Thiruchchikkaaran's Blog

கீதாஞ்சலி!

Posted on: January 1, 2011


 
 
 
 
 
 

 
 
 
 
 
 
 

 

அன்புக்குரிய நண்பர்களே,  அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.  புத்தாண்டின் முதல் பதிவாக மாபெரும் சிந்தனையாளர், கவிஞர் ரபீந்திரநாத் தாகூர்  எழுதிய உலகப் புகழ் பெற்ற கீதாஞ்சலி காவியத்தைப்  பற்றி எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்

நான் மாணவனாக இருக்கும் போது,   பள்ளி வகுப்பறையிலே,  ரபீந்திரநாத் தாகூர் போட்டோ பார்த்து இருக்கிறேன். “தாகூரும் ஆண்ட்ரூசும்” என்று ஒரு பாடம் ஆறாம் வகுப்பில் வந்தது.

 

 எட்டாம் வகுப்பில் அவருடைய கவிதையின் ஒரு பகுதி ஆங்கில பாடத்தில் இருந்தது. “தாகூர் பாட்டு, கண்டிப்பா தேர்வில கேப்பாங்கப்பு” என்று அதை உரு போடுவோம்.

 

File:Tagore3.jpg

 

ஆனாலும், பாரதியாருக்கோ, பாரதிதாசனுக்கோ நோபெல் பரிசு குடுக்கவில்லை, தாகூருக்கு மட்டும் குடுத்து விட்டார்கள, வட நாட்டவர் சதி,  என்கிற வகையில ஒரு கருத்து மாணவர்கள் மத்தியில் நிலவியது  உண்டு. நான் கூட பாரதியாருக்கு நோபெல் பரிசு குடுக்கவில்லையே , தாகூருக்கு மட்டும் குடுத்து விட்டார்களே என்று ஒரு வகையான அசௌகரியத்தில் இருந்தேன்.

 

பின்னாளில் தாகூரின்  கீதாஞ்சலியை படித்த போது, அவர் ஒரு இணையற்ற கவிஞர் என்பதை புரிந்து கொண்டேன். கீதாஞ்சலியில் உள்ள கவிதைகளில் ஒன்றே ஒன்றை  மட்டும் கீழே இணைத்து இருக்கிறேன்.

ஒரு நோபெல் பரிசு மட்டுமல்ல, எத்தனை முறை  நோபெல் பரிசுகள் கொடுத்தாலும் தகும் என்கிற வகையில் ஆக்க பூர்வமான, உண்மையைத் தேடும், சுதந்திரத்தை நாடும் சிந்தனை…   

 

Where the mind is without fear and the head is held high;

Where knowledge is free;

Where the world has not been broken up into fragments by narrow domestic walls;

Where words come out from the depth of truth;

Where tireless striving stretches its arms towards perfection;

Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;

Where the mind is led forward by thee into ever-widening thought and action—

Into that heaven of freedom, my Father, let my country awake.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எங்கே சிந்தனைகள் அச்சமில்லாமல் சிந்திக்கப் பட்டு, தலை நிமிர்ந்து நோக்குகிறோமோ,
  
எங்கே அறிவுக்கு முட்டுக் கட்டை இல்லையோ,
  

  எங்கே இந்த உலகம் குறுகிய சிந்தனை சுவர்களால் தடுக்கப் பட்டு துண்டுகளாக பிரியாமல் உள்ளதோ,

எங்கே பொங்கும் பூம் புனலான பகுத்தறிவு சிந்தனைகள், இறந்து போன வறண்ட  பழைய  பழக்கங்களால்  வீணடிக்கப் படாமல் உள்ளதோ

 எங்கே சிந்தனை களும்  செயலும் எப்போதும் விரிவடையும் வகை உள்ளதோ, 
 
 

அத்தகைய சுதந்திர சொர்க்கத்தில்,   த‌ந்தையே எம் நாடு விழிக்க‌ட்டும் !

 


Advertisements

3 Responses to "கீதாஞ்சலி!"

சகோ. திருச்சிக்காரர் அவர்களே,

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல ரவீந்திரநாத தாகூரின் கீதாஞ்சலியிலிருந்து சில வரிகளை மட்டும் குறிப்பிட்டிருந்தாலும், மிகச் சிறந்த கருத்துக்களைக் கூறும் அருமையான வரிகள்.

இவர் “எங்கே” என்று குறிப்பிடுவது நம் புண்ணிய பாரத பூமியே.

இங்கே தான் அச்சம் இல்லாமல், மிகச் சிறந்த சிந்தனைகள் சிந்திக்கப்பட்டன.

இங்கே தான் அறிவுக்கு முட்டுக் கட்டை போடும் கருத்துக்களை மக்களுக்கு வழங்காமல் உலக தத்துவ, மற்றும் அறிவியல் விஞ்ஞானிகளும் வியக்கும் வண்ணம் சிந்தனைகள் உருவானது.

இங்கே தான் குறுகிய சிந்தனைகளால் பிளவு படுத்தப் படாமல்,மிகச் சிறப்பாக பகுத்தறிவு உதயமாகியது.

இங்கே தான் சிந்தனையும், செயலும் விரிவடைந்து, உலகையே விழிப்படையச் செய்யும் சிந்தனைகள் உருவானது.

சகோ. திருச்சிக்காரர் அவர்களே,

எங்கள் வீட்டு சுவற்றை அலங்கரிக்கும் தாகூரின் பிராத்தனை கீழே…..

“இறைவா…

அபாயங்களிலிருந்து என்னை பாதுகாக்கும் படி உன்னை நான் பிரார்த்திக்க மாட்டேன்.ஆனால் அபாயங்களை எதிர்நோக்கும் சக்தியை எனக்குக் கொடு.

என்னுடைய வேதனைகளையும், துன்பங்களையும் மறைக்கும் படி உன்னை கெஞ்ச மாட்டேன்.அனால் அவைகளை வெல்லும் வலிமையுள்ள இதயத்தை எனக்கு கொடு.

வாழ்க்கைப் போராட்டத்தில் நான் துணைவர்களை நாடி நிற்க வேண்டாம்.அனால் என்னுடைய சொந்த பலத்திலேயே போராட அருள்புரிவாயாக.

பொறுமையில்லா பயத்தில் என்னைப் பதறவிடாதே.ஆனால் என்னுடைய சுதந்திரத்தைக் காக்க எனக்குப் பொறுமையைக் கொடு.

வெற்றியை மட்டும் உன்னிடத்தில் யாசித்துப் பெறும் கோழையாக என்னை ஆக்கிவிடாதே, என்னுடைய தோல்விகளையும் நான் ஏற்று உன்னுடைய அருளால் வெற்றி அடையும் வாய்ப்பினையும் அருள்புரிவாயாக.” —————-ரவீந்திரநாத் தாகூர்.

Dhanabal Sir,

Thanks . Wishing you a happy new year.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: