Thiruchchikkaaran's Blog

பூணூலை அனைவரும் அணியலாம். சமத்துவத்துக்கு அது உதவும்.

Posted on: December 11, 2010


 

பூணூல் அணிவது இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம் ஆகும்.   இலக்கியங்களில் பூணூல் பற்றிய குறிப்புகள் உள்ளன.

பூணூலை பலரும் அணிகிறார்கள். ஆனால் பூணூல் என்பது பிராமணர்கள் என சொல்லப்படுபவர் மாத்திரம் அணியும் ஒன்றாக பலரும் நினைக்கிறார்கள். தமிழ் நாட்டில் செட்டியார்,  ஆச்சாரி (தச்சர்,  கொல்லர்) என சொல்லப்படுபவர்களும் பூணூல் அணிகின்றனர்.  வட இந்தியாவில் பலர் பூணூல் அணிகின்றனர்.

இந்த பூணூல் அணிவது ஏன், அதன் உபயோகம் என்ன? எல்லோரும் பூணூல் அணிவது எப்படி சமத்துவத்துக்கு உதவும்    இவற்றை பற்றி நாம் விரிவாக ஆராய்வோம்.

பூணூல் என்பது ஆன்மீக முன்னேற்றம், மனக் கட்டுப்பாடு, ஒழுக்கம்  ஆகியவற்றை நினைவு படுத்தும் சின்னமாக அணியப் படுகிறது.

பூணூலை மார்பின் குறுக்காக அணிகின்றனர். உடலோடு ஒட்டிய ஒன்றாக பூணூல் இருக்கிறது.  பூணூல்  அணிந்தால் தான் மனக் கட்டுபாடா என்றால், பூணூல் அணியாமலும் மனக் கட்டுப்பாட்டுடன் பலர் இருக்கின்றனர். இந்து மதத்திலே துறவிகள் பூணூல்  அணிவது இல்லை. எனவே பூணூல் தங்களுக்கு நியமத்தை உணர்த்துகிறது என்று கருதுபவர்கள் பூணூலை அணிந்து கொள்ளாலாம். அவசியம் விருப்பம் இருப்பவர்கள் அணியலாம். விருப்பம், அவசியம்  இல்லாதவர்கள் அணிய வேண்டியதில்லை.

பூணூல் எவ்வாறு சமத்துவத்துக்கு உதவும்? 

  “பூணூல் அணிபவர்கள் என்றால் பிராமண சமுதாயம் என சொல்லப் படுபவர்கள் மட்டும் தான் அணிய முடியும் என்கிறார்களே'” என்று தமிழ் நாட்டில் பலரும் நினைக்கிறார்கள்.

‘”அவர்கள மட்டும் தான் பூணூலை அணிய முடியும், அது சாதீய அடையாளமாக இருக்கிறது, உயர் சாதி என்பதைக் காட்டும் விதமாக பூணூல்

போட்டுக் கொள்கிறார்கள்” என்று சிலர் கருதுகின்றனர். அப்படியானால் எல்லோரும் ஏன் பூணூல்  போட்டுக் கொள்ள கூடாது,  எல்லோருமே ஒரே சாதிதான், சமத்துவம்  என்று ஆகுமே! அவன் பூணூல் போட்டுக் கொள்கிறானே என்றால், நீங்களும் பூணூல்  போட்டுக் கொள்ளுங்கள் அப்போது வேறுபாடு எப்படி வரும்?

 பூணூலை அணிந்து கொள்வது மிக எளிதான விடயம்.  

 ரங்கநாதன் தெரு, மாம்பலம் ரயில் நிலையம் அருகில் பத்து ரூபாய்க்கு பூணூல் கிடைக்கும். பூணூலை போட்டுக் கொள்ளும் போது அவர்கள் சொல்லும் மந்திரங்கள் கேசட்டாக கிடைக்கிறது. அந்த மந்திரங்களுக்கு அர்த்தம் என்ன என்பது பற்றிய புத்தகங்கள்  கிடைக்கிறது. புரோகிதர் கூட தேவை இல்லை. மந்திரங்களின் அர்த்தம் என்ன என்பதை படித்து பார்க்கலாம். அவற்றால ஆன்மீக முன்னேற்றம், அறிவு தேடல் கிடைக்கும் என்றால் அந்த மந்திரங்களை கேட்டுக் கொண்டே பூணூலை போட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான்!

 வெற்று மார்பிலே பூணூலை போட்டுக் கொண்டு, வேஷ்டி துண்டுடன் கோவிலுக்கு சொல்லுங்கள், தெருவிலே அங்கும் இங்கும்  செல்லுங்கள், யாரும் நம்மை தடுக்க முடியாது. எல்லோரும் ஒன்றுதான் , சமத்துவம் தான். 

இது சமத்துவத்தின் ஆரம்பமே, முழுமையான சமத்துவம், நாம் அனைவரும் நாகரிக மனிதராக, பிறருக்கு தொல்லை கொடுக்காமல் , பிறரை மதிக்கும் பண்புள்ளவராக முன்னேறும் போதுதான். அதற்கும் பூணூல் அணிவது உதவியாக இருக்குமா என்பது பற்றி பற்றி, பூணூலை அணிந்து கொண்டு செய்யப்படும் நியமங்கள் பற்றி, அவை நாகரிக முன்னேற்றத்துக்கு உதவியாக இருக்குமா என்பது பற்றி எல்லாம் தொடர்ந்து ஆராய்வோம்.

(தொடரும்)

Title: பூணூலை அனைவரும் அணியலாம். சமத்துவத்துக்கு அது உதவும்.

Advertisements

40 Responses to "பூணூலை அனைவரும் அணியலாம். சமத்துவத்துக்கு அது உதவும்."

That shows only an inferiority complex.Just by wearing the sacred thread nobody becomes great.It is an insignia to remind ones need to observe certain austerities.
Being a copycat is the worst form of looking upon the other communities as someone great

மிருகங்களுக்கும் பூணூல் அணிவித்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே,ஐயா..!

மாட்டின் பின்புறத்தை(..?) நமஸ்கரித்து அதன் கோமியத்தைக் குடிக்கும் ஒரு “ஆத்மா” தன்னுடைய மனக் கட்டுப்பாட்டுக்கு உதவும் ஒரு முக்கிய பொருளை அதற்குப் பரிசாகக் கொடுத்தால் என்ன என்ற நல்லெண்ணத்திலேயே கேட்கிறேன்..!

Chillsam

திருச்சிக்காரர் உங்கள் ஏசு “நாய்கள்” என்று குரிப்பிட்டவர்களைத்தானே பூணூல் அனியச்சொன்னார்? ஏசுதான் தன்னை நம்பாதவர்களை நாய் என்று சொல்லிவிட்டாரே. உங்கள் கோரிக்கை வழக்கம்போல ஏசுவால் (பிறமதத்தவரை அவர் ஏசியதால்) ஏற்கப்பட்டுவிட்டது, அதுவும் நீங்கள் கோரிக்கை வைக்கும் முன்னரே ஏற்கப்பட்டுவிட்டது.

//மிருகங்களுக்கும் பூணூல் அணிவித்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே,ஐயா..!// சில்சாம், அது உங்கள் இஷ்டம். விருப்பம் இருந்தால் நீங்களும் அணிந்து கொள்ளலாம்.

//மாட்டின் பின்புறத்தை(..?) நமஸ்கரித்து அதன் கோமியத்தைக் குடிக்கும் ஒரு “ஆத்மா” தன்னுடைய மனக் கட்டுப்பாட்டுக்கு உதவும் ஒரு முக்கிய பொருளை அதற்குப் பரிசாகக் கொடுத்தால் என்ன என்ற நல்லெண்ணத்திலேயே கேட்கிறேன்..!// என்ன செய்வது, மனித மூத்திரத்தை குடித்து வளர்ந்த பாலைவன ராஜாக்களுக்கு மாட்டு மூத்திரத்தின் அருமை தெரியுமா என்ன?

திரு திருச்சிக்காரர் அவர்களே,

அவர் பூணூல்(பிராமணர்) போட்டிருக்கிறாரே நமக்கு பூணூல்(பிராமணர்), இல்லையே, என்று எனக்குத் தெரிந்து இந்தக் காலத்தில் யாரும் ஏங்கியதாகத் தெரிய வில்லை. இப்பொழுதுள்ள ஏக்கம் எல்லாம் அவன் கார் வைத்திருக்கிறானே,நமக்கு இல்லையே, அவன் இவ்வளவு லட்சத்தில் வீடு வாங்கியிருக்கிறானே, நாம் வாடகை வீட்டிலல்லாவா இருக்கிறோம், அவன் அம்பதாயிரம், எம்பதாயிரம் சம்பளம் வாங்குகிறானே, நமக்கு ஐந்தாயிரம், எட்டாயிரம் தானே கிடைக்கிறது என்று தான் கவலைப் படுகிறார்கள்.

தம் சுய லாபத்திற்காக இந்த ஜாதி வெறி கூடாது, சமத்துவம் வேண்டும் என்று கூறிக்கொண்டே,சமத்துவத்தை குலைத்து, பிராமண ஜாதியினர் மேல் வெறியை உண்டாக்கிக்கொண்டிருப்பவர்கள் இந்த அரசியல், திராவிடக் கழக, சக்திகள் மட்டுமே.

அக்கால பாரதியிலிருந்து தற்கால கமல்ஹசன் வரை எண்ணற்ற பிராமணர்கள் பூணூலை வீசியெறிந்துவிட்டனர்;இதனால் அவர்கள் எந்தவிதத்திலும் தாழ்ந்துவிடவில்லை;மாறாக அதன்பிறகே புகழடைந்தனர்..!

ச‌கோத‌ர‌ர் சில்சாம் அவ‌ர்க‌ளே, உங்க‌ள் வருகைக்கும், க‌ருத்துப் ப‌திவிற்க்கும் ந‌ன்றி.

பார‌தியார் பூணூலை வீசி எறிந்த‌தாக‌ நான் இது வ‌ரை கேள்விப் ப‌ட்ட‌தில்லை. பூணூல் அணிந்திராத‌ ஒரு ந‌ண்ப‌ருக்கு பூணூலை அணிவித்த‌வ‌ர் பார‌தியார்.

ம‌ற்ற‌ப‌டி பூணூலை அணிவ‌து ஒருவ‌ரை புக‌ழுக்கு இட்டு செல்ல‌ அல்ல‌, நாம் அவ்வாறு எழுத‌வில்லை, யாரும் அப்ப‌டி க‌ருத‌வுமில்லை. பூணூல் அணிவ‌தால் ஆன்மீக‌ ப‌யிற்சி, ம‌ன‌க் க‌ட்டுப்பாடு அதிக‌ரிக்குமா என்கிற‌ நொக்கிலேயே நாம் அணுகுகிரோம். பூணூல் அணியாவிட்டால் தாழ்வு என்று நாம் ஒரு போதும் சொல்ல‌வில்லை. உல‌கில் எல்லொரும் அடிப்ப‌டையில் சிற‌ப்பான‌வ‌ரே, ந‌ல்ல‌வ‌ரே, ம‌க‌த்தான‌வ‌ரே அவ‌ர்க‌ளுடைய‌ சூழ்னிலையின் பாதிப்பினால் அவ‌ர்க‌ள் த‌க்காத்துக்கு உள்ளாகின்ற‌ன‌ர் என்ப‌தை ப‌ல‌முறை எழுதி இருக்கிறோம்.
ஒருவ‌ர் உட‌ற்ப‌யிற்சி சாத‌ன‌ங்க‌ளை உப‌யோகித்து ப‌யிற்சி செய்தால் உட‌ல் வ‌லிமை பெருகிறார். அப்ப‌டி செய்யாத‌வ‌ர்க‌ள் தாழ்மை அடைந்த‌தாக‌ யாரும் சொல்லுவ‌தில்லை.

க‌ம‌ல‌ஹாச‌ன் ஒரு பிர‌ப‌ல‌ ந‌டிக‌ர். ஆனால் அவ‌ர் த‌ன்னுடைய‌ சொந்த‌ வாழ்க்கை ( திரும‌ண‌ வாழ்க்கை) ஒரு வ‌கையான‌ பெயிலிய‌ர் என்ப‌தாக‌ அவ‌ரே சொல்லி இருப்ப‌தாக‌ ப‌த்திரிகையில் ப‌டிக்கிறோம், திரும‌ண‌ வாழ்க்கையில் த‌ன‌க்கு ந‌ம்பிக்கை இல்லை என்ப‌து போல‌ அவ‌ர் சொல்லி இருக்கிறார். க‌ம‌ல‌ஹாச‌னை நான் என‌க்கு ரோல் மாட‌லாக‌ க‌ருத‌வில்லை, இந்திய‌ ச‌முதாய‌ம் க‌ம‌ல‌ஹாச‌னை ஒரு வெற்றிக‌ர‌மான‌ ந‌டிக‌ராக‌ பார்க்குமே த‌விர‌ அவ‌ரை ஒரு வ‌ழிகாட்டியாக‌ க‌ருதுமா என்ப‌து ச‌ந்தேக‌மே. நீங்க‌ள் க‌ம‌லை உங்க‌ளுக்கு ரோல் மாட‌லாக‌ க‌ருதினால் அது உங்க‌ள் விருப்ப‌ம்.

க‌ட்டுரையைப் ப‌டித்த‌ அனைவருக்கும் ந‌ன்றி.

க‌ருத்துக்கள் தெரிவித்த‌ ந‌ண்ப‌ர்க‌ள் திருவாள‌ர்க‌ள் சுந்த‌ர், சில்சாம், ராமச்ச‌ந்திர‌ன், ராம், த‌ன‌பால் ஆகியோருக்கு மிக்க‌ ந‌ன்றி!

ந‌ண்ப‌ர்க‌ள் த‌ய‌வு செய்து, இனிய‌ உளவாக‌ இன்னாத‌ கூற‌ல் க‌னியிருப்ப‌க் காய் க‌வர்ந்தற்று என்ப‌தை க‌ருத்தில் கொண்டு பின்னூட்ட‌ங்களை இடுமாறு தாழ்மையுட‌ன் கேட்டுக் கொள்கிறோம்.

ம‌த‌ ச‌கிப்புத் த‌ன்மை இன்மை
ஒரு புறம் கொப்புளிக்க‌, இந்திய‌ ச‌முதாய‌ம் ச‌மத்துவ‌த் தன்மையை நோக்கி செல்வ‌தால் அடைந்த‌ பீதி ம‌றுபுற‌ம் வாட்டினாலும், க‌ண்ணிய‌த்தை கை விட்டால், அத‌ற்க்கு எதிர் வினையாக‌ இன்னும் ப‌ல பின்னூட்ட‌ங்க‌ளும் வ‌ருகின்ற‌ன‌ என்ப‌தை புரிந்து கொண்டு ஒத்துழைக்க‌ வேண்டுகிறேன்.

திரு சில்ல்சம் அவர்களே,

///மாட்டின் பின்புறத்தை(..?) நமஸ்கரித்து அதன் கோமியத்தைக் குடிக்கும்///

நான் இதுவரை கோமியம் குடித்ததில்லை.ஆனால் கோமியம் குடிப்பதால் , நம் ரத்தத்தில் உள்ள அசுத்தங்கள், நச்சுக்கள் போன்றவற்றை அகற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன்,நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படுவதாக அமெரிக்காவில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்ததையும், கோமியத்திர்க்குரிய மருத்துவத் தன்மைக்கு பேடென்ட் உரிமை கோரியதாகவும் படித்திருக்கிறேன்.அதனால் இனி எங்கேயும் கோமியம் கொடுத்தால் தயங்காமல் குடிப்பேன்.நீங்களும் ஏன் குடிக்கக் கூடாது.?நாம் நேரடியாகக் குடிக்காவிட்டாலும், பின் மாத்திரை வடிவிலோ, டானிக் வடிவிலோ, குடிக்கவேண்டியிருக்கும்.இப்பொழுதே நாம் பல அருவருக்கத் தகுந்த விசயங்களை, மருந்தாகவும், மாத்திரைகளாகவும் உண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

//ந‌ண்ப‌ர்க‌ள் த‌ய‌வு செய்து, இனிய‌ உளவாக‌ இன்னாத‌ கூற‌ல் க‌னியிருப்ப‌க் காய் க‌வர்ந்தற்று என்ப‌தை க‌ருத்தில் கொண்டு பின்னூட்ட‌ங்களை இடுமாறு தாழ்மையுட‌ன் கேட்டுக் கொள்கிறோம்// திருச்சியாரே, அவமதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இடுகை இடுபவரை கொதித்தெழுந்து எதிர்த்தெழுதும்போது இனிய உளவாக என்று எழுத முடியாது. அதர்மவாதிகளை அதர்மவழியிலே தான் முறியடிக்க வேண்டும் என்பதே பாரதத்தில் கிருஷ்ணர் கற்றுக் கொடுத்தது. சில்ஸாம் போன்றவகளுக்கு அவர்கள் வழியிலேயே பதிலுரைப்பது சாலச்சிறந்தது. அதை எடிட் செய்து வழங்குவது தேவையற்றது.

நான் காமெண்ட் ஸ்டார்ட் பண்ணினாலே உங்களுக்கு கொண்டாட்டம் தானே…இருக்காதா பின்னே…கட்டுரை ஹிட் ஆகுதுல்லே..?

கவலைப்படாதீங்கோண்ணா…பெங்களூரில் அதற்கான தொழிற்சாலை அமைக்கப்பட்டு இன்னும் சில வருடங்களில் கோக், பெப்சி போல கலக்கப்போகிறது (வயித்த‌…?)..!

அப்புறம் அதிலயும் எருமையோட மூத்திரத்தை கலந்துட்டா…குதிரையோட‌ மூத்திரத்தை கலந்துட்டா…எனப் புகார் எழும்பும்…அது என்ன மாட்டுல கூட பசு மாடு தான் ஒசத்தி எருமை மாட்டு கோமியும் உப்பு கரிக்குமா என்ன‌..?

Very Interesting – Please read fully

Noting that ISKCON was spreading its activities and gaining followers in Poland, a nun filed a case before a Judicial Magistrate in Warsaw, Poland
– praying that ISKCON should be banned because its followers were glorifying a Character called Krishna ‘Who was of loose morals, having married 16,000 Gopikas’.

When the case came up for hearing, the ISKCON defendant requested the Judge
to ask the nun to repeat the oath she had taken when she was ordained as a nun.

The Judge asked the nun to recite the oath loudly. But she refused.

ISKCON man asked the Judge whether he could read it out instead of the nun. The Judge gave the go ahead.

The pledge was in effect that ‘she (the nun) is married to Jesus Christ’.

ISKCON man said, “Your Lordship! Lord Krishna is alleged to have ‘married’ 16,000 women. There are more than a million nuns who assert that they are married to Jesus Christ. Between the two, Krishna and the nuns, who are loose characters?”

The Judge dismissed the case and allowed ISKCON to go its way

சில்சாம் அவர்களே,

நம்முடைய தளத்துக்கு அனைவரையும் வரவேற்கிறோம், உங்களையும் வரவேற்கிறோம்.

நம்முடைய தளம் நாகரீகத்தை, சமத்துவத்தை, நல்லிணக்கத்தை,சகோதரத்துவத்தை, பகுத்தறிவை பரப்பும் நோக்கோடு செயல்படுவது. எனவே நாம் கண்ணியத்தை கடை பிடிக்கிறோம். நீங்கள் கமென்ட் ஸ்டார்ட் பண்ணினால் நமக்கு கொண்டாட்டமும் இல்லை. நீங்கள் கமெண்ட் ஸ்டார்ட் பண்ணாவிட்டால் நமக்கு திண்டாட்டமும் இல்லை. நாம் நம்முடைய கருத்துக்களை எழுதுகிறோம். பலரும் படிக்கிறார்கள. கருத்து தெரிவிக்கிறார்கள். வள்ளுவர், யாகாவாராயினும் நாகாக்க என்றார். அதை நீங்கள் செவி மடுக்கிறீர்களா? இயேசு கிறிஸ்து, வாயிலிருந்து வருவதிலானாலேயே ஒருவன் தீட்டுப் படுகிறான் என்றார். ஆனால் இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை பின்பற்றலாமா , வேண்டாமா என்ற வகையிலே கருத்துக் கணிப்பு நடத்தி அவரது கொள்கைகளை ஏலம் போடுபவர்கள் இயேசு கிறிஸ்து சொன்னது போல வாயிலிருந்து வரும் வார்த்தைகளை கண்ணியமாக வெளிப்படுத்துவார்களா என்பது சிந்திக்க வேண்டிய விடயமே.

மொத்தத்திலே கண்ணியமில்லாத , வெறுப்புணர்ச்சியை தூண்டும் , நல்லிணக்கத்தை கெடுக்கும், அமைதியை குலைக்கும் கருத்துக்களை எழுதப் பட்டால் அவற்றை மட்டுறுத்தும் படி நேரிடலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேம்.

மற்றபடி உங்களை எப்போதும் வரவேற்கிறோம்.

இதுதான் உங்கள் தந்திரம்…நான் எதை எழுதினாலும் –
கட்டுரையின் கருப்பொருள் எதுவாக இருந்தாலும் உடனே அதனை இயேசுகிறித்துவுடன் சம்பந்தப்படுத்தி புறக்கணிக்கிறீர்கள்; நான் எழுதுவதெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு இங்கே என் குருநாதரையே தூஷிக்க ஆட்கள் ஏவப்படுகிறார்கள்; அப்படியானால் எனக்கென்று சிந்தனையே இருக்கக்கூடாதா,நான் சிந்திப்பதெல்லாம் கிறித்தவமா என்று அறிய விரும்புகிறேன்.

ஒரு புனிதமான செவிலியர் பணியின் உத்தமத்துக்கும் கோபியரக்கும் வித்தியாசம் தெரியவில்லையானால் என்ன செய்யமுடியும்?

செவிலியர் பணிக்கு தன்னை உட்படுத்திக்கொண்டவர் இறைவனுக்கு அடியவராகத் தன்னை அர்ப்பணித்து உறுதியளிப்பதற்கும் கோபியருக்கும் வித்தியாசமில்லையா?

இதுவரை யாரும் காமெண்ட் போடலையே என்று பரிதாபப்பட்டு ரெண்டு வரி எழுதின என்னையே நான் நொந்துக்கணும்…நான் வினவு தளத்தின் பாதிப்பில் எழுதினதை நீங்கள் கிறித்தவத்துடன் சம்பந்தப்படுத்தினால் உங்களோடு போராடுவதும் இங்கே வருவதும் வீண் வேலையாகும்;நான் தமிழனாகவே சிந்திக்கிறேன்,சமூகத்தின் அவலட்சணங்களைக் கண்டு மனங்கொதித்து மாற்றத்துக்காக ஏங்கி எழுதுகிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வாய்ப்பே இல்லை.

அங்கே தாத்தாச்சாரியார் என்று ஒருத்தர் கலக்கிண்டு இருக்காரே… அவரும் கிறித்தவரா..? கொஞ்சமாவது கண்ணைத் திறந்துபாருங்க சாமி…!

http://thathachariyar.blogspot.com/

சில்சாம் அவர்களே, நான் சொன்னது உண்மையா இல்லையா, இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை புறக்கணித்து ஏலம் போடுவது யார்? இங்கே இயேசு கிறிஸ்துவை தூஷனை செய்யும் கருத்துக்களை யாரவது எழுதினாலும் அதையும் முடிந்த அளவுக்கு மட்டுறுத்தியே வருகிறோம். அது உங்களுக்கே தெரியும். பொய் தேவன் என்று எழுதினால் அதில் ஏன் பொய் என்பதை மட்டுறுத்தி விடுகிறீர்கள் என்று கேட்டு என்னை கிறிஸ்தவனா என்று கேட்டு என தளத்திலே பின்னூட்டம் இடாமல் விலகியவர்கள் உண்டு. அப்போது கூட நாம் நம் கோட்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. நீங்கள் இந்து மத தெய்வங்களை , அமைதியான வழிபாட்டு முறைகளை , பிற மத வழிபாடுகளை வெறுக்க சொல்லாத வழிபாட்டு முறைகளை கூட அவமதித்து வருவதால் அவர்கள் ரியாக்சன் காட்டி பதிலுக்கு இயேசு கிறிஸ்துவை இழுகினறனர். அவற்றையும் மட்டுறுத்தியே வருகிறோம்.

மற்றபடி நீங்கள் எந்த பரிதாபமும் பட வேண்டாம். இந்த தளத்தை நடத்துவதால் எனக்கு 5 பைசா கூட லாபம் இல்லை. நேரமே விரயம். நீங்கள் பின்னூட்டம் இடுவதால் லாபமோ, இடாததால் நஷ்டமோ இல்லை. நண்பர் தாத்தாச்சாரியார் இந்து மத தெய்வங்களை இகழ்ந்ததாக இது வரை எனக்கு தெரிந்த வகையில் இல்லை. மறுபடி நண்பர் தாத்தாச்சாரையாரும் இங்கே பல பின்னூட்டங்களை இட்டு விவாத்தித்து உள்ளார். நாம் பதிலும் விளக்கமும் அளித்து இருக்கிறோம்.

உங்களிடமிருந்து கண்ணியமான பின்னூட்டங்களை , உண்மையான விவாதங்களை வரவேற்கிறோம்.

//பூணூலை அனைவரும் அணியலாம். சமத்துவத்துக்கு அது உதவும்.//

இதுக்கே என் சார்பாக ஒரு ஒட்டு.

//இதனால் அவர்கள் எந்தவிதத்திலும் தாழ்ந்துவிடவில்லை;மாறாக அதன்பிறகே புகழடைந்தனர்..!//

Well said. பைபிளை தூக்கியெரிந்தவர்களும் அவ்வாறே, இல்லையா?

Sundar,

//Just by wearing the sacred thread nobody becomes great.It is an insignia to remind ones need to observe certain austerities.//

இது inferiority complex சம்பந்தப்பட்டது இல்லை. ஆலய நுழைவு போராட்டம் வேண்டி நாத்திகர்களும் போராடுவதில்லையா? அவர்கள் கடவுளை வணங்கவா இந்த போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்? இல்லை. அந்த உரிமை வேண்டி. அதுபோலவே, பூனூல் அனிவதும் ஒருவித உரிமை சம்பந்தப்பட்டது என்றே நான் நினைக்கிறேன்.

மிக்க நன்றி திரு. சீனு அவர்களே!

இல்லை சீனு, ஆரிய கலாச்சாரத்தை திணிப்பது சம்பந்தப்பட்டது. தமிழில் கிரந்தம் கலந்து அழிக்க துடித்து கொண்டிருகின்றனரே அது போல்

ஏன் தீண்டாமையின் சின்னமான பூணூலை அணிய வேண்டும். பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் தங்க சங்கிலியோ அல்லது சீருடை அணியாமலோ வந்தால்,அவனை போல் எல்லோரும் சங்கிலி அணியவேண்டும் , சீருடையில் வர தேவை இல்லை என்பீர்களா இல்லை அணிந்து வந்தவனை அணியாதே என்பீர்களா.?

வாங்க, பிரதீப்,

எல்லோரும் பூணூல் அணிந்தால் வேறுபாடு உருவாக முடியாது, சாதி வேறுபாட்டை களைந்து ஹோமோஜீனியஸ் சமுதாயத்தை அமைக்க முடியும்.

சீருடைக்குள்ளே என்ன ஆடை அணிந்தாலும் அதை பற்றி என்ன சொல்ல முடியும். கை வைத்த பனியன் தான் அணிய வேண்டும், முண்டா பனியன் அணியக் கூடாது… என்றெல்லாம் சொல் ல முடியுமா? நீ பூணூல் போட்டு இருக்கிறாயா, நானும் பூணூல் போட்டு இருக்கிறேன். எல்லோரும் ஒன்றுதான்.

சீருடை ஏன் போடவில்லை என்றால் அல்லது சீருடை அல்லாத உயர்ந்த விலை ஆடையை தன்னை உயர்ந்தவனாக காட்டிக்கொள்ள அணிந்து கொள்ளும் போது , யாருடைய நடவடிக்கையை மாற்றி கொள்ள அறிவுறுத்த வேண்டும் .? என்பதே கேள்வி. திருச்சியாருக்கு கேள்வி தெளிவாக புரியும் என்று நம்புகிறேன்.

அதாவது சீருடையில் வரும் பெரும்பான்மையோரை ,சீருடையில் வராமல் வேறு ஆடையில்(சங்கிலி ,உயர்ந்த ஆடையில்) வரசொல்வோமா ? அல்லது சீருடையை அணியாதவனை (சிறுபான்மையினரை) சீருடை அணிந்து வர சொல்வோமா ?

ஏன் பூணுல் அணிய வேண்டும் பூணுல் அணியாமலே இருக்கிற பூனூலை அறுத்து விட்டால் தானாக வந்துவிட போகிறது சமத்துவம்

பிரதீப் , நீங்களும் நான் சொல்லுவதைஎளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

பள்ளிக்கு வரும் ஒரு சிறுவன் கைக் குட்டை எடுத்து வருகிறான், இன்னொரு சிறுவன் கைக் குட்டை எடுத்து வரவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள், அவனிடம் கைக் குட்டை இல்லை, உனக்கு மட்டும் எதற்கு கைக்குட்டை என்று கைக்குட்டையை வாங்கி தூர எறிய முடியாது.

கைக் குட்டை வைத்திருக்காத மாணவனும், அவன் விருப்பப் பட்டால் கைக் குட்டை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்வார்கள், கைக் குட்டை வைத்துக் கொள்வதை பள்ளி நிர்வாகம் தடுக்கவில்லை , அதைப் போன்றதுதான் இதுவும்.

மேலும் பூணூல் ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய்க்குள் கிடைக்கிறது. எனவே இது தங்க சங்கிலி போல வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்த பொருள் அல்ல.

கைக்குட்டை சரியான உதாரணம் ஆகாது. பூணூல் அத்தியாவச பொருள் அல்ல. தன்னை உயர்ந்தவனாக தன்னை ஒரு குறிப்பிட்ட சாதியாலனாக காட்டி கொள்ள பயன்படுத்த படுகிறது. தவறு செய்பவனை விட்டுவிட்டு தவறு செய்யாதவர்களை நீயும் அதே போல் செய் எல்லாம் சரியாகிவிடும் என்றால் ,உங்கள் நடுநிலை சந்தேகதிர்க்குரியது .

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு உபயோகம் இருக்கிறது. பூணூல் என்பது கட்டுப்பாட்டை நினைவுறுத்தும் சின்னமாக அணியப்படுகிறது என்று சொல்கிறார்கள். இதைக் கட்டுரையிலேயே எழுதி இருக்கிறோம். ஆன்மீக முயற்ச்சியை நினைவு படுத்தும் சின்னமாக அது அமையக் கூடும். குளித்து விட்டு வரும் போதே உடல் முழுதும் துவடினாலும், பூணூலில் ஈரம் இருக்கிறது, அதை தனியாக துடைக்கும் போது ஆன்மீக பயிற்சி செய்ய வேண்டிய தை அது நினைவு படுத்துகிறது என்கிறார்கள். பூணூலை மனசாட்சியின் அடையாளமாக கருதுவோரும் உண்டு. வெறுமனே பூணூலை அணிந்து கொண்டு அதை சட்டை செய்யாமல் இருப்பவரும் உண்டு.

தமிழ் நாட்டில் துண்டு அணிகிறார்கள். மேலை நாட்டவர் அதை தேவை இல்லை எனக் கருதக் கூடும். துண்டினால் பல உபயோகம் உண்டு . வெயில் வேர்வையை துடைத்துக் கொள்ளாலாம். தலையில் விறகு போன்ற சுமையை வைக்கு முன் அதை சும்மாடு கட்டிக் கொள்ளலாம். யாராவது தாக்க வந்தால் ஒரு அவசரத்துக்கு துண்டை ஒரு காப்பாக பயன் படுத்த முடியும். ஆனால் மேலை நாட்டவருக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதைப் போலவே பூணூல் உபயோகமாக இருக்கிறது என்று கருதுவோர் அதை அணிந்து கொள்ளலாம். யாரயும் அணிந்து கொள் எனக் காட்டாயப் படுத்தவில்லை. பூணூலை அணிந்து கொள்ள என்று கட்டாப் படுத்துவது சரியவில்லை, அதே நேரம் எல்லோரும் பூணூல் அணிந்து கொள்வதை யாரும் தடுக்க முடியாது என்பதை முக்கியமாக சொல்லுகிறோம், இது சமத்துவத்தை நிலை நிறுத்தும் கோட்பாடு. அதே போல பூணூலை அணியக் கூடாது என்று கட்டாயப் படுத்தவும் இயலாது.
பூணூல் அணியக் கூடாது, அரை நான் கயிறு அணியக் கூடாது என்று எல்லாம் சட்டம் போடா இயலாது

ரேபான் குளிர் கண்ணாடி அணிவது கண் நலம் பேணவும் அணியலாம். ஸ்டையில் காட்டவும் அணியலாம். அவன் குளிர் கண்ணாடி அணிந்து பந்தா பண்ணுகிறான் என்றால், நீங்களும் அணிந்து கொள்ளுங்கள் , உங்களை யார் தடுத்தது. ரோட்டிலே ரேபான் அணிந்து செல்பவனிடம் சென்று அவன் கண்ணாடியைப் பிடுங்கி எறிய நமக்கு உரிமை இல்லை. அது நாகரீகமும் இல்லை.

கைக்குட்டையை ஒரு உதாரணமாகக் காட்டியது சரியே. சங்கிலியை உதாரணமாக காட்டுவதை விட கைக்குட்டையை உதாரணமாகக் காட்டுவது பொருத்தமானதே.

யார் நடுநிலை யோடு எழுதுகிறார்கள், யார் நடுநிலை இல்லாலாமல் எழுதுகிறார்கள் என்பது படிப்பவருக்கு தெரியும். அவரவர் மனசாட்சிக்கும் தெரியும். எல்லோரயும் நடுநிலைப் பாதைக்கு கொண்டுவருவதே நம் நோக்கம்.

முயலுக்கு மூணு காலுனா என்ன சொல்றது. உங்க இணைய பக்கத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தலாமே உண்மை தெரிந்து விடும். அது சரி நீங்க என்ன பிராமண சாதியா .?

பிடிவாதம் பிடிப்பது யார் என்று எண்ணிப் பாருங்கள். ஒரு மனிதன் பிரீப் வகை ஜட்டி தான் அணிய வேண்டும், பாக்சர் பிரீப் வகை ஜட்டி தான் அணிய வேண்டும், கோவணம் அணிய வேண்டும், எதுவுமே அணியக் கூடாது என்று எல்லாம் கட்டாய்ப் படுத்தும் உரிமை நமக்கு இருக்கிறதா?

கணக்கு எடுப்பு எதற்கு நடத்த வேண்டும் என்று சொல்கிறீர்கள்? தனி மனித சுதந்திரத்தை அங்கீகரிப்பதா வேண்டாமா என்றா? ஒவ்வொரு மனிதருக்கும் பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் உண்டு என்பதைப் போலவே அவர்கள் விரும்பும் உடையை , அணிகலனை அணியவும் சுதந்திரம் உண்டு. இதில் என்ன கருத்து கணிப்பு எடுக்க இருக்கிறது?

நம் தளத்திலே மிக அதிக பாராட்டுதலைப் பெற்ற கட்டுரையாக இருப்பது எல்லோரும் பூணூல் அணியலாம் என்ற கட்டுரையே.

நீங்கள் மக்கள் அனைவரிடமும் சென்று பூணூலை விருப்பப் பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் என்று சொல்வதை வரவேற்கிறீர்களா என்று கேட்டுப் பாருங்கள். பூணூலை அணிந்து கொள்வதை தமிழ் நாட்டில் பெரும்பாலான மக்கள் அங்கீகரிக்கவில்லை என்றால், தமிழ் நாட்டில் யாரும் பூணூல் அணிய மாட்டார்கள். அவன் பூணூல் போட்டுக் கொள்கிறான் என்றால், அவங்கக் போட்டுக்கட்டும் விடுய்யா என்று சொல்லிய பலரை நான் பார்த்திருக்கிறேன். பூணூல் என்பது வித்யாசப் படுத்துகிறது என்று யாரவது கருதினால் , அவர்களும் போட்டுக் கொள்ளாலம். என் அலுவலகத்தில் பக்கத்து சீட்டில் இருப்பவர் ஐந்து பவுனில் பிரேஸ்லெட் அணிந்து இருக்கிறார் என்றால், அதிலே நான் வருத்தப் பட வேண்டியது என்ன. எனக்குத் தேவை என்றால் நானும் அணிந்து கொள்வேன்.

உலகில் எந்த நாடும் ஒருவன் என்ன வகையான உள்ளாடைகளை அணிகிறான், அணிகலன்களை அணிகிறான் என்பது பற்றி கட்டாய விதிகளை விதிக்கவில்லை, ஏனெனில் தனி மனித சுதந்திரத்தைப் பறிக்க அவர்கள் விரும்பவில்லை.

யாரும் குல்லாய் அணியலாம், என்று நான் எழுதினால் என்ன சொல்லுவீர்கள், உலகில் எல்லோரும் ஈத் திருநாளைக் கொண்டாட வேண்டும் என்று கட்டுரை போட்டு இருக்கிறோம். நீங்கள் முஸ்லீமா என்று கேட்பீர்களா?

உலகில் எல்லோரும் கிறிஸ்தமஸ் திருநாளைக்
கொண்டாடுவதை வூக்குவிக்கிறோம் என்று எழுதி இருக்கிறேன். என்னைக் கிறிஸ்தவனா என்று கேட்கவில்லையே.

இன்னும் சொல்லப் போனால் என்னைக் கிரிப்டோ கிறிஸ்தவன், இந்துவைப் போலக் காட்டிக் கொண்டு கிறிஸ்தவ த்தை ஆதரிப்பவன் என்று பின்னூட்டம் இடுகிறார்கள்.

சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் அமைப்பதே நமது நோக்கம். எனவே சாதி பற்றிய கேள்விகளை தவிருங்கள் என்றே கேட்டுக் கொள்கிறோம்.

நம்முடைய தளம் சமத்துவத்தை, நாகரீகத்தை நோக்கி மக்கள சிந்தனைகளை செலுத்த உதவும் தளம். சாதி உணர்வைக் கட்டுப் படுத்த இயலாத நண்பர்கள் தங்களது சாதி க் காழ்ப்புணர்ச்சியை, சாதி வெறியை இங்கே காட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

முழுசா நெனஞ்சதுக்கு அப்புறம் முக்காடு எதற்கு.

சரியாகச் சொல்லிக் கொண்ண்டீர்கள்,. சாதீய ரீதி வெறுப்புணர்ச்சி யில் முழுதுமாக நனைந்தவர்களுக்கு முக்காடு எதற்கு

பாலுக்கு பூனைய காவல் வைப்பது எப்படியோ, அது போல இருக்கு நீங்க சமத்துவம் பேசுறது. (edited)

உன் சாதி என்ன, குலம் என்ன என்று எலலாம் கேட்டு சாதிப் பிரிவினைகளை நிலை நிறுத்தி , சாதீயக் கோட்பாட்டில் , சாதீய உணர்வில் சாதீய வெறியில் துடிப்பவர்களை காவலுக்கு வைப்பதுதான் ஆபத்து.

நல்ல விசயம் தானே !!! இதனைப் பெண்களும் அணியலாமா? என்பது எனது சந்தேகம்? கேள்வியில் ஆபாசம் இல்லை.. !!! அப்படித் தென்பட்டால் மன்னிக்கவும் ….

அன்புக்குரிய திரு. இக்பால் செல்வன் அவர்களே, வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி.பண்டைய இந்தியாவில் பெண்கள் பூணூல் அணிந்து தத்துவ ஆராய்ச்சி, ஆன்மீக விவாதங்கள் போன்றவற்றில் பங்கெடுத்து வந்துள்ளனர் என்பதாக அறிகிறோம். பூணூல் அணிவதற்கான உரிமையும், தகுதியும் பெண்களுக்கு உண்டு என்பதே நம் கருத்து. இது மனம் சமபந்தப் பட்ட விடயமே.

நல்ல விடயம்.. ஆனால் மதமும், கொள்கையும் ஒரு சாராருக்கே உரித்தாக வைத்திருப்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம்… இந்து மதத்தின் புதுமையும், சமத்துவமும் நடைமுறைப்படுத்துமாயின் இந்தியா தானாக முன்னேறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது நடைமுறைச் சாத்தியப் படுவது மிகவும் கடினம் என்பது எனது வருத்தமான கருத்தாகும் ..

Poonul is not necessary. Religious harmony or communal harmony can be created w/o resorting to poonul

poonul compalsary all hindu castes. pradeep mind your own business.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 39 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: