Thiruchchikkaaran's Blog

1,76,000 கோடி ரூபாய் நாம எல்லோரும் சமமா பங்கிட்டா தலைக்கு எத்தனை ? அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே…..!

Posted on: December 21, 2010


அது எண்ணிக்கை தெரியாத உன் குற்றம், என்று யாரும் சொல்ல முடியாத  அளவுக்கு இன்றைக்கு இந்தியாவில் பத்திரிக்கைகள் முதல் பட்டி தொட்டி வரை எங்கும் பரபரப்பாகப் பேசப்படும் எண்ணிக்கை, ஒரு இலட்சத்து எழுபத்தாராயிரம் கோடி ரூபாய். 

ஒரு கோடியல்ல, இரு கோடியல்ல, பத்து கோடியல்ல, நூறு கோடியல்ல, ஆயிரம் கோடியல்ல, ஒரு இலட்சத்து எழுபத்தாராயிரம் கோடி ரூபாய்.   

இந்த ஒரு  லட்சத்து  எழுபத்தாராயிரம் கோடி ரூபாயை தமிழ் நாட்டில் உள்ள ஏழு கோடி மக்களுக்கும் சமமாகப் பங்கிட்டால் தலைக்கு எவ்வளவு வரும் ?

176000 கோடி/ 7 கோடி  =  25,142 .85

இருபத்தைந்து ஆயிரத்து நூற்றி நாற்பத்தி இரண்டு ரூபாய் எண்பத்து ஐந்து காசுகள்.  அதாவது சராசரியாக நாலு பேர் உள்ள ஒவ்வொரு  குடும்பத்துக்கும்,  கிட்டத் தட்ட ஒவ்வொரு இலட்ச ரூபாய். நினைத்தாலே இனிக்கும்,  தான்னா நன நானா தன்னா நன நா…… நினைத்தாலே இனிக்கும்.

எனது அன்புக்குரிய தமிழ் நாட்டு சகோதர சகோதரிகளே, ரேஷன் கார்டை எடுத்துக் கொண்டு நமக்கு ஒரு இலட்சம் கிடைக்கப் போகுது என்று ரேசன் கடைக்கு விரைய வேண்டாம். இது நம்முடைய அரசாங்க கஜானாவுக்கு சேர வேண்டிய பணம், இந்திய அரசுக்கு சேர வேண்டிய பணம். 

அதாவது இது அரசாங்கக் கஜானாவுக்கு போய் சேராததால் அதை  ஈடு கட்ட பெட்ரோல் விலை உயர்வு, வரி அதிகரிப்பு…. இப்படியாக பல வகையிலும் நம்முடைய பணத்தை   அரசாங்கத்துக்கு கட்டப் போகிறோம். 

ஒவ்வொரு குடுமபமும் இந்த இழப்பை ஈடு செய்ய நேர்முகமாகவும் , மறை முகமாகவும் பணத்தை  அரசாங்கத்துக்கு கட்ட வேண்டும். ஏய் தமிழனை ஏமாத்தாதே,  தமிழன் எண்ணிக்கையில கில்லாடி,  இந்தியாவில் இருக்குற அத்தினை பெரும் சேர்ந்துதானே இந்த இழப்பை ஈடு செய்ய வேண்டும். கணக்கை சரியாப் போடு. 

சரி தான், வரவு என்றால் நமக்கு மட்டும் , செலவு என்றால் எல்லோருக்கு சேர்த்து கணக்கை போடுவோம்.

 சரி இப்ப பாரு , ஒரு  லட்சத்து  எழுபத்தாராயிரம் கோடி ரூபாயை இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களுக்கும் சமமாகப் பங்கிட்டால் தலைக்கு எவ்வளவு வரும் ? 

176000 கோடி/ 120 கோடி  =  1466. 66 ரூபாய்

 அதாவது சராசரியாக இந்தியாவில்  நான்கு பேர் உள்ள ஒரு குடும்பம் கிட்டத் தட்ட 5860 ரூபாயை  இழப்பீட்டுக்கு  ஈடாக நேர்முக வாரியாகவோ, மறைமுக வாரியாகவோ செலுத்த வேண்டி இருக்கும்.

சரிப்பா, ஆளை வுடு எப்படியோ வரியை போட்டு பிடிக்கத் தான் போறாங்க, வரட்டா?

சரி, அப்பால பாக்கலாம் அண்ணே.  

தம்பி, தம்பி ஒரு சின்ன விசயம்.

 சொல்லுங்க அண்ணே.

எப்படியோ ஏதாவது நல்லது நடந்து எல்லோருக்கும் கிடைக்கிற மாதிரி இருந்தா,  நாம் முன்னால போட்ட கணக்கு படி குடும்பத்துக்கு இலட்ச ரூபாயா குடுத்தாலும் குடுப்பாங்களா?

  என்ன அண்ணே, நீங்க  இப்படி சொல்லுறீங்க, சரி எதுக்கும் சூடம் சாம்பிராணி ரெடியா எடுத்து வைங்க, எலிக்ஸனு வரப் போவுது, அப்ப சூடத்தை அணைக்க  சொல்லிட்டு பையை ரொப்புவாங்கனு ஜனங்க பேசிக்கிராங்கக், விஷ் யூ பெஸ்ட் ஆப் லக்!

Advertisements

6 Responses to "1,76,000 கோடி ரூபாய் நாம எல்லோரும் சமமா பங்கிட்டா தலைக்கு எத்தனை ? அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே…..!"

படித்தவன்,படிக்காதவன்,தெரிந்தவன்,தெரியாதவன் எல்லோரும் பெரிய எண்ணாக சொல்லும் இந்தக் கோடிகளின் உண்மைக் கதையென்ன. அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா எனும் கதை தான்.இவ்வளவு வருமானம் வந்திருக்கக் கூடும் என்ற உத்தேசமானத் தொகையை முரளி மனோகர் ஜோசியின் கீழுள்ள கணக்கு வாத்தியார் சொன்ன கதை.இதன் உண்மையென்ன என்று எந்த அறிவாளியும் கேட்கவில்லை,அவர்கள் பதிலும் சொல்ல வில்லை. மீசை முளைக்கட்டும் பின்னர் தான் சித்தப்பா.அது வரை அத்தை தான்.

திரு. தமிழன் அவர்களே, வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி. நீங்கள் சொல்லியது போல பலரும் சொல்லும் தொகை , அந்த தொகை உண்மையா இல்லை இந்திய அரசுக்கு உண்மையிலே ஒரு பைசா கூட இழப்பு இல்லையா என்பது தெரியாது. உண்மையிலே எல்லாம் நியாயமாக கூட நடந்திருக்கலாம். அப்படி நியாயமாக நடந்திருந்தால் ஜாயின்ட் பார்லிமெண்டரி கமிசன் வைக்க தயங்குவது ஏன்?

சுவாமி எழுதிய கடிதத்திற்கு என்ன பதில் கொடுக்கப் பட்டது என்று உச்ச நீதி மன்றமே கேட்டு இருக்கிறது . இந்த விடயத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என்றால், ஒரு சிறு தவறும் நடக்கவில்லை என வெள்ளை அறிக்கை வெளியிடப் பட்டதா?

மாறாக கம்யூனிஸ்ட்டுகள் வூழல் செய்ய வில்லையா, பி.ஜே.பி வூழல் செய்யவில்லையா, என்று நீ மட்டும் உத்தமமா என்கிற ரீதியில் தான் அறிக்கை வருகிறது. அதாவது உன் பங்குக்கு நீ செய்தாய், என்னை என் கேக்குற என்ற ரீதியில். சுரண்டப் படுவது அப்பாவி மக்கள்தான். பொது மக்கள் பணத்தை தன் சொந்தமாக்குவது தவறில்லை என்று நினைப்பவர்க்ளுக்கு, ஏழைகளையும் விடாது சுரண்டிப் பிழைப்பவர்களுக்கு, அவர்களுக்கு ஜால்ரா போட்டு பிழைப்பவர்களுக்கு இது புரியுமா என்று மக்கள் கருதுகிறார்கள்.

சரி ஓபன் டெண்டர் விட்டு யார் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்ய தயாராக இருக்கிறாரோ அவர்களுக்கு அலைக்கற்றை ஒதுக்க வேண்டியதுதானே. அப்போதுதானே அரசாங்கத்துக்கு அதிக வருவாய் கிடைக்கும்? அரசாங்கத்துக்கு அதிக வருவாய் கிடைத்தால் தானே வரிகள் குறையும். அப்போதுதானே விலைவாசி குறையும். அப்போதுதானே மக்கள மகிழ்ச்சி அடைவார்கள். பர்ஸ்ட் கம் பர்ஸ்ட் சர்வுடு என்பதற்கு இது என்ன கல்யாணப் பந்தியா? ஒரு சிலர் மட்டும் பர்ஸ்ட் கம் பர்ஸ்ட் சர்வுடு ஆனது எப்படி?

அப்பாவி மக்களின் பணம் என்றால் வெல்லம் போல இனிக்கிறதா?

176000 கோடி/ 120 கோடி = 1466. 66 ரூபாய்

1466. 66 ரூபாய் ? 1466. 66கோடி ?……………………..

176000 கோடி/ 120 கோடி = 1466. 66 கோடி

கோடி/ கோடி= கோடி

176000 கோடி / 120 கோடி

= 1,76,000,0000000/ 120,0000000 = 1466. 66 ~1466. 66 ரூபாய்

சகோ. திருச்சிகாரர் அவர்களே,

அருமையான கணக்கு. ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் இருக்கும் கடன் சுமை இறங்கியிருக்க வேண்டியது.இப்பொழுது அதிகரிக்கச் செய்து விட்டார்கள்.அவ்வளவு பணத்தையும் என்ன தான் செய்வார்களோ?எப்படி அனுபவிப்பார்கள்.? அவர்கள் பெயரில் வெளிநாட்டு வங்கிகளில் தூங்கத்தானே போகிறது.? மக்கள் என்ன செய்ய முடியும்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: