Thiruchchikkaaran's Blog

நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துக்கள்.

Posted on: January 13, 2011


தமிழ் சமுதாயத்தின் அடையாளங்களில் ஒன்று பொங்கல். தமிழ் சமுதாயம் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும்  சரி, அது தமிழ் நாடோ, ஈழமோ, சிங்கப்பூரோ, தென் ஆப்பிரிக்கவோ, அமெரிக்கவோ, பிஜியோ…. எங்கிருந்தாலும் தமிழ் சமுதாயம் இருந்தால் அங்கே பொங்கலும் இருக்கும்.

பொங்கலின் பரிமாணங்கள் பல.

சிறு வயதில் பொங்கல் பண்டிகை என்றால் வூரே களை கட்டுவதைப் பார்த்து இருக்கிறேன். எல்லோரும் கடைத் தெருவுக்கு வந்து மஞ்சள், கரும்பு, வாழை, புதுப் பானை .. இவற்றை வாங்கி கொண்டு தெருவில் செல்வதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.

எனக்கு சர்க்கரைப் பொங்கல் ரொம்பப் பிடிக்கும். வீட்டுக்கு வெளியிலே தான் பொங்கல் வைப்பார்கள். பொங்கல் பொங்கும் போது “பொங்கலோ பொங்கல்”என்று கத்துவோம். பொங்குகிற நேரத்திலே வேறு ஏதாவது விளையாட்டுக்கு போய் விட்டு, “‘பொங்கலோ பொங்கல்’ என்று கத்தாமல் விட்டு விட்டால் அப்புறம் ரொம்ப நாளைக்கு பீலிங்ஸா இருக்கும்.

பொங்கல் அன்று படையல் எல்லாம் போட்டு சாப்பிட்டு விட்டு  கரும்பையும் அன்று தின்றே ஆக வேண்டும். இதை எல்லாம் முடித்து விட்டு, மெதுவாக நண்பர்கள் வீட்டுக்கு உலாவ  போவாம்.  நண்பன் அம்மா கண்ணில் மாட்டினால் அவ்வளவுதான். கொஞ்சம் பொங்கல் சாப்பிட்டு தான் போகணும் என்பார்கள்.. வீட்டில சாப்பிட்டோம் மா… என்றால் கேட்க  மாட்டர்கள். வற்புறுத்தி உண்ண வைப்பார்கள். எத்தனை நண்பர்கள் வீட்டில் சாப்பிட முடியும்?

பொங்கலின் முக்கிய பரிமாணங்களில்  ஒன்று பொங்கல் வாழ்த்துக்கள். வண்ண மயமான வாழ்த்து அட்டைகள். அவற்றை முகர்ந்தால் ம்… ம்….எவ்வளவு வாசனை. எல்லா கடவுள்களின் படத்தையும் பொங்கல் வாழ்த்தாகப் பார்க்கலாம். அதோடு நடிகர்களின் படம் வேறு, எம். ஜி.ஆர் , சிவாஜி படங்கள் போட்ட வாழ்த்து அட்டைகள் முன்பு பிரபலம். அதிலே சொர்க்கம் படத்தில் சிவாஜி “பொன்மகள் வந்தால் படத்தில் பணக் காசுகளுக்கு நடுவில் புரளும் படத்தை போட்டு,  தங்க காசுகளை அப்படியே கொஞ்சம் விளிம்பிலே வெட்டி 3D எபக்ட் கொடுத்து இருப்பார்கள். எனக்கு விஜய் ஸ்ரேயா நடித்த  ரி- மிக்ஸ் – பொன் மகள் வந்தால்  பாட்டைக் கேட்கும் போது அந்த பொங்கல் வாழ்த்தின் நினைவுதான் வரும். சிறுவனாகவே இருந்திருக்கக் கூடாதா, வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்?

நண்பர்கள்  அனைவருக்கும்  பொங்கல் வாழ்த்துக்கள்.

மேலும் இந்த புத்தாண்டு அரசியலில் நான் இறங்க விரும்பவில்லை. இத்தனை நாள் கழித்து வந்த ஞானோ தயமாக தமிழ் புத்தாண்டை பொங்கலோடு இணைத்து இருக்கிறார்கள். நாளைக்கு ஆட்சி மாறினால் திரும்பவும் மாற்றுவார்கள். இவரகளின் அரசியலில் நாம் இறங்கக் விரும்பவில்லை. பின்பற்றுவதோ கிரிகோரியன் கேலண்டர் எனப் படும் ஐரோப்பிய கால ஆண்டு அட்டவணையை. எப்படியோ இந்த அரசியல் பொங்கலின் மகிழ்வை கெடுக்க நான் விரும்பவில்லை.

நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துக்கள்!

Advertisements

7 Responses to "நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான பொங்கல் வாழ்த்துக்கள்."

Ungalukkum pongal vazhththukkal uriththaakaddum. I too experiensed the very same at my younger age. I think every one did the same.I hope it conitnues within tamils all over the world otherthan Tamil Eelam.
Love Logan

மிக்க நன்றி திரு. லோகன்,
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தவருக்கும் , நண்பர்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள். அதே நேரம் ஈழத்தில் தமிழரின் நிலையை நினைத்தால் பொங்கல் நம் தொண்டைக்குள் இறங்காது என்பது தான் நிலை.

உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். வாழ்த்துகள். இங்கு நாளை 15-01- 2011 எனக் கூறுகிறார்கள்.

அன்புக்குரிய திரு. லோகன்,

நன்றி,

பொங்கல் திருநாள் 15 -01 -2011 ம் நாள்தான்.

சகோ.திருச்சிக்காரர் அவர்களுக்கு என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நன்றி, தனபால் சார், உங்களுக்கும், உங்கள சுற்றத்தினர், நண்பர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: