Thiruchchikkaaran's Blog

எல்லோரும் பூசனை , அர்ச்சனை , அபிசேகம் செய்யலாம்!

Posted on: November 29, 2010


                      File:Temple de Mînâkshî01.jpg

இந்து மதம் சுதந்திரமான மதம், சிந்தனைகளுக்கு முழு உரிமை குடுக்கும் இடமாகும்.

நான் ஒரு கோவிலைக் கட்டினால் அதன் வழிபாடும், செயல் பாடும், நிர்வகமும் இவ்வாறு இருக்கும்.

பூசனை நியம குறிப்புகள்:

பக்தர்கள்  கர்ப்பக் கிரஹத்திலே மூலவருக்கு மிக அருகாமையில் நிற்பதை வரவேற்கிறோம். அர்ச்சனை செய்யும் போது பூவை தூவி   அர்ச்சிப்பதை பக்தர்களே செய்யலாம்!

நீரபிசேகம், பாலாபிசேகம் , சந்தன அபிசேகம் போனறவற்றை பக்தர்கள் தாங்களே செய்ய வேண்டும். பக்தர்கள் இல்லாத போது, அர்ச்சகர் அபிசேகம் செய்தால் போதுமானது.

மூலவரின் பாதங்களை தொட்டு வணக்க விரும்புவோருக்கு எந்த வித தடையும் இன்றி அனுமதி வழங்கப் பட வேண்டும். மூலவரை தொட்டு வணங்குவதற்கான அதிக பட்ச நேரம் பத்து நிமிடங்கள் ஆகும். கூட்டம் அதிகமாக இருந்தால், பக்தர்கள் அனுசரித்து செல்ல  வேண்டும்.

தமிழில்  வழிபாடு செய்வதை  வூக்குவிக்கிறோம். புரியாத மொழியில் சொல்வதை புரியாமலே கேட்டுக் கொண்டு இருப்பதை விட தாய் மொழியில் கேட்டு புரிந்து ஐக்கியமாவது சிறப்பு. 

 அப்படியே வட  மொழியில் பாடினாலும்

“புனரபி ஜனனம், புனரபி மரணம்

புனரபி ஜனனே ஜடரே சயனம்

 இஹ சம்சாரே பஹு துக்  தாரே

கிருபையா பாரே  பாஹி முராரே!”

இதை தமிழில் மொழி பெயர்த்து

“மறுபடி பிறப்பு, மறுபடி இறப்பு,

மறுபடி பிறந்து (தாயின்) வயிற்றினில் வாசம்,

இந்த வாழ்க்கை மிக துன்பமானது

தயவு  செய்வாய் முராரி”

 என்று தமிழிலும்  பாடினால் புரிந்து கொள்ள இயலும்.

இதை  சொல்லுகிற நேரத்திலே அர்ச்சனையோ , பாயிரமோ எந்த மொழியில் சொல்லப் பட வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது சந்நிதியில் வழிபட காத்திருக்கும் மனிதர்கள்  தான். தாங்கள் எந்த மொழியில் வழிபாட்டை செலுத்த விரும்புகிறோம் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவரவர்க்கு உண்டு.  இதிலே தங்களுடைய அடக்குமுறை பாசிசத்தை காட்டி இந்த மொழியில் தான் வழிபாடு செய்ய வேண்டும் என்று மிரட்டும் உரிமை யாருக்கும் இல்லை, இந்தியா ஒரு சுதந்திர நாடு.

அர்ச்சனை செய்யும் போது அர்ச்சகர் மந்திரங்களை சொல்லும் போது, கீர்த்தனைகளை பாடும் போதோ, பக்தரும் அதை திருப்பி சொல்லும் படி தெளிவாக சொல்ல வேண்டும், அவருக்கு மந்திரத்தின் வார்த்தைகள் சரியாகப் கேட்கவில்லை என்றால் திருப்பி சொல்லலாம். (நம்மில் பலருக்கு தூய்மையான செந்தமிழை புரிதல் செய்தாலே கடினமாக உள்ளது. என்னுடைய வீட்டிலே நான் பேசும்போது தமிழ் செய்யுள்களை சொன்னால், அவர்கள் “தமிழிலே பேசுங்கள்” என்கிறார்கள். அதாவது பேச்சுத் தமிழ்தான் அவர்களுக்கு தமிழ்).

அர்ச்சகர் நியமன வழிகாட்டுதல்:

1) அர்ச்சகர் ஆக இருப்பவர் தான் அர்ச்சனை செய்யும் கடவுளிடம் உணர்வு பூர்வமான தொடர்பும் , மரியாதையும் உடையவராக இருக்க வேண்டும்.  உதாரணமாக முருகனுக்கு அர்ச்சனை செய்பவர் முருகனின் வீரம், கருணை ஆகியவற்றை புரிந்தவராக இருக்க வேண்டும். இராமருக்கு அர்ச்சனை செய்பவர் இராமரின் தியாகம், மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் துயரங்களை ஏற்பது ஆகியவற்றை உணர்ந்தவராக இருக்க வேண்டும்

2) அர்ச்சகர் ஆக இருப்பவர் உலகப் பொருட்களை ஈட்டுவதை விட , ஆன்மீக முயற்சியில் அதிக ஈடுபாடு உடையவராக இருக்க வேண்டும்.

3) அர்ச்சகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்மீக உயர்வு அடையும் வண்ணம் அவர்களை வூக்குவிப்பவராக இருக்கவேண்டும்.

4) பக்தர்கள் தாங்கள் வழி  பாட்டில் பங்கெடுக்க விரும்பினால், அதை மனப்பூர்வமாக ஆதரித்து அவர்கள் தாங்களே பூசனை செய்ய உதவி செய்பவராக இருக்க வேண்டும்

இதன்னியில்

5)ஒரு அர்ச்சகர் குடி பழக்கம் உடையவராக இருக்கக் கூடாது. குடிப் பழக்கம் இருந்தால் அதை நிறுத்தி விட வேண்டும்

6)அர்ச்சகர் திருமணம் ஆனவராக இருக்க வேண்டும் . அவர் தன்னுடைய மனைவியை தவிர வேறு பெண்களுடன் தொடர்பு வைக்க நினைக்காதவராக இருக்க வேண்டும்.

 7)பெண்களும் அர்ச்சகர் ஆக பணி புரியலாம். பெண்கள் மாத விடை நேரத்திலே 4 நாட்கள் அவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

8)அர்ச்சகர் பணிக்கு தேர்வு செய்யும் போது, வூதியம் பெற்று பணி செய்ய விரும்பும் அர்ச்சகர்களும் தேர்வு செய்யப் படலாம். வூதியும் பெறாமல் ஓய்வு நேரத்தில் அர்ச்சகப் பணி ஆற்றுபவர் களும் வரவேற்க்கப் படுவார்கள.

9)கோவிலை சுற்றி முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்களை அணுகி , அந்தப் பகுதில் வசிக்கும் எல்லா சமூகத்தை சேர்ந்த மக்களும் பிரதி நிதித்துவம் பெறும்படி அர்ச்சகர் குழு அமைக்கப் படும்.

(தொடரும்…)

Advertisements

30 Responses to "எல்லோரும் பூசனை , அர்ச்சனை , அபிசேகம் செய்யலாம்!"

CLICK AND READ

1. பகுதி 27. சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் வைத்தால் பகவான் பட்டென ஓடிப் போய் போய்விடுவார். விக்ரகம் வெறுங்கல்லாகி விடும். பரிகாரம் கும்பாபிஷேகம். அதாவது குடமுழுக்கு.

2. பகுதி 31.கோவில் கட்டியவனுக்கு சாமியை சுமக்க, பூசை செய்ய தடையா? ‘சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது…

…..

அன்புக்குரிய நண்பர் தாத்தாச்சாரியார் அவர்களே,

தளத்திற்கு வருகை தந்ததற்கு நன்றி. உங்களின் தளத்துக்கான தொடர்பை கொடுத்து இருக்கிறீர்கள். நாம் வெளியிட்ட கட்டுரையை படித்து விட்டு அது தொடர்பான கருத்து தெரிவித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் எல்லாம் நூறாண்டுகளுக்கு முன்னாள் இருந்த சாதீய வாதத்தில் முழுகிப் போனவர்கள் சொன்னதை தேடித் பிடித்து எழுதி இருக்கறீர்கள். இப்போது சிலர் சாதி துவேசம் கொண்டு சாதீய காழ்ப்புணர்ச்சி. வெறுப்புணர்ச்சியை கொட்டுவது போல, அன்று பலர் சாதீய மேட்டிமை தனத்தை கட்டி இருக்கிறார்கள்.
ஆனால் புதிய இந்து மதமோ சாதீய முறைகளை கடந்து ஜனநாயகத்தில் சமத்துவ பீடு நடை போடுகிறது.

எந்த ஒரு இந்துக் கடவுளாவது இவர்தான் எனக்கு பூசனை செய்ய வேண்டும் என்றோ, இவர்கள எனக்கு பூசனை செய்யக் கூடாது என்றோ சொன்னதாக உங்களால் காட்ட முடியுமா?எந்த ஒரு இந்துக் கடவுளாவது என்னைக் கும்பிடாதவனை தண்டிப்பேன் என்று சொன்னதாக உங்களால் காட்ட முடியுமா?

நீங்கள் குறிப்புட்டுள்ள தளத்தில் உள்ள கட்டுரைகளில் காணப்ப் படும் பழைய பஞ்சாங்கமானது எத்தகைய கட்டங்களை எல்லாம் இந்து மதம் தாண்டி வந்துள்ளது என்பதை நாம் நினைவு படுத்திக் கொள்ளும் வண்ணமே இருக்கிறது, இந்து மதத்தை குறுக்கி அடைந்து விட முயன்றாலும் அதை எல்லாம் மீறி இந்து மதம் மேகங்களின் மறைப்பை மீறி வரும் சூரியனின் கிரகணங்களைப் போல உண்மைக் கருத்துக்களை மக்கள் அனைவரையும் அடைய வைக்கிறது.

இந்திய சமுதாயத்தில் மிச்ச சொச்சம் இருக்கும் வேறுபாட்டையும் நாங்கள் ஆன்மீகத்தின் மூலமாகவே களைவோம்.

மொத்தத்திலே இறந்த கால கஷ்டங்களின் நினைவில் மூழ்க்கிக் கிடப்பதை விட , நிகழ் கால நிகழ்வுகளின் மீதும், எதிர்கால திட்டங்களின் மீதும் மக்களுக்கு அதிக அக்கறை உண்டு. . கல்லறைகளை விட பூத்துக் குலுங்கும் நந்தவனம் மக்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாகும்.

உங்களுடைய கருத்துக்களையும் , தொடர்புகளையும் அப்படியே வெளி இட்டு இருக்கிறோம்!

இந்து மதம் விமர்சனங்களை அனுமதிக்கும் மதமாக உள்ளது. தன மீது எறியப் படும் கற்களை வைத்தே தனக்கு கோட்டையைக் கட்டிக் கொள்ளக் கூடியது இந்து மதமாகும். அதவே தான் நல்லிணக்கப் பாதையில் முன்னணியில் நிற்கும் இந்து மதமானது, உலகின் மிகப் பழமையான மதமாக இருந்தாலும் இன்றும் உயிர்த் துடிப்புடனும் வலிமையுடனும் உள்ள மதமாக உள்ளது.

thiruchchikkaaran SAID

//கருத்துக்கள் எல்லாம் நூறாண்டுகளுக்கு முன்னாள் இருந்த சாதீய வாதத்தில் முழுகிப் போனவர்கள் சொன்னதை!!! எத்தகைய கட்டங்களை எல்லாம் இந்து மதம் தாண்டி வந்துள்ளது //

THATHACHARIYAR SAID
//சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் வைத்தால் பகவான் பட்டென ஓடிப் போய் போய்விடுவார். விக்ரகம் வெறுங்கல்லாகி விடும். பரிகாரம் கும்பாபிஷேகம். அதாவது குடமுழுக்கு.//

தாத்தாச்சாரியாரின் கூற்றுப்படி இன்னும் கும்பாபிகேசங்கள் அதாவது குடமுழுக்கு தொடர்ந்து வருகின்றனவே? ஏன்?

எத்தகைய கட்டங்களை எல்லாம் இந்து மதம் தாண்டி வந்துள்ளது ?

கும்பாபிசேகம் என்பது கோவிலை புதிப்பிக்கும் செயலே. கோவிலில் செய்ய வேண்டிய மராமத்து பணிகள், கோபுரங்களுக்கு , சுவர்களுக்கும் வண்ணம் பூசுதல், இவற்றை எல்லாம் செய்த முடித்தவுடன் கோவில் புதுப்பொலிவு பெறுகிறது. அப்போது கும்பாபிசேகமும் செய்கிறார்கள். இதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

நீங்கள் சொல்வது போல சூத்திரன் என்றோ பஞ்சமன் என்றோ யாரும் இருப்பதாக நான் கருதவில்லை. அவர்கள் நுழைந்ததற்காக கும்பாபிசேகம் செய்தார்கள் என்பது அபாண்டமான பழியே. கும்பாபிசகத்துக்கு ஆயிரம் காரணங்களை அவரவர் மனம் விரும்பிய போக்கில் சொல்லலாம்.

நீங்கள் உங்கள் வீட்டை வெள்ளை அடைத்து புதுப்பிப்பது என்ன காரணமோ, அதே காரணம் தான் கோவிலின் கும்பாபிசேகமும்.

இன்னும் சில வருடங்கள் பெரும்பாலான இந்து கோவில்களில் அர்ச்சகர்கள பிராமணர் அல்லாதவராகவே இருப்பார்கள் என்றே நான் கருதுகிறேன். அப்போது இது போன்ற வாதங்கள் எல்லாம் அர்த்தமற்றவை ஆகி விடும்.

முதலில் கோவில்கள் எப்படி உருவாகின என்பதை புரிந்து கொள்ளுங்கள். சாமானியர்கள் சிறப்பான பக்தியை வெளிப்படுத்திய இடங்களே பெரும்பாலான கோவில் தளங்கள் ஆகி இருக்கின்றன. போகர் தனிமையில் தானே ஒரு முருகனுக்கு சிலையை உருவாக்கி அர்ப்பணிப்புடன் வழிபாடு செய்த இடமே, பழனி. கண்ணப்பர் வழிபட்ட சிவத் தலமே இன்று புகழ் பெற்ற காலஹஸ்தி கோவிலாகும்.

இப்படி சாமானியர்களின் நேர்மையான, எளிமையான அரப்பணிப்பு பக்தியே பின்னாளில் அந்த சிலைகளே பெரிய கோவில்களாக உருவெடுக்கின்றன.

இந்து மதத்தை பின் பற்றிய மக்கள், பல நூறு வருடங்களாக சாதீய சமுதாய முறையை பின்பற்றி வந்ததால் இந்து மதமும் இந்த சாதீய முறைக்கு உட்பட்டு பின்பற்றப் பட்டது. இந்தியாவில் சாதீயக் கட்டுப்பாடுகள் உடைவைதை பயன்படுத்தி இந்து மதமும் தன்னுடைய ஒளிக் கற்றைகளை அனைவரின் மீதும் பாய்ச்சி வருகிறது. எந்த இந்து மதத்தின் மீது சாதீயக் குற்றச் சாட்டு வலுவாக வைக்கப் பட்டதோ, அதே இந்து மதத்தின் முக்கியக் கோவில்களில் இன்று யாரும் சாதி வித்யாசம் பார்ப்பது இல்லை. இப்படி இந்து மதம் அதன் இயல்பின் படியே சுதந்திர மாக யாரும் தங்கள் கருத்துக்களை முன் வைக்கவும், அனைவரும் பங்கு பெரும் ஜனநாயக மதமாகவும் முழுமையாக மலர்ந்து வருகிறது.

ஒரு காலத்தில் எல்லோரும் கோவிலுக்கு போக அனுமதி இல்லாமல் இருந்தது. ஆனால் இன்றோ திருப்பதி பாலாஜி கோவிலுக்கோ, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கோ, சபரி மலைக்கோ, கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கோ யார் வேண்டுமானாலும் போகலாம். எல்லோரும் அருகருகே நின்று கடவுள் வழிபாடு செய்கின்றனர். தனக்கு அருகில் நின்று சாமி தரிசனம் செய்பவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்று கூட யாரும் நினைத்துக் கூடப் பார்ப்பது இல்லை. இடித்துப் பிடித்துக் கொண்டு செல்கிறார்கள. இவ்வாறாக இந்து மதம் சமத்துவ சமத்துவ பாதையில் வேகமாக முன்னேறுகிறது.

கணபதியின் புதிய பன்றி அவதாரம்..!

http://christianbrahmin.blogspot.com/2010/12/blog-post.html

சகோ. கிளாடி அவர்களே,

தளத்துக்கு வருகை தந்ததற்கு நன்றி,

இந்துக்கள் தங்களின் தெய்வங்கள் இகழப் படும்போது, அதையும் அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை என்கிற வகையிலே நடந்து கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக விநாயகர், கணபதி , கணேசன் என்றெல்லாம் இந்துக்கள் கடவுளாக கருதும் விநாயகரை இகழ்வதை சிலர் கடமை போல செய்து வருகின்றனர்.உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்றார் வள்ளுவர்.

ஒருவர் விலங்கு தோற்றத்துடன் இருப்பது தவறல்ல , விலங்கை விட கொடூரமான செயல்களில் ஈடுபடுவதான் தவறு. கடவுள் இனவாதத்தை ஆதரித்து, ஈவு இரக்கமில்லாமல் இனப் படுகொலைகளை திட்டமிட்டு நிறைவேற்றி , அவர்களின் இடங்களை ஆக்கிரமிக்க வழி செய்து கொடுத்ததாக ஒரு கோட்பாட்டை உருவாக்கி அதை எல்லோரும் ஒத்துக் கொள்ள செய்ய சகிப்புத் தன்மையை அழிக்கும் படிக்கான மத வெறியையும் உருவாக்கி பரப்பி விட்டனர். அத்தகைய கடவுள் கோட்பாடுகளோடு ஒப்பிடும் போது, விநாயகர் வழிபாடு யாரையும் வெறுக்க சொல்லவில்லை என்கிற வகையிலே எவ்வளவோ மேலானதாகவே நான் கருதுகிறேன்.

மத சகிப்புத் தன்மை இல்லாமல், பிற மத தெய்வங்களை முடிந்த வரை இகழ்ந்து நீங்கள் எழுதுவது எங்களுக்குப் புதிதல்ல. எனவே உங்களிடம் இருந்து இது போல பிற மத தெய்வங்களை இகழும் ஒரு கட்டுரை வராமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

உங்களின் கட்டுரை தலைப்பையும் தொடுப்பையும் மட்டுறுத்தாமல் வெளியிட்டு இருக்கிறோம்.

வணக்கம் தோழர்
//ஒருவர் விலங்கு தோற்றத்துடன் இருப்பது தவறல்ல , விலங்கை விட கொடூரமான செயல்களில் ஈடுபடுவதான் தவறு./

அருமை.

//மொத்தத்திலே இறந்த கால கஷ்டங்களின் நினைவில் மூழ்க்கிக் கிடப்பதை விட , நிகழ் கால நிகழ்வுகளின் மீதும், எதிர்கால திட்டங்களின் மீதும் மக்களுக்கு அதிக அக்கறை உண்டு. . கல்லறைகளை விட பூத்துக் குலுங்கும் நந்தவனம் மக்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாகும்.//

நன்று.வரலாற்றின் தவறுகளில் இருந்து நாம் கற்றுக் கொள்கிறோம்,அது எதிகாலத்தில் நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்வதே அறிவுடையோர் செயல்.

கடவுள் நம்பிக்கை இல்லை என்ற போதும் உங்கள் பல் கருத்துகளில் எனக்கு உடன்பாடு உண்டு.

தொடருங்கள்.

நன்றி திரு. தனராஜ் அவர்களே,

மத வெறியராக இருப்பதை விட கண்ணியமுள்ள நாத்தீகராக இருப்பது மேலானது என கருதலாம் .

கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்ற கேள்வி என் மனதின் ஆழத்தில் எப்போதும் உண்டு. எந்த ஒன்றையும் நாம் தெரிந்து கொண்டால் , உணர்ந்து கொண்டால் ஆதாரம் இருந்தால் திட்டவட்டமாக சொல்லலாம்.

அது வரையில் கடவுள் என்று ஒருவர் அல்லது கடவுள் என்ற ஒரு நிலை இருக்கக் கூடும் என்பதாக என்று வேண்டுமானால் சொல்லாம்.
அப்படி (கடவுள் என்ற) ஒன்று இருக்கவே முடியாது என்று திட்டவட்டமாக நாம் சொல்ல இயலாது என்று வேண்டுமானால் சொல்லாம்.

இப்படி யாருமே கண்டிராத, சரி பார்க்கக் கூடிய நிரூபணம் இல்லாத ஒன்றிற்காக (withot verifiable proof), நான் சொல்வதுதான் உண்மையான கடவுள், பிறர் வணங்கும் தெய்வங்களை, வழி பாட்டு முறைகளை கண்டித்து ஒழிக்க வேண்டும் என்று சகிப்புத் தன்மை இல்லாத மத வெறியுடன் செயல் பட்டு வாளை உருவியதால் இறந்தவர்களின் எண்ணிக்கை, இரண்டு உலகப் போர்களில் இறந்தவர்களை விட அதிகமாகும். இப்போதும் புதிய ஆயுதங்களுடன் ஆங்காங்கே சண்டையை தொடர்வது வருத்ததி தரும் விடயம் ஆகும்.

thiruchchikkaaran said

//நீங்கள் குறிப்புட்டுள்ள தளத்தில் உள்ள கட்டுரைகளில் காணப்ப் படும் பழைய பஞ்சாங்கமானது எத்தகைய கட்டங்களை எல்லாம் இந்து மதம் தாண்டி வந்துள்ளது என்பதை நாம் நினைவு படுத்திக் கொள்ளும் வண்ணமே இருக்கிறது,

இந்திய (இந்து?) சமுதாயத்தில் மிச்ச சொச்சம் இருக்கும் வேறுபாட்டையும் நாங்கள் ஆன்மீகத்தின் மூலமாகவே களைவோம். //

தொன்று தொட்டு இன்றுவரையிலும் (இனிமேலும் தொடர்ந்து)தாங்கள் கூறுகின்ற‌ பழைய பஞ்சாங்கப்படியே மந்திரங்கள் ஓதப்பட்டு தானே திருமணங்கள் அன்றாடம் நடக்கின்றன.

கல்யாண மேடையில் மட்டும் மணம‌கனுக்கு பூணூல் அணுவிக்கப்பட்டு மந்த்ரங்களை சொல்லச் செய்கிறார்களே?. ஏன் பிராமணல்லாதவர்கள் மந்திரம் உச்சரித்தால் பகவான் ஓடிவிடுவாரா?

சுட்டிகளை சொடுக்கி படித்து

1. பகுதி 43.உடலுறவு கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க ஆபாச திருமண மந்திரங்கள்.

2. பகுதி 42. நான் அவளோடு உடலுறவு கொள்ளும் பொழுது தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும். திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்

கல்யாண மந்திரங்களை புரிந்து கொண்டு பூணூல் அணிந்து மந்திரங்களை சொல்லி பழைய பஞ்சாங்கப்படியே திருமணம்?

…..

தொடர்ந்து பங்கு எடுப்பதற்கு நன்றி , திரு. தாத்தாச்சாரி அவர்களே,

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவன்றால் பூணூலை யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம். பூணூல் பிராமணர்கள் மட்டும் தான் அணிய வேண்டியது என்றில்லை. வட இந்தியாவிற்கு சென்றால் பலர் பூணூல் அணிந்திருப்பதை காணலாம்.

பூணூல் கட்டுப்பாட்டை நினைவு படுத்தும் அறிகுறியாக இருக்கும் பொருட்டு அமைந்ததாக உள்ளது.எனவே அதை அவசியம் என்று கருதுபவர் அணிந்து கொள்ளலாம். பூணூல் அவசியம் இல்லாமலே மனக் கட்டுப்பாடு கடைப் பிடிக்க இயல்பவர் பூணூல் அணிய வேண்டியதில்லை. இது பற்றி தனிக் கட்டுரை வெளியிடுவோம்.

மேலும் இந்து திருமணங்களில் சொல்லப் படும் பல மந்திரங்களை குறிப்பிட்டு அவை ஆபாசத் தன்மை உள்ளதாக சொல்லி இருக்கிறீர்கள்.

இந்து திருமணங்களில் முக்கியமானவை தாலி. அந்த தாலி இருவருக்கும் உள்ள வாழ்நாள் முழுமைக்குமான பிணைப்பை, அன்பை உறுதிப் படுத்துவதாக உள்ளது. அதைக் கட்டுவது பண்பாடு, அடையாளம், நினைவு எல்லாமும்மாக இருக்கிறது. அதை கட்டும்போது அந்தப் பெண்ணுக்கு அவன் உணர்த்துவது என்னவென்றால், இதன் மூலம் நீ என்னுடைய உயிராக நான் உன் அடையாளமாக உள்ளேன் என்பதை உணர்த்துவதாகும். நீ நூறாண்டு காலம் நலமாக வாழ்க என வாழ்த்துகிறான். இதையே மாங்கல்யம் தந்துனானே மம ஜீவனே ஹேதுனா என்ற மந்திரமாக சொல்லி உள்ளனர். அந்த மந்திரத்தை சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தாலியின் அர்த்தம், உணர்வு இதுதான் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இரண்டாவது அக்னியை சுற்றி ஏழு முறை வலம் வந்து இணை பிரியாமல் இருப்போம் என உறுதி எடுப்பதாகும்.

அக்னி என்பவர் மிகப் பெரிய சாட்சியாக இந்து மத நம்பிக்கைப் படி கருதப் படுகிறார். அதில் நம்பிக்கை உள்ளவர் அக்னியை வலம் வரலாம்.

மற்றவை எல்லாம் எத்தனையோ சடங்கு உள்ளன. அவை எல்லாம் அவரவர் விருப்பம். நலங்கு, தேங்காய் உருட்டுதல், ரிசப்சன், மெல்லிசை நிகழ்ச்சி, கச்சேரி …. என்பதெல்லாம் அவரவர் விருப்பம்.

அடுத்து வருவது முதல் இரவு. முதல் இரவு என்றால் பெண்கள் கொஞ்சம் நெர்வேசாக இருப்பார்கள் என்று கேள்விப் பட்டு இருக்கிறோம். ஆனால் இன்றைக்கு ஆண்களே முதல் இரவு என்றால் கொஞ்சம் நேர்வசாகி விடுவதாகவும் கேள்விப்படுகிறோம். இந்த விடயத்தில் அந்தக் காலத்தில் நேர்வசான ஆட்கள், கடவுளை வேண்டி உருவாக்கிய வேண்டுதல்களே இப்படி மந்திரங்களாக ஆகி விட்டன.

எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுவதை நாம் பெரிதாக குறை சொல்ல என்ன இருக்கிறது? . அந்தளவில் தன மனைவியோடு தான் ஒப்பி வாழ வேண்டும் என்று வேண்டுகிறான் என்ற அளவிலே அதில் என்ன சொல்ல இருக்கிறது. இதில் ஆபாசம் என்று சொல்ல என்ன இருக்கிறது.

இந்தியாவில் உள்ள எல்லோரின் வீட்டிலும் இரவிலே படுக்கை அறையில் நடப்பது ஆபாசமா அல்லது காதலா? நீங்கள் விரும்பிய பெயரை வைத்துக் கொள்ளுங்கள். ஆபாசமோ அல்லது காதலோ, அது சரியாக நடந்தால் தான் இல்லறம் சரியாக நடக்கும். மணமக்கள் இன்று போல என்றும் வாழ முடியும்.

காதல் அல்லது ஆபாசம் என்று நீங்கள் குறிப்பிடுவத ஒரு ஆண் சரிவர நடத்த இயலாவிட்டால் அவனுக்கும் வாழக்கை நரகம், அந்தப் பெண்ணுக்கு அதை விட துயரமான நரகம். காசு பணம் வேண்டுமென்றால் அடுத்தவர் கொடுக்கலாம். இந்த காதல் அல்லது ஆபாசத்தில் வேறு யாரும் உதவ முடியாது.

எனவே மொத்திலே எல்லா பெண்ணையும், மணமகனையும் முதல் இரவு அறைக்கு அனுப்பு முன் சாமி கும்பிட்டு விட்டு போக சொல்வது வழக்கமே. அவர்களை முதல் இரவு அறைக்குள் அனுப்பி விட்டு பெண்ணைப் பெற்றவர்களும், பையனைப் பெற்றவர்களும் எல்லாம் ஒழுங்காக நடக்க வேண்டுமே என்று ஆண்டவனை வேண்டிக் கொளவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

எனவே இதை எல்லாம் செய்வது, அதாவது முதலிரவுக்கு முன் சாமி கும்பிடுவது, மந்திரம் சொல்வது, பூ அலங்காரம், பழம் வைப்பது எல்லாம் மனிதர்கள் தாங்களாக வேண்டுவதுதான். இந்து மதம் நீ இப்படி வேண்டிக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை

மற்றபடி நீங்கள் வெற்மனே அந்த மந்திரம், இந்த மந்திரம் என்று பல மந்திரங்களை சொல்கிறீர்களே, அதை எல்லாம் யார் எழுதினார்கள், அவை எந்த வேதத்தின் எந்த பகுதியில் உள்ளன என்பதை குறிப்பிட்டு எழுதவில்லையே.

thiruchchikkaaran said .. //பூணூல் பிராமணர்கள் மட்டும் தான் அணிய வேண்டியது என்றில்லை.//

???? திருமணங்களிலும் திதிகளிலும் பூணூல் அணிவித்து மந்திரம் உச்சரிக்க செய்த புரோகித‌ன் ஏன் பூணூலை அப்புற‌ப்ப‌டுத்தி விடுகிறான்?

இந்து திருமணங்களில் முக்கியமானவை தாலி.
வந்தேறிக‌ளின் ம‌த‌ம் இந்தியாவில் நுழைவ‌த‌ற்கு முன்பே தாலி தமிழ‌ர்க‌ளின் கலாச்சார‌மாக இருந்துள்ள‌து.

thiruchchikkaaran said.. //இந்த விடயத்தில் அந்தக் காலத்தில் நேர்வசான ஆட்கள், கடவுளை வேண்டி உருவாக்கிய வேண்டுதல்களே இப்படி மந்திரங்களாக ஆகி விட்டன. எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுவதை நாம் பெரிதாக குறை சொல்ல என்ன இருக்கிறது? .இதில் ஆபாசம் என்று சொல்ல என்ன இருக்கிறது.//

பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது. நான் அவளை கட்டிப்பிடிப்பேன். (அவளோடு உறவு கொள்ளும் பொழுது) அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்தச்செய்யுமாறு… தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்.

இப்ப‌டியா பிரார்த்திக்க‌ வேண்டும்? எங்கே இதை ஒரு மேடையில் அல்ல‌து உங்க‌ள் குடும்ப‌த்தார்க‌ளிட‌ம் இந்த‌ ம‌ந்திர‌த்தை ப‌டித்து காட்டமுடியுமா?

thiruchchikkaaran said…
//மாங்கல்யம் தந்துனானே மம ஜீவனே ஹேதுனா என்ற மந்திரமாக சொல்லி உள்ளனர். மற்றபடி நீங்கள் வெற்மனே அந்த மந்திரம், இந்த மந்திரம் என்று பல மந்திரங்களை சொல்கிறீர்களே, அதை எல்லாம் யார் எழுதினார்கள், அவை எந்த வேதத்தின் எந்த பகுதியில் உள்ளன என்பதை குறிப்பிட்டு எழுதவில்லையே.//

மாங்கல்யம் தந்துனானே மம ஜீவனே ஹேதுனா ம‌ந்திர‌த்தை அங்கீகரித்து சுட்டிகாட்டும் தாங்களுக்கு ம‌ற்ற‌ ம‌ந்திர‌ங்க‌ள் கிடைக்க‌வில்லையா? ஐய‌ர்க‌ளிட‌ம் காசை நீட்டுங்க‌ள்.
==================
ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

பொருள் : ஸோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாவது கணவன் அக்நி. உன்னுடைய நான்காவது கணவன் தான் இந்த மனித ஜாதியில் பிறந்தவன்.

விளக்கம்: திருமணமாகப் போகும் மணப்பெண் முதலாவதாக ஸோமன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாகக் கந்தர்வன் என்பவனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்நிக்கு மனைவியாக இருந்திருக்கிறாள். நான்காவதாகத் தான் இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். அதாவது இதற்கு முன் மூன்று கடவுள்கள் இந்தப் பெண்ணை அனுபவித்து விட்டு விட்ட பின்பு தான் இப்பொழுது நான்காவதாக இந்த மணமகன் இவளை மனைவியாக ஏற்றுக் கொள்கிறான் என்பது விளக்கமாகும்.

இந்தப் பொருளைத் தரும் மேற்கண்ட மந்திரத்தைத் தான் புரோகிதப் பார்ப்பான் கலியாணத்தை நடத்தி வைக்கும் பொழுது சொல்கிறான்.

அதாவது கலியாணமான அந்த மணப் பெண்ணானவள் கந்தர்வன் என்னும் கடவுளோடு ஒரே படுக்கையில் படுத்திருக்கிறாளாம். அந்தப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்ட இந்த மணமகன் தன் மனைவியுடன் படுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் கந்தர்வன் என்னும் கடவுளிடத்தில் தன் மனைவியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமாய்க் கெஞ்சுகிறான் என்பதாகும்.

ஆதாரம்: விவாஹ மந்த்ராத்த போதினி.
ஆக்கியோர்: கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் பி.ஓ.எல்., (பக்கங்கள்:முறையே: 22-59)
.

அன்புக்குரிய திரு. தாத்தாச்சாரியார் அவர்களே,
உங்களுக்கு இந்து மதத்தை விமரிசிக்க வேண்டும் என்கிற துடிப்பு இருக்கிறது. ஆனால் சரியாக மேற்கோள் காட்டி விமரிசிக்கும் அளவு இந்து மத நூல்களை நீங்கள் அறிந்திருக்கவில்லை. இந்து மதத்தின் உணமையான வலிமை என்ன என்றும் உங்களுக்கு தெரியவில்லை. கீழாத்தூர் ஸ்ரீனிவாசாரியர் போட்ட புத்தகத்தில் இருக்கிறது என்கிறீர்கள். ரிக் வேதத்தில் இருக்கிறதா, யஜுர் வேதத்தில் இருக்கிறதா, பகவத் கீதையில் இருக்கிறதா…இந்த சுலோகம், இந்த வால்யூம், இந்த செய்யுள் என்று மேற்கோள் காட்டி எழுதினால் ஆதார பூர்வமாக இருக்கும்.

பூணூலை யார் வேண்டுமானாலும் அணியலாம், புரோகிதருக்கு கழட்ட உரிமை இல்லை. இது பற்றி கட்டுரை கட்டுரை வெளிவரும்.

நிலத்தை உழும் முன் நல்லேறு கட்டுதல் என்று பூசை போட்டு ஏர் கட்டி உழுவார்கள்.. கபடி விளையாடப் போகிறவன் மண்ணைத் தொட்டுக் கும்பிடுகிறான். எனவே எந்த செயலையும் செய்யமுன் அது விடயமாக இறைவனை வணங்க விரும்புகிறவர் வணங்கிக் கொள்ளலாம்.

கணவன் மனைவிக்குமான அந்தரங்க உறவு குடும்ப வாழ்க்கையில் முக்கியமானது. அதில் பிரச்சினை இருந்தால் குடும்ப வாழ்க்கை பாதிக்கப் படும். நீங்கள் திருமணம் ஆனவரா என்று தெரியவில்லை. கணவன் மனைவிக்குமான அந்தரங்க உறவை மேடை போட்டு செய்து காட்ட மாட்டார்கள், பேச மாட்டார்கள். அதை போலத் தான் அது சம்பந்தமான வேண்டுதலும், முதலிரவுக்கு சொல்லும் முன் தனிமையிலே வேண்டப் பட வேண்டியதுதான். இதில் உங்களுக்கு என்ன இவ்வளவு எரிச்சல் என்று தெரியவில்லை.

நான் முன்பே சொன்னது போல அக்னி சாட்சியாக ஏழு முறை வலம் வருவதோடு திருமணம் நிறைவடைகிறது. இது சட்டத்திலேயே இருக்கிறது. (Hindu Marriage act 1955- Section 7).
அதற்க்கு பிறகு சொல்லும் மந்திரங்கள் எல்லாம் எக்ஸ்டிராதான். மொய் வைப்பதை கூட புரோகிதர் ஓதி கொடுக்கிறார். நான் ஒரு நண்பர் வீட்டு திருமணத்துக்கு சென்ற போது அன்பளிப்பை கொடுத்து விட்டு “பதினாயிரம் கட்டி வராகன், வஸ்திரம் , புஷ்பம்” என்று புரோகிதர் சொல்லும் டோனிலேயே சொல்லிக் கொடுத்து விட்டேன். ‘நீங்களே சொல்லிட்டிங்களா’ என்றார்.

முக்கியமான மந்திரத்தை எல்லோரும் அவசர் கதியில் தவறான பொருளை சொல்லுகின்றனர்.

ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

. “நீ முதலில் சந்திரனால் பாதுக்காக்கப் பட்டாய் . பிறகு கந்தர்வனால் கவனிப்புடன் வளர்க்கப் பட்டாய்…. பிறகு உன்னைக் கவனிக்கும் பொறுப்பு மனிதனிடம் (என்னிடம்) வந்துள்ளது” என்பதே இதன் பொருள். “நீ முதலில் உன் தாயிடம் இருந்தாய், பிறகு உன் பாட்டி உன்னை கவனித்துக் கொண்டார். உன் தாய்க்கு உடல் நலம் இல்லாத போது உன் தந்தை உன்னை கவனித்துக் கொண்டார், இப்போது நீ என்னை வந்து அடைந்து இருக்கிறாய்” என்று மனைவியிடம் சொன்னால் அதற்க்கு அர்த்தம் அந்தப் பெண் அதற்க்கு முன் தாய் பாட்டி….உட்பட அனைவருடனும் உறவு வைத்தவள் என்று அர்த்தம் இல்லை.

உண்மையான அர்த்தம் என்ன என்று ஓர் நிமிடம் கூட சிந்திக்காமல் , இது இப்படிதான் என்று அவசர கதியிலே விளக்கம் தருகின்றனர் சிலர். சந்திரன் உன்னுடன் உடல் உறவு வைத்தான் என்றோ, படுத்தான் என்றோ எழுதி இருக்கிறதா? சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

அந்தப் பெண் கன்னிகாதானம் செய்து கொடுக்கப் படுகிறாள் என்று சொல்லியுள்ளது. உங்களின் விளக்கப் படி சந்திரனும், சோமனும் அனுபவித்த பெண் எப்படி கன்னியாக இருக்க முடியும்? யாரோ தவறாக அர்த்தம் சொல்லி கொடுத்து இருக்கின்றனர். அதை அப்படியே எடுத்து வந்து இங்கே எழுதுகிறீர்கள்.

அடுத்து வந்தேறிகள் என்று நீங்கள் சொல்வது யாரை? தெளிவாக சொன்னால் பதில் கொடுக்க வசதியாக இருக்கும்.

இன்னொரு மந்த்ரம். இன்றும்… அம்மாவுக்கு சிரார்த்தம், திவசம், திதி செய்கிறேன் என ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் பவ்யமாய் கடமைகளை நிறைவேற்றும் மகன்களை நாம் பார்ர்க்கிறோம்.

ஒரு வாத்யாரை பணம் கொடுத்து அமர்த்தி… அவர் மூலமாக, தன்னை விட்டுப் பிரிந்த தன் தாய்க்கு வருஷாவருஷம் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் அந்த மகன்கள் இதன் வாயிலாக அம்மாவின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பரிபூரணமாக பெறுவதாக நம்பிக்கையோடு செய்கிறார்கள்.

ஆனால்…? “என்மே மாதா ப்ரலுலோபசரதிஅனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்…”

நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்பவேண்டியுள்ளது.

ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டுபோய் சேர்ப்பீர்.

இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை, வாத்தியர் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.

இந்த அர்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?

இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

click and read

மகன்கள் தன்தாயையே கொச்சைப்படுத்தும் திதிமந்திரம்..
.

தொடர்ந்த பங்க்கேடுப்பிற்கு நன்றி திரு. தாத்தாச்சாரியார் அவர்களே,

நீங்கள் சொல்லும் படிக்கான மந்திரங்களை நான் கேட்டதில்லை. யாருக்கு மகன் இல்லையோ, (அதாவது அவர்களுக்கு திதிகொடுத்து நீர்க் கடன் செலுத்த மகன் இல்லாததால்) அவர்களக்கும் நான் செலுத்தும் கடனாக இருக்கட்டும் என்கிற அர்த்தத்திலான சுலோகங்களை கேட்டு இருக்கிறோம். இப்படி இன்னொரு வரை தன அன்னையாக கருதும் மந்திரங்களே அநேகம்.

இந்த அப்பா யாராக இருந்தாலும் டைப் மந்திரங்கள் மந்திரங்கள் எல்லாம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப உருவாக்கிக் கொண்டவை. அதற்க்கு இந்து மதம் எதுவும் செய்ய இயலாது. அப்படி ஒரு பெண்ணை ஏமாற்றி பிள்ளையை கொடுத்து விட்டு போனவன் எவனாக இருந்தாலும், அவனுக்கு திவசம், நீர்க்கடன் ஒரு கேடா?

அப்படி ஏமாற்றி பிள்ளையைக் கொடுத்து ஓடிப் போனவன் திவசத்தின் போது வருவதாக வைத்துக் கொண்டாலும் (அது நம்பிக்கை), அவன் யோக்கியதைக்கு அவனை செருப்பாலே அடிக்க வேண்டுமே தவிர அவனுக்கு நீர்க் கடன் செய்ய வேண்டியதுமில்லை, எள்ளும் தண்ணியும் இறைக்க வேண்டியதுமில்லை.

நீங்கள் சுட்டிக்காட்டும் திவச மந்திரங்கள் எல்லாம் எல்லாம் 99.9% இந்துக்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒன்றாகவே உள்ளது.

இந்துக்கள் சடங்கு வழிமுறையை ஏற கட்டி இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகி விட்டது.

இந்துக்கள் சடங்கு வழிபாட்டில் இருந்து பக்தி வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி செய்தவர்களில் முக்கியமானவர் சங்கராச்சாரியார் (ஆதி சங்கரர்). “நஹி நஹி ரக்ஷதி டுக்ருங் கரனே” – மந்திரங்களை உச்சரிப்பதால் காத்துக் கொள்ள முடியாது, “பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்” என்று பாடி விட்டார். இன்றைக்கு பிராமணர்களிலேயே பெரும்பாலானவர்கள் பக்தி வழி பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து சடங்குகளை செய்வதைக் குறைத்துக் கொண்டு வருகின்றனர், அல்லது விட்டு விட்டனர்.

எனவே உங்கள் கட்டுரைகளில் பெரும்பாலானவை இடையிலே வந்து இடையிலே போய் விட்ட மந்திரங்களை பற்றியதாக உள்ளது.எனவே இவற்றை படிக்கும் எல்லா இந்துக்களும் தாங்களின் அமைதியான வழிபாட்டிற்கும் இவற்றுக்கும் சமபந்தம் இல்லை என்பதை புரிந்த வண்ணமே உள்ளனர்.
உலகிலே பிற மதங்களை வெறுக்க சொல்லாத மதமாக இந்து மதம் உள்ளது. , பிற மதங்களை சகிப்புத் தன்மையுடன் அணுக சொல்லும் மதமாக இந்து மதம் உள்ளது. எல்லா மதங்களையும் நல்லிணக்கப் பாதையில் இணைப்பதில் முன்னணியில் செல்வதாக இந்து மதம் உள்ளது.

நீங்கள் உபநிடதங்களில் சொல்லப் பட்டதையோ, கீதையில் சொல்லப் பட்டு இருப்பதையோ, வேதங்களில் சொல்லப் பட்டு இருப்பதையோ மேற்கோள் காட்டினால் அதை ஆராயலாம். யார் யாரோ எழுதி இடையிலே சேர்த்து விட்டதற்கு எல்லாம் இந்து மதம் பொறுப்பாக முடியாது. இந்துக்கள் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்

thiruchchikkaaran said..//“நீ முதலில் சந்திரனால் பாதுக்காக்கப் பட்டாய் . பிறகு கந்தர்வனால் கவனிப்புடன் வளர்க்கப் பட்டாய்…. பிறகு உன்னைக் கவனிக்கும் பொறுப்பு மனிதனிடம் (என்னிடம்) வந்துள்ளது” என்பதே இதன் பொருள்.//

ஐயா திருச்சிக்காரரே , மேற்கண்டவாறு கல்யாண மந்திரதுக்கு அர்த்தம் தந்துள்ள தாங்கள், அதையே திரும்ப திரும்ப படியுங்கள். சந்திரனிலே பூலோகத்து மனிதர்கள் கால் பதித்து, குடியேற இருக்கும் கால கட்டத்தில், அந்த அர்த்தத்தின் படியே கல்யாண சந்தர்ப்பத்துக்கோ அல்லது வேறு எந்த சூழ்நிலைக்கோ பொருத்தமாக நம்பக்கூடியதாக உள்ளதா?

சந்திரனுக்கும் கந்தர்வனுக்கும் பெண்களை மட்டும் பாதுகாத்து வளர்க்கும் கடமையோ? ஆண்களை வளர்க்க பாதுகாக்க யார் யார் இருக்கிறார்கள் என விளக்கும் மந்திரம் எது? கூறுவீர்களா?
….

அன்புக்குரிய தாத்தாச்சாரியார் அவர்களே, உங்களின் கேள்விக்கு நன்றி.

மனிதன் சந்திரனில் கால் பதித்து விட்டான். ஆனால் தான் சாகாமல் இருக்கவோ, வயதாகாமல் இருக்கவோ, நோய் வராமல் இருக்கவோ, இன்ன பிற சொல்லொணா துயரங்களில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவோ என்ன வழி என்பதை அறிவியல் பூர்வமாக கணடறிந்து விட்டால் ஆணடவனுக்கு அவசியமே இல்லை.

ஆனால் இன்றல்ல நேற்றல்ல பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னே பகுத்தறிவின் அடிப்படையில் தனக்கு இத்தனை துயரம் வரக் காரணம் என்ன என்று ஆராயத்தான் காட்டிலே போய் மனக் குவிப்பு செய்து ஆராய்ந்து இருக்கிறான்.

சிறு வயதில் . தன்னுடைய தாய் தன்னைக் காப்பாள், பசி தீர்ர்ப்பாள் என தாயை முழுதும் சார்ந்து இருக்கிறான், பொம்மைகளை வைத்து விளையாடுவதில் ஆர்வம் காட்டுகிறான், இன்பம் அடைகிறான் .

வாலிப வயதில் பெண்களிடம் இன்பம் தேடுகிறேன். தன்னைத் தானே காத்துக் கொள்ள முடியும் என நம்புகிறான்.

வயது முதிர்ந்த பின் இனி என்ன செய்வது என்று கவலை சிந்தையில் மூழ்குகிறான்.

இவ்வாறாக வெவேறு கால கட்டங்களில் அவனது நிலை மாறுபடுகிறது. பாதுகாப்புக்கான காரணிகளும் , இன்பத்துக்கான காரணங்களும் வேறுபடுகின்றன. இடை இடையே சில பல துன்பங்களை பெரும் அவன் , கடைசியில் தான் சேர்த்து வைத்த சொத்து பத்து, சொந்த, பந்தம், நண்பர் அனைவரையும் விட்டு அம்போ என்று பிரிகிறான்.

மனித உடல் இறந்த பின் உயிர் என்ற ஒன்று தொடர்ந்து இருக்கிறதா என்பது ட்ரில்லியன் டாலர் கேள்வி. அது அவரவர் செத்த பின் தான் , அப்போது உயிர் என்ற ஒன்று தொடர்ந்து வாழ்கிறதா என்று தெரியும்- அதாவது உயிர் என்ற ஒன்று தனியாக இருந்தால்.

ஒரு கடத்தியில் மின்னோட்டம் இருக்கிறதா என்பதையும், மின்னோட்டம் இல்லை என்பதையும் அறிவியலால் உறுதி செய்ய இயலும். அந்தக் கடத்தியை விட்டு மின்னோட்டமானது மின் காந்த அலையாக வெளியேறுகிறதா என்பதயும் அப்படி இல்லை என்றால், மின் காந்த அலை உருவாகவில்லை, வெளியேறவில்லை, என்பதையும் உறுதி செய்ய அறிவியலால் முடியும். ஆனால் மனிதன் இறந்த பின் அவன் உடலில் அது வரை செயல் பட்டு வந்த உயிர் என்ற ஒன்று நிச்சயமாக உடலுடன் அழிந்து விட்டது என்பதை அறிவியல் இது வரை உறுதி செய்ய வில்லை. அந்த உடலில் உயிர் இல்லை என்பதை வேண்டுமானால் அறிவியல் தெளிவாக்கி உள்ளது என்று சொல்லலாம்.

இதை சொல்வதால் உயிர் தொடர்ந்து வாழ்கிறது என்று நான் நம்புவதாக என்ன வேண்டாம். இது ஒரு முக்கிய ஆராய்ச்சிக்குரிய விடயம் என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

உயிர் தொடர்ந்து வாழ்ந்தாலும், வாழாவிட்டாலும், ஒருவன் கடவுளை நம்பினாலும், நம்பாவிட்டாலும் இந்த உலகத்திலே பல்வேறு இன்னல்களை அவன் சந்திப்பது தெளிவு. எவ்வளவு அறிவியல் சாதனக்களை உபயோகப் படுத்தினாலும் தன்னை காத்துக் கொள்ள இயலாமல், இயற்கையின் கையில் சிக்கித் தவிக்கும் அடிமையாகவே இருக்கிறோம் நாம் அனைவரும். இந்த அடிமை நிலை என்பது நம்முடைய மனதை பொறுத்ததே. பள்ளிப் பருவத்தில் ஆசிரியரின் செயல் பாட்டால் பாதிப்பு . வாலிபன் ஆனதும் தன்னுடைய மேலதிகாரியின் செயல் பாட்டால் பாதிப்பு, வணிகம் செய்பவனுக்கு அரசியல்வாதியால் பாதிப்பு.

இந்த நிலையில் இருந்து நம் மனதை உயர்த்தி இந்த நிலையில் இருந்து நம் மனதை உயர்த்தி பாதிப்பற்ற மனநிலைக்கு, இடுக்கண் வருங்கால் நகுக என்கிற மன நிலைக்கு ஒருவனை உயர்த்துவது எதுவோ அதுவோ, இந்திய சிந்தனையில் ஆன்மீகம் எனப் படுகிறது.

சித்தர்கள், கபிலர், வியாசர், புத்தர், சங்கரர், விவேகானந்தர், பட்டினத்தார, அப்பர்…. இப்படிப் பல சிந்தனையாளர்கள் தங்களின் மன நிலையை உயர்த்தும் செயலில் ஈடுபட்டவர்கள்.

இது பகுத்தறிவு அடிப்படையிலான ஆன்மீகம். இந்து மதம் இதை முக்கியமாக முன் வைக்கிறது. முதலில் குழந்தையாகவும், சிறுவனாகவும், பின்னர் வாலிபனாக, முதியவனாக உன்னை நீ எண்ணிக் கொள்ளும் போது, உண்மையிலே உன் உயிர் அளவற்ற சக்தி படைத்த அழிவற்ற ஒன்று என அது சொல்லுகிறது. இதை அப்படியே நம்ப வேண்டாம், உன்னுடைய மன நிலையை உயர்த்த முடியுமா, துயரங்கள் தாக்காத நிலையை நீ எட்ட முடியுமா, உன் மகத்தான் உண்மை நிலையை நீ உணர முடியுமா என்று நீயே முயற்ச்சி செய்து , சோதனை செய்து பார்த்து, விளைவுகளை நீயே தெரிந்து கொள்ளலாம் என்று சொல்லி விடுகிறது. இது பகுத்தறிவுக்கு ஒப்பே. முயற்சி செய்து உண்மையை தாமே உணர்ந்த பின் முடிவு செய்து கொள்ளலாம், வெறுமனே நம்பிக்கை அடிப்படையிலே சாட்சி கொடுக்க வேண்டியதில்லை.

ஆனால் எனக்கு ஏன் துன்பங்கள் வர வேண்டும், உயிர் பல முறை பிறந்து இருப்பதாகவும், ஒவ்வொரு முறையும் அது தன் மகிழ்ச்சிக்காக, விருப்பத்தின் பேரில் செய்யும் பல காரியங்கள் பிறருக்கு நன்மை, தீமையை தருவனவாக உள்ளது. அந்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப அதன் பலாபலன்களை ஒருவன் அனுபவிப்பதாக இந்து மதம் தன் கோட்பாட்டை வைக்கிறது. (ஆசை வலையில் சிக்கியே உயிர் பல பிறவிகள் எடுப்பதாகவும், ஆசையை விட்டு , துன்பங்களில் இருந்து விடுபட்ட நிலையை அடையாளம் என்றே புத்த சமண மதங்களும் சொல்லுகின்றன. யூத, கிறித்தவ, இஸ்லாமியக் கோட்பாடுகளோ, ஒரு பிறவி தான், கடவுளுக்கு தன விருப்பம் போல ஒருவரை குருடராகவோ, முடமாகவோ, ஏழையாகவோ, செல்வா சீமானாக்வோ படைக்க உரிமை உண்டு, ஏன் ஒருவரை குருடராக படைத்தாய் என்று கேள்வி எல்லாம் கடவுளிடம் கேட்க முடியாது என்கிற கடவுளுக்கு முழு உரிமை, முழு கீழ்படிதல் நிலையை எடுத்து வைக்கின்றன. )

இப்படி ஒரு மனிதன் தன்னுடைய செயல்களுக்கு ஏற்ப நன்மை தீமையை அனுபவிக்கும் கால கட்டம் கிரகங்களின் போக்கை அனுசரித்தது இருப்பதாக இந்துக்கள் கருதுகின்றனர். ஆண் பெண் அனைவருமே பல்வேறு கிரகங்களின் நேரக் கணிதப் படியே தங்களின் வூழ் வினைக்கேற்ற பலன்கள் தம்மை வந்தடையும் காலம் எனக் கருதுகின்றனர். எனவே சோமன், குரு, சனி உள்ளிட்ட பல்வேறு கிரகங்களுக்கான தேவர்களின் தாக்கத்தாலே பெண்கள் மட்டும் அல்ல ஆண்களின் வாழ்வும் அமைவதாக நம்புகின்றனர்.

இதிலே பகுத்தறிவு அடிப்படையிலே தங்களை மன வலிமை பெறுவதில் வெற்றி பெற்ற ஆன்மீக வாதிகள் கிரகங்களை உதாசீனப் படுத்துகின்றனர்.

“நாளென் செயும் , வினை தான் என் செயும், எனை நாடி வந்த கோள் என் செயும்” என்கிறார் அருணகிரியார்.

“கிரக பலமேதி” என்கிறார் சத்குரு தியாகராஜர்.

“நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்” என்றார் அப்பர்.

சுவாமி விவேகானந்தர், “உங்களுக்கு சோதிடம் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் நல்ல ஆரோக்கியமான உணவை உண்டு, நன்கு ஓய்வு எடுங்கள்” என்கிறார் .

இவ்வாறு இந்து மதத்தின் கோட்பாடாக உள்ளவற்றை நாம் சொல்லுகிறோம். இதிலே சோமன், குரு … உள்ளிட்ட தேவர்கள் இருகிறார்களா, அவர்கள் மூவ்மெண்ட்டுகள் மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறதா என்பதற்கு எல்லாம் நான் அப்ரூவலோ, சாட்சியோ குடுக்க முடியாது.

என்னுடைய முறை பகுத்தறிவு அடிப்படையில் ஒருவன் தன மன நிலையை உயர்த்தி அடுத்தவருக்கு தீங்கு விளைவிக்காத , பிறரை சினேக பாவத்துடன் அன்பு செய்யும் நிலையை அடைவதுதான்.

ஐயா திருச்சிக்காரரே, இதற்கு நேரடியான பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.

thiruchchikkaaran said..//“நீ முதலில் சந்திரனால் பாதுக்காக்கப் பட்டாய் . பிறகு கந்தர்வனால் கவனிப்புடன் வளர்க்கப் பட்டாய்…. பிறகு உன்னைக் கவனிக்கும் பொறுப்பு மனிதனிடம் (என்னிடம்) வந்துள்ளது” என்பதே இதன் பொருள்.//

ஐயா திருச்சிக்காரரே , மேற்கண்டவாறு கல்யாண மந்திரதுக்கு அர்த்தம் தந்துள்ள தாங்கள், அதையே திரும்ப திரும்ப படியுங்கள். சந்திரனிலே பூலோகத்து மனிதர்கள் கால் பதித்து, குடியேற இருக்கும் கால கட்டத்தில், அந்த அர்த்தத்தின் படியே கல்யாண சந்தர்ப்பத்துக்கோ அல்லது வேறு எந்த சூழ்நிலைக்கோ பொருத்தமாக நம்பக்கூடியதாக உள்ளதா?

சந்திரனுக்கும் கந்தர்வனுக்கும் பெண்களை மட்டும் பாதுகாத்து வளர்க்கும் கடமையோ? ஆண்களை வளர்க்க பாதுகாக்க யார் யார் இருக்கிறார்கள் என விளக்கும் மந்திரம் எது? கூறுவீர்களா?

ஐயா திருச்சிக்காரரே, இதற்கு நேரடியான பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.

.

நேரடியான பதிலை எழுதி இருக்கிறேன்.

குரு, சனி உள்ளிட்ட தேவர்களின் போக்குவரத்து ஆண்களையும் பாதிப்பதாக தானே, குறிப்பாக் ஆண்கள் தான் இதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். இது உங்களுக்கு தெரியாதா குரு பெயற்சி பலன்கள் என்று எல்லாம் பல புத்தங்கங்கள் கடைகளில் தொங்க விடப் பட்டுள்ளனவே.

அவை பெண்களுக்கு மட்டும் என்றா சொல்லுகின்றன?

thiruchchikkaaran said…..
//நேரடியான பதிலை எழுதி இருக்கிறேன்.//

உங்களுடைய பதில் கைதேர்ந்த ….. பதிலாக இருக்கிறது என்பதை வாசகர்கள் உணர்வார்கள்.. பூனை கண்ணை மூடிக்கொண்டால் ?
…..

கருத்துக்களை முன் வைத்து இவ்வளவு நேரம் விவாதம் நடத்தி வந்தீர்கள், பாராட்டுகிறேன். இப்போது சாபம் குடுக்க ஆரம்பித்து விட்டீர்கள் போல உள்ளதே.

thiruchchikkaaran said..//நீங்கள் சொல்லும் படிக்கான மந்திரங்களை நான் கேட்டதில்லை.//

//நீங்கள் உபநிடதங்களில் சொல்லப் பட்டதையோ, கீதையில் சொல்லப் பட்டு இருப்பதையோ, வேதங்களில் சொல்லப் பட்டு இருப்பதையோ மேற்கோள் காட்டினால் அதை ஆராயலாம். //

1.மாங்கல்யம் தந்துனானே மம ஜீவனே ஹேதுனா
2.ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

மேல்கண்ட ம‌ந்திர‌ங்க‌ளை எங்கு படித்து கேட்டு தாங்க‌ள் அங்கீகரித்து அவைக‌ளுக்கு தாங்க‌ள் ஒரு தனி விள‌க்க‌மும் தருகிறீர்களோ அங்கேயே தான் நான் சுட்டிக்காட்டும் மந்திரங்களும் உள்ளன.

thiruchchikkaaran said..//அவனுக்கு நீர்க் கடன் செய்ய வேண்டியதுமில்லை, எள்ளும் தண்ணியும் இறைக்க வேண்டியதுமில்லை.//

1.மாங்கல்யம் தந்துனானே மம ஜீவனே ஹேதுனா
2.ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

உள்ள‌ வேதத்தில் கூறப்பட்டுள்ள திதி மந்திரத்தில் அர்ததம் புரிந்து விட்டதனால் தாயை இழிவுபடுத்தும் பகுதியை மட்டும் புறக்கணித்து செத்த‌வனுக்கு நீர்க்க‌ட‌னும் செய்த‌லும் எள்ளும் த‌ண்ணீரும் இறைப்ப‌வ‌ர்க‌ள் எத்த‌னை ச‌த‌விகித‌ம்?

செத்த‌வனுக்கு நீர்க்க‌ட‌னும் செய்த‌லும் எள்ளும் த‌ண்ணீரும் இறைப்ப‌த‌ன் நோக்க‌ம்? இது மட்டும் எப்படி “இந்துக்களுக்கு சம்பந்தம்”? விள‌க்குவீர்க‌ளா?

thiruchchikkaaransaid said… //நீங்கள் சுட்டிக்காட்டும் திவச மந்திரங்கள் எல்லாம் எல்லாம் 99.9% இந்துக்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒன்றாகவே உள்ளது.//

திதி மந்திரம் தாயை மகன்கள் வாயால் கொச்சைப் படுத்துகிறது. தகப்பனை அல்ல. தாங்கள் குழப்பத்துடன் இருக்கிறிர்கள்.

ஐயா திருச்சிக்கார‌ரே, மீண்டும் படியுங்கள்.
click and read
மகன்கள் தன்தாயையே கொச்சைப்படுத்தும் திதிமந்திரம்.

thiruchchikkaaran said … //இந்துக்கள் சடங்கு வழிமுறையை ஏற கட்டி இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாகி விட்டது.//

அன்று தொட்டு இன்றும் ந‌ட‌ப்பிலிருக்கும் ஆணும் பெண்ணும் இணைந்திருக்கும் அங்க‌ங்க‌ளை உருவ‌க‌ப்ப‌டுத்தி காட்டும் “லிங்க‌ வ‌ழிபாடு” தொட‌ங்கி எத்த‌னை வ‌ருட‌மாகிற‌து?

ஐயா திருச்சிக்கார‌ரே, காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய, இந்து பெரியார் கண்ணியத்துக்குரிய ராமானுஜரின் வழித்தோன்றல் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்னும் வைணவப் பெரியாரின் (ஒரு இந்து மதப் பார்ப்பனர்)
CLICK AND READ

இந்து ம‌த‌ம் எங்கே போகிற‌து?

முத‌ல் பாக‌த்திலிருந்து தொட‌ர்ந்து ப‌டித்து வாருங்க‌ள். ச‌க‌ல‌ விளக்க‌ங்க‌ளும் கிடைத்துவிடும்.

வாழ்க‌ வ‌ள‌முட‌ன்.
………

//திதி மந்திரம் தாயை மகன்கள் வாயால் கொச்சைப் படுத்துகிறது. தகப்பனை அல்ல. தாங்கள் குழப்பத்துடன் இருக்கிறிர்கள்.//
நான் அது போன்ற மந்திரத்தை கேட்டது இல்லை ஐயா. வெவேறு பிரிவினர் வெவ்வேறு. வகையான மந்திரங்களை சொல்கின்றனர். வட இந்தியாவிலே திருமண மந்திரங்களும், முறைகளும் வேறாக உள்ளன. தெலுங்கு பேசுவோர் செய்யும் முறைகளும் வேறானவை . தமிழ் நாட்டிலும் பல்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் , திதி கொடுப்பது கூட பல வகையாக செய்யப் பட்டு, பல வேறான மந்திரங்களை சொல்கின்றனர்.

எனவே இந்த குறிப்பிட்ட வகையான பொருளை மந்திரமாக சொல்வதற்கு அந்த புரோகிதரே பொறுப்பாவார்.

சில புரோகிதர்கள் முக்கியமான மந்திரங்களை சொல்லும் போது அர்த்தமும் சொல்லுகின்றனர். திதி, திருமணம் உட்பட எல்லா நிகழ்ச்சிகளிலும் மந்திரங்களையும் சொல்லிக் கொடுக்கும் போது அதன் அர்த்தத்தையும் சொல்ல வேண்டும் என்று நீங்கள் சொனால் அதை நான் வரவேற்கிறேன். அந்த வகையில் உங்களின் கருத்து சரியே. அந்த மந்திரத்தின் பொருள் தெரிந்த பின் அவரவர் விரும்பினால் சொல்லட்டும். விரும்பாவிட்டால் சொல்ல வேண்டியதில்லை.

//திதி மந்திரம் தாயை மகன்கள் வாயால் கொச்சைப் படுத்துகிறது. தகப்பனை அல்ல. தாங்கள் குழப்பத்துடன் இருக்கிறிர்கள்.//

தாயை விட தந்தைக்கு குற்றம் அதிகமாக உள்ளது போல இருக்கிறதே, பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து விட்டு போகும் ஆண்களும் இருக்கிறார்களே. சில தமிழ்ப் படங்கள் கூட அந்தக் கருத்தை மையமாக வைத்து உள்ளன. யாரால் கற்பழிக்கப் பட்டோம் என்றே அந்தப் பெண்ணுக்கு தெரியாத நிலை கூட உண்டு. எனவே நீங்கள் வேறு சில பெரியவர்களிடமும் நன்கு விசாரித்து அதற்க்கு ஏதாவது மந்திரம் இருக்கிறதா என்றும் கேட்கலாமே. நீங்கள் கேட்டவுடன் அதற்கும் ஒரு மந்திரம் தயார் பண்ணிக் கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.

//முத‌ல் பாக‌த்திலிருந்து தொட‌ர்ந்து ப‌டித்து வாருங்க‌ள். ச‌க‌ல‌ விளக்க‌ங்க‌ளும் கிடைத்துவிடும்.//

இந்து மதக் கருத்துக்களை என் வாழக்கையின் மூலமே புரிந்து கொள்கிறேன். வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம் இந்து மத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது. ஒவ்வொரு இந்துவிடம் இருந்தும் இந்துமதத்தைப் பற்றி கற்றுக் கொள்கிறேன். நான் இந்து மதத்தை உபநிடதங்கள், கீதை ஆகியவற்றின் மூலமாக கற்கிறேன். நீங்கள் கூறும் தளக் கட்டுரைகளைப் படிக்கும் போது , இறந்து போன வழக்கங்களையும், இடை சொருகலான சுலோகங்களையும் வைத்துக் கொண்டு எப்படியாவது இந்து மதம் சரியில்லாதது என்று காண்பிக்க முயல்வது போலத் தோன்றுகிறது. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் தளத்தைப் படிப்பேன்.

//காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய, இந்து பெரியார் கண்ணியத்துக்குரிய ராமானுஜரின் வழித்தோன்றல் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்னும் வைணவப் பெரியாரின் (ஒரு இந்து மதப் பார்ப்பனர்)//

நல்லது ஐயா , அவர்கள கண்ணியத்துக்குரியவர்களாகவே இருக்கட்டும். ஆனால் இந்து மதத்திற்கு அத்தாரிட்டி என்று யாரையும் அவ்வளவு எளிதில் சொல்ல முடியாதுசொல்ல முடியாது. இந்து மதத்திற்கு அத்தாரிட்டி உண்மைதான். உண்மையே வெல்லும், சத்யம் ஏவ ஜெயதே என்று முண்டக உபநிசத்திலே சொல்லப் பட்டு உள்ளது. உண்மைகளின் தொகுப்பாக கருதப் படும் உபநிடதங்கள் , கீதை உள்ளிட்ட ஸ்ருதி என்று அழைக்கப் படுபவையே இந்து மதத்தின் அத்தாரிட்டி. எந்த ஒரு தனி மனிதரும் இந்து மதத்தின் அத்தாரிட்டி என சொல்லவோ, கருதவோ இயலாது, அவர்கள நீங்கள் சொல்வது போல பார்ப்பனர்கள் என்ற அழைக்கப் படுபவராக இருந்தாலும் சரி, வேறு பிரிவை சேர்ந்தவராக இருந்தாலும் சரி.

//வாழ்க‌ வ‌ள‌முட‌ன்.
//
நன்றி

thiruchchikkaaran said.. முக்கியமான மந்திரத்தை எல்லோரும் அவசர் கதியில் தவறான பொருளை சொல்லுகின்றனர்.

ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:
.
“நீ முதலில் சந்திரனால் பாதுக்காக்கப் பட்டாய் . பிறகு கந்தர்வனால் கவனிப்புடன் வளர்க்கப் பட்டாய்….

பிறகு உன்னைக் கவனிக்கும் பொறுப்பு மனிதனிடம் (என்னிடம்) வந்துள்ளது” என்பதே இதன் பொருள். “நீ முதலில் உன் தாயிடம் இருந்தாய், பிறகு உன் பாட்டி உன்னை கவனித்துக் கொண்டார்.

உன் தாய்க்கு உடல் நலம் இல்லாத போது உன் தந்தை உன்னை கவனித்துக் கொண்டார், இப்போது நீ என்னை வந்து அடைந்து இருக்கிறாய்” என்று மனைவியிடம் சொன்னால் அதற்க்கு அர்த்தம் அந்தப் பெண் அதற்க்கு முன் தாய் பாட்டி….உட்பட அனைவருடனும் உறவு வைத்தவள் என்று அர்த்தம் இல்லை.//

பிறப்பிற்கு முன்னே பாட்டியை தந்தையை இழ‌ந்த பெண்களுக்கும் பிற‌ந்த உடனே தாயை இழந்த பெண்களுக்கும் எல்லா பெண்களின் திருமணத்தில் உச்சரிக்கப்படும் இந்த முக்கியமான மந்திரம் எப்படி பொருந்தும்?

thiruchchikkaaran said..//“நீ முதலில் சந்திரனால் பாதுக்காக்கப் பட்டாய் . பிறகு கந்தர்வனால் கவனிப்புடன் வளர்க்கப் பட்டாய்….

பிறகு உன்னைக் கவனிக்கும் பொறுப்பு மனிதனிடம் (என்னிடம்) வந்துள்ளது” என்பதே இதன் பொருள்.//

என்று மந்திரம் சொல்லி கவனிக்கும் பொறுப்பை பெறும் மனிதன், எடுத்த‌வுட‌ன் அப்பெண்ணை எப்ப‌டி “க‌வனிக்கிறான்”? அறிவீர்க‌ளே !!!.

பெண்ணானவள் க‌ந்த‌ர்வ‌னிட‌ம் பெற்ற “க‌வ‌னிப்புக்கும்” மனிதனிடம் பெறப்போகும் “கவனிப்புக்கும்” ஒற்றுமை வேற்றுமை என்ன‌? அதை விள‌க்கும் ம‌ந்திர‌ங்க‌ள் யாவை?

………..

அன்புக்குரிய நண்பரே ,

மாங்கல்யம் தந்துனானே ரிக் வேதத்தில் உள்ளது.

சோமன், கந்தர்வன் …. என்பது மொழி பெயர்ப்பின் மூலம் அர்த்தம் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் மேற்கோள் காட்டியதற்கு நான் எப்படி ஆதாரம் தர முடியும்.

மனிதனும் ஒரு பெண்ணை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பை பெறுகிறான் என்றால், ஒரு பெண் இது வரை வாழ்ந்து வந்த தன் பெற்றோரை விட்டு, உடன் பிறந்தவரி விட்டு, புது வீட்டுக்கு போகிறாள். அங்கே அந்தப் பெண்ணை அவ மரியாதை செய்யாமல், கண்ணீர் சிந்த விடாமல் கவனித்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். அலுவலகத்தில் வேலை பார்க்கும் பொது மேலதிகாரி சாடிஸ்டாக இருந்தால் 8 மணி நேர தொல்லை மட்டுமே . ஆனால் ஒரு பெண்ணுக்கு புகுந்த வீடு கொடுமைக் காடாக இருந்தால் 24 மணி நேர தொல்லை. எனவே நல்லபடியாக இருக்கும், அந்தப் பெண் நல வாழ்வு பெறுவாள் என்பதை உறுதி செய்கிறான். பாட்டி, அம்மா, அப்பா நான் உதாரணமாக சொன்னது. அது மந்திரத்திலே இல்லை.

திரு தாத்தாச்சாரியார் அவர்களே.

ஆரியர்களின் பூர்வீகம் எது என்றே சரியாகச் சொல்லாமல்,அவர்கள்,இந்தியாவின் மீது படையெடுத்து வந்தார்கள் என்ற கட்டுக்கதைக்கு முதலிலேயே ஆப்பு வைத்து,நீங்கள் இந்து மதம் எங்கே போகிறது தொடரின் முதல் பகுதியிலேயே, ஆரியர்களின் பூர்வீகம் அன்றைய இந்தியாவின் ஒரு பகுதியான காந்தாரதேசமான ஆப்கானிஸ்தான் தான் என்று, கூறியிருப்பதற்கு மிகவும் நன்றி.

//ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: த்ருத்யோ அகநிஷடே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

. “நீ முதலில் சந்திரனால் பாதுக்காக்கப் பட்டாய் . பிறகு கந்தர்வனால் கவனிப்புடன் வளர்க்கப் பட்டாய்…. பிறகு உன்னைக் கவனிக்கும் பொறுப்பு மனிதனிடம் (என்னிடம்) வந்துள்ளது” என்பதே இதன் பொருள்// சிறப்பாக எடுத்துரைத்தீர்கள்.

தத்தாச்சாரியாருக்கு ஒன்று கேட்கிறேன், இப்போது மட்டும் அவனவன் கன்னித்தன்மை சர்டிபிகேட் வாங்கி தான் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா என்ன? கல்யாணத்துக்கு முன்னாடி அவரவர் மனைவி யார்யாரை தழுவியிருப்பார்களென்று அவரவர்களால் கண்டுபிடிக்க முடியுமா? நடைமுறை வாழ்க்கையில் கண்ணுக்குத்தெரிஞ்ச பொண்டாட்டிய பத்தியே கணக்கு போட முடியாது. அந்தகாலத்து இந்திரன் சந்திரன் பத்தின மந்திரத்துக்கு போயிட்டீங்க. போங்கய்யா போங்க போய் பிள்ளை குட்டிங்களை படிக்கவைச்சு வெள்ளக்காரனுக்கு வேளைக்காரனாக்கி வாழக்கத்துக்கோங்க.

அன்புக்குரிய திரு. ராம் அவர்களே,

வருகைக்கு நன்றி. திரு. தாத்தாச்சாரியாரின் கருத்துக்களைக் காட்டிலும் உங்கள் கருத்துக்கள் அதிரடியாக இருக்கிறதே. நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. வெளிப்படையாக சொல்லி விட்டீர்கள். இரவு நேரங்களில் வெளியிலே போனால் டூ வீலரிலே முன்னாள் உடகார்ந்து இளைங்கன் ஓட்டுகிறான். பின்னால் உட்கார்ந்து இருக்கும் இளைங்கி நடந்து கொள்வதைப் பார்த்தால் நாம் சென்னையிலே இருக்கிறோமா, இல்லை லாஸ் ஏஞ்சல்சிலே இருக்கிறோமா என்றே தெரியவில்லை. நமக்குதான் சங்கடமாக இருக்கிறது. என்ன செய்வது, கண்ணை மூடிக் கொண்டு வண்டி ஓட்ட முடியுமா? அதே நேரம் இப்போதும் பல பெண்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள் என்று கருதுகிறேன்.

ஆனால் இங்கே நாம் விவாதித்த பொருள் அந்த மந்திரத்தின் அர்த்தம் என்ன என்பதுதான். இந்த உலகில் உள்ள மனிதர்கள் ஆண் , பெண் உள்ளிட்ட அனைவருமே தாங்கள் முன்பு செய்த செயல்களின் வினைக்கு ஏற்ப பலன்களை அனுபவிப்பிக்கிரார்கள் எனவும், அதற்கான கால நேரம் குரு, சனி உள்ளிட்ட தேவர்களின் இடம் மாறும் நேரத்தைப் பொறுத்து அமைகிறது என்பதுமே வைதீகர்களின் கோட்பாடு.

பிறப்பு முதல், இறப்பு வரை (வளர்ப்பு உட்பட ) மனித வாழக்கையில் எல்லாமே தேவர்கள் கண்டிரோலில், கவனிப்பில் என்பதே அவர்களின் கோட்பாடு. அந்த அடிப்படியிலே தான் இந்த மந்திரமும் சொல்லப் பட்டு இருக்கிறது.

மன்மதன் வருகிறான், காதல் கனையை வீசுகிறான், ஆணோ பெண்ணோ காதல் வயப் படுகிறார்கள் என்கிறார்கள். எமன் வருகிறான், பாசக் கயிற்றை வீசுகிறான் உயிரை எடுக்கிறான் என்கிறார்கள். இதற்க்கு அர்த்தம் மன்மதனே உறவு வைக்கிறான் என்று அர்த்தம் இல்லை , எமனே கத்தியால் “”சதக், சதக்”” என்று குத்துகிறான் என்று அர்த்தம் இல்லை. உயிர் பிரிய வைக்கப் பட வேண்டியதற்கான பொறுப்பு யமனுக்கு கொடுக்கப் பட்டு உள்ளது.

அதே போல ஒரு பெண் வளரும் போது அவளை நல்ல முறையில் கவனித்து வளர்ப்பதை மேற்பார்வை செய்யும் பொறுப்பு, முதலில் சோமனிடமும், பிறகு கந்தர்வனிடமும் இருப்பதாக சொல்லுகிறார்கள்.

இது எல்லாம் வைதீகர்களின் கோட்பாடு, இதற்க்கு நான் சாட்சி கொடுக்க வில்லை , இது உண்மையா என்பதை என்னால் உறுதி செய்ய இயலாது. ஆனால் இதுதான் கோட்பாட்டின் அர்த்தம் . மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் தேவர்களின் தாக்கத்தால் பாதிப்படைகிறது என்பது இந்துக்களின் கோட்பாடு என்பது எல்லோருக்கும் தெரியும்.

இப்படி தேவர்களின் பார்வையால் மட்டும் அல்லாமல், பள்ளியில் ஆசிரியர், சீனியர் மாணவர்கள், மேலதிகாரி, தெரு ரவடி… இப்படியாக வழியில் நிறுத்தி மாமூல் வாங்கும் போலீஸ் முதல் பல்வேறு பேரின் பார்வையிலும் தப்பித்து ஓடவே மனிதன் விரும்புகிறான்.

ஆசிரியர் மேலதிகாரி உட்பட அனைவரும் கருணை உடையவர்கள் ஆக இருந்து விட்டால் மனிதன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறது.

அந்த வகையில் புதிதாக் கணவன் வீட்டிற்கு வரும் பெண்ணை நல்ல முறையில் கவனிக்கப் படுவாய் என்று உறுதி கூறவே இந்த மந்திரம் என்பதே பொருள்.

ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்லி விட்டேன், உங்களைப் போலவோ, தாத்தாச்சாரியாரைப் போலவே நான் (எண்ணத்திலே) யூத் இல்லை என நினைக்கிறேன். அதனால் உங்கள் அளவுக்கு வேகமோ , அதிரடியோ இல்லை என நினைக்கிறேன்.

தமிழில் தேவார திருமுறை பாடல்கள் உள்ளன. அவைகள் வேதத்திற்கு இணையானவை. ஏன் எப்படி வாக்குவாதம் ? தமிழ் தெரிந்தவர்கள் தேவாரம் திருமுறை படிக்கலாம் , வேதம் தெரிந்தவர்கள் அதில் படிக்கலாம் , எனவே தேவாரம் ,திருமுறை யை இலவசமாக பதிவிறக்கம் செய்ய
http://www.devarathirumurai.blogspot.com – என்ற இணையபக்கத்தில் உள்ள தேவார திருமுறை பாடல்களை கேட்டு & பதிவிறக்கம் செய்து இறைவன் திருவடியை அடைவோம். நன்றி

அன்புக்குரிய திரு. தேவார திருமுறையார் அவர்களே, நம்முடைய தளத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

தேவார திருமுறைகளை ஒவ்வொரு செய்யுளாக எழுதி , பதவுரையும் தந்து விளக்கமும் தருமாறு, அவற்றை கட்டுரையாக நம்முடைய தளத்திலே வெளியிடுமாறு உங்களை வேண்டுகிறோம் .

தேவார திருமுறைகளை படித்து, நீங்கள் ஆன்மீக உயர்வை அடைந்து இருந்தால், எந்தெந்த செய்யுள் எப்படி உங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் தெரியப்படுத்தலாம். அனைவரும் தெரிந்து கொள்வார்கள், பயனடைவார்கள்.

மீண்டும் நன்றி. உங்களின் தொடர்ந்த பங்கெடுப்பை கோருகிறோம்.

அன்புடன்,

திருச்சிக்காரன்.

நன்றி திருச்சிக்காரர் அவர்களே …கிழே உள்ள லிங்கை சொடுக்கவும் அங்கே தேவாரதிருமுறை மற்றும் சைவசித்தந்தம் பாடல் மற்றும் பொருளோடு உள்ளது :

http://www.thevaaram.org/

மேலும் 63 நாயன்மார்கள் வாழ்கை வரலாற்றை பற்றி வீடியோவில் தெரிந்து கொள்ள :

http://devarathirumurai.wordpress.com/

தாமதமாக விளக்கம் கொடுத்ததற்கு மன்னிக்கவும் ……..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: