Thiruchchikkaaran's Blog

நாத்தீக நண்பர்களே… கடவுள் இருப்பதற்கான ஆதாரம் இதோ…..

Posted on: January 8, 2011


காரணமில்லாமல் யாரயுமே வெறுக்க வேண்டியதில்லை, எந்த ஒரு கோட்பாட்டையும் வெறுக்க வேண்டியதில்லை. எந்த ஒரு கோட்பாட்டையும் ஆராய்ச்சி செய்கிறோம், மக்களுக்கு நன்மை இருந்தால் எடுத்துக் கொள்கிறோம், பிரச்சினை என்றால் அதை விலக்குகிறோம். இது நல்ல செயல் பாடுதானே.  

கம்யூனிசத்திலும் மக்கள் நனமைக்கான கோட்பாடுகள் உள்ளன. கேபிடலிசத்தாலும் நன்மைகள் உண்டு இரண்டிலும் உள்ள நல்ல கோட்பாடுகளை எடுத்துக் கொள்வோம். 

இதிலே கடவுள் நம்பிக்கையில் முக்கிய கவனம் செலுத்தும் கோட்பாடாளர்களும் உள்ளனர்.

வெளிப்படையாக சொன்னால் இன்றைக்கு உலகிலே யாரும் கடவுளை பார்த்ததும் இல்லை. கடவுள் இருப்பிற்கான சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணம் எதையும் யாரும் தரவில்லை. ஆனாலும் யாரவது அமைதியான முறையிலே கடவுளை வணங்கிக்  கொண்டால் அதிலே நாம் ஆட்சேபிக்க ஒன்றும் இல்லை.

ஏதோ மனக் கஷ்டத்திற்கு ஒரு விடிவு காலம் கிடைக்கும் என்று நம்பிக்கையை உருவாக்கும் விதமாக பலர் வழிபாட்டு தளத்திற்கு செல்லுகின்றனர். சில பேர் கடமையாக எண்ணி வழிபாடு செய்கின்றனர். எப்படி இருந்தாலும் சரி, அவர்களை  நாம் இகழவில்லை. அவர்கள் வணங்கும் கடவுளையும் நாம் இகழவில்லை. கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ – நாம் ஏன் வெறுக்க வேண்டும்? நாம் வெறுக்கவில்லை, அதனால் எல்லோர் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளுகிறோம்.

நல்லிணக்க அடிப்படையிலே இந்த உலகில் உள்ள எல்லா மதத்தவரின் விழாக்களிலும்,  வழி பாட்டிலும் கலந்து கொள்கிறோம். ஏனெனில் இது மத சகிப்புத் தன்மையை வளர்க்கவும், நல்லிணக்கத்தை உருவாக்கவும் ஆகும்.

அவர்கள் வழிபாடு நடத்தும் போது நாம் கண்ணை மூடி, மற்ற எல்லாவற்றையும் மறந்து மனக் குவிப்பு செய்கிறோம். அப்படி செய்வது மனதில் அமைதியை உருவாக்குகிறது. சர்ச்சைப் பார்த்தால்   இயேசுவின் கொள்கையை நினைவு கூர்கிறோம்,  கோவிலைப் பார்த்தால் இராமரின் கொள்கையை நினைவு கூர்கிறோம். மசூதியைப் பார்த்தால் முகமது  நபியின் கொள்கையை நினைவு கூர்கிறோம், காந்தி சிலையைப் பார்த்தால் காந்தியின் கொள்கையை  நினைவு கூர்கிறோம், பெரியாரின் சிலையைப் பார்த்தால் பெரியாரின்  கருத்துக்களை நினைவு கூர்கிறோம்.

பகுத்தறிவுவாதிகளான நமக்கு எந்த ஒரு கோட்பாட்டையும் பகுத்தறிவு ரீதியிலே ஆக்க பூர்வமாக அணுக தயக்கம் இல்லை. பகுத்தறிவுக்கு ஒப்புக் கொள்ளக் கூடியவற்றை ஒப்புக் கொள்கிறோம். பகுத்தறிவால் ஆராயப் பட்டு  நிரூபணம் ஆகாதவை வெறும் நம்பிக்கையாக  மாத்திரமே உள்ளது, எல்லா நம்பிக்கையும் உண்மை என்று ஆகி விட முடியாது, நிரூபிக்கப் பட்டால் அன்றி.

ஆனால் நம்பிக்கை கோட்பாட்டு சகோதரர்கள் நாம் இவ்வளவு நல்லிணக்கம் காட்டியும் திருப்தி அடைவது இல்லை. அவர்கள் சொல்வதை வார்த்தைக்கு வார்த்தை மறு பேச்சின்றி ஒத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்வதற்கு கடவுள் என்கிற ஒருவரை  நிலை  நிறுத்த வேண்டும். ஆனால் கடவுள் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் அவர்களிடம் இல்லை.

ஆனாலும் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. உலகத்திலே மனிதர்கள் கண்டு பிடித்த எல்லாவற்றையும் அவர்கள் ஒன்று திரட்டுவார்கள்.  வெப்பவியல் கோட்பாடு,  ஆற்றல் மாறாக் கோட்பாடு, ஐன்ஸ்டீன்  பார்முலா, இருதயம் எப்படி இயங்குகிறது ….. இப்படி ஸ்கூலில் , கல்லூரியில் படித்த பாடங்களை எழுதுவார்கள். எல்லாவற்றையும் எழுதி முடித்து கடைசியில் ஒரே ஒரு வார்த்தை, இவ்வளவு நேர்த்தியாக இந்த உலகம் இயங்குவதில் இருந்தே இவை எல்லாம் கடவுளால் படைக்கப் பட்டவை என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஒரே ஒரு வாக்கியத்தை சேருங்கள் . கடவுளை நிரூபணம் செய்தாகி விட்டது என்று நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.  

  சரி அப்பவும் ஒத்துக் கொள்ளவில்லையா,  பிரச்சினை இல்லை,  மின் காந்த விதிகளை எடுத்துக் காட்டலாம். மூளை எப்படி இயங்குகிறது, கண் எப்படி பார்க்கிறது…. பார்த்தீர்களா கடவுள் எவ்வளவு கவனமாகப் படைத்து இருக்கிறார்….. !

சரி இப்பவும் ஒத்துக் கொள்ளவில்லையா?  அடுத்து வேதியல் விதிகளை எடுத்துக் கொள்வோம், கிட்னியை எடுத்துக் கொள்வோம்…. இப்படியே போகும். 

என்ன ஐயா, இவை எல்லாம் மனிதன் தானே கண்டு பிடித்தான், இதை அப்படியே கடவுள்  பேருக்கு மாற்றிக் கொள்கிறீர்களே, இது சரியா, இது அறிவு நாணயமா?

 தம்பி இதை எல்லாம் கண்டு பிடித்தது மனிதன், ஆனால் படைத்தது கடவுள் ….. புரியுதா? என்பார்கள்.

சரிங்க அந்தக் கடவுள் இருப்பதற்கான ஆதாரம் எங்கே ?

 “… அதுதாங்க இது …  ” என்று செந்தில் போலக் கலக்குவார்கள்!

கடவுள் இருப்பதற்கான ஆதாரத்தை நீங்கள் கொடுக்கவே இல்லை. அம்மை நோய்க்கு தடுப்பு, பெனிசிலின்  மருந்து … இப்படி பல நோய்களுக்கும்  மருந்தை மனிதன் கஷ்டப்பட்டு  தேடிக் கண்டு பிடித்து இருக்கிறான். இவற்றை எந்த மதப் புத்தகத்திலாவது கண்டு பிடித்து கொடுத்தார்களா? 

மனிதன் பகுத்தறிவை உபயோகித்து கண்டு பிடித்து இருக்கிறான். எப்படிக் கண்டு பிடித்தான் என்று படிப்படியாக நிலைகளையும்  சொல்லியும் இருக்கிறான்.

இப்படி மனிதன் எல்லாவற்றையும் கண்டு பிடித்து இருப்பதை நீங்கள் எடுத்துப் போட்டு எல்லாம் கடவுளுக்கு மகிமை என்று சொல்கிறீர்களே, இதில் கொஞ்சமாவது உண்மை,  நியாயம் இருக்கா?

கடவுள் இருப்பதற்கான ஆதாரத்தை தரப் போவதாக சொல்லி விட்டு, மனிதர்கள் இங்கே இருப்பவற்றைப் பற்றிக் கண்டு பிடித்ததைக் காட்டுகிறார்கள்!

எல்லாம் ஓக்கே தான் தம்பி, கடவுள் இருப்பதை நாங்கள் நிரூபித்து விட்டோம். இனி எங்களுக்கு அடுத்த வேலை இருக்கிறது,  இப்ப இன்னும் சில பார்ட்டிகள், அவர்களும் கடவுள் இருப்பதை நிரூபித்து விட்டதா சொல்லுராங்க, அவங்க நிரூபணம் பொய், நாங்க நிரூபித்ததுதான் உண்மை என்பதை அவர்களுக்கு காட்டப் போகிறோம், நேருக்கு நேர் வாக்குவாதம் இருக்கு … அதனால் நாங்க இப்ப  கொஞ்சம் பிசியாக இருக்கிறோம், அப்புறம் பாக்கலாமா? நன்றி.

 அண்ணே, கடவுளுக்கான நிரூபணம் கொடுக்கப் பட்டு விடவில்லை, ஆனாலும்   நான் உங்களுடன் இணக்கத்தையே விரும்புகிறோம். உங்கள் மத விழாக்களில் பண்டிகைகளில் கலந்து கொள்ளத் தயார்,உங்கள் வழிபாட்டு முறைகளை உங்களோடு சேர்ந்து கடை பிடிக்க தயார் .

தம்பி, அதைத்தான்  ஆரம்பத்திலேந்தே  சொல்லுறீங்களே,  ஆனால் எங்க வழிபாட்டு முறைகளை மட்டுமே கடைப் பிடிக்க வேண்டும், சரியா?

ஏன் அண்ணே, எல்லோரோடையும் இணக்கமாக இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை அண்ணே.

அடடா…., சரி நீங்க அடுத்த வாரம் வாங்க, பேசுவோம்…  

அடுத்த வாரம் என்ன அண்ணே?

லண்டன்ல புதுசா விண்வெளி  பற்றி   ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளி இட்டு இருக்காங்க, அதை பிரதி எடுத்து வைப்போம்…

Advertisements

4 Responses to "நாத்தீக நண்பர்களே… கடவுள் இருப்பதற்கான ஆதாரம் இதோ….."

வணக்கம் திருச்சிக்காரன் அவர்களே,
தலைப்பை பார்த்து ஓடி வந்தால், இப்படி ஏமாற்றி விட்டீர்களே. உண்மையில் உங்களுக்கு பக்தி என்பது என்ன என்று புரிந்துள்ளதா என்ற கேள்வியை இந்த கட்டுரை எழுப்புகிறது.
//நல்லிணக்க அடிப்படையிலே இந்த உலகில் உள்ள எல்லா மதத்தவரின் விழாக்களிலும், வழி பாட்டிலும் கலந்து கொள்கிறோம். ஏனெனில் இது மத சகிப்புத் தன்மையை வளர்க்கவும், நல்லிணக்கத்தை உருவாக்கவும் ஆகும். //
நீங்கள் மதநல்லிணக்கம் பற்றி பேசுவது சிரிப்பை வரவழைக்கிறது. உதாரணமாக இஸ்லாமியர்களின் மதகொள்கைகளில் ஒன்று ஓரிறை கொள்கை. அதை உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லையே. அவர்கள் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் அவர்கள் விழாக்களில் கலப்பது ( சரியான வார்த்தை நடிப்பது) எந்த வகையில் நல்லிணக்கம். வெறுமனே அவர்களுடன் மண்டியிட்டு அவர்கள் செய்வதையெல்லாம் (சடங்கு போல) செய்வதில் உண்மை எதுவும் இல்லையே. இதற்க்கு பதிலாக, அவர்கள் விழாக்களில் கலந்து கொள்ளாவிட்டாலும், இஸ்லாமியர்களை வழியிலோ தெருவிலோ சந்தித்தால் உள்ளன்போடு பழகுவது நல்ல நல்லிணக்கம். உங்கள் கட்டுரைகளில் இஸ்லாத்தை பற்றிய நல்ல கருத்துகளை எடுத்துக்காட்டி பாராட்டி எழுதினால், நல்லிணக்கம் பெருகும். மற்றவர் மீது குறை சொல்ல ஊரில் லட்சம் மக்கள் உண்டு ஆனால், நல்ல விஷயங்களை அடையாளம் கண்டு, தட்டி கொடுத்து பாராட்டுபவர்கள் மிக சிலரே. நீங்கள் மற்றவரிடம் உள்ள நல்லவற்றை பாராட்டும் போது, மற்றவரும் உங்களிடம் உள்ள நல்லவற்றை அடையாளம் காண்பர். நாம் மற்றவர் குறைகளை சொல்லும்போது, அவரும் நம்மில் குறைகளையே காண்பர். வெகு சிலரே தம்மீது சொல்லப்பட்ட குறைகளை ஆக்கப்பூர்வமாக அணுகி, அவற்றை களைய முனைவர். பலரை தட்டிகொடுத்தே நாம் வழிநடத்த வேண்டும்.
கிறிஸ்துவர்கள் விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் பரவாயில்லை, உங்கள் தளத்தில் சில பைபிள் தொடர்பான கட்டுரைகளை நான் பார்த்துள்ளேன். ஆனால், copy & paste செய்வதை விட, நீங்கள் கொஞ்சம் விளக்கி எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மேலும், கிறிஸ்துவர்களின் பிரதான கொள்கையான “பாவ மன்னிப்பு”, “ஏசுவே ஒரே வழி” போன்றவைகளை நீங்கள் ஏற்காத வரை, எப்படி அவர்களுடன் மதநல்லிணக்கம் செய்கிறேன் என்று எப்படி சொல்ல முடியும்?
என்னை கேட்டால் மதநல்லிணக்கம் என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று. பல இறை கொள்கையை சார்ந்தால், ஓரிறை கொள்கைக்கு எதிராவீர்கள் and vice versa . ஆனால், மதநில்லினக்கத்தை விட நல்ல விஷயம் ஒன்று உண்டு. அதென்ன வென்றால், மனிதநேயம். சக மனிதனிடம் அன்பாய் இருப்பது. உண்மையான மனித நேயம் இருந்தால் மதநல்லிணக்கம் தேவையே இல்லை.
//அவர்கள் வழிபாடு நடத்தும் போது நாம் கண்ணை மூடி, மற்ற எல்லாவற்றையும் மறந்து மனக் குவிப்பு செய்கிறோம்.//
வழிபாடு வேறு, மனக்குவிப்பு வேறு. அவர்கள் செய்வது வேறு, நீங்கள் செய்வது வேறு. இந்த இடத்தில் நீங்கள் அவர்களுடன் இணக்கமாய் இருப்பது போன்ற தோற்றம் இருக்கலாம், ஆனால் உண்மை அதுவல்ல.
நீங்கள் “உங்கள்” பகுத்தறிவு வாதத்தை, உங்கள் கட்டுரைகள் மூலமாய் மற்றவர் மீது திணிப்பதை போலத்தான், மற்ற மதத்தினர் தங்கள் கருத்துகளையும் மற்றவர் நம்பவேண்டும் என்று விரும்புகின்றனர். அறிவியல் நிரூபணம் இருந்தால் ஒருவர் சொல்வதை மற்றவர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறீர்கள். அப்படி எல்லாம் ஒன்றும் சட்டம் இயற்ற முடியாது. என் பக்கத்து வீட்டு பெண்மணி, அவர்கள் நாய்க்குட்டியை, யாராவது நாய் என்று கூறினால் வருத்தப்பட்டு சத்தம் போடுவார். அறிவியல் ரீதியாய் அது நாய்தான் என்று நிரூபிக்க முடியும்தான். அதேபோல் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை “பைத்தியம்” என்று கூறினால் அவரை பெற்றவருக்கு கோவம்தான் வரும். அறிவியல் ரீதியாய் அவரை பைத்தியம் என்று நிரூபிக்கமுடியும் என்ற காரணத்தினால் நாம் அப்படி கூப்பிடுகிரோமா? அதனால் அறிவியல் நிரூபணம் வாழ்க்கையில் எல்லா இடத்திலும் செய்ய முடியாது. அன்போடு கலந்த உண்மையே நன்மை பயக்கும்.
அன்புடன்,
மானுடபிறவி

பி.கு: ஆக்கபூர்வமாக எடுத்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் உங்கள் மீது சில குறைகளை கூறினேன். மற்றவர் புண்படும்படி எழுதாமல், அன்பு பெருகும்படி உங்கள் ஆன்மீக எழுக்கள் இருக்கட்டும்.

அன்புக்குரிய சகோதரர் திரு. மானுடபிறவி அவர்களே,

வணக்கம், உங்களை வரவேற்கிறேன்,

உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன், நாம் அனைவரும் ஒன்று பட வேண்டும், நல்லிணக்கமாக வாழ வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள், இதற்காக விமரிசங்களை தாங்கிக் கொள்வது பெரிய விடயமல்ல. மத நல்லிணக்க கோட்பாட்டில் நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கிறோம்.

நீங்கள் நான் நடிக்கிறேன் என்று எழுதி இருக்கிறீர்கள்- நீங்கள் மத நல்லிணக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளாததால். மத நல்லிணக்கம் என்பது பற்றி தனியாக கட்டுரை வெளியிட்டு இருக்கிறோம்.

https://thiruchchikkaaran.wordpress.com/2010/09/29/religious-harmony-3/

எந்த ஒரு மதத்தையும், அதன் வழி பாட்டு முறைகளையும், அவர்கள் தெய்வங்களாக வழி பாடுபவர்களையும் வெறுக்காமல் இருப்பது மத நல்லிணக்கத்தின் முதல் படி.

ஒரு இஸ்லாமியர் மசூதியில் தொழுகையின் போது மண்டி இடும் போது, அவர் மனதில் உருவாகும் மரியாதை, கட்டுப்பாடு, ஆகியவற்றை என்னால் உணர முடிகிறது. அதை நான் மதிக்கிறேன். நான் நண்பர்களின் அழைப்பின் அழைப்பின் பேரில் அவர்களுடன் தொழுகையில் பங்கெடுத்து இருக்கிறேன். ரமதான் மாதத்தில் எல்லா நாட்களும் நோன்பு இருக்கிறேன். எனவே நான் மனதளவில் இஸ்லாத்தை ஆக்க பூர்வமாக அணுகுகிறேன். மசூதியைப் பார்க்கும் போது எனக்கு அங்கே முஸ்லீம்கள எவ்வளவு மரியாதையுடனும் , கட்டுப்பாட்டுடனும் தொழுகை நடத்துகிறான் என்பதை பாராட்டவே தோன்றுகிறது, எனவே மசூதிக்கு நான் ஏதாவது நல்லது செய்தால் செய்வேனே ஒழிய என்னால் மசூதிக்கு எந்த தீமையும் இல்லை. இது மத நல்லிணக்கத்தின் நல்ல விளைவுகளில் ஒன்று. இதிலே என்ன நடிப்பு இருக்கிறது?

//உதாரணமாக இஸ்லாமியர்களின் மதகொள்கைகளில் ஒன்று ஓரிறை கொள்கை. அதை உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லையே//

ஓரிறைவன் கோட்பாட்டை ஒத்துக் கொள்ள வேண்டும் என்றால் என்ன பொருள் – இஸ்லாத்தில் ஓரிறைவன் கோட்பாடு முக்கியமானது, அதைப் புரிந்து கொள்கிறோம், இதற்க்கு மேல் என்ன ஒத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

இஸ்லாமியர் ஓரிறைவன் என்று கருதி வழி படுவதை நான் வெறுக்கவில்லை, தடுக்கவில்லை, ஆட்சேபிக்கவில்லை. அவர்களுடன் நான் நல்லிணக்க அடிப்படையில் வழிபாட்டில் கலந்தும் கொள்கிறேன்.

உங்களுக்கு எப்படி ஓரிறைக் கொள்கையோ, அதே போல கிறிஸ்தவருக்கு கடவுளின் மகன் என்ற கொள்கை, திரித்துவக் கொள்கை, கத்தோலிக்க கிறிஸ்தவருக்கு மேரி மாதா கடவுள், இந்துக்கள் கடவுள் அவதாரம் எடுக்கிறார் என்ற அடிப்படையில் பல அவதாரங்களை தெய்வமாக வழிபடுதல், யூதர்களுக்கு ஜெஹோவா என்பவர் இஸ்ரேலியருக்கு முன்னுரிமை கொடுக்கும் கடவுள் கோட்பாடு… இப்படி எத்தனையோ கோட்பாடுகள். சரி உங்களின் கடவுள்களை எல்லாம் அமைதியாக , சந்தோசமாக வழி பட்டுக் கொள்ளுங்கள் என்றுதானே சொல்கிறோம்.

எந்த ஒரு கடவுளுக்கோ, கடவுள் கோட்பாட்டுக்கோ சரி பார்த்துக் கொள்ள கூடிய நிரூபணம் இல்லாத போது எப்படி ஒரு கோட்பாட்டை மட்டும் தனியாக “ஒத்துக் ” கொண்டதாக சொல் முடியும். அப்படி சொன்னால் அதுதான் நடிப்பு.

இஸ்லாமியரைப் பார்க்கும் போது ஓரிறைக் கோட்பாடை ஒத்துக் கொள்வது, கிரிஸ்துவரைப் பார்க்கும் போது இயேசு மட்டுமே இறைவனின் மைந்தனாக வந்த இறைவன் கோட்பாடை ஒத்துக் கொள்வது, இந்துக்களைப் பார்த்தால் … இப்படி மாறினால் தான் நடிப்பு.

இஸ்லாமியரக்ளின் தொழுகையை மதிக்கிறோம். இயேசு கிறிஸ்து சொன்ன விட்டுக் கொடுக்கும் கருத்துக்கள் , தன்னைப் போல பிறரையும் நேசித்தல் ஆகிய கருத்துக்களை மதிக்கிறோ, அதனால் இயேசு கிறிஸ்து முன்னாள் மண்டி போட்டு கிறிஸ்துவர்களுடன் சேர்ந்து வணக்கவோ, புத்தரின் அன்பை புரிந்து கொண்டு பவுத்தர்க்ளுடன் சேர்ந்து புத்தரை வணங்கவோ எங்களுக்கு தயக்கம் இல்லை. நல்ல கருத்துக்கள் எங்கு இருந்தாலும் பாரட்டுகிறோம், வரவேற்கிறோம், அவற்றை சொன்னவற்றை மதிக்கிறோம்.

எனவே இயேசுவின் முன்னாள் மண்டியிடுவது, புத்தரை வணங்கவது…. எவை எல்லாம் மனப் பூர்வமாக செய்யப் படும் வணக்கமே. வேண்டா வெறுப்பாகவோ, சும்மாங் காட்டியோ, நடிப்புக்காகவோ அவர்களை வணங்கவில்லை.

அவரவர்க்கு விரும்பிய தெய்வங்களை அமைதியாக தொழுது கொள்ளுங்கள், அடுத்தவரின் தெய்வங்களை, வழி பாட்டு முறைகளை வெறுப்பது, பூசலை உருவாக்கி பல கோடிகணக்கான மக்கள் இறக்கக் காரணமாக அமைந்து விட்டது.

//என்னை கேட்டால் மதநல்லிணக்கம் என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று//

மத நல்லிணக்கம் என்று தனியாக ஒன்று இல்லை, பிறரை புரிந்து கொள்ளுதல், மனப் பூர்வமாக நாகரீகமாக நடந்து கொள்ளுதல் இதுதான் மத நல்லிணக்கம். எல்லாமே நீங்கள் ஒரு கத்தோலிக்கர் மேரி மாதாவின் முன்பு மண்டியிடிவதையோ, ஒரு இந்து முருகரை வணங்க்குவதையோ காணும் போது – நீங்கள் தொழுகையில் மண்டி இடும் போது எவ்வளவு பக்தியுடனும், அர்ப்பணிப்புடனும் வாங்குகிறீர்களோ, அதே அர்ப்பணிப்பு உணர்வுடனும் வணங்க்குவதையோ பக்தியுடனும் தான் அவர்கள் வணங்குகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதைப் புரிந்து கொண்டால் அவர்களின் வழி பாட்டை காணும் போது இகழ்ச்சியோ, வெறுப்போ தோன்றாது. இதுதான் மத நல்லிணக்கம். நீங்கள் முதலில் மனிதர்களைப் புரிந்து கொள்ளுங்கள். கண்ணுக்கு முன் இருப்பவர்களை எண்ணுங்கள், மற்றவற்றை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். மேலும் இந்த ஓரிறைக் கொள்கையோ, பல இறைக் கொள்கையோ… இந்தக் கொள்கைகள் எல்லாமே சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணம் இல்லாதவை தான். எனவே இவற்றின் அடிப்படையில் வெறுப்பை உருவாக்க வேண்டாம்.

//என்னை கேட்டால் மதநல்லிணக்கம் என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று//

நாங்கள் சாத்தியப் படுத்திக் காட்டுகிறோம். மஹா, அக்பர், சுவாமி விவேகானந்தர் , காந்தி, பாரதியார்… இப்படி பெரியவர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான கோடிகணக்கான சாதாரண இந்தியர்களும் மத நல்லிணக்க வாதிகள்தான். விருப்பம் இருந்தால் மத நல்லிணக்கத்தில் பங்கு பெறுங்கள் . விருப்பம் இல்லாவிட்டால் நடை பெரும் மத நல்லிணக்க செயல்களை பார்த்துக் கொண்டு இருங்கள். நாங்கள் சாத்தியப் படுத்திக் காட்டுகிறோம். கிறிஸ்துமஸ் அன்று இயேசு கிறிஸ்துவை மனப் பூர்வமாக வணக்க்வோம். ராமதானில் சூரிய உதயம் முன் ஆரம்பித்து, சூரியன் மறையும் வரை நோன்பு இருப்போம்….

//அதேபோல் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை “பைத்தியம்” என்று கூறினால் அவரை பெற்றவருக்கு கோவம்தான் வரும். அறிவியல் ரீதியாய் அவரை பைத்தியம் என்று நிரூபிக்கமுடியும் என்ற காரணத்தினால் நாம் அப்படி கூப்பிடுகிரோமா? அதனால் அறிவியல் நிரூபணம் வாழ்க்கையில் எல்லா இடத்திலும் செய்ய முடியாது//

மன நிலை பாதிக்கப் பட்டவர் என்பது அவர் தொடர்ச்சியாக மன நிலை பாதிக்கப் பட்ட செயல்களை செய்வதால் அப்படி சொல்கின்றனர். ஒரு மனிதர் இருப்பதையும் அவர் பாதிக்கப் பட்டு இருப்பதையும் புரிந்ததே, அறிந்தே அப்படி சொல்கின்றனர், பார்க்காத , காணாத ஒன்றை சொல்லவில்லை.

ஆனால், மதநில்லினக்கத்தை விட நல்ல விஷயம் ஒன்று உண்டு. அதென்ன வென்றால், மனிதநேயம். சக மனிதனிடம் அன்பாய் இருப்பது. உண்மையான மனித நேயம் இருந்தால் மதநல்லிணக்கம் தேவையே இல்லை.//

மனித நேயம் … ஆஹா… எவ்வளவு மகத்தான வார்த்தை… !
அந்த மனித நேயத்தை அடக்கி விட்டு மத வெறி மேலே வருவதால் தானே அதற்க்கு மருந்தாக மத நல்லிணக்கத்தை முன் வைக்கிறோம். இரண்டு உலகப் போர்களிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமான பேர்கள் மத சண்டைகளினால் இறந்ததை நீங்கள் அறிவீர்களா. அந்த இரத்த ஆறு இன்றும் அவ்வப் போது ஓடுவதும் உங்களுக்கு தெரியாதா? உங்களுக்கு உண்மையிலே மனித நேயக் கோட்பாட்டின் மேல் விருப்பம் இறந்தால் மத நல்லிணக்கத்தை எதிர்க்க மாட்டீர்கள்.

நான் என்னுடைய பகுத்தறிவுக் கருத்துக்களை உங்கள் மீதோ வேறு யார் மீதோ திணிக்கவில்லையே. எல்லோரயும் கடவுள் இல்லை என்று சொல்ல சொல்லவோ, ஒத்துக்க சொல்லவோ, நம்ப சொல்லவோ, நாம் செய்யவில்லையே. மாறாக அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர்களை நல்லிணக்கத்தில் வாழ வைக்க அமைதியை உருவாக்கவே முயலுகிறோம்.

“இணக்கம்” என்ற சொல்லுக்கு அர்த்தத்தை, dictionary இல் பாருங்கள்.
அல்லாவை வணங்காதவனை “காபிர்” என்று ஒத்துகொள்ளாவிட்டால், இஸ்லாமியத்திற்கு நீங்கள் “இணங்கவில்லை” என்றே அர்த்தம்.
இயேசுவை ஏற்காதவன் “பாவி” என்று ஒத்துகொள்ளாவிட்டால், கிறிஸ்துவத்திற்கு நீங்கள் “இணங்கவில்லை” என்றே பொருள்.
மரியாதை செய்வதிற்கும், ஆராதனை செய்வதிற்கும் வித்தியாசம் உண்டு.
நீங்கள் இஸ்லாமையும், கிறிஸ்துவையும் மதிக்கிறீர்கள் (கொள்கை ரீதியாக). ஆனால் கிறிஸ்துவர்த்திர்க்கும், இஸ்லாமுக்கும், ஏனைய பல மதங்களுடன் இணங்குகிறீர்களா?

அடுத்தவன் கொள்கையுடன் இணங்காமல், சக மனிதனாக, நண்பனாக ஒருவர் மேல் அன்பு வைக்க முடியும். அதுதான் மனித நேயம். அதைதான் நான் வழியுருத்துகிறேன்.

நண்பரே, நம் இருவரின் நோக்கமும் சமாதானம்தான். அந்த சமாதானத்தையும் நான் அன்பு வழியில், நேசத்தின் வழியில் அடைய முடியும் என்றுதான் சொல்லுகிறேன். இதற்காக, நாம் வெளிதொர்ற்றமாக “இணக்கம்” காட்டுவது தேவை இல்லை என்றுதான் சொல்கிறேன்.
இப்படிக்கு,
மானுடபிரவி

வெளித் தோற்றமாக அல்ல, மனப்பூர்வமாக நல்லிணக்கம் காட்டுகிறோம்.

இயேசு கிறித்து, இந்த உலகில் உள்ள எல்லோரும் பாவிகள் என்றோ, அவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டால்தான் மீட்சி பெற முடியும் என்றோ சொன்னதாக, எனக்கு தெரிந்த வகையில் இல்லை.

கிறிஸ்தவ சகோதரர்களைர் நான் குறை சொல்லுவதாக என்ன வேண்டாம். பலர் தங்களுக்கு பாவ மன்னிப்பு கோரி, எரி நரகத்திலிருந்து தப்பிக்க இயேசுவை வணக்குவ்தாக சொல்லுகின்றனர். நாங்கள் இயேசு கிறிஸ்துவின் சிறந்த கோட்பாட்டுக்காக, அவர் மனதில் இருந்த அன்புக்காக அவரை மிகவும் மனப் பூர்வமாக அன்பு செலுத்துகிறோம். இது எந்த வகையில் குறைந்தது. நீங்களே சொல்லுங்கள்.

சக மனிதனாக நேயத்துடன் தான் பழகுகிறார்கள். ஆனால் உங்களுக்கே நினைவு வந்தது போல, அவர்கள் காபிர்கள் என்று திடீரென்று நினைவு வந்து விட்டால் மனித நேயம், மானிடம் என்பது எல்லாம் காணாமல் போய் விடுகிறது. அவர்கள் “”வெறுக்க” வேண்டியவற்றை வணங்கும் அருவருப்பானவர்கள் என்ற எண்ணம் தோன்றி விடுகிறது, ”அருவருப்பை” வணங்குவதை நிறுத்த செய்ய வேண்டும் என்கிற துடிப்பு அதிகாமாகி விடுகிறது. அப்புறம் என்ன மனித நேயம் எல்லாம்.

மனித நேயத்துக்கு முக்கிய பாதுகாப்பு வெறுப்பு இல்லாத மன நிலையே. அதற்க்கு உதவுவதே மத நல்லிணக்கம்.

நாங்கள் எப்படி எல்லாம் பிற மதங்களுடன் இணங்கி இருக்க முடியும் என்று பார்க்கிறோம். நீங்கள் உங்களை அறியாமலே வேறுபாடுகளை முன்னிருத்துகிரீர்கள். இதுதான் வித்யாசம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: