியவற்றை பற்றிய ஆராய்ச்சிகளும், அறிவிப்புகளும் உள்ளன.

வேதங்களை கற்பதும், ஓதுவதும், பிறருக்கு பயிற்று விப்பதும், இந்து மதத்திலும் முக்கிய செயலாக இருந்தது.  வேதங்களை தொடர்ச்சியாக சரியான ஓசை மற்றும் இசை நயத்துடன் உச்சரிக்கும் போதுஅவை கேட்போருக்கு மனதிலே ஆன்மீக உணர்வை வூட்டுவதாக இருந்தது. காலப் போக்கில்   வேதங்களை படித்து மந்திரங்களை சரியாக உச்சரித்தால் போதும் என்கிற எண்ணம் பலரின் மனத்தில் தோன்றி இருந்தது.

மந்திரங்களை  உச்சரித்தால் போதும், நினைத்தது நடக்கும், கஷ்டங்கள் தீரும் என்று எண்ண ஆரம்பித்தனர்.

ஆனால் ஆதி சங்கரர் அது போதாது என்பதை அறிந்து கொண்டார்.  ஒருவர்  தன் மனதில் ஆசைகளை  குறைத்துக் கொண்டே வந்து , மனதிலே அமைதியை  நிலவச் செய்து, தன்னுடைய உண்மை நிலையை அறிவதாலேயே துன்பங்களில் இருந்து விடுதலை பெற்ற நிலையை அடைய முடியும் என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார் சங்கராச்சாரியார்.

எனவே வெறுமனே மந்திரங்களை உச்சரித்து மங்களம் பாடினால் ஒருவன் காக்கப் பட மாட்டான் என்பதை குறிக்கும் விதமாக “‘நஹி நஹி ரக்ஷதி,  டுக்ருங் கரனே”  என்று பாடினார் சங்கராச்சாரியார்.

உபநிடத வாக்கியங்களான

அசத்தோமா சத் கமய , (From untruth to tuth / from illusion to truth)

தமசோமா ஜ்யோதிர்கமய ( From darkness to light )”” 

போன்றவை குறிக்கோளை உணர்த்தும், மக்களின் அறிவைத் தூண்டும் வாக்கியயங்கள், அவற்றைப் புரிந்து கொண்டு அவற்றின் வழியில் நாம் செல்ல வேண்டும், வெறுமனே அவற்றை உச்சரித்தால் போதாது என்பதை அதிரடியாக தெளிவு படுத்தி இருக்கிறார் சங்கராச்சாரியார்.

நன்கு வேதங்களையும் கற்று தேர்ந்தாலும், அவற்றில் சொல்லப் பட்டுள்ள மந்திரங்களி, தெளிவாக பிழை இல்லாமல் உச்சரித்தாலும் அவை எல்லாம் ஒருவனைக் காக்காது. சிறு வயதில் குழந்தையாகவும், பின்னர் இளைங்கனாகவும், பின்னர் முதியவனாகவும்… இப்படி தன் நிலைமை  மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மனிதன் தன்னை அரசனாகவோ , ஆண்டியாகவோ  கருதிக் கொண்டாலும் கடைசியில் பிடி சாம்பலாகிறான் அல்லது மண்ணுக்குள் மக்குகிறான்.

எனவே எத்தனை வேதங்களை கற்றாலும், இன்ப  துன்பங்களை சமமாக எண்ணும்  மன நிலையை அடையும்  படிக்கு ஒருவன்  தன்  சிந்தனை , சொல், செயல்  பக்குவப் பட்டு உயர் மன  நிலையை  அடைவதே அவன் விடுதலை அடைவது ஆகும் என்கிற கோட்பாட்டையே சங்கராச்சாரியர் சொல்லுகிறார். புத்தரும் அதே கோட்பாட்டையே சொல்கிறார்.  

 புத்தருக்கும் சங்கரருக்கும்  உள்ள  வித்யாசம் என்ன வென்றால், விடுதலை அடைந்த பின் அந்த உயிரின் நிலை என்ன என்பது பற்றியே- புத்தர் விடுதலை அடைந்த பின் ஒன்றுமில்லை, சூனியம் தான், கஷ்டம் தீர்ந்து விட்டது அப்புறம் என்ன என்கிறார், ஆதி சங்கரர் அந்த உயிரின் நிலை விடுதலை பெற்ற, அழிவற்ற , துன்பங்கள் இல்லாத நிலையிலே தொடர்ந்து உயிரோடு இருப்பதாகவும், தன்னுடைய உண்மை நிலையை அந்த உயிர் அறிந்ததாகவும் – எல்லா உயிரும் உண்மையில் அழிவற்றதாக அளவற்ற வலிமை உடையதாக் வேறுபாடில்லாமல் ஒன்றாகவே இருப்பதாகவும் சொல்கிறார்.

உண்மையை உணர்ந்து   விடுதலை அடையாத  உயிர், மீண்டும் மீண்டும் பல பிறவிகள் எடுத்து தொடர்ந்து துன்பத்தில் உழல்வதாக  கிட்டத்தட்ட இந்து மத ஞானிகள்   அனைவரும் சொல்லுகின்றனர். 

இந்தக் கோட்பாடு இந்து புத்த, சமண மதங்களின் மையக் கோட்பாடாக,  தத்துவ இணைப்புக் கோட்பாடாக உள்ளது.

காசியில் ஒரு வேத பாடசாலையில் பண்டிதர்களுடன் விவாதித்து விட்டு வெளியே வரும் போது வேதம் படித்த ஒரு மாணவர் “‘டுக்ருங் கரனே”” என்னும் சமஸ்கிருத இலக்கிய பத்தை திரும்ப திரும்ப சொல்லி மனப் பாடம் செய்து கொண்டிருப்பதை கண்டார்.

இக்காலத்திலும் நாம் பிசிக்ஸ் , கெமிஸ்ட்ரி யை உரு அடித்து அப்படியே அடி மாறாமல் எழுதி நிறைய மதிப்பெண் பெறுகிறோம் அல்லவா. ஆனால் வெறுமனே உரு அடிப்பது உபயோகம் இல்லை. அதைப் புரிந்து கொள்வதும் அடுத்த நிலையே. சோதனை சாலையில் அந்த பரிசோதனையை செய்து சரி பார்ப்பது, தானே ஆராய்ச்சின் முடிவை அறிந்து கொள்வது இவையே ஒருவனை அறிஞன்  ஆக்கும் அல்லவா.

அதைப் போல மந்திரங்களை உச்சரித்தால் போதும், அந்த மந்திரங்கள் தங்களைக் காக்கும் என்கிற நினைப்பை மாற்றி, கனவில் இருந்து எழுப்பி, ஒருவன் தன்னைத் தானே உயர்த்தி மன தை வலிமை பெறச் செய்து உண்மையை அறிய வேண்டும் என்கிற  பகுத்தறிவுப் பாதைக்கு அவர்களை கொண்டு வந்த சங்கராச்சாரியார் உண்மையில் ஒரு அதிரடி புரட்சிக் காரரே!

                                   ********************

இந்தக் கட்டுரை க்கு வந்த முதல் பின்னூட்டமும், அதற்க்கு நாம் அளித்த பதிலையும் கட்டுரையில் இணைப்பாக சேர்ப்பது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறோம். எனவே அவற்றைக் கட்டுரையில் சேர்த்து இருக்கிறோம்.
இணைப்பு – 1 
திரு. சுந்தர் எழுதிய பின்னூட்டம்:

Your comparison and understanding is wrong.Mantras were not underestimated or belittled by Adi Sankara.Nahi nahi rakshati Dukrinkarane was composed seeing an old Pandit trying to memorise the Grammar rules of Sanskrit which Adisankara felt was unnecessary at that age of the old man as he was supposed to be contemplating on GOD and philosophy.Please give a correct perspective through your blogs.

திரு. சுந்தருக்கு நமது  பதிலாக சங்கராச்சாரியார் (ஆதி சங்கரர்) எழுதிய மற்றொரு புகழ் பெற்ற நூலான விவேக சூடாமணியில் இருந்து கட்டுரையின் கருத்தை வலியுறுத்தும் செய்யுள்களின் உரையை மேற்கோள் காட்டி பதில் அளித்து இருக்கிறோம்.

Dear Mr. Sundar,

My observation is corect and I am giving the right perception only. He told twice ” Nahi, Nahi ” only to make us to undersatnad clearly.

The following is from Viveka chudamani- very much from Sankaraachchaarya,

Part- 1

56. Neither by Yoga, nor by Sankhya, nor by work, nor by learning, but by the realisation of one’s identity with Brahman is Liberation possible, and by no other means.
58. Loud speech consisting of a shower of words, the skill in expounding the Scriptures, and likewise erudition – these merely bring on a little personal enjoyment to the scholar, but are no good for Liberation. 

59. The study of the Scriptures is useless so long as the highest Truth is unknown, and it is equally useless when the highest Truth has already been known.

60. The Scriptures consisting of many words are a dense forest which merely causes the mind to ramble. Hence men of wisdom should earnestly set about knowing the true nature of the Self.//

Advertisements

18 Responses to "மந்திரத்தில் மாங்காய் விழாது – சங்கராச்சாரியார் அதிரடி !(சங்கராச்சாரியார் யார்- Part 4)"

Your comparison and understanding is wrong.Mantras were not underestimated or belittled by Adi Sankara.Nahi nahi rakshati Dukrinkarane was composed seeing an old Pandit trying to memorise the Grammar rules of Sanskrit which Adisankara felt was unnecessary at that age of the old man as he was supposed to be contemplating on GOD and philosophy.Please give a correct perspective through your blogs

Dear Mr. Sundar,

My observation is corect and I am giving the right perception only. He told twice ” Nahi, Nahi ” only to make us to undersatnad clearly.

The following is from Viveka chudamani- very much from Sankaraachchaarya,

Part- 1

56. Neither by Yoga, nor by Sankhya, nor by work, nor by learning, but by the realisation of one’s identity with Brahman is Liberation possible, and by no other means.
58. Loud speech consisting of a shower of words, the skill in expounding the Scriptures, and likewise erudition – these merely bring on a little personal enjoyment to the scholar, but are no good for Liberation.

59. The study of the Scriptures is useless so long as the highest Truth is unknown, and it is equally useless when the highest Truth has already been known.

60. The Scriptures consisting of many words are a dense forest which merely causes the mind to ramble. Hence men of wisdom should earnestly set about knowing the true nature of the Self.//

Hope you can understand now atleast!

Again where has he said Mantras have no potency?His comment could mean that any mantra cannot make one realise Brahman as it is only by contemplation and logical thinking the concept of Brahman could be experienced.Mantras as such have never been condemned anywhere except pointing out its limitations.Then you also have to take the Sobhana panchhakam where he says Vedas are to recited daily:”Vedo nithyamadheeyataam”

Dear Mr.Sundar, can you show where Shankaracharya has recommended mantras or emphasised on the potency of the mantras or atleast any effect for merely pronouncing the mantras.

I alo have not condemned any manthras, provided they are not bringing any negative thoughts.

Also vedhas can be recited every day. Satyameva Jayathe, Uththistatha, Jaakratha… are all part of Vedhas only.

I mentioned in my comment that if reciting vedhas can bring concentration, good thoughts, its good in that sense!

Dear Tiruchikkaran,
Adi Sankara had even composed a treatise on Mantra shastra called Prapancha Sara Sangraham where in even prayogas for rare mantras are given.Had he considered mantras to be useless he would not have composed that.

Iam glad that you are trying to shed light on Sankara and Indian culture,but my word of caution is that let us not put our views or modern thought as Sankara’s.I congratulate you on your work.But I suggest you to make a full search and then conclude.Your writings propmpted me to write this as these days wrong concepts spread a lot due to mass media the peculiar situation in Tamilnadu where a professed atheist group(though in private they do have faith) is out to confuse people

Dear Mr. Sundar.

Sankaracharaya had composed poems praising on Gods, No doubt on that. But I have not come across any thing that- if you recite this manthara you will get this boon- as said by Sankaracharaya himself. But we can hear many people say that if you say this slokam, you will look handsome…. become rich… etc. These were told by people not by Sankara. If you have any refertence in this regard you can tell us. I mean, can you show any where as Sankaracharaya says , if you chant this mathra , you are sure to get this benefit…. boon…etc..

To be frank, Sankaracaharya was a Great revolutionisit, more than the revolutionist, he was himself was a great RATIONLIST.

India in Genral, and tamil ndau in particular people generally dont get the correct perception what is rationalism. But they simply follow either the religion or the aethiesm.

Sankaracharya was a Rationalist, he told the people, just try, medidate or devote but you raise up your mind and see the trutha nd get wisdom. The wisdom takes you out from Sorrow. Sankaracharya did not propose or probagate any miracles.

Before I conclude. let me say, I hope you will take it in the right sense, please understand the teachings of Sankaracharaya properly, dont try to brush some belifes above his principles, let his true principles shine!

I refer the following article at another blog, where we had similar arguments!

http://lksthoughts.blogspot.com/2011/01/11.html

Adi Sankara recognised the gradation of people and suggested the path of Bhakthi,Gnana and Karma to those who qualify because of their nature.

The very fact that he composed Prapancha Sara Sangraham is to give clarity and the ways to use mantras.What else proof do you need?My submission is that he was a logical thinker and he also recognised the need to give different paths to different aspirants

அன்புக்குரிய சுந்தர்,

வெறுமனே பிரபஞ்சசாரா என்று சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்.( மேற்கோள் கூட காட்டவில்லை)

மந்திரத்தை சொன்னால் பலன் கிடைக்கும் , மந்திரத்துக்கு சக்தி இருக்கிறது என்று சங்கராச்சாரியார் சொல்லி இருக்கிறாரா? அவர் எதற்க்காக மந்திரத்தை மிக சரியாக உச்சரித்து ,வேள்விகளை சிரத்தையுடன் செய்தால் போதும் என்னும் மீமாம்ச கோட்பாட்டை கொண்ட மண்டன மிஷ்ரருடன் விவாதம் செய்தார்? மண்டன மிஸ்ரர் ஏன் தோல்வியை ஒப்புக் கொண்டு மீமாசத்தை விட்டு சன்யாசம் பூண்டார். மண்டன மிஷ்ராருக்கு புரிந்தது, அவர் மாறி விட்டார். மண்டன மிஷ்ரரே இல்லாமல் போய் சுரேச்வாச்சாரியார் ஆகி விட்டார்.

ஆனால் நீங்கள் விடாமல் அந்த மந்திர தந்திர கோட்பாடுகளைக் கட்டிக் கொண்டு அழுகிறீர்கள். ஆதி சங்கரர் காலத்துக்கு முன்னாள் இருந்திருக்க வேண்டியவர்கள்!

கர்ம யோகம், தவம், தியானம் கர்ம பலத் தியாகம், பக்தி இப்படி இந்து மத்தில் ஆன்மீக முன்னேற்றத்துக்கு பல வழிகள் சொல்லப் பட்டு உள்ளன. எந்த வழியில் சென்றாலும் இறுதியில் தன்னுடைய உண்மை நிலையை உணரும் ஞானம் என்ற நிலையே ஒருவனை சுதந்திரம் பெற்றவன் ஆக்குகிறது என்பது ஆதி சங்கரரின் முக்கியக் கோட்பாடு . ஞானம் பெறாவிட்டால் அவன் எத்தனை வேதம் படித்தாலும், எத்தனை முறை பிராணாயாமம் செய்தாலும் பலன் இல்லை என்பதையும் சொல்லி உள்ளார்.

இந்த ஞானத்தை பெற முன் சொன்ன கர்ம யோகம், தியாகம், பக்தி… இப்படி பல வழிகள் உள்ளத்தில் தனக்கு எந்த வழி சிறந்தது என்று தீர்மானிக்க வேண்டியது அவரவர்தான். இதில் சங்கராச்சாரியார் எமபசைஸ் செய்வது பக்தி வழி, அது எளிய வழி! கோவிந்தம் பஜ மூடமதே, என்ற சொன்னது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்.

இன்று பலரும் அவரின் வழியைப் பின்பற்றி கருமாரி அம்மன், முருகன் … என பக்தியில் ஈடுபடுகின்றனர். உங்களுக்கு மந்திரங்கள் விருப்பம் என்றால் சந்தோசமாக அவற்றை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

நான் முன்பே சொன்னது போல புத்த, சமண மதங்களால் அகற்றப் பட்ட, எளிய மக்களின் அமைதியான, அன்பான பக்தியை மீட்டு மீண்டும மக்களுக்கு கொடுத்து விட்டார் சங்கரர். அதை அவர்களிடம் இருந்து பறிக்க யாராலும் இயலாது!

கிரேடேசன் என்பது ஒருவர் நடந்து கொளவதைப் பொருத்து மக்களாகத் தருவது. காஞ்சி தேவனாதனுக்கு எந்த கிரேடேசனை மக்கள குடுத்து இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். தேவநாதன் கையும் களவுமாக சிக்கினான். ஆனால் கழுவிற நீரில் நழுவும் மீனாக உள்ளோரையும் மக்கள் அறிந்தே உள்ளனர். அவர்களுக்கு என்ன கிரேடேசன் தருவார்களோ …அதெல்லாம் மக்களுக்குத் தெரியும்.

Prapancharsara Sangraham covers almost all mantras pertaining to Siva,Vishnu,Ganaptha,Sreividya.Normally it is not quoted like a bhakthi work like Bhajagovindam which you have quoted.You can get a copy of it in Sarasavthi Mahal library.Why even Soundarya lahiri is a potent mantra shastra work .Since you have taken a stand from which you find it difficult to move,you are digressing

அன்புக்குரிய சுந்தர்,

நான் ஒரு நிலையை ஈடுத்து விட்டு அதை நிலை நிறுத்த முயற்சி செய்யவில்லை.

ஆதி சங்கரர் கடவுள்களைப் புகழ்ந்து பாடி உள்ளார் என்பது எல்லோரும் அறிந்ததே. அதை யாரும் மறுக்கவில்லையே. இந்து மதம் பகுத்தறிவு அடிப்படையில் ஆராய்ச்சி செய்து சிந்தனைக்கு மனித ஆன்மீக முன்னேற்றத்துக்கு உதவி செய்த போதிலும், அதிலும் நம்பிக்கையும் உள்ளது. கடவுள் உதவி செய்வார் கஷ்டம் வந்தால் ஹெல்ப் பண்ணுவார் என்று மக்கள் கடவுளை வேண்டுகிறார்கள்.

கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் கஷ்டம் வரும்போது உதவி செய்வார் என்று நம்புவதானால் , அவர் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சொல்லி ஜபித்தால் தான் உதவி செய்வாரா? ஒருவன் கடவுளிடம் மனமுருகி வேண்டினால் அதற்க்கு கடவுள் இரங்க மாட்டாரா? சிவா சக்தியா யுக்தோ என்று சொன்னால் தான் பார்வதி உதவி செய்வாரா, கற்பூர நாயகியே கனகவல்லி என்று பாடினால் இரங்க மாட்டாரா?

தாயாக கடவுளை எண்ணி, அன்பை செலுத்துகிறார் சங்கராச்சாரியார். அதுதான் கான்செப்ட். அதன் தமிழ் வர்சன் தான் கற்பூர நாயகியே போன்ற பாட்டுகள். இன்ப துன்ப, சொத்து, சுகங்களை மறந்து ஆசை எல்லாவற்றையும் நிறுத்தி, மனக் குவிப்பு செய்து அமைதியை அடைய , தாயின் மேல் உள்ள அன்பை வெளிப்படுத்துவதுதான் சங்கரரின் அம்பாள் வழிபாடு. மிகச் சிறந்த மனக் குவிப்பு, நல்ல எண்ணங்களை உருவாக்கக் கூடியது, பிற மதங்களின் மீது வெறுப்புணர்ச்சியை உருவாக்காத வழிபாடு, அமைதியை தரும் வழி பாடு, சங்கரரின் அம்பாள் வழிபாடு என எல்லா மக்களாலும் போற்றப் பட்டு பின்பற்றப் படுகிறது.

இந்த அன்பை புரிந்து கொள்ளாமல் கனகதாரா ஸ்தோத்திரம் பாடினால் தங்கக் மழை பொழியும், சிவா சக்தியா யுக்தோ பாடினால் வீரம் வரும் என்ற ரேஞ்சிலே, வியாபாரம் போல, வட்டி , வட்டிக்கு கூட்டு வட்டி என்பது போன்ற சிந்தனையிலே சொல்லுகிறார்கள்.

ஆதி சங்கரர் இந்த ஸ்லோகத்தைப் பாடி பூஜை செய்தால் இந்த பலன் கிடைக்கும் என்று சொல்லவோ, ஆசை காட்டவோ இல்லை. அப்படி சொன்னாரா, நீங்களே சொல்லுங்கள், மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். அந்த ஸ்லோகங்களைப் படிக்கும் சிலர் தங்களுக்கும் அப்படி தங்கமாக வரட்டுமே, காசு பணம் பெருகட்டுமே என்ற ஆசையிலே பில்ட் அப் செய்து கொள்கிறார்கள்.

நல்ல எண்ணங்களோடு அமைதியான அன்பு வழிபாட்டில் ஈடு பட்டால் அமைதி உருவாக்கி நல்ல எண்ணங்கள் பெருகும். மனதிலே பல விதமான ஆசைகளோடு விதம் விதமான மந்திரங்களை , ஸ்தோதிரங்களை சொல்லி பூஜை செய்தாலும், அது மீனாட்சி அம்மனாக இருந்தாலும் சரி, காமாட்சி அம்மனாக இருந்தாலும் சரி, அந்த ஆசையே அவர்களுக்கு பல பிரச்சினைகளை உருவாக்கும். உண்மையான அம்பாள் பக்தன் மனைவியைத் தவிர எல்லா பெண்ணையும் அம்பாளாக தாயாக எண்ணுவான். சும்மா வெளி வேசத்துக்கு அம்பாளின் மேல் பல ஸ்தோதிரப் பாடல்களைப் பாடி விட்டு, பெண்களை காம கண்ணோட்டத்தில் பார்த்தால், அவன் கிரஹஸ்தனோ , துறவியோ … அவன் ஆசையே அவனை கீழே இறக்கி விடும்.

நான் முக்கியக் கருத்தை விட்டு விலகவில்லை. ஆதி சங்கரர் இந்த ஸ்லோகத்தைப் பாடினால் இந்த பலன் கிடைக்கும் என்று சொன்னதாக, ஆதி சங்கரரே சொன்னதாக இருக்கிறதா, சொல்லுங்கள்!

இதில் நான் கட்சியாட விரும்பவில்லை. மந்திரங்கள் உச்சாடனம் செய்யக் கேட்பதும் ஒரு அனுபவம். உச்சாடனம் செய்வதும் ஒரு அனுபவம். இரண்டுமே அர்த்தம் தெரிந்து சொன்னால்,கேட்டால் சிறப்பு. அடுத்து வெறும் உச்சாடனத்தோடும் கேள்வியோடும் நின்று விடுவதும் சரியில்லை.

ஆனால் எனக்கு இதெல்லாம் சாத்தியமில்லை. ஏனெனில் எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. ஆனால் மந்திர உச்சாடங்கள் கேட்பதே சுகமாகத் தான் இருக்கிறது. மந்திரங்கள் எங்கு காதில் விழுந்தாலும் அதில் லயித்துவிடுவது என் சுபாவமாக இருக்கிறது.

அந்த மந்திரங்கள்படி தான் என் எண்ணங்களும், செயலும் இருக்கிறதா என்று தெரியாது. ஆனால் ஒன்று தெரியும். என் எழுத்து, செயல், சிந்தனை இவற்றால், உலக்மோ சக மனிதர்களோ பாழ்பட்டது கிடையாது. நான் பிறந்த போது இருந்த உலகை இன்னம் கெடுக்காத வகையில் தான் என் வாழ்க்கை இருந்திருக்கிறது என்ற திருப்தி எனக்கு.

அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய திரு. வெங்கட் சாமிநாதன் ஐயா அவர்களே,

கட்டுரையை படித்ததற்கும், கருத்து சொன்னதற்கும் மிக்க நன்றி சார்.

மந்திர உச்சாடனங்களைக் கேட்பது ஒரு வகையான மனக் குவிப்பை உருவாக்கி நம்முடைய கவனம் வேறு இடத்தில் சிதறாமல் இருக்கும் படி செய்யக் கூடும். இது ஒரு வகையான ஆன்மீக முன்னேற்றமே. மந்திரங்களை உச்சரிக்கும் போது வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் மனக் குவிப்போடு உச்சரித்தால் அது ஒரு வகையான தியானமாகிறது, அல்லது தவமாகிறது.

மந்திரங்களோ, பாடல்களோ எது ஒருவரை நல்ல சிந்தனைகளுக்கு அழைத்து செல்கிறதோ, அது வரவேற்கத்தக்கதே.

சிலர் குறிப்பிட்ட மந்திரங்களை நூறு முறையோ, ஆயிரம் முறையோ , இலட்சம் முறையோ உச்சரித்தால் அதனால் இன்ன பலன்கள் கிடைக்கும் என்ற வகையில் சொல்வது சரியா என்பது பற்றியே நான் சொல்ல வந்தது -ஆதி சங்கரரோ, கீதையிலோ இந்த மந்திரங்களை இவ்வளவு முறை உச்சரித்தால் போதும், உனக்கு ஒட்டு மொத்தமாக எல்லாத் துன்பங்களில் இருந்தும் விடுதலை கிடைத்து விடும் என்று சொன்னதாக எனக்கு தெரிந்த வரையில் இல்லை.

கீதையிலே கண்ணன் கஷ்டப் படுபவர்கள் கஷ்டம் தீர என்னை நோக்கி வேண்டுகின்றனர் என்று சொல்லி இருக்கிறார். அதற்க்கு இந்த மந்திரத்தை இவ்வளவு முறை சொல்ல வேண்டும் என சொன்னதாக இல்லை. ஆதி சங்கரரும் மண்டன மிஷ்ரருக்கும் நடந்த விவாதமும் உங்களுக்கு தெரிந்து இருக்கும். அதை பற்றி தனிக் கட்டுரை வெளியிடுவோம்.

ஆதி சங்கரரின் வார்த்தைகளைப் படிக்கும் போது , எனக்கு உண்டான புரிதலை கட்டுரையாக எழுதுகிறேன். அதிலே மாற்றுக் கருத்து இருக்கலாம். அது பற்றி சிலர் மறுப்பு தெரிவிக்கும் போது, மீண்டும் படித்து பார்க்கிறோம். அப்போது இன்னும் சில சுலோகங்கள் கிடைக்கின்றன. நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்கிறீர்கள் என்பதே முக்கிய விஷயம் தான். ஆதி சங்கரரை பல்வேறு கோணத்திலும் நோக்க முடியும் என்பதன் அறிகுறியே இந்தக் கட்டுரைகள். ஒரு வேளை நாம் நோக்கும் கோணம் முக்கிய கோணமாக இருக்கக் கூடும்.

மற்ற படி கிளப்புக்கு செல்வதில் நேரம் செலவழிப்பதை காட்டிலும் , டி.வி . டான்ஸ் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் நேரம் செலவழிப்பதை காட்டிலும் மந்திரங்களைக் கேட்பதில் நேரம் செலவழிப்பது உபயோகமானதே – அப்படிக் கேட்பது அவர்கள மனதில் நல்ல சிந்தனைகளை , மன அமைதியை, மனக் குவிப்பை உருவாக்கக் கூடுமானால்!

உங்கள் கடிதத்துக்கு மிக்க நன்றி. அவை எம் சிந்தனையை தூண்டவே செய்கின்றன.

செத்துப்போன பார்ப்பனியர்களின் வடமொழி மந்திரங்களுக்கு வாழ்வளிக்கும் வள்ளல் திருச்சியார் வாழ்க வாழ்க..(அய்யய்யோ வாழ்க என்பதற்கு வடமொழியில் என்னனு தெரியலையே..கோச்சிக்கபிடாது..)

சகோதரர் பிரதீப்,

தாய் மொழியாம் தமிழ் மொழியின் தொன்மையை , சிறப்பை சொல்லுவதில் நாம் என்றுமே பின் வாங்கியதில்லை. எந்த ஒரு மொழியும் தமிழ் மொழியின் மீது ஆதிக்கம் செலுத்தவும் அனுமதிக்க மாட்டோம்.

அதே நேரம் உண்மையை நோக்கி செல்ல தூண்டும் கருத்துக்கள், விழிப்புணர்ச்சியை உருவாக்கும் கருத்துக்கள் எந்த மொழியில் இருந்தாலும் அவற்றை சுட்டிக் காட்ட தயங்க வேண்டியதில்லை.

வாழ்க என்பதற்கு வடமொழியில் என்ன வார்த்தை என்று எனக்கும் தெரியாது. நான் வட மொழி படிக்கவில்லை.
நாம் இங்கே கூறும் வாக்கியங்கள் நூல்களில் எழுதப் பட்டுள்ள பதவுரை அவற்றுக்கான ஆங்கில மொழி பெயர்ப்பு அங்கே இருப்பதால் அவற்றை வைத்து எழுதுகிறோம்.

ஸ்ரீ திருச்சிக்காரன், நமஸ்தே

யாகங்கள், சாஸ்த்ர படனம், தேவதா பக்தி இவையெல்லாம் எதற்கும் உதவாது என்று தாங்கள் ஒரு pre conceived notion வைத்துக்கொண்டு அதன் படி விவேக சுடாமணியை வாசித்தது போல் தெரிகிறது. Selective ஆக quotes உபயோகித்து இருக்கிறீர்கள்.

நான் தத்ஸமயம் பாஷ்ய பாடம் வாசித்து வருவதால் மிகத்தெளிவாக மறுப்பு சொல்ல இயலாது. பின்னிட்டும், தெரிந்த வரைக்கும் விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

\\\\\\\\\இந்துக்களின் அடிப்படையான புனித நூல்கள் ரிக், யஜூர், சாமம் , அதர்வணம் ஆகிய நான்கு வேதங்கள், மற்றும்பகவத் கீதை உள்ளிட்ட ஸ்ருதி எனப் படுபவை ஆகும்.\\\\\\\\ பகவத் கீதை இதிஹாஸமாகிய மஹாபாரதத்தின் அங்கம். ஸ்ம்ருதி க்ரந்தங்களில் அடங்கும்.

\\\\\\\\\\காலப் போக்கில் வேதங்களை படித்து மந்திரங்களை சரியாக உச்சரித்தால் போதும் என்கிற எண்ணம் பலரின் மனத்தில் தோன்றி இருந்தது.
மந்திரங்களை உச்சரித்தால் போதும், நினைத்தது நடக்கும், கஷ்டங்கள் தீரும் என்று எண்ண ஆரம்பித்தனர்.\\\\\\\

யாதொரு சித்தாந்திகளின் நிலைப்பாடும் மேற்கண்டவாறு இல்லை.

வேதத்தில் சொல்லப்பட்ட யாகங்களைச்செய்தால் போதும் என்பது பூர்வமீமாஸகர்களின் நிலைப்பாடு. இஹ பர சுகங்களை அருள்வது வேதத்தில் சொல்லப்பட்ட யாகங்களேயன்றி கடவுள் என்ற தத்வமன்று என்பதும் இவர்களின் முக்யமான நிலைப்பாடு. வேதங்களின் உத்தர பாகமான உபநிஷதங்கள் அர்த்தவாதம் என்பதும் இவர்களின் நிலைப்பாடு. மந்த்ர படனம் போதும் என்பது யாதொரு சித்தாந்திகளின் நிலைப்பாடு அன்று.

சங்கரர் யாகங்கள் செய்யவேண்டாம் என்று எங்கும் சொல்லவில்லை. அவித்யை அகன்று துலங்கும் அத்வைதானுபூதி தேவதா பக்தி செய்வதாலோ யாகங்கள் செய்வதாலோ க்ரந்தங்களை வாசிப்பதாலோ மட்டிலும் கிட்டாது என்று தான் சொல்கிறார். இங்கு மட்டிலும் என்பதில் அழுத்தம் முக்யம். அத்வைதானுபூதிக்கு இவைகள் நேரடி ஹேது ஆகாது என்று சொல்லலாம். ஆனால் அத்வைதானுபூதி கிட்ட வேண்டியதற்கு தேவையான சித்த சுத்தியை இவைகள் நல்க இயலும். தவிர சில க்ரியைகள் செய்யாது போனால் கிட்டும் ப்ரத்யவாயத்திலிருந்து தப்ப வேண்டியும் க்ரியைகள் செய்ய வேண்டும்.

மேதாவீ புருஷோ வித்வான் ஊஹாபோஹவிசக்ஷண :
அதிகாரி ஆத்மவித்யாயாம் உக்தலக்ஷணலக்ஷித : ( 16 )

சிஷ்ய லக்ஷணம் அற்விக்கும் ச்லோகம் இது. சிஷ்யனாகப்பட்டவன் “வித்வான் என்பதால் “பதம்” எனும் வ்யாகரண சாஸ்த்ரத்தையும் “ஊஹாபோஹவிசக்ஷண :” என்பதால் “வாக்யம்” எனும் மீமாம்ஸா சாஸ்த்ரத்தையும் “ப்ரமாணம்” என்னும் ந்யாய சாஸ்த்ரத்தையும் அறிந்தவனாக இருக்கவேண்டும் என தெரிவிக்கிறார்.
சமாதி ஷட்குண சம்பத்தை தெரிவிக்கும் வரிசையில் ச்ரத்தையைப்பற்றி சொல்கையில்

சாஸ்த்ரஸ்ய குருவாக்யஸ்ய ஸத்யபுத்யா அவதாரணா
ஸா ச்ரத்தா கதிதா ஸத்பி: யயா வஸ்து உபலப்யதே ( 26 )

எதனால் ஆத்மைக்யபோதம் ஸித்தியாகிறதோ அந்த குருவின் உபதேசமும் சாஸ்த்ரமும் ( ச்ருதி) ஸத்யம் தான் என்ற எண்ணத்தினால் ஏற்படும் த்ருட விஸ்வாசம் ச்ரத்தை என சாதுக்களால் சொல்லப்பட்டிருக்கிறது என தெரிவிக்கிறார்.

கசடற கற்க மற்றும் நிற்க அதற்கு தக என்று ஸ்ரீ வள்ளுவர் கூறுவது போல்

படி படித்தை விசாரம் செய் என்று கீழ்க்கண்ட ச்லோகத்தில் சொல்கிறார்

வேதாந்தார்த்த விசாரேண ஜாயதே க்ஞானமுத்தமம்
தேன ஆத்யந்திக ஸம்ஸார துஃகநாஸ: பவதி அனு

உபநிஷத்துகளீன் தாத்பர்யத்தை விசாரிப்பதால் ( படித்தாலன்றோ விசாரிக்க முடியும்?) சிறந்த அறிவு ஏற்படும். அதனால் உடனேயே ஸம்ஸாரத்தினால் ஏற்படும் துஃக நாசம் ஏற்படும். அதாவது அபுனர்பவம் கிட்டும் என்கிறார்.

56,58,59 மற்றும் 60 ச்லோகங்களில் விரோதாபாஸம் அல்ல. பக்தி, யோகம், சாங்க்யம், யாக யக்ஞாதிகளெல்லாம் செய்து அதன் மூலம் கிட்டும் சித்த சுத்தியாலும் குருவின் உபதேசத்தாலும் தொடர்ந்து செய்யும் வேதாந்தார்த்த விசாரத்தாலும் அத்வைதானுபூதி கிட்டும் என்பது சித்தாந்தம்.

சப்த ஜாலம் மஹாரண்யம் சித்த ப்ரமணகாரணம் என்று 62ம் ச்லோகத்திலும்
வாக்வைகரீ சப்தஜரீ சாஸ்த்ர வ்யாக்யான கௌசலம் என்று 60 ம் ச்லோகத்திலும்

சொல்லவரும் விஷயம் சாஸ்த்ர படனத்தை அத்வைதானுபூதி கிட்ட விசாரம் செய்வதற்கு அன்றி தான் வித்வான் என ஸ்தாபிக்க வேண்டி தடபுடலாக ப்ரவசனம் செய்ய உபயோகித்தால் அது வ்யர்த்தமாகும் என்றே.

சாஸ்த்ர படனமே வ்யர்த்தம் என்று அல்ல.

ச்லோகம் 33 ல் இருந்து 49 வரை மற்றும் பிற ச்லோகங்களிலும் குருவின் முக்யத்துவத்தை மிகத் தெளிவாக சங்கரர் தெரிவிக்கிறார்.

கசடற கற்றறிந்து ச்ரோத்ரியனாக இருக்கும் குருவே சரியான அர்த்தங்களையும் பாதையையும் காண்பிக்க முடியும்.

அல்லாவிடில் தனக்கு தோன்றிய படி அர்த்தம் செய்து கொண்டால் சங்கரர் ச்லோகங்கள் முன்னுக்கு பின் முரண் போல கூட தோன்றலாம்.

அன்புக்குரிய திரு. கிருஷ்ணகுமார்,

வணக்கம் .

நான் ஏற்கனவே தெளிவாக சொல்லி இருக்கிறேன்.

“இந்த மந்திரங்களை சொல்லுங்கள், இந்த பலன் கிடைக்கும்” என்று சங்கராச்சாரியார் சொல்லி இருக்கிறாரா? அதற்க்கு ஏதாவது மேற்கோள் காட்டி சொல்ல முடியுமா?

நல்ல குரு கிடைத்தால், உண்மையை உணர்ந்த குரு கிடைத்தால் நல்லது. அப்படி சரியான குரு கிடைக்காத பட்சத்திலே, ஆபாச பேர்வழிகளையும், கிரிமினல் பேர்வழிகளையும் குருவாக வைத்துக் கொள்வதற்கு , குரு இல்லாமலே இருப்பது நல்லது.

மற்றபடி ஆன்மீக விடுதலைக்கு அனுபூதிக்கு நீங்கள் சொல்வது போல வியாகரண படிப்பு, நியாய படிப்பு இவை எல்லாம் கண்டிப்பாகா இருந்தே ஆக வேண்டும் என்று இல்லை.

பட்டினத்தார் எந்த நியாய சாஸ்திரத்தைப் படித்தார். கண்ணப்பர் எந்த வியாகரனத்தைப் படித்தார். தியாகராஜர் கூட தான் வேதங்களை, சாஸ்திரங்களி படிக்கவில்லையே என்று சொல்லி இருக்கிறார். சபரி எந்த சாஸ்திரத்தைப் படித்தார். நியாய சாத்திரம் படித்தவருக்கு, வியாகரணம் தெரிந்தவருக்கு பட்டினத்தாரைப் போல 600 கோடிப் பொன்னை விட்டு செல்லும் மன நிலை வருகிறதா? தியாகராஜர் போல அரசர் கொடுத்த பொன் முடிப்பை வேண்டாம் என சொல்லும் மன நிலை இருக்கிறதா? அதுதான் முக்கியம், கோயம்பெட்டில் வண்டி வலிப்பவர் கூட ஞானி ஆக முடியும்.

இந்த சாஸ்திரம் எல்லாம் படிப்பதானால் படியுங்கள். ஆனால் ஆதி சங்கரர் அழுத்தம் கொடுத்து பக்தி மார்க்கத்துக்கு தான். அதான் சம்ஸ்கிருத பாடத்தை உரு அடித்தவரைப் பார்த்து பார்த்து நஹி நஹி ரக்ஷதி என்று தெளிவாக சொல்லி இருக்கிறார். அந்தப் பாடலில் முதலிலேயே பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம், கோவிந்தம் பஜ மூடமதே, என்று பாடி இருக்கிறார்.

நீங்கள் தயவு செய்து ஆதி சங்கரரை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.

//யாகங்கள், சாஸ்த்ர படனம், தேவதா பக்தி இவையெல்லாம் எதற்கும் உதவாது என்று தாங்கள் ஒரு pre conceived notion வைத்துக்கொண்டு அதன் படி விவேக சுடாமணியை வாசித்தது போல் தெரிகிறது. Selective ஆக quotes உபயோகித்து இருக்கிறீர்கள்//

அன்புக்குரிய நண்பரே, கொஞ்சம் பிராக்டிகலாக சிந்தித்து பாருங்கள். முதலில் இந்த யாகங்களை செய்யப் போவது யார்? அப்படி செய்வதாக இருந்தாலும் உங்கள் அஸ்வ மேத யாகக் குதிரை சீனாவுக்குள் சென்று விட்டால், அவர்கள் அந்தக் குதிரையை அடித்து சாப்பிட்டு விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? எனவே போகாத வூருக்கு நாம் வழி தேட வேண்டிய அவசியம் என்ன?

இராமர் கூட அஸ்வ மேத யாகம் செய்தார். ஆனால் இராமரின் வாழ்வில் அந்த யாகம் எந்த அளவுக்கு முக்கியமானது. மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் துன்பம் ஏற்று வனம் சென்றார் இராமர், பதவியை தோளில் போடும் துண்டாக கருதி, கொள்கையை இடுப்பில் அணியும் வேட்டியாக உண்மையிலேயே வாழ்ந்து காட்டியவர் இராமர், தனக்கு எவ்வளவு கஷ்டம் வந்த போதிலும் நன்னெறியை விட்டு விலகவில்லை, தன மனைவியை தவிர பிற பெண்களை மனதாலும் எண்ணவில்லை… இவை போன்ற எண்ணற்ற சிறந்த குணங்கள், செயல் பாடு இவையே இராமரின் சிறப்பு, பெருமை எல்லாம். இராமர் அஸ்வ மேத யாகம் செய்ததால் அந்த யாகத்துக்கு தான் மதிப்பு, அவருக்கு ஒன்றும் இல்லை.

இந்து மதத்தில் யாகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த கால கட்டம் மலையேறி விட்டது. அந்தக் காலத்திலேயே கூட பக்தி வழியில் சிறந்து விளங்கியவர்கள் மார்க்கண்டேயன், துருவன், பிரஹலாதன் … இப்படிப் பலர் இருந்தனர். தனிப்பட்ட மனிதருக்கு யாகத்தினால் வரும் ஆன்மீக முன்னேற்றத்தை விட, பக்தியினால் ஆன்மீக அதிகமான முன்னேற்றம் வரும். யாகம் சிலருக்கு மாத்திரமே சாத்தியம். பக்தி எல்லோருக்கும் சாத்தியம்.

சாஸ்திர பாடனம் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை, முண்டக உபநிடதம், பிரஹாதரண்யா உபநிடதம் இப்படி பல உடநிடதங்களில் உள்ள சிறந்த கருத்துக்களை மேற்கோள் காட்டி இருக்கிறேன்.அந்த பாடங்களை புரிந்து ஒருவன் முன்னேற வேண்டும். அதை சொல்லிக் கொண்டே இருந்தால் தானாக ஏதாவது நடக்கும் என்று நினைக்க வேண்டாம் என்பதே நமது கருத்து. நீங்கள் நான் கட்டுரையில் எழுதியவற்றைப் படிக்கவும்.

அமைதியான பக்தியை, ஒருவரின் மனதில் நல்ல எண்ணங்களை உருவாக்கும் பக்தியை, ஆன்மீக முன்னேற்றத்தை தரும் பக்தியை பிற மார்க்கங்களின் மீது வெறுப்புணர்ச்சியை உருவாக்காத பக்தியை நாம் குறை சொல்லவில்லை, அது நல்லதே.

//Selective ஆக quotes உபயோகித்து இருக்கிறீர்கள்//

Quote என்பதே சில செய்யுள்களை எடுத்து சுட்டிக் காட்டுவதுதான்.ஒரு கட்டுரையில் விவேக சூடாமணி முழுவதையும் கோட் செய முடியுமா? மையக் கருத்தை மாற்றும் வகையில் எதுவும் இல்லை.

//மேதாவீ புருஷோ வித்வான் ஊஹாபோஹவிசக்ஷண :
அதிகாரி ஆத்மவித்யாயாம் உக்தலக்ஷணலக்ஷித : ( 16 )//

வித்வான் என்றால் நியாய சாஸ்திரம் படித்தவன் தான் என்பது உங்களின் வியாக்கியானம். எது உண்மை, எது உண்மையல்ல என்று ஆராயும் அறிவு உடையவனே வித்வான் ((ஆன்மீக விடயத்தில் வித்வான் ) என்று சிலர் சொல்கிறார்கள். “பண்டிதர்” என்பதற்கு உங்கள் விளக்கம் என்ன?

எனது அன்பிற்குறிய ப்ரதீப்,

பால்யத்தில் தமிழிலக்கணம் வாசிக்கும் போது அலகிட்டு வாய்ப்பாடு கூறு என்னும் பகுதி நான் மிக ரசித்து படித்த பகுதி. அதிலே ஒன்று எழுசீர் கழிநெடிலடி விருத்தம். தற்போது இதன் தளை அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு நினைவில் இல்லை. தமிழ் பேசத்தெரிந்து யாப்பிலக்கணம் படிக்காமலிருந்தால் இஃது என்னவென்றே தெரியாமலும் போகலாம். எனக்கு தெரியவில்லை என்று சொன்னால் அது ஞாயம். எனக்கு தெரியவில்லை என்று சொல்வதற்கு பதில் எனக்கு தெரியாது என்ற ஒரே காரணத்தால் எழுசீர் கழிநெடிலடி விருத்தம் செத்து விட்டது என்று சொல்வது தவறு அல்லவா அன்பரே! அதே போல் தான் ஸம்ஸ்க்ருதத்தில் புனையப்பட்ட சாஸ்த்ரங்களின் விஷயமும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: