Thiruchchikkaaran's Blog

மின்னும் மின்னும் விளக்கைப் பார், என்ன என்ன அழகு பார்!

Posted on: December 23, 2010


                
                             Free Christmas Downloads
நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
 
இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்படி வரவேற்கிறோம்.
 
இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை எல்லா மதத்தவரும் கொண்டாடலாம்.
 
  மேலை நாடுகளில் உள்ளவர்கள்,  இயேசு கிறிஸ்துவின் உண்மையான கொள்கைப் படி அமைதி  வழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனக் கோருகிறோம்.
 
விட்டுக் கொடுக்கும், சமரசக் கோட்பாட்டை முக்கியப் படுத்திய   இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களுக்கு மாறாக, அவர் பெயராலே  முரட்டுப் பிடிவாத மத வெறிக் கருத்துக்களை பரப்பும் சகோதரர்கள்  , மத சகிப்புத் தன்மையை மனதில் வளர்த்து  இயேசு கிறிஸ்துவின் சரியான பாதைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
 

இஸ்லாமிய சமுதாய சகோதரகளுக்கு நான் சொல்லிக் கொள்ளுவது என்னவென்றால், நீங்கள் இயேசுவையும் ஒரு ப்ராபட் (நபி) யாக கருதுகிறீர்கள். எனவே முகமது நபியின் பிறந்த நாளை மீலாடி நபியாக கொண்டாடுவது போல இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளையும் கொண்டாடுவது பொருத்தமானதே.

நான் யூத மதத்தை பின்பற்றும் இஸ்ரேலிய சகோதரர்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால், நீங்கள் கிறிஸ்துமஸை முழு மனதுடன் கொண்டாடுவது மிகப் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் இயேசு கிறிஸ்துவே தன்னை யூதர்களின் ராஜா என்றும், காணமற்  போன ஆடுகளாகிய இஸ்ரவேலரை மந்தையில் சேர்க்கவே தான் வந்ததாகவும் சொல்லி இருக்கிறார்.  

இந்து சகோதரர்களும் தீபாவளி, ஹோலி பண்டிகைகளை கொண்டாடுவது போல கிறிஸ்துமஸ் விழாவையும் கொண்டாட தயங்க  வேண்டியதில்லை.    இயேசு கிறிஸ்துவின்  பெரும்பாலான கருத்துக்கள் இந்திய சமுதாயம் பல்லாயிரம் வருடங்களாக பின் பற்றி வந்த வாழ்க்கை முறையாக உள்ளன.

இவ்வாறாக உலகில் அனைவரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள நாம் அழைப்பு விடுக்கிறோம். இந்த கிறிஸ்துமஸ் மத நல்லிணக்க கிரிஸ்மஸ் ஆகஇருக்கட்டும், இனி வரும் எல்லாக் கிறிஸ்துமஸ்களும்!! 

என்னுடைய தந்தையார் திருச்சிக்கு அருகில் உள்ள புள்ளம்பாடியை அடுத்த விராகாலூர் என்னும் கிராமத்திலே பணி செய்து இருக்கிறார்.  அங்கே இருக்கும் கிறிஸ்தவ சமுதாய மக்களுடன் அவர் நல்ல பழக்கம் உள்ளவர். அங்கே உள்ள கிறிஸ்தவ சமுதாய பெருமக்கள் ஒளிபரப்பும் பாடல்களில் ஒன்றாக அவர் எங்களிடம் குறிப்பிடுவது
 
தங்கக் கண்ணே எழுந்திரு,
தங்க சேசுவை கும்பிடு,  …
மின்னும் மின்னும் விளக்கைப் பார்,
என்ன என்ன அழகு பார்”
 என்பது. 
இந்தப் பாடலை நான் இது வரை கேட்டது இல்லை. என் தந்தையார் கூறித்தான் எனக்கு தெரியும்.
என் தந்தையார் எங்களிடம் பேசும்போது கிறிஸ்தவ சமுதாய மக்களை மிகவும் மரியாதையோடு குறிப்பிடுவார்.  சர்ச்சில் உள்ள ரெவரண்ட் பாதரை சாமியார் என்றே சொல்வார். சிஸ்டர்களை அம்மாங்க  என்றுதான் அழைப்பார்.
யாருடனும் அவர் வாதத்தில் ஈடுபட மாட்டார். நான் மாணவனாக இருக்கும் போது ஏதாவது வாதத்தில் ஈடுபடுவதைப் பார்த்தால் வேணாம் விடுப்பா என்பார். என்னுடைய மத நல்லிணக்கத்தை விட அவருடைய மத நல்லிணக்கம் பல  மடங்கு உயர்ந்தது.  அவரின் நினைவாக அவர் சொல்லிய கிறிஸ்தவ பாடலின் வரிகளை இந்தக் கிறிஸ்துமஸ் கட்டுரைக்கு தலைப்பாக வைத்திருக்கிறேன்.
Advertisements

2 Responses to "மின்னும் மின்னும் விளக்கைப் பார், என்ன என்ன அழகு பார்!"

very nice song. st.peter high schoolil padithavan.ok thank u

Dear Mr. Bright,

Thanks for your visits and your comments.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: