Thiruchchikkaaran's Blog

நல்ல மனைவி, நல்ல கணவன், நல்ல குடும்பம் தெய்வீகம்!

Posted on: January 3, 2011


இந்திய சமுதாயம் எட்டாயிரம் வருடங்களுக்கு மேலாக வாழும் சமுதாயம். அன்று முதல் இன்று வரை இந்திய சமுதாயத்தின் அடிப்படை குடும்பமே. குடும்ப அமைப்பு, ஆண் பெண் இருவரும் அமைதியாக வாழ, சமுதாயம் செழிக்க உதவுகிறது.

குடும்பம் ஒன்றுபட்டு, கணவனும் மனைவியும் ஒன்றாக வாழ அடிப்படைக்  காரணியாக இருப்பது பரஸ்பர அன்பே. குடும்ப அமைப்பு என்பது மனைவியையோ, கணவனையோ கட்டுப் படுத்தவோ அடிமைப் படுத்தவோ உருவாக்கப்படவில்லை.

கணவனுக்கு ஒரு துன்பம் என்றால் மனைவி துடிக்கிறாள், மனைவி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கணவன் விரும்புகிறான். இது அன்பின் அடிப்படையில் உருவானதே, இதை சட்டம் போட்டோ, கட்டாயப் படுத்தியோ உருவாக்கவில்லை. 

சீதை  , கண்ணகி ,  தமயந்தி முதல் இன்றுள்ள   தாய்மார்கள் வரை குடும்ப நன்மைக்காக, கணவனின் மகிழ்ச்சிக்காகவும் தாங்கள் பல வேதனைகளை பொறுமையுடன்  அனுபவித்து  உள்ளனர். இப்போது ஆண்களின் முறையாகும்.

பல துறைகளிலும் பெண்கள் முன்னேறி வருகின்றனர்.  கணவன் தன்  மனைவியின் திறமையை உணர்ந்து முன்னேற உதவி செய்வது அதிகரித்து வருகிறது. இசைத் துறையில் பெண்கள் கொடி கட்டிப் பறக்கின்றனர். ஆனாலும் ஆண்கள் இன்னும் மாற வேண்டியுள்ளது. ஒவ்வொரு ஆணும் தன் மனைவியின் வளர்ச்சியில் பெருமை கொள்வதும், அவள் தன்னை விட திறமைசாலியாக இருந்தால் அதை ஒப்புக் கொள்ளத் தயங்காதவனாகவும் எப்போது இருக்கிறானோ அப்போதுதான் உண்மையான் பெண் விடுதலை ஆகும்.

 

சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் விஜயகுமாரும் அவர் மகள் வனிதாவும் , வனிதாவின் மகனை  மாறி மாறி  இழுப்பது, அந்த சிறுவன் அழுவது நெஞ்சைப் பிழியும் காட்சியாகி  விட்டது.  கணவன் மனைவி பிரிந்து விடுகிறார்கள். அவர்கள் பெற்ற குழந்தைகளுக்கு என்ன கஷ்டம் என்று சிந்தித்துப் பார்க்கிறார்களா?  அந்த அளவுக்கு என்ன கஷ்டமோ கணவன் மாணவி சேர்ந்து வாழ முடியாத அளவுக்கு ?  இவர்கள் வாழ்க்கையில் என்ன எதிர்பார்க்கிறார்கள்?  உலகில் எல்லா பெண்களும் சிம்ரன், தமன்னா… (வேற யாருப்பா)…. கத்ரினா கைப், மல்லிகா ஷெராவத், … ஆஞ்சலினா ஜூலி, எம்மா வாட்சன் … இவர்களைப் போல இருக்க மடியது. இவர்களும் வயது ஆக ஆக இளமை குறைந்து அழகும் குறைகிறது (சண்டைக்கு வராதீங்கப்பா) . அதே போல எல்லா ஆண்களும் சூர்யா,  ஜானி ஆப்ரஹாம்,  வான் டேம் போல இருப்பதில்லை.

உண்மையில் முக்கியமானது அன்பே. கோவலன் அழகைத் தேடித் போனான். அவனுக்கு கை கொடுத்தது  அன்புதான்.

நம்முடைய அம்மாவும் அப்பாவும் எப்படி வாழ்ந்தார்கள் என்று எண்ணிப் பாருங்கள். குடும்பத்திற்காக ஓடாக உழைத்ததைத் தவிர வேறு எதையும் எண்ணக் கூட நேரம் இல்லை அவர்களுக்கு. அதுதான் சுயநலமற்ற வாழ்வு. குழந்தைகளின் நன்மைக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்வது.

 தனக்கு ” பொருத்தமான” துணை வேண்டும் என்று தேடிக் கொண்டே போனால் , மாறிக் கொண்டே போனால்,  உலகம் முழுதும் தேடினால் கூட கூட நீங்கள் தேடும்  “பொருத்தமானவர்”  கிடைக்காமல் போகக் கூடும்.

அதே நேரம் சில ஆண்கள்,  பெண்களை  கொடுமைப் படுத்துபவராகவும், சில பெண்கள் ஆண்களின் வாழ்க்கையை நரகமாக்கியவராகவும் ஆகி விடுகின்றனர். இப்படி பட்டவர்களிடம் இருந்து பிரிவது ஒரு வகையான விடுதலை ஆகி விடுகிறது.  அடுத்தவர் மகிழ்ச்சியில்  தான் மகிழ்ச்சியடையும் நாகரீகத்தை இவரகளுக்கு கற்றுத் தரவில்லை. மாறாக அடுத்தவரின் வருத்தத்தில் இவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.  

எந்த அளவுக்கு மனிதர்கள் நாகரீகம் உடையவர்களாக இருக்கிறார்களோ, அந்த  அளவுக்கு குடும்ப வாழ்க்கை முறை சிறப்பாக இருக்கும்.

Advertisements

4 Responses to "நல்ல மனைவி, நல்ல கணவன், நல்ல குடும்பம் தெய்வீகம்!"

//தனக்கு ” பொருத்தமான” துணை வேண்டும் என்று தேடிக் கொண்டே போனால் , மாறிக் கொண்டே போனால், உலகம் முழுதும் தேடினால் கூட கூட நீங்கள் தேடும் ”பொருத்தமானவர்” கிடைக்காமல் போகக் கூடும்.

//

உல்கம முழுதும் தேடினாலும். பொருத்தமானவர் கிடைக்க வாய்ப்பே இல்லை. பரஸ்பர விட்டுக் கொடுப்புகள் மூலம் ஒருவர் இன்னொருவருக்கு பொருத்தமாகிக் கொள்ள முடியும். கணவன் மனைவிக்கு இடையில் அன்பு ஒன்று மட்டுமே எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும், ஆடை அவிழ்க்கும் போதும் மட்டுமில்லாமல் ஒழிவு மறைவின்றி மனதளவிலும் இருந்தால் மட்டுமே நல்வாழ்கை கையில் கிடைக்கும், கனவான சொர்க்கம் கனிவாக வீட்டில் தவழும்…………… உங்கள் பதிவு அருமை……….

நன்றி திரு . இக்பால் செல்வன் அவர்களே.

உங்கள் பின்னூட்டம் கட்டுரைக்கு அணிந்துரை போல சிறப்பாக உள்ளது.

நீங்கள் சொல்வது எல்லாம் சரி ஆனால் ஒரு சிறிய அதே சமயத்தில் முக்கிய திருத்தம். ஏனென்றால் வரலாற்று பிழை இருக்க கூடாது. இந்தியா என்பதே ஒரு புதிய நாடு. நேற்று பிறந்த குழந்தை. 1947 ஆண்டில் தான் உருவானது. அதற்க்கென்று ஒரு தனி மொழியோ, கலாச்சாரமோ, பண்பாடோ, நாகரீகமோ, சரித்திரமோ, பழக்க வழக்கங்களோ கிடையாது. அப்படி இருக்கையில் “இந்திய சமுதாயம் எட்டாயிரம் வருடங்களுக்கு மேலாக வாழும் சமுதாயம்” என்று நீங்கள் எப்படி கூறமுடியும்? இதை இப்படித்தான் சொல்ல வேண்டும். “தமிழ் சமுதாயம் எட்டாயிரம் வருடங்களுக்கு மேலாக வாழும் சமுதாயம்”. (ஆதாரம்: திருக்குறள் சங்க தமிழ் அறநூறு புறநூறு தொல்காப்பியம்….. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்……) / கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா? -நன்றி.

இந்தியா – ஓர் உரைக்கப்படாத உண்மை see on http://www.theebam.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: