Thiruchchikkaaran's Blog

பகுத்தறிவு சிந்தனையாளர் சங்காராச்சாரியார்! (சங்கராச்சாரியார் யார்- Part 2)

Posted on: December 8, 2010


 

இந்திய சமுதாயம் தொன்மையானது. அதன் வரலாற்றில் நாம் காணும் சிந்தனையாளர்கள் பலர் பகுத்தறிவு சிந்தனையாளர்களே. அவர்களில் முக்கியமானவர் சங்கராச்சாரியார் (ஆதி சங்கரர்) ஆவார்.

நூல்களில் எழுதப்பட்டதையோ, மற்றவர்கள் சொல்வதையோ அப்படியே கேட்டு அது தான் உண்மையாக இருக்கும் என்று நம்பும் வழியை கடை பிடிக்காமல், உண்மை என்ன என்பதை லாஜிக்,ஆராய்ச்சி மற்றும் அனுபவத்தின் மூலம் தானே அறியும், உறுதி செய்து கொள்ளும் வழியே பகுத்தறிவு ஆகும்.

 

அந்த வகையிலே பகுத்தறிவாளன் மனித வாழ்க்கையின் தன்மை, அதன் கூறுகள், அதன் காரணிகள், அந்த வாழ்க்கையில் மனிதன் சந்திக்கும் பிரச்சினைகள் , அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் இவற்றை ஆராய்கிறான், மக்களின் நன்மையின் மேல் உள்ள அக்கறையால்.

File:SankaraSthampaMandapam.jpg

 நவீன கால பகுத்தறிவு சிந்தனையாளர்களாக புத்தர் , சங்கராச்சாரியார், இராமனுஜாச்சாரியார், பட்டினத்தார், சுவாமி விவேகானந்தர் , பாரதியார், அம்பேத்கர், பெரியார்… உள்ளிட்ட பலரை நாம் அறிகிறோம்.

சங்கராச்சாரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை இந்தக் கட்டுரையில் ஆராய தொடங்குகிறோம். அடிப்படையில் எல்லா மனிதனும் பகுத்தறிவு சிந்தனையாளனே. மழைக்கும் , புயலுக்கும இருந்து தன்னைக் காத்துக் கொள்ள வீடு கட்டிக் கொள்கிறேன். போக்குவரத்துக்காக சக்கரத்தைக் கண்டு பிடிக்கிறான். ஆனாலும் எல்லா சாதனங்களையும்    மீறி  அவன் கஷ்டப் படுகிறேன்.
 
இன்பமானது போலத் தோன்றும் மனிதனின் வாழ்க்கை பரிதாபமாக முடிவடைகிறது.  அவனுடைய அனுமதி இல்லாமல் இந்த உலகுக்குள், அவன் புகுத்தப் படுகிறான். அவன் விருப்பம் இல்லாமலே இந்த உலக வாழ்க்கை முடிகிறது. இடையிலே சில காலம்  வாலிப  பருவத்திலே இருக்கும் போது, இந்த உலக வாழ்க்கை இன்ப மயமானது போல அவனுக்கு தோன்றுகிறது. ஆனால் அது நிலைத்து நிற்பதில்லை. வயதாகி உடல் சுருங்கி, பல் விழுந்து, தள்ளாடி, சேர்த்த சொத்து, சுகம் , நட்பு உறவு என்று எதுவும் உதவிக்கு வர முடியாமல் இருக்க பரிதாபமாக சாகிறான்.

மனிதனின் இந்த நிராதரவான நிலையைக் கண்டு உண்மையான அக்கறையுடன் அவனுக்கு உண்மையை  உணர்த்துகிறார் சங்காராச்சாரியார். 

எது ஒருவனைக் காக்கக் கூடியது, எது ஒருவனைக் காக்காது என்று ஆராய சொல்கிறார். உலகில் அனைவரும் செல்வம், புகழ், சொத்து, பத்து தன்னைக் காக்கும் என நம்புகின்றனர். அதனால் அளவற்ற செல்வக் குவியலை சேர்க்க முயல்கின்றனர். ஆனால் ஒருவனின் உயிருக்கு ஆபத்து வந்தால் செல்வம் அவனைக் காக்காது, நோய் வந்தால் செல்வம் அவனைக்  காக்க இயலாது. ஒருவனுக்கு இரத்தப் புற்று நோய் வந்தால் அவன் தங்கத்தையும், வைரத்தையும் அரைத்து  உடல் முழுவதும் பத்துப் போட்டு  பூசிக் கொண்டாலும் அவனைக்  காத்துக் கொள்ள இயலாது. உலகில் உள்ள எவ்வளவு  பெரிய மருத்துவமனைக்கு சென்றாலும் அதிக நாள் தாக்குப் பிடிக்காது என்கிறார்கள்.
 

 
எனவே செல்வம் நம்மைக்  காக்கும் என்று நம்புவது நம்முடைய அறியாமையே. இன்னும் சொல்லப் போனால் அதிக செல்வமே ஒருவனுக்கு ஆபத்தாக  மாறுகிறது.  

 
அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத: சுகலேசா : சத்யம்! 
 
புத்ரான்   தன பாஜாம்      பீதி:
சர்வத்ரைஷா விஹிதா ரீதி:

 

(அர்த்தம்) பொருள், செல்வம்  உபயோகமற்றது , பொருளற்றது (அனர்த்தம்). அதனால் நிலைத்த    இன்பம் கிடைக்காது. செல்வம் படைத்தவன் தன மகனைப் பார்த்து கூட பயப்படுவான். உலகில் எங்கும் இவாறு நடக்கிறது!

ஆதி சங்கரர் சொன்னது போல பெற்ற மகனே , தந்தையைப் பார்த்து இவன் எப்படா சாவான் என்று நினைக்கும் படி செல்வம் செய்து விடுகிறது.  “இத்தனை  பைசா, பல கோடிகளை வைத்து இருக்கிறானே, நாம செலவுக்கு கேட்டால் திட்டுகிறான், இவன் செத்தால் சொத்து அத்தனையும் நம்ம கைக்கு, நாம வெளி நாடுகளுக்கு இஷ்டம்  போல செல்லலாம், மனம் போல வாழலாம்” என்று எண்ணும் நிலைக்கு செல்வம் கொண்டு வந்து விடுகிறது.  முகலாய சாம்ராஜ்ய மாமன்னன் ஷாஜஹானை சிறையில் அடைத்து விட்டு,  அவரங்கசீப் ஆட்சி பொறுப்பை கைப் பற்றுகிறார். இப்படி அப்பனுக்கு இவ்வளவு சொத்து இருக்கிறதே என்று நினைத்து அப்பனை கட்டம் கட்டப் பார்ப்பவர், எல்லா மத, இன மொழிகளை சார்ந்தவர்களிலும் இருக்கிரார்கள.  உலகம் முழுவதும் இவ்வாறு நடக்கிறது. இராமரைப் போல தந்தை கொடுத்த கடனுக்காக தான் காடு சென்ற மகன்  எத்தனை பேர் இருக்கிறார்கள்?

பணம் படைத்தவன் மேல் எல்லோரும் கண் வைக்கிறார்கள். லோக்கல்  ரவுடி  அவனிடம் இருந்து பணம் பெற முயல்கிறான். அரசியல்வாதிகள் அவனிடம் இருந்து  “நன்கொடை  தருக” என்ற பெயரில் அவன் பணத்தை சுரண்டுகின்றனர்.  பத்திரிகையை படித்தால் பல செய்திகள் வருகின்றன. நூறு,நூற்றைம்பது ஏக்கர் வைத்திருப்பவனிடம் அதை கம்மி விலைக்கு விற்க  சொல்லி  கட்டாயப் படுத்துகின்றனர். மறுத்தால் போட்டுத் தள்ளி விடுகின்றனர்.  இன்னும் சொல்லப் போனால் அழகிகள் கூட பணக்காரனை சும்மா விடுவதில்லை. போட்டோ எடுக்கின்றனர். 8  கோடி தருகிறாயா   50 கோடி தருகிறாயா என்று கேட்பதாகவும், இல்லாவிட்டால் போட்டோவை  பத்திரிகையில் போடுவேன் என்று சொல்வதாகவும்  செய்தி  தாள்களில் படிக்கிறோம்.பணம் குடுத்தாலும், குடுக்கவிட்டாலும் அரைகுறை ஆடையோடு போட்டோ பத்திரிகையில் வந்து விடுகிறது. “எப்படி இருந்த நான் ,இப்படி ஆயிட்டேனே” என்று சப் டைட்டில் போட்டு வெளியிடுகிறார்கள. இவ்வாறாக மிக அதிகம் பணம் வைத்திருப்பவருக்கு வரக் கூடிய   கிரைம்  உள்ளிட்ட  பிரச்சினைகளை நாமும் அறிந்திருக்கிறோம். ஆனால் அத்தகைய செய்திகளை பொழுது போக்காக  படிக்கிறோம். நண்பர்களுடன் ஜோக் அடித்து பேசுவதோடு முடித்து விடுகிறோம்.  

 ஆதி சங்கரரோ மனிதனின் துன்பங்களுக்கான காரணி என்ன, அதில் இறந்து  ஒட்டு மொத்த தீர்வு, விடுதலை  பெற வழி என்ன என்று பகுத்தறிவு அடிப்படையில் சிந்திக்கிறார்.

 எனவே செல்வம் பாதுகாப்பை தரவில்லை. செல்வம் ஆபத்தையே தருகிறது என்பதை பகுத்தறிவு ஆராய்ச்சி  மூலம் விளக்குகிறார் சங்கராச்சாரியார். 
அப்படியானால் மனிதனைக் காக்கக் கூடியது எது? தொடர்ந்து சங்கராச்சாரியாரின் பகுத்தறிவு ஆராய்ச்சி என்ன என்று நாமும் அடுத்த தொடர்களில் காண்போம். 
 
Title: பகுத்தறிவு சிந்தனையாளர் சங்காராச்சாரியார்.
Advertisements

11 Responses to "பகுத்தறிவு சிந்தனையாளர் சங்காராச்சாரியார்! (சங்கராச்சாரியார் யார்- Part 2)"

திரு திருச்சிக்காரர் அவர்களே,

வேதத்தில் உள்ள அத்வைதம் என்றக் கருத்தை ஆராய்ந்து அனுபவத்தில் உணர்ந்து கூறியவர் இந்த ஆதி சங்கரர்.இவருடைய அத்வைதக் கருத்தே இன்றைய அறிவியலுக்குப் பொருந்துவதாக இருக்கிறது என்று பல அறிவியல் அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்.

///நவீன கால பகுத்தறிவு சிந்தனையாளர்களாக புத்தர் , சங்கராச்சாரியார், இராமனுஜாச்சாரியார், பட்டினத்தார், சுவாமி விவேகானந்தர் , பாரதியார், அம்பேத்கர், பெரியார்… உள்ளிட்ட பலரை நாம் அறிகிறோம்.///

நீங்கள் கூறிய அனைவரும் பகுத்தறிவு வாதிகள் அல்ல.அதிலும் இந்தப் பெரியாரை பகுத்தறிவு வாதி என்றழைப்பது பகுத்தறிவுக்குப் பொருந்தாது.

///நீங்கள் கூறிய அனைவரும் பகுத்தறிவு வாதிகள் அல்ல.அதிலும் இந்தப் பெரியாரை பகுத்தறிவு வாதி என்றழைப்பது பகுத்தறிவுக்குப் பொருந்தாது.////

தனபால் ஐயா அவர்களுடைய கருத்தினை நான் வழிமொழிகிறேன்

என்னை பொருத்தவரைக்கும் உண்மையான பகுத்தறிவுவாதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தான்

ஜெயேந்திர தாசர்களும் உள்ளார்களா?
அதுவும் பகுத்தறிவு பாசறையில். அய்யோ என்னே இந்த பகுத்தறிவுக்கு வந்த சோதனை?
சரிதான் உண்மையான ஆத்திகன் எந்த மடத்து தலைவரையும் கருதமாட்டான், அவனுக்கு தெரிந்த எளிய வழியினில் ஆன்மிகத்தை நோக்கி செல்வான்.
நான் இப்படி ஒரு ஜெயேந்திர சப்போர்ட்டர் ஐ பார்த்ததில்லை அவரை மட்டும் பகுத்தறிவுவாதி என்று சொல்லும் அளவுக்கு.
கருப்பு மடமும் காவி மடமும் சமரசமாகி விட்டதோ?
வாழ்க பகுத்தறிவு.

என்னங்க வம்பா இருக்கு. ஒருத்தருக்கு பகுத்தறிவு இருக்குன்னு கூட சொல்ல கூடாதா. அவருக்கு தாசராக தான் இருக்க வேண்டுமா .ஜெயேந்திர சுவாமிகளை ஆன்மீக குருவாக ஏற்று கொண்டிருக்கும் அனைவரும் முட்டாள்களா.?

//என்னை பொருத்தவரைக்கும் உண்மையான பகுத்தறிவுவாதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தான்///
///என்னங்க வம்பா இருக்கு. ஒருத்தருக்கு பகுத்தறிவு இருக்குன்னு கூட சொல்ல கூடாதா. அவருக்கு தாசராக தான் இருக்க வேண்டுமா .ஜெயேந்திர சுவாமிகளை ஆன்மீக குருவாக ஏற்று கொண்டிருக்கும் அனைவரும் முட்டாள்களா.?///

dont you understand the contradictions
dont you know the difference between thaan and oruttharukku

உண்மையிலேயே தான் , நீங்க வேணும்னா அவர போய் பாருங்க உங்களுக்கே புரியும் அவரு எவ்வளோ பெரிய பகுத்தறிவு வாதி என்று.

பகுத்தறிவு என்றால் ப‌குத்து அறிதல் தானே?
நாத்திகர்கள் மட்டுமே பகுத்தறிவு படைத்தவர்களா என்ன?

அதனால், வேதங்களையும் உபனிசத்துகளையும் ப‌டித்து
பகுத்து அறி ந்த ஒருவரை பகுத்தறிவாளர் என்று சொல்லுவதில்
என்ன தவறு என்று எனக்கு விளங்கவில்லையே?

நன்றி திரு. மவுலி அவர்களே, வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

அதே நேரம் நாம் சொல்லிக் கொள்வது என்னவென்றால் சங்கராச்சாரியார் (ஆதி சங்கரர்) வெறுமனே வேதங்களைப் படித்து பகுத்து அறிந்து விளக்கங்களை அளித்தவர் மட்டும் அல்ல. அவர் மனிதர்களின் வாழ்வியல் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை அளித்தவர்.

அவர் அளித்த தீர்வுகள் உபநிடதங்கள், கீதை ஆகியவற்றின் கருத்துக்களோடு ஒத்து இருந்தன. மனித தன்னை தானே உயர்த்தி மேம்பட்ட நிலையை, சுதந்திர நிலையை அடைய முடியும் எனற அவர் தானே அந்த நிலையை அடைந்து, உணர்ந்த பின்னரே அதை பிறருக்கு சொன்னார். நீங்களும் அதே போல சுதந்திரம் அடைய முடியும் , முயன்று பார்த்து விடுதலை அடையுங்கள் என்றார்.

எனவே சில நூல்களைப் படித்து விட்டு, இதை அப்படியே நான் நம்புகிறேன், நீயும் நம்பித்தான் ஆக வேண்டும் என்று சொல்லாமல் சிந்தனை அடிப்படையில் ஆராயத் தூண்டும் ஒப்பற்ற பகுத்தறிவுவாதி ஆதி சங்கரர்.

Erode Ramasamy comedian of Tamil Nadu.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: