Thiruchchikkaaran's Blog

மாமேதை, மக்கள் தலைவர் அண்ணல் அம்பேத்கர்!(பகுதி – 1)

Posted on: December 8, 2010


இந்திய நாட்டின்  மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர்  அண்ணல் அம்பேத்கர்.

தடைகளை எல்லாம் மீறி முன்னுக்கு வந்த உழைப்பாளர் அண்ணல் அம்பேத்கர். பள்ளியிலும், சமூகத்திலும் சாதிக் கொடுமையினால் அவர் மிகவும் பாதிக்கப் பட்டு இருந்திருக்கிறார்,   ஆனால்   மனம் தளராமல் முன்னேறியவர் அம்பேத்கர்.

அம்பேத்காரின் வாழ்க்கையின் லட்சியம், இந்தியாவில் உள்ள தலித் மக்களின் விடுதலை, முன்னேற்றம், அதோடு அவர் எல்லா இந்தியர்களையும் நேசித்தவர், இந்தியாவை நேசித்தவர்.

இன்றைய வலிமை மிக்க இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் அம்பேத்கர்.  நசுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக அச்சமின்றி பாடுபட்டார். காங்கிரஸ் கட்சியை எதிர்த்தார். அதே நேரம் நாட்டு மக்களின் நன்மைக்காகவும், நாட்டின் நன்மைக்காவும் அதே காங்கிரஸ் அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்துக் கொடுத்தார்.

அம்பேத்கர் மிகச் சிறந்த சட்ட மேதை. கடும் உழைப்பாளி. சிறந்த போராட்டக்காரர்.

File:Ambedkar Barrister.jpg

சிறு வயது முதல்ஆர்வத்துடன் கல்வி பயின்றார் அம்பேத்கர். பரோடா அரசரின் உதவித் தொகையை பெற்று மேல் படிப்புக்கு அமேரிக்கா சென்றார். நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலை கழகத்தில் பயின்றார். அங்கே உள்ள நூலகத்தில் தினமும் ஆழத்துடன் கருத்தூன்றிப் படிப்பார். நூலகப் பணியாளர் தினமும் அம்பேத்கரிடம் வந்து ஐயா  நூலகம் மூடப் படும் நேரம் ஆகி விட்டது என்று சொல்லுவாராம். அந்த அளவுக்கு கல்வியில் ஆர்வத்தையும், படிப்பையும் காட்டி இருக்கிறார்.

அம்பேதகரை நான் இன்னும் போது நமது கால மாணவர்களையும் எண்ணுகிறேன்.  நாங்கள் கல்லூரியில்  பயிலும் போது,  “கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு , காதலிப்போம் காதலிப்போம் மேரேஜுக்கு” என்ற T. ராஜேந்தரின் பாடல் பிரபலமாக இருந்தது.  காலேஜுக்கு வருவது  வருவதே லைபிலே ஜாலியாக இருக்க, நண்பர்களுடன் வூர் சுற்ற,  பஸ்ஸிலே லந்து பண்ண …. இது போன்ற வெட்டி  தனத்திலே பொழுதைக் கழிப்பது வருத்தமான   வேடிக்கை.
இன்றைக்கு பலருக்கு அம்பேத்கரைப்  போல பேரெடுக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அவரிடம் இருந்த அறிவுப் பசியோ,  கடின உழைப்போ இருக்கிறதா என்பது சிந்திக்க வேண்டிய விடயம்.
டாக்டர் அம்பேத்கர் இந்திய மக்களுக்கு கிடைத்த சொத்து. இந்தியர்கள் அம்பேத்கரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை எத்தனையோ உள்ளன.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவனும், முன் மாதிரியாக வைத்துக் கொள்ள வேண்டிய சிறந்த அறிஞர் அம்பேத்கர்.

(தொடரும்)

Advertisements

6 Responses to "மாமேதை, மக்கள் தலைவர் அண்ணல் அம்பேத்கர்!(பகுதி – 1)"

People who praise Ambedkar fail to acknowledge that it was a Brahmin who brought him up and he was named after that gentleman who was instrumental in bringing him up.Also it is generally hidden by Dravdidian parties that it was only the Brahmin leaders of Congress in pre independence days like Rajaji,A.Vaidhyanathaiyer who really cared for upliftment of Harijans much before EVR.Rajaji was painted to be a villain as he campaigned for vocational education which was again twisted by Dravidian parties to make it appear as though it was a clever plan to keep Brahmins at the top.Why would he do that if the same person was the reason for Harijan temple entry?

அன்புக்குரிய திரு. சுந்தர்,

உங்கள் வருகைக்கு நன்றி.

இந்தக் கட்டுரையில் இராஜாஜி, வைத்தியநாதர் ஆகியோர் பற்றி தொடர்பு எதுவும் இல்லை. உங்களின் பின்னூட்டத்தின் முக்கிய கருத்து கட்டுரையின் பொருளுக்கு சம்பந்தம் இல்லாமல் உள்ளது.

அம்பேத்கர் நசுக்கப் பட்ட மக்களின் விடுதலைக்காக போராடியவரே அல்லாமல், பிராமணர்களுக்கு எதிராக துவேசம் காட்டியவர் அல்ல. இந்தியாவில் பிராமணர்களுக்கு எதிரான துவேசப் பிரச்சாரம் நடை பெற்றது தமிழ் நாட்டில் மட்டுமே. பெரியார் காலத்துக்கு பல வருடங்கள் முன்பே இத்தகைய பிராமண எதிர்ப்பு போக்கு மதராஸ் பிரசிடென்சியில் இருந்தது. ஆனால் தமிழ் நாட்டைத் தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் இத்தகைய போக்கு இல்லை.

பீமாராவ் ராம்ஜிக்கு அவருடைய் ஆசிரியராக இருந்த அம்பேத்கர் எனும் பிராமண சமூகப் சேர்ந்தவர் வூக்கம் அளித்ததாகவும் , அவர் பெயரையே தனக்கு சூடிக் கொண்டாதாகவும் பள்ளிப் பாடத்திலே படித்து இருக்கிறேன். அது அந்த ஆசிரியரின் நல்லெண்ணத்தைக் காட்டுகிறது. திரு, அப்து ல் கலாம் ஐயா கூட தனக்கு அறிவியல் ஆர்வத்தை தூண்டியவர் என்று பிராமண சமூகத்தை சேர்ந்த அவரது ஆசிரியர் ஒருவர் பெயரைக் குறிப்பிடுவார்.

எப்படி இருந்தாலும் யார் உதவினாலும், உதவாவிட்டாலும் அம்பேத்கரைப் போல ஆர்வமும் , உழைப்பும் உள்ள ஒருவர் முன்னேற்றம் அடைந்தே தீருவர். இப்போது சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் குறைந்து , பழக்க

//அம்பேத்கர் நசுக்கப் பட்ட மக்களின் விடுதலைக்காக போராடியவரே அல்லாமல், பிராமணர்களுக்கு எதிராக துவேசம் காட்டியவர் அல்ல// nice point. i like it

திரு திருச்சிக்காரர் அவர்களே,

பகுத்தறிவுவாதி என்றழைக்கப் படுவதற்கு மிகத் தகுதி வாய்ந்தவர்களுள் அம்பேத்கரும் ஒருவர்.மாமேதை.அவருக்கு அவருடைய நினைவு நாளில் அவரை நினைவு கூறுவோம்.

நன்றி, திரு. தன்பால் அவர்களே. மிகவும் சிறப்பான கருத்து.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: