Thiruchchikkaaran's Blog

அலைக்கற்றையை கண்டுபிடித்தவர்!

Posted on: January 4, 2011


 

அன்புக்குரிய நண்பர்களே,

அலைக் கற்றை என்றவுடன் நாம் சுவாமியைப் பற்றியோ, இராசாவைப்  பற்றியோ, பி.சே.பி. பற்றியோ, காங்கிரெஸ் பற்றியோ எழுதப் போவதாக எண்ணி விடாதீர்கள்.

இந்தியன் சயன்ஸ் காங்கிரெஸ் சென்னையில் நடை பெறுவதை ஒட்டி இந்தியாவின் புகழ் பெற்ற விஞ்ஞானிகளில் சிலரைப் பற்றி எழுத எண்ணியே இதை ஆரம்பித்தோம்.

உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் ஜே.சி. போஸ்.  மின்காந்த அலைகள் துறையில் இவர் கண்டு பிடிப்பு ஒப்பற்றது.

File:J.C.Bose.JPG

கம்பி இல்லாமல் மின் காந்த அலைகள் செல்ல முடியும் என்கிற தியரியை மாக்ஸ்வெல் முன் மொழிந்து இருந்தார்.  திரு. ஹெர்ட் ஸ்  (Hertz ), ஒரு அறைக்குள்ளே வைக்கப் பட்ட ஒரு இரும்புக் குண்டில் இருந்து இன்னொரு இரும்புக் குண்டுக்கு கம்பியில்லாமல் மின்சாரத்தை பாய்ச்சினார். 

சுவர்களை கடந்து சென்று மின் காந்த அலைகள் இன்னொரு இடத்துக்கு செல்ல முடியும் என்பதை முதலில் நிகழ்த்திக் காட்டிய மாபெரும் விஞ்ஞானி திரு. ஜே.சி போஸ் தான். கல்கத்தாவில் பிரெசிடென்சி  காலேஜில்  ஒரு சிறு அறையை அமைத்து அங்கேயே தன உபகரணத்தை அமைத்தார்.

மில்லிமீட்டர் அலைகளை உருவாக்கி அதன் மூலம் தொலைவில் உள்ள ஒரு மணியை அடிக்க செய்தார். தன்னுடைய உபகரணத்துக்கு ஜே.சி.போஸ் பேடன்ட் வாங்கவில்லை.

அதற்க்கு ஒரு வருடத்திற்கு பிறகு மார்க்கோனி அதே செயலை செய்து, பேடன்டையும் வாங்கி பேரையும் தட்டி சென்று விட்டார்.

அறிவியலாளர்கள் அனைவருக்கும் இது  தெரியும். அலைக் கற்றை உருவாக்கத்தில் பொலாரிசேசன் ((polarisation) கான்செப்டை அறிமுகப் படுத்தியது ஜே.சி. போஸ்தான்.  எந்த ஒரு எலெக்ட்ரானிக் கம்யூனிகேசன்ஸ் நூலிலும் ஜே.சி. போஸின் பெயரைக் குறிப்பட யாரும் மறப்பதில்லை. 

மின்காந்த அலைகளின் வேவ் லெங்க்த் (wave length) அதிகமாக இருந்தால் ஆன்டெனாவும் (Antenna) அதிக உயரமாக இருக்க வேண்டும். எனவே குறைந்த நீளமுள்ள ஆன்டெனாவை வைத்துக் கொள்ள மில்லிமீட்டர் அளவுகளில் வேவ் லெங்க்த் இருந்தால்தான் சரிப் படும் என்கிற கான்செப்டை கச்சிதமாக  புரிதல்  செய்து  செயல் படுத்திக் காட்டியவர் ஜே.சி.போஸ் தான்.

இன்றைக்கும் அமெரிக்காவின் அரிசோனா  மாகாணத்தில் உள்ள NRAO லேபரட்டரியில் இயங்கும் 1.33mm அலை மல்டி பீம் ரிசீவர் அப்படியே திரு. ஜே.சி. போஸ் 1987ல் சமர்ப்பித்த ஆராய்ச்சி பேப்பரை வைத்து அப்படியே பார்த்து பார்த்து  அப்படியே உருவாக்கப் பட்டது.

தாவரவியலில் திரு. ஜே.சி. போஸின் சாதனை மிக சிறப்பானது. தாவரங்களுக்கு உயிர் உள்ளது என்பதை முதலில் நிரூபித்தவர் அவர்தான்!

ஜே.சி. போஸ் மூடநம்பிக்கைகளை களைந்து பகுத்தறிவை பரப்பியவர். வங்காளத்திலே ஒரு இடத்திலே இரண்டு மரங்கள் அவ்வப் போது வளைவதும், நிமிர்வதுமாக இருந்தன. அவை கடவுளின் செயல் என்று மக்கள கருதினர். ஆனால் அவை உண்மையில் அறிவியல் காரணங்களாலே  அவ்வாறு செய்கின்றன என்று நிரூபித்தார்  போஸ்.  

 வெளி நாட்டு வூடகங்கள் இன்று கூட கூடுமான வரை ஜே.சி. போசின் பெயரை இருட்டடிப்பு செய்து கொண்டுதான் உள்ளனர்.

ஆனால் இன்றைக்கு நம்முடைய சகோதரர்கள் பலர் இதை அறிந்திருக்கவில்லை. வெள்ளைக்காரர்தான் எல்லாத்தையும் கண்டு பிடிக்க முடியும் என்று நினைத்துக் கொண்டும், அந்தக் கருத்தைப் பரப்பிக் கொண்டும் உள்ளனர்.

 நமக்குள்ளே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நம்  திறமையையும், அறிவையும் மறந்து “வெள்ளைக்காரங்க கில்லாடிங்க”  என்று அவர்கள்  காலடியில் நம் சிந்தனைகளை அடகு வைத்தால்,  அவர் நாம் யாராக இருந்தாலும் அவர்கள் நம் (இந்தியவர் )அனைவரையும்  ஒரே மாதிரியாக தான்  கருதுவர். இந்தியர்கள் நம்மை நாமே இழிவாகக் கருதிக் கொண்டும், பேசிக் கொண்டும் வெள்ளைகாரனுக்கு எடுப்பு வேலை பார்த்ததால் எட்டப்பன்,  23ம் புலிகேசி நிலையை தான் அடைவோம். அதாவது நாம் வெள்ளைக் காரரை வெறுக்க சொல்லவில்லை. அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம், அதே நேரம் அவர்கள் முன்பு மண்டியிட தேவையில்லை என்றுதான் சொல்லுகிறோம்.

தான் கண்டு பிடித்த அலைக்  கற்றை பரப்பி மெசினுக்கு பேடன்ட் வாங்கியிருந்தால் எத்தனயோ கொடிகளைக் குவித்து இன்னொரு ஆல்பர்ட் நேபெல் ஆகியிருக்க முடியும். ஆனால் அன்பு  உள்ளம் கொண்ட அன்றைய இணையற்ற இந்தியர் பேடன்ட் வாங்காமல் தியாகம்  செய்து விட்டார்.  இன்றையோ இந்தியரோ அதே அலைக் கற்றையை வைத்து… நான் என்ன சொல்வது, அதை நாடே  சொல்லும் .

திரு. ஜே.சி. போஸின் அறிவுக் கூர்மைக்கு, கடும் உழைப்புக்கு, நேர்மைக்கு, பண்புக்கு , தியாகத்துக்கு தலை வணங்குகிறேன். உங்கள் குழந்தைகளுக்கு  அவரைப் பற்றி சொல்லுங்கள்,  அவர்கள் சிறந்த விஞ்ஞானியாக மலரக் கூடும்!

தொடர்புடைய பதிவுகள்:

“அது எண்ணிக்கை தெரியாத உன் குற்றம்”

https://thiruchchikkaaran.wordpress.com/2010/09/28/number-systems/

Advertisements

6 Responses to "அலைக்கற்றையை கண்டுபிடித்தவர்!"

பயனுள்ள பதிவு

வெள்ளைக்காரன் வெள்ளைக்காரன்தான் என்பதற்கான உண்மையான பொருள் அவர்களிடம் உள்ள “Professionalism “.
ஒரு விஞ்ஞானி கிருஸ்துவ மதத்தவனாக இருந்தாலும் , அவனுடைய ஆராய்ச்சியில் மதத்தை நுழைக்க மாட்டான் நம்ம ராகெட் விஞ்ஞானிகள் திருப்பதியில் ராகெட் மாதிரியை வைத்து பூசை போட்டுவிட்டு, கடைசியில் ராகெட் கடலில் விழுவதையே தொழிலாக கொள்வது போல. போஸ் அவர்களது பணி பாராட்ட தக்கதே. இவரது இந்த சாதனைகளுக்கு காரணம் அவரது மேற்கத்திய படிப்பே முக்கிய பங்கு கொண்டது. மார்கொனியின் சாதனையும் பாராட்டுக்குரியதே . அவர் தன் கண்டுபிடிப்புக்கு பேடன்ட் உரிமை வாங்கியது அவருடைய “professionalism ” திற்கு ஒரு எடுத்துகாட்டு.

அன்புக்குரிய திரு. சமுத்ரா மற்றும் திரு. பிரதீப் அவர்களே, வருக்கைக்கும், கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

அன்புக்குரிய திரு. சமுத்ரா மற்றும் திரு. பிரதீப் அவர்களே, வருகைக்கும், கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.

பிரதீப், வெள்ளைக்காரர்களின் “Professionalism” பாராட்டத்துக்குரியதே. அதைப் பாராட்டுவதில் தவறில்லை. ஆனால் எல்லாவற்றையும் அவர்கள் மட்டும்தான் கண்டு பிடிக்க முடியும் என்பதாகவும், நாம் ஒன்றும் செய்ய லாயக்கு இல்லாதவர்கள், நம்மால செய்ய இயலாது என்கிற வகையில் நம்மை நாமே கீழாக நினைப்பது சரியல்ல என்றே நான் சொல்லுகிறேன்.

போஸ் வெளி நாட்டில் படித்தவர் என்றால் உள்நாட்டிலே படித்த மிகச் சிறந்த விஞ்ஞானிகளும் உள்ளனர். சி.வி. ராமன் படிப்பு, ஆராய்ச்சி இரண்டையும் இந்தியாவிலே தான் செய்தார். நவீன வானவியலின் தந்தை எனப் போற்றப் படும் சந்திரசேகர் சென்னை திருவல்லிக்கேணி பள்ளியில் படித்து, கல்லூரி படிப்பையும் சென்னையிலே படித்தார். இராமனுஜம், கலாம் ஐயா போன்றவர்கள் கூட இந்தியாவில்தான் படித்தவர்கள்.

இந்தியா முப்பத்து எட்டு முறை விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது, மூன்று முறை கீழே விழுந்ததுதான் முக்கியமாக எழுதுகிறோம். அமேரிக்கா விட்ட விண்கலம் திரும்ப வரும் போது வெடித்து சிதறி கல்பனா சாவ்லா உள்ளிட்ட ஏழு பேர் இறந்ததை மாத்திரம் குறிப்பிட மாட்டார்கள். நிலவுக்கு அமெரிக்கா அத்தனை முறை சென்று வந்தது. அதில் தண்ணீர் இருந்ததைக் கண்டு பிடித்தது யார் ? ஒரே ஒரு முறை கலம் அனுப்பிய இந்தியா தானே. ஆனாலும் நாம் கண்டு பிடித்தால் அது முக்கியம் இல்லை என நினைக்கிறோம். தவறாக எண்ணாதீர்கள். சிவப்பாக இருந்தால் கிரேட் எனவும் கருப்பாக இருந்தால் ஓகே ஓகே என்றும் எண்ணுகிற எண்ணம் நம்மிடையே இன்னுமிருக்கிறது. ஒரு படத்திலே ஒரு வசனம் கூட வரும், சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்டா என்பது. இதை தான் இன்பீரியாரிட்டி காம்பிளக்ஸ் என்கிறார்கள். பிரதீப் , நீங்கள் நம்மைக் குறித்து ஆக்க பூர்வமாக எண்ணுங்கள். அனேகமாக நீங்கள் கூட எதையாவது சாதிக்க இயலும்.

இந்தக் கட்டுரையையும் படியுங்கள்

“அது எண்ணிக்கை தெரியாத உன் குற்றம்”

https://thiruchchikkaaran.wordpress.com/2010/09/28/number-systems/

நான் ஒன்றும் நாம் கீழானவர்கள் என்று சொல்லவில்லையே. அவர்களிடம் இருக்கும் அந்த ‘professionalism ‘, நம்மவர்களிடம் கிடையாது. அதை அவர்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும் என்று தான் சொல்லுகிறேன். ராமன், அப்துல் கலாம் இவர்கள் பாராட்டுக்குரியவர்களே அவர்களது சாதனை மகத்தானது. அதற்க்கு காரணம் மேற்கத்திய அறிவியல் படிப்பை படித்ததே காரணம். மத நம்பிக்கைகளை அறிவியலில் கலக்காததே அதன் சிறப்பு. மற்ற படி வெற்றிபெற்ற இந்தியாவின் விண்கலங்கள் மற்ற நாடுகளின் மற்ற நாடுகளின் பெரும் பங்களிப்புடனே சாத்தியமானது. அவர்களுடைய டெக்னாலஜி க்கு இன்னமும் இந்திய விண்வெளி துறை வரவில்லை. இவர்களது தோல்விகளுக்கு அதுவே காரணம்.

கீழானவர்கள் என்று நீங்கள் நேரடியாக சொல்லவில்லை, ஆனால் உங்களுடைய பின்னூட்டத்தை படிப்பவருக்கு தோன்றுவது அதுதான் .

பலர் நேரடியாகவே விட மோசமாக இந்தியர்களை கீழாகவும் , மேலை நாட்டவரை உயர்வாகவும் இணையத்திலே எழுதுகின்றனர்.

மேலை நாட்டு படிப்பு , கீழை நாட்டு படிப்பு என்று எல்லாம் பிரிக்க முடியாது. அறிவியலுக்கு அடிப்படை கணிதமே. வெக்டர் கணிதம் இல்லாவிட்டால் எந்த ராக்கெட்டும் போக முடியாது.

எண் கணிதத்தை உருவாக்கி கணிதத்தை ஆரம்பித்தது இந்தியாவே. இதை நாம் மட்டும் சொல்லவே. பிரெஞ்சு கணித மேதை லாப்ப்லாஸ் இதைக் குறிப்பிட்டு பாராட்டி உள்ளார். இதை டிஜிடல் கம்ப்யூடர் பண்டமென்டல்ஸ் நூலில் மசாசூட்டஸ் பேராசிரியர் தாமஸ் பார்ட்டி மேற்கோள் காட்டி உள்ளார். அதை “எண்ணிக்கை தெரியாத உன் குற்றம் கட்டுரையில்” வெளி இட்டு இருக்கிறோம்.

முதலில் விண்வெளிக்கு ஓடம் அனுப்பியது ரஷியா தான். ஜப்பானின் தொழில் நுட்பமும் அறிவியலும் அனைவரும் அறிந்ததே.

நீங்கள் இந்தியாவின் தோல்விகளை மட்டும் குறிப்பிடுவதில் கவனம் செலுத்துகிறீர்கள். ஸ்கை லாப் எனப்படும் அமேரிக்கா விண் நிலையம் 1979ல் கீழே விழுந்தது உங்களுக்கு தெரியுமா என்று தெரியாது.

போஸோ, ராமனோ, சந்திரசேகரோ, … வேறு யாருமோ மத நம்பிக்கைகளை அறிவியலில் கலக்கவில்லை.

மேலை நாடு ஒத்துழைப்பு இருந்தால்தான் , பங்களிப்பு இருந்ததால் தான் வின்வெளி ஓடம் அனுப்ப முடிந்தது என்று அப்படியாவது கருத வைத்து, இந்தியர்களால முடியாது என்கிற வகையிலே கருத்தாக்கத்தை உருவாக்க முயல்வதாகவே உள்ளது. காம்போநென்ட்ஸ் எல்லாம் குளோபல் சோர்சிங் செய்யப் படுவது எல்லா நாடுகளிலும் உள்ளது.

மேலை நாடுகளின் professionlism என்ன என்பதை எல்லோரும் பார்க்கிறோமே. உலகில் எல்லோரிடமும் கடன் வாங்கி தின்று ஏப்பம் விட்டனர். இன்று உலகில் பொருளாதார சரிவு ஏற்படையார் காரணம். ஏற்பட யார் காரணம்? அத்தனை முதலீடு பணமும் எங்கே போயிற்று இதுதான் professionlism ஆ?

இதை எழுதுவதால் நாம் மேலை நாட்டினரை வெறுக்கிறோம் என்பதற்காக அல்ல. உலகில் அனைவரும்சமம். மேலை நாட்டினரோ, ஆப்பிரிக்கரோ , மங்கோலியரோ, இந்தியரோ யாராக இருந்தாலும் சமம், யாரும் கடின உழைப்பின் மூலம் சாதிக்க இயலும் என்பதை உறுதி படுத்தவே இவ்வளவும் எழுதுகிறோம்.

மேலை நாட்டு அறிவியல் அறிஞ்சர்களின் பங்களிப்பை, பாராட்டுகிறோம், நன்றி செலுத்துகிறோம். ஆர்க்கிமிடிஸ், கலிலியோ, ஜேம்ஸ் வாட், எடிசன், ராமன்….. ஆகியோரே என்னுடைய ரோல் மாடல்கள்

என்ன சொல்கிறோம் என்பதையே சரியாக விளங்கிகொல்லாமல், சும்மா குய்யோ முறையோன்னு இந்தியா இந்தியான்னு கத்துனா என்ன சொல்றது. ரசிக மனப்பான்மையில் இருப்பவர்களுக்கு எதார்த்தம் விளங்காது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 37 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: