Thiruchchikkaaran's Blog

என்னண்ணா, இதெல்லாம் நன்னாவா இருக்கு?

Posted on: January 7, 2011


குமுதம், ஆனந்த விகடன் இதை எல்லாம் தொடர்ந்து  படிப்பதை நிறுத்தி  பல வருடங்கள் ஆகி விட்டது. இப்போதும் விடாமல் படிக்கும் மாகசின்களுள் ஒன்று விஸ்டம். இதை  வாங்குவது வீட்டில் உள்ள  உள்ள சிறுவர்களுக்காக என்றாலும், நானும் விஸ்டம் மாகசீனை விடாமல் படிப்பேன். அறிவியல் , வரலாறு, தத்துவம், பூகோளம், விளையாட்டு  உள்ளிட்ட  பல விடயங்களை சுருக்கமாகவும் சுவையாகவும் தருவார்கள்.

இந்த மாத இதழை (JAN- 2011)  கடையில் வாங்கும் போது அட்டைப் படத்தை பார்த்தவுடன் வியப்பாக இருந்தது. மறைந்த  காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ  சந்திர சேகரேந்திர  சரஸ்வதி அவர்களின் படத்தைப் போட்டு இருந்தனர்.

இதழை வங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். லிப்டில் செல்லும்போதே பக்கத்து பிளாட்டு சிறுவன், “அங்கிள், திஸ் புக் ….. “என்றான். 

 “எஸ் திஸ் இஸ் விஸ்டம்” என்றேன் நான்.

சிறுவனோ ” ஐ தாட் இட்ஸ் சம் ஆன்மீக மலர்…” என்றான். 

நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. லிப்டில் இருந்து   வெளியே  வரும் போது  “பை அங்கிள்” என்று உரத்த  குரலில் சொன்ன சிறுவனுக்கு “பை (bye)” சொல்லி,  வீ ட்டுக்குள் நுழைந்தேன்.

விஸ்டம் இதழின் அட்டைப் படத்தில் பெரும்பாலும் சிறுமிகள, அதிலும் பத்து வயதுக்கும் குறைவான வயதுடைய சிறுமிகளின் படங்களே இருக்கும்.  இந்த முறை இப்படி அட்டைப் படம் உள்ளது. இதழிலே அவ்வப் போது நம் மன நிலையை நம்பிக்கையை உயர்த்திக் கொள்ள உதவும் ஆன்மீக கருத்துக்களையும்  கண்டு இருக்கிறோம் என நினைக்கிறேன்.  புத்தர் விவேகானந்தர் ஆகியோரின் பொன் மொழிகளைப் படித்ததாக நினைவு.  அவ்வகையில் ஸ்ரீ சந்திர சேகரேந்திர  சரஸ்வதி அவர்கள் கூறிய,  நம் மன நிலையை மேம்படுத்தும் ஆன்மீக கருத்துக்களை போட்டு இருக்கக் கூடும் என்று எண்ணி விஸ்டம் இதழை விரித்து  படிக்க ஆரம்பித்தேன்.

கவர் ஸ்டோரியில்,

கட்டுரை    வகைப் படுத்தல்: Saints of India

கட்டுரையின் தலைப்பு  : Kanchi Acharya

கவர் ஸ்டோரியில் இருக்கும் முதல்  வாக்கியத்தைப்  படித்தவுடன் எனக்கு தலையே சுற்றி விட்டது.

“Sri Chandrasekarendra Saraswathi Swamigal, reverentially called “Maha Periyavaal”, the God- incarnate of the 20th century  was born on 20th May 1894″

இது என்ன , விஸ்டம் இதழ் அறிவு பூர்வமான விளக்கங்களை தரும் பத்திரிக்கை ஆயிற்றே,இப்போ ஒருவரை the  God- incarnate என்று எழுதினால் கடவுள் இருப்பதற்கும் ,  Sri Chandrasekarendra Saraswathi Swamigal  God- incarnate ”  என்பதற்கும் நிரூபணம் விஸ்டம் இதழிடம்  உள்ளதா?

கட்டுரையை வேகமாகப் புரட்டி  முடிவுக்கு வந்தோம். கட்டுரை முடிவிலே Excerpt from Divya Darshan of Sri Kaanchi Mahaswami Published by Sri Sankara Bhaktha Jana Sabha Trust என்று போட்டுள்ளனர்.அதாவது ஜன சபா ட்ரஸ்ட் எழுதியதில் இருந்து சிலவற்றை எடுத்து போட்டு இருக்கிறார்களாம். அவர்கள்  சொல்லுவது விஸ்டம் இதழுக்கு முழுமையாக ஒப்பா? ஒப்பு இல்லாவிட்டால் அதை எப்படி ஒரு இதழ் பிரசுரிக்கும்?

இதே இதழில் இந்தக் கட்டுரையை அடுத்து இரண்டு பக்கங்கள்  கழித்து   “Trumpeters on a Train” என்ற தலைப்பிலே விஞ்ஞானி  Doppler பற்றியும் அவரது கோட்பாடான “Doppler effect”  பற்றியும் எழுதி உள்ளனர். Doppler effect  ஐ எத்தனை முறை வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ள முடியும். கடவுள இருப்பதையோ இவர் கடவுளின் அவதாரம் என்பதையோ சரி பார்த்துக் கொள்ள இயலுமா?

இதையே “who is  belived as God – incarnation”  என்றோ “”who is  considered as God – incarnation”  என்றோ பதிவிட்டு இருந்தால் அதில் நாம் சொல்ல ஒன்றுமில்லை. ஏனெனில் எல்லா மதங்களிலும் நம்பிக்கை இருக்கிறது. உதாரணமாக  இஸ்ரவேல் நாட்டவரைப் பற்றிக் கட்டுரை எழுதி அவர்கள் கடவுளாக கருதி வழிபடும் தேவன் ஜெஹோவா என்று எழுதினால் அது ஒரு நாட்டினர், அவர்கள் நம்பிக்கை பற்றியதாக இருக்கும்.

இதே கட்டுரையில் ” the sage of Kanchi twice undertook pilgrimages on foot throughout the length and breadth of India. The yathras on foot undertaken by the Mahaswami had and still have no perellels in the religious history of India” என்று எழுதி உள்ளனர்.

 இணை இல்லாத அளவுக்கு என்றால்   புத்தருக்கு பிந்தைய இந்திய வரலாற்றில் இந்தியா முழுவது ம் கால்நடையாக சென்ற    மிக முக்கிய சமய பிரச்சாரகர்கள் புத்தர், ஆதி சங்கரர், விவேகானந்தர் ஆகியோரை எல்லாம் என்ன சொல்வது. இவர்கள் எல்லாம் சுற்றித் திரிந்து பிரச்சாரம் செய்ய வில்லையா. குறிப்பாக இவர்கள் யாருடைய பெயரால் பக்த ஜன சபா வைத்து இருக்கிராகளோ அந்த ஆதி சங்கரரே, குழப்பமான ஆன்மீக  கால கட்டத்திலே இந்தியா முழுவதும் சுற்றி – வீழ்ச்சி அடைந்த புத்த மத்தில் இருந்து உருவான ஆபாசங்கள்,  நரபலி போன்ற பழக்கங்கள்,  வெளி நாட்டில் இருந்து வந்த நாகரீகமற்ற  பழக்கங்கள், வேள்விகளே போதும்  என்ற கோட்பாடுகள் – போனறவற்றை எல்லாம் சீர்திருத்தி, தூய்மையான இந்து மதத்தை பதினாறே வருடத்திலே செய்து காட்டி இருக்கிறார். ஆனால் இந்த உண்மைகளை எல்லாம் விட்டு  இந்திய மத வரலாற்றில் இணையற்ற யாத்திரை  என்றால் அந்த யாத்திரையால் சாதித்தது என்ன? இப்படி சங்கராச்சாரியாரின் ( சங்கர )  பெயரால் பக்த ஜன சபை என்று வைத்துக் கொண்டு, ஆதி சங்கரரின் பகுத்தறிவு அடிப்படையிலான ஆன்மீகத்தை பின்னுக்குத் தள்ளி விட்டு, இந்திய சமய  வரலாற்றிலே இணையற்ற, என்று பில்ட் அப் கொடுக்கிறார்கள் என்றால் விஸ்டம் இதழ்  அதை அப்படியே பதிப்பிக்கிறது பாருங்கள். 

இறுதியில் “during his stay in earth in human form”   என்றும்  எழுதி இருக்கிறார்கள். இதை எல்லாம் அப்படியே  ததாஸ்து என்று சொல்லாமல் விட்ட குறையாக  அப்படியே போட்டு இருக்கிறார்கள்.

இதுதான் விஸ்டமா, இதுதான் அறிவா, இதுதான் ஞானமா? 

 என்னண்ணா, இதெல்லாம்   நன்னாவா இருக்கு?

15 Responses to "என்னண்ணா, இதெல்லாம் நன்னாவா இருக்கு?"

இதற்கு நீங்கள் குமுதம் ஆனந்த விகடனை படிக்கலாம். அவை அறிவை வளர்க்காமல் இருக்கலாம். ஆனால் இது போல ஆபத்தானவை அல்ல.

அன்புக்குரிய திரு. இராமலிங்கம் அவர்களே, வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

ஏன், சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் உங்களுக்கு அப்படி என்ன கோபம்?

வாங்க ராம்,

சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் எனக்கு என்ன கோவம், கட்டுரையில் நான் எழுதியதைப் படியுங்கள்

//இதையே “who is belived as God – incarnation” என்றோ “”who is considered as God – incarnation” என்றோ பதிவிட்டு இருந்தால் அதில் நாம் சொல்ல ஒன்றுமில்லை. ஏனெனில் எல்லா மதங்களிலும் நம்பிக்கை இருக்கிறது.//

மேலும் இவர் யாத்திரைக்கு இந்திய சமய வரலாற்றில் இணையே இல்லை என்றால், ஆதி சங்கரரின் யாத்திரை கூட இதுக்கு அப்புறம் தான் என்று தானே அர்த்தம். ஆதி சங்கராச்சாரியார் மேல் இவர்களுக்கு என்ன கோவம். ஆதி சங்கரரின் கோட்பாட்டை முக்கியப் படுத்தி எழுதினால் மக்களுக்கு அறிவு வளரும். அதில் பலருக்கு இண்டரெஸ்ட் இல்லை. அதை விட இப்படி பில்ட் அப் கொடுப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். காரணம் என்ன , சிந்தியுங்கள்.

For matters of faith,how can one produce proof?Then are we only doing thing rational in secular world?Why are we then following lot of customs of English men by wearing fullsuit in a warm country?Or even the customary parade by the Army on Independence day or republic day?Whats the logic?Branded atheits like Karunanidhi offer respect to CNA or EVR on their death anniversary.As per their faith there is no soul and the body has perished.Who is being paid respect?Please do not try to act more foolsi than what you really are

Dear Mr. Sundar,

When writing about faiths it is generally written as ” belived as …….”.

We cant project faith as confirmed truth. Afaith is a faith, belief is only a belief.

I mentioned in the article itself that //இதையே “who is belived as God – incarnation” என்றோ “”who is considered as God – incarnation” என்றோ பதிவிட்டு இருந்தால் அதில் நாம் சொல்ல ஒன்றுமில்லை. ஏனெனில் எல்லா மதங்களிலும் நம்பிக்கை இருக்கிறது.//.

If they wrote that “the God- incarnate in the 20th century”in some religious magazines no body will be surprised with that. But when they wrote all other things which are rational and along with that including this is very surprisng.

If one Garland periyar statues, he remembers periyaars principles. If one person Garlands Gandhis statue, he rembers Gandhi.

You abuse as fools, its undersatnadable, because there is no valid points to argue from your side- hence indulging in abuses.

We are keen to see that people are not made as fools.

I did not accuse or call you a fool,i said “dont try to act as a fool”.There is a lot of difference between what you wrote and what I mentioned

Dear Mr. Sundar,

Whatever it is, we are not ready to be foolished by any one.

People are awakened.

If any one assumes that they can get prominence in Spirituality by mere hype and probagation, it wont work for long time.

The idea of using Spiritualism to gain in worldly matters also wont work for long time!

Again ,Please note the article had been written by someone who was entitled to his opinion.Just because the mag is called “wisdom” you dont expect everythin in it to be proven by logic and reasoning.It is akin to believing the so called rationalists in TN to be really rational.After all it is what they believe

Dear Mr. Sundar,

The magzine wisdom has all along been writting about he things which can make one unies are derstand the facts. There were matters about history, which are based on historical evidences. There were articles on ulture. There were stories also which are categorised as ” Story”. There is a difference between, priven facts and beliefs.

Proper terms has to different there were be used while discribing facts.

If beliefs were mentioned as like facts, its not proper, its not correct.

I wrote many times, if they wrote that ” believd as God- incarnation”, I have othing to say again that.

I wrote that in thae article, and repaeted many timen in the comments also.

Again H.H was not using spiritualism to propagate his name and fame.Then how come people from far off Greece or Spain(Queen Mother Sophia was his ardent devotee)see his greatness.It also depends ones conditioning of mind and intellect to perceive

Dear Mr. Sundar,

Queen mother or Queen dughter … this and all does not matter, any one can come and be ardent devotee. What we have to do with that. This is typical rhetoric I have been hearing… . My friends are mentioning that this Saamiyaar… you have not visted him, even minister came in Helicopter and saw hi… these are all hype.

ஸ்ரீ திருச்சிக்காரன், நமஸ்காரம்.

என்னுடைய ஆன்மீக முன்னேற்றத்தில் பூஜ்ய ஸ்ரீ காஞ்சி பெரியவருக்கு மிக நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.நான் அவருடைய சிஷ்ய பரம்பரையையை சேராதவன். பின்னிட்டும் அவரது சிஷ்யர்கள் அவரை தெய்வம் என்று போற்றுவது சாஸ்த்ரோக்தமானது தான் என்பது என் அபிப்ராயம்.

தாங்களின் அபிப்ராயம்,“who is belived as God – incarnation” என்றோ “”who is considered as God – incarnation” என்றோ பதிவிட்டு இருந்தால் அதில் நாம் சொல்ல ஒன்றுமில்லை.” ஆனால் ஸ்ரீமன் தங்கள் அபிப்ராயம் கீழே கண்ட சாஸ்த்ர வாக்யத்திற்கு விரோதமானது.

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேஸ்வர:
குரு: ஸாக்ஷாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம:

தாங்கள் சொல்வது போல் “considered as” என்றிருக்க வேண்டுமானால் கீழ்க்கண்டபடி இருக்க வேண்டும்.

குரு: ப்ரம்மா இவ
குரு: விஷ்ணு இவ
குரு: மஹேஸ்வர: இவ

மேலும் தங்கள் ஸம்சயம் அறவே அகல அடுத்த அடியில் தெள்ளெனத் தெளிவாக

குரு: ஸாக்ஷாத் பரப்ரம்மா என்றும் உள்ளது.

அது ஒரு நம்பிக்கை தான் என்பது சொன்னாலும் சொல்லாவிடிலும் நிதர்சனமான விஷயம். அந்த நம்பிக்கை த்ருட விஸ்வாஸமான பின் ஸகல ஜகத்தும் ஸாக்ஷாத் ஈஸ்வர ஸ்வரூபமாய் ஸந்த் துகாராமுக்கு தெரிந்தது போல் தெரியப்பண்ணுவது பகவத் ஸ்வரூபாமான குருவின் க்ருபை.

இந்த ஸம தர்சனம் குரு க்ருபையாலே கிட்டும் என்பதாலேயே

ஸந்த் கபீர்

குரு க்ருபா அஞ்ஜன் பாயோ மேரே பாயி

என்று பாடுகிறார்

பின் அபரோக்ஷானுபூதி கிட்டும் பர்யந்தம் வாஸ்தவத்தில் ஒன்றே ஆகினும் குரு, ஈஸ்வரன், ஜீவன் என்று தனியாக இருப்பது வ்யாவஹாரிகத்தில் ஸத்யமே.

என் சிற்றறிவில் புரிந்த படி

நமஸ்காரம்

அன்புக்குரிய திரு. கிருஷ்ண குமார் அவர்களே,

வணக்கம், வருக, நமஸ்காரம்.

கட்டுரையைப் படித்து கருத்து தெரிவித்தற்கு நன்றி.

ஒருவருக்கு மரியாதை யை செலுத்த , நன்றியைக் காட்ட, அன்பை செலுத்த அவரை மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து நன்றி செலுத்துகிறோம். இந்தியாவின் மிக உயர்ந்த ஸ்தானம் பிரதமர் (என்று நினைக்கிறேன்). அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவி (ஜனாதிபதி). இப்படி பல்வேறு பதவிகளில் மக்கள மிகப் பெரிய பதவி ஸ்தானம் வைத்திருப்பது கடவுள், அதாவது இந்துக்களுக்கு ஈஸ்வர் , இஸ்லாமியருக்கு அல்லாஹ்…மொத்தத்தில் கடவுள்…! (கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்ற வாதத்தில் நான் இப்போது இறங்கவில்லை. ) இப்படி மரியாதையைக் காட்ட , முக்கியத்துவத்தை உணர்த்த, அன்பை செலுத்த , நன்றியைக் காட்டவே மாதா, பிதா, குரு தெய்வம், குரு பிரம்மா… என்பதெல்லாம். எம்.ஜி.ஆர் அண்ணா நீ என் தெய்வம் என சொன்னதாக கேள்விப் பட்டு இருக்கிறோம். எனவே இதை எல்லாம் சாஸ்திரம் என்பதாக கருதுவது எல்லாம் அவரவர் விருப்பம். இந்த சுலோகத்தை சாஸ்திரம் என்றால் இது எந்த ஸ்ருதியில் உள்ளது என்றும் மேற்கோள் காட்டினால் நன்றாக இருக்கும்.

மேலும் ஒருவரிடம் ஒன்றைக் கற்கும் போது அவர் பேரில் மரியாதை இல்லாமல் இருக்குமா? நான் போன வருடம் ஒரு பிற நாட்டு மொழியை பிற நாட்டவர் ஒருவரிடம் கற்க ஆரம்பித்தேன். அவர் சில வாரங்களில் ஆச்சரியமடைந்து, இவ்வளவு மரியாதை காட்டுகிறீர்களே என்றார். இது எங்கள் பழக்கம் என்றேன்.

அந்த பிற மொழி கற்பிக்கும் ஆசிரியரை நீங்கள் பார்த்தால் , நீங்களும் அவருக்கு அதே மரியாதையை கொடுப்பீர்கள் என நான் எதிர்பார்க்க முடியுமா? எனவே நீங்கள் சிஹ்ய பரம்பரை என்றால், நன்றிக் கடன் பட்டு இருக்கிறீர்கள் என்றால் அவரை கடவுளாக கருதிக் கொள்ளலாம். கடவுளுக்கும் மேலாக கருதிக் கொள்ளலாம். அதற்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. உங்களைப் போன்ற ஒத்த சிந்தனை உடையவர்கள், சிஷியர்கள் டிரஸ்ட் என்று ஆரம்பித்து அதிலே மேகசின் வெளியிட்டு, அதிலே அவரைக் கடவுள் என்று சொல்லிக் கொள்ளலாம். அதில் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

ஆனால் விஸ்டம் இதழ் விஸ்டத்தை, அறிவை, அறிவு பூர்வமாகவே விளக்கும் இதழாக கருதப் படுகிறது.

அதிலே “is considered as God or belived as God” என்று எழுதி னால் அது ஒரு குறிப்பிட்ட சம்பிரதாயக் காரர்களின் நம்பிக்கையைக் குறிப்பதாக கருதலாம். ஆனால் “the God- incarnation” என்று யுனிவேர்சல் ட்ரூத் போல எழுதுவது எந்த வகையில் சரி. அவர் கடவளின் அவதாரம் என்பதற்கு சரி பார்த்துக் கொள்ளக் கூடிய நிரூபணம் விஸ்டம் இதழிடம் இருக்கிறதா? இன்னும் சொல்லப் போனால் கடவுள் இருப்பதற்கான நிரூபணத்தையும் கொடுத்து விட்டு பிறகு God- incarnation என்பதற்கும் ஆதாரம் கொடுக்க வேண்டும்.

இப்போது இதே விஸ்டம் இதழில் “”அல்லாவினைத் தவிர வேறு கடவுளே இல்லை, முகமது அவரது தூதர், உண்மையில் அல்லாவைத் தவிர எந்த ஒரு கடவுளும் இல்லவே இல்லை என்பதுதான் உண்மை. இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கம்.இஸ்லாத்தை தழுவாதவர் நரகத்திலே சென்று எரியும் நெருப்பிலே அவர்கள் தோல் கருகும் ” என்று எழுதி ஒரு நீண்ட கட்டுரையைப் போட்டு இறுதியில் – இது இஸ்லாமிய மலர் என்னும் இதழில் வெளியானது என்று சொன்னால் அதை நீங்கள் ஒப்புவீர்களா.

மொத்தத்திலே நம்பிக்கை என்பது வேறு, விஸ்டம் என்பது வேறு.

அதுக்குதான் இதெல்லாம் தேவையா அண்ணா, என்றோம்.

இப்போதுதான் இந்த குரு கான்செப்ட் விடயமாக இன்னொரு தளத்தில் ஒரு விவாதம் முடிந்திருக்கிறது. ஆனாலும் என் கருத்தை சொல்ல வேண்டியே உள்ளது.

“பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பன் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்” என கவியரசு கண்ணதாசன் பாடியுள்ளார்.

என்ன ஞானம் பாருங்கள்! பூஜ்ய ஸ்ரீ என்று பெரிய மகான்களை அழைப்பார்கலவா? பூஜ்ய மகிமையை அறிந்தவர் என்று பொருள். நமது உடலில் பூஜ்யம் போலே இருபது கண்மணி தனே! அதன் உள் மத்தியினுள் ஊசி முனை வாசல் உள் ஒரு ராஜ்ஜியம் உண்டு! அதை தானே நாம் அறிய வேண்டும். அந்த ராஜ்ஜியத்தின் ராஜா நம் கண்ணன் தான்! கண் அவன் தான்!


http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_16.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: