Thiruchchikkaaran's Blog

தியாகராஜரின் வெற்றிக்கு காரணம் என்ன? – Part- 1

Posted on: January 14, 2011


தியாகராஜரின் வெற்றிக்கு காரணம்  என்ன?

தியாகராஜரை பலரும் ஒரு இசை அறிஞராக அறிந்திருந்தாலும், அவர் ஒரு ஆன்மீக சிந்தனையாளர் என்பதையும் பலரும் அறிந்தே உள்ளனர்.

இசையை எடுத்துக் கொண்டால் அவருடைய பாடல்கள் இலக்கண சுத்தமாக அசை சீர் தளை அடி பிசகாமல் உள்ளன.  எதுகை மோனையையும் தேவைப் படும் போது  நன்றாக கையாண்டு இருக்கிறார் தியாகராஜர்.

எந்தரோ மகானுபாவுலு

அந்தரிக்கு வந்தனமுலு

சந்துரு வர்ணு நீ

அந்த சந்தமுனு ஹிருதயார

விந்தமுன ஜூசி பிரம்மானந்தமனுபவின்ச்சுவார்

எந்தரோ மகானுபாவுலு

தியாகராஜரின் பாடல்கள் ராக ரீதியான இசையில் பாட மிக எளிதாக  உள்ளதே அவற்றின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில்  ஒன்று.  ஒரு ராகத்தைக் கொடுத்து இந்த ராகத்தில் ஒரு பாட்டு பாடு என்றால், தியாகராஜரின் கீர்த்தனையை எடுத்தால் எளிதாக பாடி விடாலாம் என்று பலரும் சொல்லுவதை கேட்டு இருக்கிறேன்.

தியாகராஜரின் பெரும்பாலான பாடல்கள் தெலுங்கு  மொழியிலே உள்ளன. தெலுங்கு மொழி தமிழில் இருந்து பிறந்ததால் அதுவும் திராவிடக் குடும்ப மொழியாக உள்ளது. எனவே தமிழ் மக்களும் அதை புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. எனக்கு தாய் மொழி தமிழ் மொழி. மூணாப்பு படிக்கும் வரை எனக்கு தெரிந்த ஒரே மொழி தமிழ் மொழிதான். தியாகராசரின் பாடல்களை கேட்க கேட்க அந்த தெலுங்கு பாடல்கள் புரிய ஆரம்பித்தது.

இதை விட முக்கியமான விடயம் என்ன வென்றால் தியாகராசரின் பாட்டுக்கள் மக்களின் மனதில் உள்ள நல்ல எண்ணங்களை மனதின் மேற்  பரப்புக்கு கொண்டு வந்து, அவர்கள் மனதில் உள்ள ஆசா பாசங்களை பின்னுக்குத் தள்ளி அதனால் மக்களின் மனதில் அமைதியை , சாந்தத்தை உருவாக்கியது. இதுதான் தியாகராசரின் பாடல்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.

( to be Continued)

Advertisements

4 Responses to "தியாகராஜரின் வெற்றிக்கு காரணம் என்ன? – Part- 1"

நான் ஈழத்தமிழன்; நம் இசையின் ரசிகன், தியாகராஜ கீர்த்தனைகள் ;தெலுங்கு மொழியில் பாடப்பட்டவை என்பதை என் 25 வயதிலேயே அறிந்துகொண்டேன்.ஆனால் அதற்கு முதலே கேட்டுள்ளேன்.
இப்போதும் பொருள் புரிவதில்லை. ஆனால் தமிழின் சாயல் உள்ளதால் சில சொற்கள் புரிந்தன.
இப்போ விளக்கம் தேடிப்படிப்பேன்.
எண்ணிலடங்கா கீர்த்தனைகள் மீண்டும் மீண்டும் விரும்பிக் கேட்கிறேன்.
தற்போதைய கச்சேரி அமைப்பே தியாகராஜர் உருவாக்கியது எனப்படித்தேன்.
அதனால் அது முழுமையான கச்சேரிக்கேற்றதாகி வெற்றி பெற்றிருக்கலாம்.
அத்துடன் கர்நாடக சங்கீத வித்துவான்கள் பலரின் தமிழ் மீதான அதீத வெறுப்பால்; தமிழ்ப் பாடல்களைத்
தவிர்க்க வேண்டுமென்னும் வெறிகூட இந்த வெற்றிக்குத் தோன்றாத் துணை.
இதை இன்றைய வித்துவான்கள் நன்கு அறிவர். தமிழைத் துக்கடாவாக வைத்திருப்பதே அவர்களுக்குப்
பேரின்பம் தரும் செயல்.
சில வித்துவான்கள் பாபநாசம் சிவன் பாடல்களில் கூட தேர்ந்து , வடமொழிப் பாடல்களையே எடுத்துப் பாடுவார்கள்.
நிற்க

////இதை விட முக்கியமான விடயம் என்ன வென்றால் தியாகராசரின் பாட்டுக்கள் மக்களின் மனதில் உள்ள நல்ல எண்ணங்களை மனதின் மேற் பரப்புக்கு கொண்டு வந்து, அவர்கள் மனதில் உள்ள ஆசா பாசங்களை பின்னுக்குத் தள்ளி அதனால் மக்களின் மனதில் அமைதியை , சாந்தத்தை உருவாக்கியது. இதுதான் தியாகராசரின் பாடல்களின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்./////

இதை வாசித்துச் சிரித்தேன். காரணம்…தியாகராஜ விழாவில்; தண்டபாணி தேசிகர் ; தமிழில் பாடிவிட்டாரென , காவேரி நீர் கொண்டு கழுவி; அந்த நீசமொழியின் தீட்டைத் தீர்த்தார்களாம்.
தியாகராஜர் கீர்த்தனைகளைத் தினமும் பாடிய அன்றைய வித்துவான்கள்.தியாகையர் உயிருடன் இருந்தால் அச்செயலுக்குக் காவிரியில் குதித்துச் செத்துருப்பார்.
இப்படி ஒரு ஈனச் செயலையன்றும்; இன்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் செய்யத் தயங்காத இவர்கள்
தியாகராஜ கீர்த்தனைகளை பாடி மனச் சுத்தி பெற்றவர்கள் எனக் கூறினால் ; சிரிப்பு வருமா? வராதா?
தமிழனுக்கு தமிழில் வழிபடும் உரிமை; பாடல் கேட்கும் உரிமை எனக் கூறிப்பாருங்கள், “சோ” மாறிகளேல்லாம் கூக்குரலிடும்.
மீண்டும் சொல்கிறேன். எனக்கு விளக்காவிடிலும் தியாகராஜ கீர்த்தனை கேட்கப் பிடிக்கும்.

அன்புக்குரிய திரு. லோகன்,

தியாகராஜரை ஆன்மீக, தத்துவ கோணத்தில் அணுகி பாடினால் அவரது பாடல்கள் மனதில் நல்ல உணர்வுகளை ஏற்படுத்தும் என்று நான் கருதுகிறேன்.

தியாகராஜர் பாடல்களை – வெறுமனே இசையாக கருதி , இசையையும் பாடலையும் தப்பில்லாமல், சுருதி , லயம் மாறாமல், ராகம் தாளம் தப்பாமல், இனிமையாகப் பாடி மக்களை மகிழ்விப்பது என்பது வேறு விடயம்.

தியகரஜாரின் பாடல்களைப் பாடுபவர்களுக்கு , பாடியவர்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்- ஏனெனில் அவர்கள் இல்லாவிட்டால் நாம் இன்று தியாகராஜரைப் பற்றி அறிந்திருக்க முடியாது . ஆனால் அவர்கள் எல்லோரும், தியாகராஜரின் பாடல்களின் பொருளை உணர்ந்து பாடுகிறார்களா, அதில் தங்கள் மனதை தோய விட்டு பாடுகிறார்களா என்பதை நாம் சொல்ல இயலாது.

சங்கீத அறிவும், பயிற்ச்சியும் உடைய யாரும் தியாகராஜரின் பாடல்களைப் பாட முடியும். ஆனால் அதை புரிந்து மனம் தோய்ந்து பாடுபவர் மனங்கள் தான் முன்னேற்றம் அடைய முடியும். ராமா, ராமா என்று சொல்லி பிரச்சாரம் செய்து விட்டு, இன்னொருவரின் மனைவியின் மீது ஆசைப் பட்டால் அதற்க்கு என்ன அர்த்தம் , அவர் உண்மையிலே இராமனை கொள்கை பூர்வமாக அறிந்து உணர்வு பூர்வமாக தோயவில்லை என்று தானே அர்த்தம்.

சபாக்களில் கச்சேரி பாடுவதை வகுத்துக் கொடுத்தது தியாகராஜரா என்பது எனக்கு தெரியாது. தியாகராஜர் தினமும் உஞ்சி விருத்தி பிக்ஷை எடுக்கும் போது அவர் இயற்றிய பாடல்களை தெருவிலே பாடிச் சென்றார் என்பதை உறுதியாக சொல்ல முடியும். தியாகராஜர் சபாக்களில் அல்லது அரசு தர்பார்களில் பாடி இருப்பதற்கு வாய்புகள் இல்லை. தஞ்சை யை ஆண்ட சரபோஜி அரசர் பொன்னும் பொருளும் கொடுத்து அரசவைக் கவிங்கராக அழைத்த போது, தியாகராஜர் மறுத்து விட்டார். சுவாதி திரு நாள் எனும் கேரளா அரசரளித்த போதும் மறுத்து விட்டார்.

பாடல் இயற்றி, அதற்க்கு இசை அமைத்து, பாடி அத்தனையும் அவர் எந்தப் பணத்தையும் வாங்காமல் செய்து விட்டார்.

எல்லோரும் அந்த மன நிலையை அடைவது கடினம். எனவே இப்போது சபாக்களில் பாடுவதை பாடட்டும். அதன் மூலம் தியாகராஜரின் பாடல்கள் தொடர்ந்து இருக்கும். நூறு வருடங்கள் கழித்து அதைக் கேட்கும் யாரோ ஒரு இளைஞன் தியாகராசர் போல வாழ முற்படலாம்.

நான் இந்த நவராத்திரி விழாவுக்கு ஒரு நண்பர் வீட்டுக்கு சென்று இருந்தேன், அவர்கள் என்னை பாடச் சொனார்கள். நான் பாடுவது நன்றாக இருக்காது, ஆனாலும் வற்புறுத்துவது நண்பரகளுக்கு வாடிக்கையாகி விட்டது.

நான் “எந்தரோ மகானுபாவுலு” என்ற பாடலை தெலுங்கிலும், தமிழிலும் இவ்வாறு பாடினேன்.

நான்

எந்தரோ மகானுபாவுலு

அந்தரிக்கு வந்தனமுலு

சந்துரு வர்ணு நீ

அந்த சந்தமுனு ஹிருதயார

விந்தமுன ஜூசி பிரம்மானந்தமனுபவின்ச்சுவார்

எந்தரோ மகானுபாவுலு

அந்தரிக்கு வந்தனமுலு

எத்தனை நல்லவரோ

அவருக்கு வணக்கங்கள்

சந்திரன் தன்மை நீ,

அந்த இராம சந்திரனை

மனதில் ஆராதனை செய்து

பேரானந்தம் அனுபவித்தவர்

எத்தனை நல்லவரோ

அவருக்கு வணக்கங்கள்

என்று தமிழிலும் வரிக்கு வரி மொழி மாற்றம் செய்து பாடினேன்.

ஆனால் மொழி மாற்றம் செய்யும் போது நான் அமைக்கும் வரிகளில் எதுகை மோனையா இலக்கண முறையோ இருப்பதில்லை.

ஆனாலும் தவறில்லை, மக்களை பாடலின் கருத்தை புரிந்து கொள்கிறார்கள், அது முக்கியம் என நினைக்கிறேன். தியாகராஜர் இன்று இருந்திருந்தால் இதைக் கண்டு மகிழ்ந்தே இருப்பார் என நினைக்கிறேன்.

தியாகராஜர் பாடலை பாடும் போது (குறைந்த பட்சம் வீட்டு நிகழ்ச்சிகளிலாவது) தமிழிலும் பாடுவது சிறப்பானதும் உபயோகமானதும் ஆகும். சபைகளில் பாடும்போது மூலக் கீர்த்தனையை அப்படியே தொடர்வது சரியாக இருக்கும்.

தியாகராஜரின் பாடல்களே , என்னுடைய ஆன்மீக ஆராய்ச்சின் முக்கிய பகுதியாக அமைந்து விட்டன என்பதை நான் சொல்லத் தயங்க வில்லை.

நான் சுவாமி விவேகானந்தர், கீதை, புத்தர், ஆதி சங்கரர், பட்டினத்தார், சித்தர்கள், இயேசு, நபி, நானக், …. இவர்களின் மூலமாக பல ஆன்மீக விடயங்களைக் கற்ற போதும், நான் என்னுடிய வாழ்க்கையில் ஆன்மீக முயற்சியில் ஈடுபடக் காரணம் தியாகராஜரே.

அவர் பாடல்களே என் மனதில் அமைதியையும் , பொறுமையையும், நட்புடன் அணுகும் தன்மையையும் அளித்தன.

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

தியாகராஜரைப் பற்றி உங்களால் சிறிது தெரிந்துகொண்டேன்.நன்றி.

Dhanabal Sir,

Thanks.We will have more articles on Thiyakarajar.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: