Thiruchchikkaaran's Blog

சத்ரபதி சிவாஜி – மத சகிப்புத் தன்மை கொண்ட இணையற்ற மாமன்னன்!

Posted on: November 28, 2010


File:Shivaji-Dhurandhar.jpg

கூகிள் உள்ளிட்ட தேடும் தளங்களில் சென்று சிவாஜி என்று தேடினால் அதில் ரஜினி , ஷ்ரேயா நடித்த சிவாஜி என்னும் சினிமா படம் தான் அதிகம் வருகிறது. அதோடு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிய சில தல விபரங்களும் வருகின்றனர்.

இந்தியாவை ஆண்ட மாமன்னர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவரான சத்திரபதி சிவாஜியைப் பற்றி நாம் பள்ளிப் பாடங்களைலே படித்து இருக்கிறோம். அவருடைய வாழ்க்கை வரலாற்றை நினைவு கூர்ந்தால், சாமானியனாகப் பிறந்து அடக்கு முறைக்கு எதிராகப் போராடி  சாம்ராஜ்ஜியபதியானவர், உலகிலே இவருக்கு இணையாக யாரவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

நெப்போலியன் ஆட்சிக்கு வந்த கால கட்டம் கூட பிரெஞ்சு புரட்சிக்கு பிறகு எழுந்த அரசியல் அதிகார வெற்றிடத்தின் போது என்பதை எண்ணிப் பார்க்கிறோம்.

ஆனால் சிவாஜியோ வலிமையானதும், நிலையானதுமாகவும், உலகின் மிகப் பெரிய பேரரசுகளில் ஒன்றாகவும் இருந்த முகலாயப் பேரரசையும், அதே நேரம் தக்காண சுல்தான்களையும் எதிர்த்துப் போராடி சத்ரபதியாக உயர்ந்தது உலக வரலாற்றில் இணையற்ற ஒரு செயல் என்பதாகவே நாம் அறிகிறோம்.

சிவாஜியின் வீர சாகசங்களைப் பற்றி எழுதுவதானால் நாம் பல கட்டுரைகளை எழுத வேண்டி இருக்கும். நம்முடைய இந்தக் கட்டுரையிலே மிக முக்கியமாக குறிப்பிடுவது என்னவென்றால், மாமன்னன் சிவாஜி எந்த அளவுக்கு மத சகிப்புத் தன்மையும் , பிற மதங்களை மதிக்கும் பண்பும், பிற மதங்களுடன் நல்லிணக்கம் காட்டுபவராகவும் இருந்தார் என்பதைப் பற்றி ஆகும்.

எந்த ஒரு பகுதியையும் சிவாஜி தன ஆட்சியின் கீழ்  கொண்டு வந்தவுடன் அவர் இடும் முதல் கட்டளைகளில் ஒன்று பிற மத வழிபாட்டு தளங்கள் பாதுக்காக்கப் பட வேண்டும் என்பதே.

பிற மதங்களின் வழி பாட்டு தளங்களை சேதப் படுத்தியதாகவோ,  கேவலப் படுத்தியாகவோ ஒரு சிறு குறிப்பை கூட சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றில் நம்மால்  காண இயலவில்லை.  பிற மதத்தவரால் தங்களுடைய கோவில்கள் சேதப் படுத்தப் படுவதானா வருத்தத்தை நெஞ்சில்  தேக்கி வைத்திருந்த மாவீரன் சிவாஜி, அப்படிப் பட்ட கீழ்த் தரமான முரட்டு அடாவடியை தாம் ஒரு காலும் செய்யக் கூடாது என்று செயல் பட்டது புரிந்து கொள்ளக் கூடியதே. சிவாஜி,  சிவாஜி என்று சிவாஜியின் பேரை சொல்லிக் கொண்டு செயல் படுவோர் உண்மையிலே தாங்கள் அவர் காட்டிய வழியில் செல்கிறோமா என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
Advertisements

2 Responses to "சத்ரபதி சிவாஜி – மத சகிப்புத் தன்மை கொண்ட இணையற்ற மாமன்னன்!"

திரு திருச்சிக்காரர் அவர்களே,

சிவாஜியின் மத சகிப்புத்தன்மையைப் பற்றிய நல்ல கட்டுரை .

///கூகிள் உள்ளிட்ட தேடும் தளங்களில் சென்று சிவாஜி என்று தேடினால் அதில் ரஜினி , ஷ்ரேயா நடித்த சிவாஜி என்னும் சினிமா படம் தான் அதிகம் வருகிறது. அதோடு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிய சில தல விபரங்களும் வருகின்றனர்.///

அதே போல் தமிழில் இந்து மதம் என்று தேடினாலும், நாத்திக வலைதளங்களே அதிகம் வருகிறது.

ஒழுக்கம் மிக்கவர் சிவாஜி. யுத்தத்தில் தோற்றவர்களின் பெண்களை -மனைவி சகோதரிகளை -அடிமைப்பெண்களாக -வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதயை அளிக்கின்றது அரேபிய நூலான குரான். ஆகவேதான் முகலாய படைஎடுப்பு நடந்து இந்துக்கள் தோற்ற இடங்களில் எல்லாம் பெண்களுக்கு எதிரான பாலியில் குற்றங்கள் மிகுதியாக நடைபெற்றது. ஷாஜகானின் மனைவி மும்தாஜ்கூடு அடுத்தவன் – இந்துவின் மனைவிதான். இப்படிப்பட்ட காடையார்களை எதிர் கொண்ட சிவாஜி அவர்கள் தானே தன்படை வீரர்களோ பெண்களிடம் மிக்க கண்ணியமாக நடைக்க வேண்டும்என்பதை மிகவும் கண்டிப்புடன் வலியுருத்தி நானே அதற்கு உதாரணமாக வாழ்ந்தார். மராட்டிய படைகள் ஒரு கோடடையை கைப்பற்றியபோது அதில் இருந்த அனைவரும் தப்பி விட்டனர். ஆனால் படைதளபதியின் மகள் மட்டும் கோடடையினுள் சிக்கிக் கொண்டாள். சிவாஜியின் தளபதி சிவாஜிக்கு அந்த முஸ்லீம் இளம் பேரழகான பெண்ணைப் பரிசாக அளித்தார். அப்பெண்ணைப் பார்த்த வுடன் ” சிவாஜி இப்பெண்ணைப்போல் பேரழகு மிக்கவராக எனது தாயார் இருந்திருந்தால் நான் இப்போது இருப்பதை விட மிகவும் அழகான இருப்பேன் ” என்று எதிரியின் மகளில் கூட தனது தாயைக் கண்டவர்”. படை வீரர்களை எச்சரித்து அப்பெண்ணை அன்று இரவே உறவினர் வீட்டில் ஒப்படைக்கச் செய்தார். இந்த மாண்பை பேறு எங்கும் காண முடியாது. அரபு இலக்கியங்களில் …… காணவே முடியாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: