Thiruchchikkaaran's Blog

பார்ப்பனர்களின் வாழ்வியலை விளக்கிய படம்- திசை மாறிய பறவைகள்.

Posted on: January 1, 2011


 

புத்தாண்டு பிறப்பை ஒட்டி பல்வேறு தொலைக் காட்சிகளும், உலகத் தொலைப் பட வரலாற்றில் முதன்முறையாக, என்று பெரும்  சத்தத்துடன்  அறிவித்து விட்டு “சரவணன்”,  “லண்டன்” போன்ற தமிழ் சமுதாயத்தை உலுக்கிய  படங்களை ஒளி பரப்பிக் கொண்டு இருந்தன.

மெகா டி. வி யில் நள்ளிரவு பதினோரு மணிக்கு ஒளி பரப்பாகிய “திசை  மாறிய பறவைகள்”, என்னும் படம் எனது நினைவலைகளை கிளறியது. திருச்சியில் பாய்லர் தொழிற்சாலைக்கு செல்லும் வழியில் உள்ள காட்டூரில் ஒரு புகழ்  பெற்ற தேவாலயம் உள்ளது. அங்கே நடை பெற்ற ஒரு திரு விழாவிற்கு நானும் எனது நண்பர்களும் சென்று இருந்தோம். அங்கே இந்த திசை மாறிய பறவைகள் படத்தை பார்த்தது நினைவுக்க் வந்தது.

நாயகி சுமலதா எளிய வாழ்க்கை வாழும் பார்ப்பனரின் மகள். 

சுமலதாவின் தந்தை தினமும் , தெருவில் கீர்த்தனைப்  பாடல்களைப் பாடிக் கொண்டே  உஞ்சி விருத்தி எனப் படும் பிச்சை எடுத்து வாழ்பவர், சரத் பாபு வசதியான பார்ப்பன குடும்பத்தை சேர்ந்தவர்.

சரத்பாபுவும், சுமலதாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர்.  மிகவும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் சுமலதாவை சரத் பாபு குடும்பத்தாருக்கு பிடித்திருக்கிறது. தங்கள்  வீட்டுக்கு மருமகளாக வர அவர்கள் சம்மதிக்கின்றனர்.

இந்த நேரத்தில் சுமலதா வேறு ஒருவரின் மகள், எடுத்து வளர்க்கப் பட்டவர் என்பது தெரிய வருகிறது. சுமலதாவின் உண்மையான தந்தை ( மேஜர் சுந்தரராஜன்) பல குற்றங்களை செய்வதை வாடிக்கை யாக உடைய  ஒரு கிரிமினல்  குற்றவாளி,  சிறையில் இருக்கிறார் என்பது தெரியவருகிறது. 

சுமலதா பார்ப்பனருக்கு பிறந்தவர் அல்ல என்பதை அறிந்த  சரத் பாபுவின் தந்தையான வி. எஸ். ராகவன் திருமணத்துக்கு அனுமதி மறுக்கிறார்.

சுமலதாவின் திருமணம் தடைப்  பட்டதால் அவருடைய   குடும்பம் சோகத்தில் மூழ்கிய நேரத்தில், இன்னொரு கடும் சோதனை உருவாகிறது. சுமலதா பார்ப்பனருக்கு பிறக்கவில்லை என்பதால், அவரை தன வீட்டில் வைத்திருக்கும் அவரது தந்தைக்கு யாரும் அக்கிரகாரத்தில்  உஞ்சி விருத்தி பிச்சை தர மறுக்கின்றனர்.  சோற்றுக்கே கஞ்சி இல்லாமல் பசியிலே வாடி வதங்கும் நிலை சுமலதா குடுமபத்துக்கு உருவாகிறது.

வாழ்க்கையின் விளிம்புக்கு வந்த தன் குடும்பத்தைக் கண்ட சுமலதா, தன் தாய் தந்தையரைக் காக்க ஒரே வழி, தான் அக்கிரகாரத்தில் இருந்து வெளியேறுவதுதான் என்று முடிவு செய்து கிறிஸ்துவ கன்னியாஸ்திரி ஆகி விடுகிறார்.

சரத்பாபு போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியில் சேர்கிறார். சுமலதவுடனான காதலை மறக்க முடியாமல் திருமணம் வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். 

சிறையில் இருந்து வந்த மேஜரும், அவரது கூட்டாளிகளும் சரத் பாபுவைக் கடத்துகின்றனர். அவருக்கு காயம் படுவதால் அதைக் குணப் படுத்த நர்ஸ் பணி அறிந்த   சுமலதாவைக் கூட்டி வருகின்றனர். சுமலதா சரத் பாபுவைக் குணப் படுத்துகிறார். சரத் பாபுவைக் காப்பாற்றி அதற்காக தன் உயிரையும் விடுகிறார்.

டிராஜடியாக முடியும் திசை மாறிய பறவைகள் சாதியக் கோட்பாடுகளிலும், ஏழ்மையிலும் சிக்கி பார்ப்பன குடும்பங்கள் பட்ட அவலங்களை சித்தரிக்கும் வகையிலே அமைந்து உள்ளது. 

பார்ப்பனர் என்று சொல்லப்படும் சமுதாயத்தினரின் வாழ்வியல் முறைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு  வகையாக இருந்துள்ளன. 

ஐம்பது  ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில் பார்ப்பனர்களின் வாழ்வியல் நிகழ்வை விளக்கும் வகையிலே இந்தப் படம் எடுக்கப் பட்டுள்ளது.

 சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் குறைந்து மக்கள் இணைந்து வரும் கால கட்டத்திலே  பல்வேறு சமூகங்களின் தனிப்பட்ட  வாழ்க்கை முறைகள் வரலாற்று குறிப்பாக நூல்களில் பதிவாக மாத்திரம் அமைந்து  விடுகின்றன.   

அவ்வகையில் இப்படம் ஒரு ஆவணமாக அமையக் கூடிய வாய்ப்பு உள்ளது.

Title: பார்ப்பனர்களின்  வாழ்வியலை விளக்கிய படம்- திசை மாறிய பறவைகள்.

Advertisements

2 Responses to "பார்ப்பனர்களின் வாழ்வியலை விளக்கிய படம்- திசை மாறிய பறவைகள்."

இந்த படத்தை எதேச்சையாக ராஜ் டிவியில் பார்க்க நேரிட்டது (ராஜ் டிவி இதை போன்ற பல நல்ல படங்களை வைத்திருக்கின்றனர்). அருமையான ஒன்று. ஆனால், படத்தின் பெயரை எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை.

இதில் வரும் “ராஜா வாடா சிங்கக்குட்டி” பாடல் அருமை.

நன்றி திரு. சீனு அவர்களே, “ராஜா வாடா சிங்கக் குட்டி, ராணி வாடி தங்கக் கட்டி” நல்ல பாடல், பிரபலமான பாடலும் கூட.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: