Thiruchchikkaaran's Blog

ஊடகங்களின் “நிலைப்பாடுகள்”!

Posted on: December 31, 2010


  
 யார் என்ன செய்தாலும், எது நடந்தாலும்  நேரத்துக்கு ஏற்ப பிளேட்டை மாற்றுவதில் இந்திய வூடகங்கள் கில்லாடிகள்.  

சன் டி. வி யில் காலை  நேரத்தில்  நடைபெறும் “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் பட்டி மன்றப் பிரபலஸ்தர்கள் ராஜாவும், பாரதியும் விக்கிலீக்ஸ் பற்றி விவாதிக்கும்  போது, அடுத்தவர்களின் சொந்த விசயங்களை அம்பலப் படுத்துவது சரியா என்று அக்கறையோடு விவாதித்தனர். 

அவர்கள் பங்கு பெரும் நிகழ்ச்சியை நடத்தும் சன் டி.வி,   நித்யானந்தாவின் படுக்கையறை காட்சிகளை நாள் முழுவதும் ஒளி பரப்பி, வீட்டிலே  சிறுவர் சிறுமியர்  பார்ப்பார்களே என்கிற சமூக பொறுப்பு கூட இல்லாமல் நடந்ததைப் பற்றி அவர்கள் விவாதத்திலே குறிப்பிடுவார்களா? மாட்டார்கள் .

நித்யானந்தாவைப் பற்றி புகழ்ந்து    எழுதி தங்களை பிரபலப் படுத்திக் கொண்ட பல பத்திரிகைகள இன்று அவரை  கேலி செய்து தங்களை பிரபலப் படுத்திக் கொள்கின்றன. 

இதே நித்யானந்தாவை பெரிய ஆன்மீகவாதியாக சித்தரித்தது குமுதமும், தட்ஸ் தமிழ் இதழும். குமுதம் நித்யானந்தாவின் ‘கதவைத் திற காற்று வரும்’ தொடரைப் போட்டு அவருக்கு மிகப் பெரிய பில்ட் அப் கொடுத்தது. தட்ஸ் தமிழின் முகப்பிலேயே நித்யானந்தாவின் ஆன்மீக கருத்துக்கள் பற்றி குறிப்பிட்டு இருப்பார்கள். தொடர்ந்து பல வாரங்களுக்கு அவ்வாறு அவர்கள குறிப்பிட்டது பலருக்கும்  நினைவில் இருக்கக் கூடும். இப்போது நித்யானந்தாவின் செயல்பாடுகள் அம்பலம் ஆகி விட்ட நிலையிலே  தட்ஸ் தமிழ் “குஜால் சாமியார்” என அவரை வர்ணிக்கிறது.

இதற்க்கு முன் அவரைப்  பற்றி சரியாக தெரிந்து கொள்ளாமலே அவரிப் பற்றி ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து எழுதி  பலரும் அவரை நம்பக் காரணமாக இருந்த  பத்திரிகைகள், அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றனவா? பழசை எல்லாம் யார் நினைவில் வைத்துக் கொள்ளப் போகிறாங்க என்று இப்ப பிளேட்டை மாற்றுகின்றனர்.

நம்மைப் பொறுத்த வரையில் நம்முடைய  நிலைப் பாடு ஒன்றுதான். யார் ஒருவர் சாமியார்  போல காட்டிக் கொண்டு சொத்துக் குவிப்பு, அதிகாரத்தில் நாட்டம்…. இன்ன பிற  “இனிய” செயல்களில் ஈடுபடுகின்றார்களோ அவர்களால், இந்திய சமுதாயத்துக்கு, இந்தியர்களுக்கு, இந்துக்களுக்கு, இந்து மதத்திற்கு பின்னடைவே. அதற்காக அப்படிப் பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப் படுவதை நாம் அங்கீகரிக்கவில்லை. 

மக்களின் ஆதரவாலே அவர்கள் முன்னுக்கு வந்தனர். மக்களின் ஆதரவு இல்லாவிட்டால் அவர்கள் முக்கியத்துவம் தாமாகவே குறையும். மக்கள் யாரை பெரிய ஆளாக கருதுகிறார்களோ அவர்களுக்கு புகழ் மாலை சூட்டியும் , பிறகு அவர்கள் அம்பலம் ஆகி விட்டால் அப்படியே மாற்றுவதும் வூடகங்க்க்ளின் செயல்பாடாக உள்ளது. வூடகங்கள் திருந்துமா?  

 
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: