Thiruchchikkaaran's Blog

பெண்களுக்கு ஆன்மீகம் அவசியமா?

Posted on: December 14, 2010


ஆண்களுக்கு எந்த அளவுக்கு ஆன்மீகம் அவசியமோ, எந்த அளவுக்கு பெண்களுக்கும் ஆன்மீகம் அவசியம். இன்னும் சொல்லப் போனால் பெண்களுக்கு ஆன்மீகத்தின் அவசியம் ஆண்களை விட  அதிகமாக உள்ளது !

இந்த உலகிலே ஆண்களை விட பெண்கள் அதிகம் கஷ்டப் படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. பெண்களுக்கு தர வேண்டிய உரிமையை ஆண்  தருவதில்லை.  உரிமையை விடுங்கள், மரியாதையை கூட தருவதில்லை. பெண்களின் திறமையை, ஆளுமையை நோக்க மறுத்து அவர்களை பாலியல் ரீதயில் கீழான பாலாக கருதுகின்றனர்.

இயற்கையோ பெண்களுக்கு மாதம் ஒரு முறை கடுமையான வயிற்று வலியை தன் பங்கிற்கு பரிசாக வழங்கி உள்ளது. இவ்வாறாக ஆண்கள் எவ்வளவு இயற்கையின் கையில் சிக்கி சித்திரவதை படுகிறார்களோ, அதை விட அதிகமாக பெண்கள் கஷ்டப்படுகின்றனர்.

இப்படியாக எனவே இயற்கையின் விதியில் சிக்கி அடிமையாகி  துயரப்படும் பெண்கள் ஆண்களை விட இன்னும் அதிகமான தீவிரத்துடன் ஆன்மீக விடுதலைக்கான போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. இந்தியாவிலே ஆன்மீகத்தில் சிறந்து விளங்கிய பெண்களை பட்டியல் போட்டால் வேத காலத்தில் இருந்து ஆரம்பித்து சபரி, அவ்வையார் , ஆண்டாள், காரைக்கால் அம்மையார்,  அன்னை சாரதா, சகோதரி நிவேதிதா, அன்னை தெரசா,  …. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

பெண்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவது என்றால், அவர்கள் குடும்பத்தை விட்டு விட்டு துறவியாக வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

குடும்பத்தில் இருக்கும்  ஒரு பெண் எந்த அளவுக்கு  தன் குடும்பப் பொறுப்பை  கவனிப்பதில் அதிக  அக்கறை செலுத்துகிறாரோ, எந்த அளவுக்கு சுயநலமற்று  இருக்கிறாரோ, எந்த அளவுக்கு ஆசைகளை குறைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவுக்கு அவர் ஆன்மீகத்தில் முன்னேறுவதாக கருதலாம்.

அந்த வகையில் நான் தமிழ் பெண்களுக்கு எடுத்துக்காட்டாக காட்ட விரும்புவது அன்னை சீதையையும், அன்னை கண்ணகியையும், மற்றும்  அன்னை  நளாயினி …. இவர்கள் போன்றவர்கள் தான்.

சீதையும் , கண்ணகியும்  தங்களுக்காக எதயுமே கோரவில்லை. கணவனுக்காக தங்கள் சுகங்களை முழுமையாக விட்டவர்கள். இவர்களைப் போல ஆன்மீகத்தில் சிறந்தவர்கள் யாருமே இல்லை. இவர்களுக்கு இணையாக யாரையுமே சொல்ல முடியாது. இவர்களை நான் கடவுள் என்று கூட   சொல்ல மாட்டேன்!  கடவுள் என்று ஒருவர் இருந்தால்,   அவர் மேலே இருந்து கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நடத்திக் கொண்டு இருப்பவரானால், வெறுமனே வேடிக்கை  பார்க்கும் அவரை விட இந்த தியாகத் திரு உள்ளங்கள்   மேலானவர்கள என்கிற என்னுடைய நேர்மையான கருத்தை தைரியமாக சொல்வேன்!

(தொடரும்)

Title: பெண்களுக்கு ஆன்மீகம் அவசியமா?

Advertisements

8 Responses to "பெண்களுக்கு ஆன்மீகம் அவசியமா?"

ஆண்கள் மணிக்கணக்கா உக்கார்ந்து பூஜை புனஸ்காரங்களைச் செய்யவும் பெண் துணை வேண்டிதானே இருக்கு.

அவர் பூஜையில் உக்காரவருவார். அதுக்கு முன் ஸ்வாமிஉள் பெருக்கித் துடைச்சு பூக்களைக் கட்டி வச்சு, பூஜைப் பாத்திரங்களைப் பளிச்சுன்னு துலக்கி வச்சுட்டு நைவேத்தியங்களை பண்ணிச் சுடச்சுட எடுத்துண்டு போய் பூஜை அறைக்குள் வச்சால் அவர் கற்பூர ஆரத்தி எடுத்து பெண் முன்னே நீட்டுவார். பெண் அதைக் கண்ணிலே ஒற்றிக்கனும்.

இதுதான் லோகத்துலே நடக்கற கதை. ஏன்? பெண் ‘கர்ம யோகி’யாம்.

மிக்க நன்றி, சகோதரி துளசி அவர்களே, நடப்பதைத்தான் எழுதி இருக்கிறீர்கள். பெண்கள் பூஜையில் அதிக பங்கெடுக்க வேண்டும், ஆண்கள் அவர்களுக்கு ஒத்துழைத்து, அவர்கள் பூசையில் பங்கெடுக்க நேரம் ஒதுக்க வேண்டும். பூஜை அறையை சுத்தம் பண்ணுவது விக்கிரகங்களை துடைப்பது இதை எல்லாம் ஆண்களும் செய்யலாம். கட்டுரையை படித்து கருத்து தெரிவித்தற்கு மிக்க நன்றி. தொடந்து கட்டுரைகளை படித்து வாருங்கள் எனக் கோருகிறேன்.

சகோ.திருச்சிக்காரர் அவர்களே,

இருவருக்குமே ஆன்மிகம் தேவை.பெண்களை விட ஆண்களுக்கு ஆன்மிகம் அவசியம் தேவை.ஏனெனில் பெண்களை விட ஆண்கள் தான் ஒழுக்கம் தவறியும், மது,புகை,மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர்.ஒழுக்கமாக இருப்பவர்களே பாதி ஆன்மீகவாதிகள்,பெண்களில் முக்கால் வாசி பேர் ஒழுக்கமாகவே இருக்கின்றனர்.

ஆனால் இப்பொழுதுள்ள நிலையில் சிறிது சிறிதாக பெண்களும் ஒழுக்கம் தவறி வருகின்றனர்.வருங்காலத்தை கருத்தில் கொண்டால் பெண்களுக்கும் ஆன்மிகம் அவசியம் தேவைப்படுகிறது.

Dhanabal Sir,

Your opininions are welcome!

mudalla ungallukku aanmigam endral ennannu theriyuma? Poojai seivadha? Kanavanukkaaga thyagam seivadha? Aanadhikkam milirum padhivu!!

மதிப்புக்குரிய சகோ. சபிதா அவர்களே,

தளத்தைப் பார்வை இட்டு கட்டுரையைப் படித்து உங்கள கருத்து தெரிவித்தற்கு மிக்க நன்றி. கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பது, தியாகம் செய்வது இதுதான் இல்லறம். தன்னுடைய மனைவிக்கு துன்பம் வரக் கூடாது என்ற எண்ணம் கணவன் மனதில் இருக்கும், தன் கணவனுக்கு துன்பம் வந்தால் துடிக்கிறாள் மனைவி, இது தானாக வருவது, இது சட்டம் போட்டு வருவதில்லை. அன்பின் பிணைப்பு இதை உருவாக்குகிறது. அன்புதான் ஒருவனை ஆண்டவனுக்கு அருகில் அழைத்து செல்லுகிறது,அறிவு கூட ஒருவனை ஓரளவுக்கு தான் உயர்த்துகிறது என்றார் சுவாமி விவேகானந்தர்.

ஒருத்தியோ, ஒருவனோ எப்போது உச்ச கட்ட அன்பை வெளிப் படுத்துகிறார்களோ, எப்போது உச்ச கட்ட கருணையை மனதில் உடையவர்களாக இருக்கிறார்களோ, எப்போது உச்ச கட்ட அச்சமின்மையை வெளிப்படுத்துகிறார்களோ, எப்போது தங்கள் எதிர் காலத்தை தாங்களே தீர்மானிக்கும் முழு சுதந்திரம் அடைந்து முழு விடுதலை பெற்றவர்களாக இருக்கிறார்களோ அதுதான் ஆன்மீகம் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.

பெண்கள் ஆண்களுக்காக தியாகம் செய்ய வேண்டும், ஆண்கள கால் மேல் கால் போட்டபடி ஆதிக்கம் செலுத்தத் வேண்டும் என்கிற அர்த்தத்திலே இந்தக் கட்டுரை எழுதப் படவில்லை. பெண்களின் அன்பும் தியாகமும் பொறுமையுமே இந்த மனித இனத்தை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. அதற்காக பெண்கள் கஷ்டப் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. பெண்கள் கஷ்டப் பட்டது போதும். ஆண்களே அவர்கள் நிம்மதியாக வாழ உதவி செய்யுங்கள் என்றுதான் கோருகிறோம்.

தன்னுடைய மனைவியின் கண்களில் இருந்து வடியும் ஒவ்வொரு சொட்டுக்கும் அவ்வளவு வருடம் நரகத்தில் இருப்பான் என்றார் வித்யா தீர்த்தர் (மறைந்த சிருங்கேரி சாமியார் ). தன்னுடைய மனைவியின் முழு அன்பையும் பெற்று பெற்றவன் இந்த உலகத்தில் எல்லா வேலையையும் செய்து முடித்தவன் என்றார் விவேகானந்தர்.

நம்முடைய தளத்திலே ஆன்மீகம், சமத்துவம், மத நல்லிணக்கம், மனித உரிமைகள், நாகரிக சமுதாயம் ஆகியவற்றை பற்றிய கட்டுரைகளே அதிகமாக உள்ளன. ஆன்மீகம் பற்றிய கட்டுரைகள் ஆங்காங்கே பதிவிடப் பட்டு உள்ளன. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நம்முடைய தளக் கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள். ஆன்மீகம் பற்றி எமக்கு தெரியவில்லை என்று நீங்கள் கருதினால், ஆன்மிகம் என்றால் என்ன என்பதை நீங்களே எங்களுக்கு விளக்கலாம். அவற்றைக் கட்டுரையாக நமது தளத்திலே வெளியிடலாம்.

https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/20/what-is-spiritualism/

https://thiruchchikkaaran.wordpress.com/2009/12/16/rationalism/

https://thiruchchikkaaran.wordpress.com/2010/04/15/religious-harmony/

ஆணாதிக்கத்தால் பெண்களுக்கு உண்டான கஷ்டங்களை இந்தக் கட்டுரையில் அவ்வப்போது குறிப்பிட்டு இருக்கிறோம். அப்படி இருக்க இந்தக் கட்டுரையில் ஆணாதிக்கத்துக்கு எதிர்ப்பு மிளிருகிறது என்று சொல்வதே சரி.

சபீதா அவர்களே,

கணவனுக்கு தொண்டு செய்வது ஆணாதிக்கமா?

சபீதா அவர்களே,

கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் தியாகம் செய்வது அவசியமாகும்.தியாகம் இல்லாமல் எந்த உயர்ந்த காரியமும் நிகழாது.உங்கள் உடல் நலமாக இருக்க வேண்டும் என்றாலும், உங்கள் தூக்கத்தை தியாகம் செய்து அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யவேண்டும்.எண்ணற்ற ராணுவ வீரர்களின் தியாகத்தால் தான் நாம் நிம்மதியாக இருக்கிறோம்.ஒருவன் தனது சுயநலனை விட்டுவிடுதலே மிகப் பெரிய ஆன்மீக சாதனையாகும்.தியாகமே மிகச் சிறந்த அமைதியையும், வலிமையுள்ள மனத்தையும் தரும்.

ஆணாதிக்கம் , பெண் சுதந்திரம் பற்றி பேசும் பெரியார் உள்பட சிலர் பெண்களை ஒழுக்கம் கெட்டவர்களாக மாறுவதே பெண் சுதந்திரம் என்று கூறுகிறார்கள்.இதைப் போன்ற அரைகுறையாளர்களின் தத்துவங்களைப் படித்து ஆணாதிக்கம் என்று கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.விவேகானந்தரைவிட பெண்ணுரிமை பற்றி சிறப்பாக முழங்கியவர் எவரும் எனக்குத் தெரிந்து இல்லை.இயன்றால் அவர் நூல்களைப்ப் படித்து இந்த ஆணாதிக்கம், பெண்ணுரிமையைப் பற்றிய முழுப் பரிமாணத்தையும் புரிந்து கொள்ளுங்கள்.அக்காலத்திலேயே, விதவைகள் மறுமணத்தையும், பெண் கல்வி, பெண்கள் வாழ்வை உயர்த்துதல் போன்ற புரச்சி கரமானக் கருத்தைக் கூறியவர்.பெண்களின் நிலை உயராத எந்த நாடும் வளர்ச்சி அடையாது என்று கூறியவர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: