Thiruchchikkaaran's Blog

அமெரிக்காவின் டிரான்ஸ்பரன்சி, எழுத்து சுதந்திர, மனித உரிமை வேடம் அம்பலம்.

Posted on: December 6, 2010


 

அமெரிக்காவின் டிரான்ஸ்பரன்சி, எழுத்து சுதந்திர, மனித உரிமை வேடம் அம்பலம்.

மனித உரிமை, எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்று வாய் கிழியப் பேசி நாகரீக உலக நாயகன் போல வேடமிடும் அமேரிக்கா , இன்று துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று அலறி அடித்துக் கொண்டு வைக்கி லீக்ஸ் தலைவர் ஜூலி யன் அஸ்ஸாங்கை பிடிக்க வலை விரிக்கிறது.

ஜூலியன் செய்த “குற்றம்” என்ன? அமெரிக்காவின் ரகசிய தகவல்களை வெளியிட்டு விட்டாராம். அமெரிக்காவே கலகலத்து போய் விட்டதாம்.

உலக அமைதிக்கு குந்தகம் வந்து விடும் என்று புலம்புகிறார் அம்மையார் ஹிலாரி கிளிண்டன். இத்தனைக்கும் அண்ணன் பில் கிளிண்டன் மோனிகா லெவின்ஸ்கியுடன் நடத்திய காதல் விளையாட்டை ஏதும் விக்கிலீக் லீக் செய்யவில்லை. அணு குண்டு பார்முலாவையோ, இன்னும் புதியதாக தயாரிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் குண்டுகளைப் பற்றியோ எந்த தகவலையும் வெளியிடவில்லை.

அமெரிக்க எந்த எந்த நாடுகளை உளவு பார்த்தது என்பது பற்றிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறார். இதில் என்ன ரகசியமோ. அமேரிக்கா உளவு பார்க்காத இடம் உண்டா? இதில் என்ன புதிய தகவல் , பிரச்சினை என்கிறீர்களா?

இன்னும் இது போல வேறு எதுவும் “புதிய” தகவல்கள் வெளி வந்து விடுமோ என்று அஞ்சித் தான் ஜூலியன் அஸ்ஸாங்கை மிரட்டி மீன் பிடிக்க பார்க்கிறது அமேரிக்கா.

நம்ம வூர் ஆளுங்களுக்கு அமெரிக்கா என்றாலே கிறக்கம் தான். அண்ணன் பெரிய குண்டு வச்சிருக்காரு, அவங்கதான்வே அல்லாத்தையும் கண்டு பிடிக்கிராக என்று 23ம் புலிகேசி பாணியில் வெள்ளைக் கொடியை ஏந்தி நடனமாடி செல்வார்கள். மீறி கொஞ்சம் டான்சை நிறுத்தினாலும் உடனே அங்கிள் சாம் முறைத்தால் கீழேயே விழுந்து விடுவார்கள். கீழேயே விழுந்து விட்டனையா, பள்ளம் தோண்டி கீழே விழுவான் போல இருக்கிறதே என்பார்கள். எனவே ஜுலியன் அஸ்ஸாங்கே பற்றி நமது தகவல் உலகிலே அதிக பரபரப்பு எதையும் காணோம்.

(தொடரும்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: