Thiruchchikkaaran's Blog

ஜெயேந்திரர் – தோற்றமும், வளர்ச்சியும்! ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்.

Posted on: January 2, 2011


முன்னுரை:

 தமிழ் நாட்டு வரலாறு எழுதப் படும்போது எம். ஜி.ஆர், கலைஞர் , ஜெயலலிதா…..ஆகியோர் தவறாமல் இடம் பெறுவார்கள். அவர்களோடு  ரஜினி காந்த், இளையராஜா, …. போன்றோரும் குறிப்பிடப்படுவார்கள் என நம்பலாம்.

(இன்னும் சொல்லப் போனால் தமிழ் நாட்டு வரலாற்றில் சந்தன வீரப்பன் கூடக் குறிப்பிடப்படக் கூடும். வீரப்பனைப் பற்றி கர்நாடக மாநில வரலாற்றிலும் குறிப்பிடுவார்கள் எனக் கருதலாம்). பண்டைய வரலாற்றில் கூட  ஆட்சியாளர்களை மட்டும் அல்லாமல் புலவர்கள், இசை மேதைகள், ஆன்மீக வாதிகள் போன்றோர் – (உ- ம்) காளிதாஸ், தான்சேன், துளசி தாசர்…. பற்றியும் குறிப்பிட்டு உள்ளனர்.  “ஜனநாயகம்” அதிகரித்து வரும் கால கட்டத்தில் பலரும் வரலாற்றில் இடம் பிடிக்கப் படும் வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் ஜெயேந்திரர் தமிழகத்தில், இந்தியாவில் பலரும் அறியத் தக்க வகையில் செல்வாக்கு பெற்றது எப்படி என்பதை வரலாற்றுக்  கண்ணோட்டத்தில் ஆராய்ச்சி செய்கிறோம்.

குறிப்பு: 

ஜெயேந்திரர் மீது சாற்றப் பட்டுள்ள குற்றச்சாட்டுகள், அது தொடர்பாக அவர் மீது நீதி மனறத்தில் உள்ள வழக்குகள்,  ஆகியவற்றைப் பற்றி இந்தக் கட்டுரைத் தொடர்களில்  விவாதிக்கப்பட மாட்டாது.  நீதி மன்றத்தில் வழக்கு நடை  பெறும்போது அதைப் பற்றி வெளியில் விவாதிப்பது மரபு  அல்ல என்பதைக் கருத்தில் கொள்வோம்.

கட்டுரை:

ஜெயேந்திரரின் செல்வாக்கு சமூக , அரசியல் களங்களில் மட்டும் அல்லாது உயர்  மட்ட பிரமுகர்கள் வட்டாரத்திலும் அவரது செல்வாக்கு இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட எல்லோரிடமும் செல்வாக்குப் பெற்றவராக  இருந்திருக்கிறார்.

          File:File121.jpg

பொதுவாக இந்துக்களிடம் செல்வாக்கு பெற்றவராக  இருந்தாலும், பிற மதத்தை சார்ந்த பிரமுகர்களும்  இவருடன் பழகி உள்ளனர். சமூக  அளவிலே தமிழ் நாட்டில் எல்லா  இந்துக்களும்  இவரை ஒரு இந்து மத பிரமுகராக கருதினாலும், பார்ப்பனர் என சொல்லப் படும் சமுதாயத்தினர் மத்தியில் அசைக்க முடியாத செல்வாக்கு பெற்று திகழ்கிறார். அந்த செல்வாக்கை குறைத்து மதிப்பிட இயலாது.  ஜெயேந்திரரை பற்றி பேசுவதானால் அவரை மதிப்புடன் தான் பேசியாக வேண்டும், ஜெயேந்திரரை பற்றிய  விமரிசனங்களை அவர்கள் கேட்க  விரும்பவில்லை, அப்படி விமர்சித்தால் நட்பை இழக்க நேரிடும்.  சில வாரங்களுக்கு முன் என் வீட்டிற்கு நண்பர் ஒருவர் முதன் முறையாக வந்து இருந்தார்.

அவருடன் பல விடயங்களையும் பற்றிப் பேசி கடைசியில் ஆன்மீக விடயத்தைப் பற்றியும் பேச ஆரம்பித்தோம். நான்  கொஞ்சம் பகுத்தறிவு வாதி என்று அவர்கள் கேள்விப் பட்டு இருக்கின்றனர்  , நான்  எந்த ஒரு மடமோ  இயக்கங்களோ நடத்தும் நிகழ்சிகளுக்கு  செல்வதில்லை என்பது அவர்களுக்கு தெரியும்.  கடைசியில் ஜெயேந்திரர் பற்றி பேச்சு வந்து விட்டது. நான் அவரைப் பற்றி தவறாக ஒன்றும் சொல்லக் கூடவில்லை. அவர்களாகவே ஜெயேந்திரரை டிபண்ட் செய்ய ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் விவாதம் இறுக்கமாகி அவர்கள் விடை பெற்று சென்று விட்டனர்.

ஜெயேந்திரரைப் பற்றி உண்மையிலே நான் எதுவுமே விமரிசிக்கவில்லை. ஆனால் ஜெயேந்திரரை மரியாதையுடனே  நோக்க வேண்டும், அப்படி நோக்காமல் இருந்தாலே அவர் “பொறுப்பற்றவர்” எனக் கருதப் பட்டு  நண்பர்களின் நட்பை இழக்க வேண்டிய நிலை. பல நண்பர்களை  இழந்தும் இருக்கிறேன்.

இந்த அளவுக்கு ஜெயேந்திரர் சமூக செல்வாக்கு பெற்ற சக்தியாக இருக்கிறார் என்பதும் உண்மையே.

ஜெயேந்திரர் இவ்வளவு செல்வாக்கு பெற்றது எப்படி? தொடர்ந்து ஆராய்வோம்!

(தொடரும்)

Title: ஜெயேந்திரர் – தோற்றமும் வளர்ச்சியும்! ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம் .

 
 
Advertisements

6 Responses to "ஜெயேந்திரர் – தோற்றமும், வளர்ச்சியும்! ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்."

உன் முகமூடியை நீயே கழற்றுகிறாய் திருச்சி. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது வெளியே விவாதிக்கக் கூடாது என்று கூறுவதற்கு நீ என்ன ஜெயேந்திரனா இல்லை படிக்கிற ஒவ்வொருவனும் ஜெயேந்திரனா? நல்லா காமெடி பண்றே போ.

வருக வருக என்று வரவேற்கிறேன்.

அன்புக்குரிய எம். ஆர். ராதா அவர்களே, வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

ஜெயேந்திரர் மீது வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. என்னிடம் அவர் மீது சாற்றப் பட்ட குற்றச் சாட்டுகள் பற்றிய எந்த ஆதாரமுமோ , தகவலோ இல்லை. நான் இது வரையில் ஜெயேந்திரரைப் பார்த்ததும் கிடையாது. நான் காஞ்சிபுரத்துக்கு சென்றதும் கிடையாது. அவரைப் பற்றி சில பல தொலைக் காட்சிகளில் பல்வேறு விடயங்கள் விவாதிக்கப் பட்டன. அவற்றைப் பற்றி எந்த வித ஆதாரமும் என்னிடம் இல்லை. இப்படியான நிலையில் நாம் என்ன எழுத முடியும்?

இந்தக் கட்டுரை ஒரு முன்னுரையே. இன்னும் பல கட்டுரைகள் வர உள்ளன. ஜெயேந்திரரை நாம் தத்துவ ரீதியாக அணுகுகிறோம். அவருடைய கோட்பாடு செயல்பாடுகள் எப்படி இருந்தன, அவை மக்களுக்கு ஆன்மீக உயர்வை தந்தனவா, அவர் தனக்கு பேரும் புகழும் சம்பாதித்துக் கொண்டாரா, மக்களின் மனநிலையை உயர்த்தினாரா என்பதைப் பற்றியும் நாம் பல விடயங்களை ஆராய்வோம்.

நாம் எழுதியதில் எதாவது தவறு இருக்கிறதா என்பதை குறிப்பிட்டுக் காட்டுமாறு கோருகிறேன்.

மீண்டும் நன்றி.

The media did a trial and convicted him and created an excitement and gave lot of fodder to the rumour mills and SUN TV telecast the next day a report on their regular crime report as though everything had been proved.That was only to besmirch the reputation of H.H.JJ knew that she had no case and it was a case of a vendetta.

The same SUN TV had to pay a price when Dayanidhi and Kalanidhi fell out of favour due to Dinakaran’s poll and only three innocnet lives were lost.
People who heap abuses talk as though HH had bought the witnesses as would be the suspicion in any case of this sort.JJ wanted only to doa mud slinging and would pay a heavy price.Till date nearly 70% of witnesses have gone back and accused Police of coercing them.People who come to Mutt can see scores of not only Non Brahmins,but also Christians and muslims seeking His blessings

//பார்ப்பனர் என சொல்லப் படும் சமுதாயத்தினர் மத்தியில் அசைக்க முடியாத செல்வாக்கு பெற்று திகழ்கிறார்.// எதை வைத்து கூறுகிறீர்கள். இந்த கருத்தை மறுக்கிறேன். காஞ்சி மடத்தையே பார்க்காத பிராமணர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். நாளைய பொழுதிற்கு ஜெயேந்திரர் என்ன செய்யச் சொல்லப்போகிறார் என்று அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைக்காக அத்தனை பிராமணர்களும் பராக்கு பார்த்துக்கொண்டு இருக்கவில்லை. பிராமணர்கள் பொதுவாக காவியை எப்படி பக்தியுடன் மதிப்பார்களோ அதே மரியாதை ஜெயேந்திரர் மீதும் தொடர்ந்தது. அவ்வளவே! மரியாதை வைத்திருக்கிறார்கள் என்று கூறுவது வேறு செல்வாக்கு என்பது வேறு. எனவே எல்லா பிராமணர்களையும் ஒரே வட்டத்தில் அடைக்க உங்களுக்கு உரிமை இல்லை என்று நினைக்கிறேன்.

//“You have talked too much”// ஏன்னா நாமல்லாம் ப்ளாகர். நிரூபிச்சிட்டீங்க.

//“and you are always talking unnecessary things // haa haa haa ஏன்னா நாமல்லாம் ப்ளாகர்.
//”இங்கே யாரும் உங்கள் ஆன்மீக சொற்பொழிவை கேட்க வரவில்லை. உங்கள் “கருத்துக்களை” எல்லாம் உங்கள் பிளாகிலே வைத்துக் கொள்ளுங்கள்.// அவங்க சொல்றதத்தான் கொஞ்சம் கேளுங்களேன் சார். ரொம்ப கஷ்டப்படுத்தறீங்க போல இருக்கு.
// ”சாப்பாடு போட்டாச்சு” என்று அறிவிப்பையும் செய்து விட்டு சென்று விட்டனர்// அதாவது செஞ்சாங்களேன்னு நினைச்சுக்குங்க.

//இந்த அளவுக்கு ஜெயேந்திரர் சமூக செல்வாக்கு பெற்ற சக்தியாக இருக்கிறார் என்பதும் உண்மையே.// அவங்க கோவம் ஜெயேந்திரர் செல்வாக்கானவர் என்பதால் இருக்காது, வீட்டுக்கு வந்தவங்க கிட்ட உங்களுக்கு ஏன் வேண்டாத பேச்சு என்பதால் தான் இருக்கும். எதுக்கும் ஒரு முறை கேட்டு கன்ஃபாம் பண்ணிக்கோங்க. அதனால் மறுபடி திட்டுவாங்கினீங்கனனா நான் பொறுப்பில்லை. all the best

அன்புக்குரிய சுந்தர்,

கட்டுரையைப் படித்து கருத்து தெரிவித்தற்கு நன்றி.

ஜெயேந்திர மீதுள்ள வழக்குகளை பற்றி இங்கே விவாதிக்க விரும்பவில்லை என்று தெளிவாக சொல்லி இருக்கிறோம். அப்படியும் நீங்கள் தேவை இல்லாமல் வழக்குகளைப் பற்றி எழுதுகிறீர்கள். மக்களுக்கு எல்லாம் தெரியும், என்ன நடக்கிறது என்பது எல்லாம்.

அன்புக்குரிய ராம்,

கட்டுரையைப் படித்து கருத்து தெரிவித்தற்கு நன்றி.

//எதை வைத்து கூறுகிறீர்கள். இந்த கருத்தை மறுக்கிறேன். காஞ்சி மடத்தையே பார்க்காத பிராமணர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். நாளைய பொழுதிற்கு ஜெயேந்திரர் என்ன செய்யச் சொல்லப்போகிறார் என்று அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைக்காக அத்தனை பிராமணர்களும் பராக்கு பார்த்துக்கொண்டு இருக்கவில்லை//. நான் அப்படி சொல்லவில்லையே. ஜெயேந்திரர் மீது அசைக்க முடியாத மரியாதையும் மதிப்பும் வைத்து இருக்கிறார்கள் என்று தான் சொல்கிறேன். அது உண்மையா, இல்லையா ?
மற்றபடி இனி நண்பர்களிடம் இதைப் பற்றி பேசாமல் பிளாக்கில் எழுதுவதோடு இருப்பதுதான் சரி. நீங்கள் சொல்வது சரியே.

உள்ள இருக்க லைடிங்கே சொல்லுதே ஜெயேந்திரர் யாருன்னு …ம்ம்ம்ம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: