Thiruchchikkaaran's Blog

ம‌த‌ ந‌ம்பிக்கைகளுக்கு ம‌வுன‌ ச‌ம்ம‌த‌ம் த‌ருகிரோமா?

Posted on: January 6, 2011


நாம் ம‌த‌ ந‌ல்லிண‌க்க‌ம் ப‌ற்றி எழுதினால் பல‌  ந‌ண்ப‌ர்களுக்கு பிடிக்க‌வில்லை. நாத்தீக‌ கோட்பாட்டை பின்ப‌ற்றுவோர் சில‌ருக்கும் அது பிடிக்க‌வில்லை. இவ‌ன் என்னையா, ந‌ல்லிண‌க்க‌ம் அப்ப‌டி, இப்ப‌டிங்க‌ரான். ஒன்னு ஏதாவ‌து ம‌த‌த்தை ஆத‌ரி, இல்லை என்றால் நாத்தீக‌ வாதி என்று  இரு. இந்த‌  ந‌ல்லிண‌க்க‌ம் எல்லாம் சும்மா என்ற‌  வ‌கையிலே க‌டுமையான‌ எதிர்ப்பை முன் வைக்கின்ற‌ன‌ர். அத‌ற்க்கு ப‌திலாக‌ நாம் பிற‌ த‌ள‌ங்க‌ளில் எழுதிய‌தை இங்கெ க‌ட்டுரையாக‌ வெளியிடுகிரொம்.

என்னவோ நான் (திருச்சிக்காரன்) கடவுளுக்கு சாட்சி கொடுப்பது போல எழுதுகிறீர்கள்.

“இறைவன் இருக்கின்றானா?” என்கிற கேள்வியை முன் வைத்து பல பதிவுகளை போட்டு இருக்கிறோம். என்னவோ நான் தான் இவர்களுக்கு கடவுள் நம்பிக்கையை கற்றுக் கொடுத்தது போலவும், நான் தான் கடவுளை நம்ப சொல்வது போலவும் இருக்கிறது நீங்கள் சொல்வது.

எந்தக் கடவுளுக்கும் யாரும் இது வரை நிரூபிக்கக் கூடிய சான்று (verifiable proof) எதையும் குடுக்கவில்லை.

கடவுள் இருக்கிறார் என்று அடித்து சொல்லுகிறவர்கள், தங்கள் கடவுள் மட்டுமே உண்மை, மற்ற கடவுள்கள் எல்லாம் பொய்யானவை என்று அடித்து சொல்லுகிறவர்கள், தங்கள் கடவுளிடம் சொல்லி வானில் நிலவு தொடர்ச்சியாக நான்கு மாதங்கள் ஒளிரும்படி செய்ய முடியுமா என்பதை இந்த தளம் உட்பட பல இடங்களில் எழுதி இருக்கிறோம். இது எல்லா மதத்தவருக்குமானது தான். அதே நேரம் நான் எந்த ஒரு மதத்தவரின் கடவுளையும் வெறுக்கவோ, இகழவோ செய்யவில்லை.

அதே நேரம் மனிதர்களில் பெரும்பாலனவர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்களாக உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. சுவாமி விவேகானந்தர் சென்னையிலே பேசும்போது குறிப்பிட்டது – ” நான் என்னுடைய நாத்தீக கோட்பாட்டு நண்பர்களுக்கு சொல்வது என்னவென்றால், மனிதர்களின் மனதில் பலவீனம் உள்ளவரை அவர்கள் கடவுளை உருவாக்கிக் கொள்வார்கள்” என்றார் சுவாமி விவேகானந்தர்.

ஏனெனில் சிறு வயதில் பாதுகாப்பு, உணவு…. எல்லாவற்றுக்கும் அன்னையை அணுகும் மனிதன் , வளர்ந்த பின்னும், தனக்கு மேலாக ஒருவர் இருப்பார், அவர் தன்னைக் காப்பாற்றுவார் என்று நம்ப விரும்புகிறான். எனவே பலர் கடவுள் நம்பிக்கையுடன் இருக்கும் போது, அவர்கள் அமைதியான வழியில் பிற மதங்களை வெறுக்காமல் வாழ வேண்டியது அவசியமாகிறது.

மத சண்டைகளால இந்த உலகில் இது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை- இரண்டு உலகப் போரிலும் இறந்தவர்களில் எண்ணிக்கையை விட – அதிகமானது. இன்றும் அது தொடர்கிறது.

அதை நிறுத்தி நல்லிணக்கத்தை உருவாக்க முடியும்.

இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த…. மதங்கள் எல்லாவற்றையும் ஆக்க பூர்வமாக அணுகி, அவற்றில் உள்ள மக்களுக்கு உதவக் கூடிய கருத்துக்களைக் காட்டுகிறோம்.

எல்லா மதங்களிலும் நல்ல கருத்துக்கள் உள்ளன. எனவே எந்த மதத்தின் கருத்துக்களையும் ஒட்டு மொத்தமாக நிராகரிக்கவும் இல்லை. அங்கீகரிக்கவும் இல்லை. எல்லா மதங்களில் சொல்லப் பட்டுள்ள கருத்துக்களையும் ஆராய்ந்து நல்ல கருத்துக்களை விளக்குகிறோம்.

ஒரு இந்து மசூதிக்கு சென்று இஸ்லாமியருடன்
தொழுகையில் ஈடுபட்டால், பிறகு மசூதியை பார்த்தால் வெறுக்க மாட்டான். ஒரு முஸ்லீம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டால் பிறகு சர்ச்சைப் பார்த்தால் வெறுக்க மாட்டான்.

மத நல்லிணக்கத்தால் முழுக்க முழுக்க நன்மையே, எந்த ஒரு தீங்கும் கிடையாது. மத நல்லிணக்கத்துக்கு நான் ஒட்டு மொத்த பட்டாதாரர் அல்ல. நீங்களும் , யார் வேண்டுமானாலும் மத நல்லிணக்கத்தின் அவசியத்தைப் புரிந்து கொள்ளலாம். இந்திய வரலாற்றை புரட்டிப் பார்த்தால் இந்திய நாட்டினர் எந்த அளவுக்கு மத சகிப்புத் தன்மையை வளர்த்து உள்ளனர் என்பது தெரியும்.

மத நல்லிணக்கம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் உங்களுக்கு அவ்வளவு எரிச்சல் வருவது ஏன்?

மறுபடி நான் எந்த வகையில் மக்களை ஏமாற்றுகிறேன் என்று குற்றம் சாட்டுகிறீர்களோ தெரியவில்லை. நான் பிற மதங்களுடன் மனப் பூர்வமான மத நல்லிணக்கத்தைக் கடைப் பிடிக்கிறேன். நான் இயேசு கிறிஸ்து மீது கொள்கை ரீதியான மரியாதை வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். இந்து மத தளங்களில் நான் இயேசு கிறிஸ்துவை டிபண்ட் செய்து எழுதிய போது பலர் என்னைக் கிரிப்டோ கிறிஸ்தவன் என்று திட்டி எழுதி இருக்கின்றனர்.  எந்த போலியாவது ரமதான் மாதம் முழவதும் நோன்பு இருப்பனா? “எல்லோரும் கொண்டாடுவோம், அல்லாஹ்வின் பெயரை சொல்லி” என்று கட்டுரை போடுவானா?

நீங்கள் சொல்லுவது போல உலகில் எல்லோரும் கடவுள் இல்லை என்று எண்ணி விட்டால் அப்போது மத ரீதியான மோதல்கள் இருக்காது.

ஆனால் கடவுள் நம்பிக்கையை மக்கள் விட தயாராக இல்லாத போது, சரிப்பா, நீ கடவுள் என்று நம்புவதை அமைதியாக வழி பட்டுக் கொள், நீ எந்த அளவுக்கு உன் கடவுள் மேல் நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருக்கிறாயோ அதே போலத் தான் அடுத்தவரும் வைத்திருக்கிறான். அதைப் புரிந்து கொள், அவனின் மதத்தை, வழி பாட்டு முறைகளை வெறுக்க வேண்டாம், அவற்றுடன் சகிப்புத் தன்மையோடு வாழக் கற்றுக் கொள் என்கிறோம்.

மத சகிப்புத் தன்மை இன்மையால் உருவாகும் மத வெறியும், அதனால் விளையும் மோதல்களும் எவ்வளவு கொடூரமானவை என்பதை நீங்கள் உண்மையிலேயே அறிந்து கொண்டால், மத நல்லிணக்கத்தின் அவசியம் உங்களுக்குப் புரியும்.

Advertisements

4 Responses to "ம‌த‌ ந‌ம்பிக்கைகளுக்கு ம‌வுன‌ ச‌ம்ம‌த‌ம் த‌ருகிரோமா?"

நன்றாக சொல்லியுள்ளீர்கள்

மிக்க நன்றிங்க

//மத நல்லிணக்கம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் உங்களுக்கு அவ்வளவு எரிச்சல் வருவது ஏன்?//

காரணம், அவர்களுடைய மதம் சொல்லிக்கொடுப்பது மற்ற மதத்தின் மேல் வெறுப்பைத்தான். அவர்கள் மதம் மட்டும் தான் உண்மை, மற்றவையெல்லாம் பொய் என்று சொல்லிக்கொடுப்பதால் தான்…

வாங்க திரு. சீனு அவர்களே, கருத்துக்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: