Thiruchchikkaaran's Blog

கோவில் முற்றுகைப் போராட்டம் நடத்தும் இயக்கங்கள் தாங்களே கோவிலைக் கட்டி அதில் எல்லா பிரிவினரையும் அர்ச்சகர் ஆக்கி முன் மாதிரியாக செயல் படலாமே!

Posted on: November 25, 2010


கோவில் முற்றுகைப் போராட்டம் நடத்தும் இயக்கங்கள் தாங்களே கோவிலைக் கட்டி அதில் எல்லா பிரிவினரையும்  அர்ச்சகர் ஆக்கி முன் மாதிரியாக செயல் படாதது ஏன்?

அனைத்து பிரிவினரும் ஆன்மீகப் பணியிலே ஈடுபட வேண்டும், ஈடுபட முடியும்  என்பது நம்முடைய கருத்து கொள்கை எல்லாம்.

 கோவில்கள் குறி வைக்கப் பட்டு போராட்டம் நடத்தப் படுகின்றன  என்பது போன்ற கருத்துக்களை நாம் காண்கிறோம்.  இந்து மத கோவிலுக்கு சமபந்தம் இல்லாதவர்கள், மாற்று மதத்தை சேர்ந்தவர்கள்,  தங்களை நாத்தீகர்கள் போல,   சீர்திருத்தவாதிகள்  போல காட்டிக் கொண்டு இந்து ம‌தத்தை இக‌ழ‌வும், இந்துக் கோவில்க‌ளை எதிர்த்து போராட்ட‌ம்  ந‌ட‌த்தியும் செய‌ல் ப‌டுகிறார்களா, என்ப‌தையும் உன்னிப்பாக‌ க‌வ‌னிக்க‌ வேண்டும் என்று ம‌க்க‌ள் எண்ணுகின்ற‌ன‌ர்.ஏனெனில் இதுவும் ம‌த‌ ச‌கிப்புத் த‌ன்மை இன்மையால் உருவான‌ ம‌த‌ வெறியை வெளிப்ப‌டுத்த‌ சுளுவான‌ வ‌ழியாக‌  உள்ள‌து. “அட‌, பெரியாரின் பெரை சொல்லிக் கொண்டு இந்து ம‌த‌த்தை திட்டித் தீர்த்து கோவிலுக்கு அருகில் போய் ர‌வ‌சு விடலாம்” என்று பிற‌ ம‌த‌ங்க‌ளின் மீதான‌ ம‌த‌ வெறியை செய‌ல் ப‌டுத்துகிறார்களா என்ப‌தையும் ச‌மூக‌ ந‌ல்லிண‌க்க‌த்தில் அக்க‌றை உடையோர்  க‌ருத்தில் இருத்த‌ விரும்புகின்ற‌ன‌ர். 

அதே நேரம்  இந்து மதத்திலே இருந்து கொண்டு, இந்து மதத்தை சீர்திருத்த முயலும் சீர்திருத்தவாதிகள், தாங்களே ஏன் ஒரு  கோவிலை கட்டி அதிலே எல்லா பிரிவினரும் அர்ச்சகர் ஆக பணி செய்யும் படி செய்யக் கூடாது?அட ஏன் ஒரு கோவில், ப‌ல கோவில்க‌ளைக் க‌ட்ட‌லாமே?

நான் ஒரு வழிபாட்டு தளம் கட்டினால், அதில் எல்லா பிரிவினரும் அர்ச்சனை செய்ய நிச்சயம் வழி இருக்கும். சுழற்சி முறையில் எல்லா பிரிவினரும் அர்ச்சகர் ஆக பணி செய்வதை நான் முன் மொழிகிறேன்.

ஆனால் அன்றாடங் காய்ச்சியான நம்மைப் போன்றவர்கள், தனியாக ஒரு கோவிலைக் கட்ட முடியுமா?  மூன்று செங்கல்லை வைத்து நடுவிலே ஒரு பிள்ளையாரை வைப்பதுதான் நம்மால் செய்யக் கூடியது. அதையும் நாம் அனுமதிக்கப் பட்ட இடத்திலே தான் வைக்க சொல்கிறோம்.  

ஆனால் எல்லா பிரிவினைரையும் அர்ச்சகர் ஆக்குவதில் முனைப்புடன் செயல் படுவதாக சொல்லிக் கொள்ளும் இயக்கங்கள்,  ஏன் அவர்களே ஒரு கோவிலைக் கட்டி  அதில்  எல்லா  சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் அர்ச்சகர் ஆக்கி  முன் மாதிரியாக  செயல் படுவதில்லை?

அப்படி இந்த போராட்ட இயக்கங்கள  கோவில் கட்டி அனைவரையும் அர்ச்சகர் ஆக்கி வேறுபாடுகள் அற்ற   சமத்துவ சமுதயத்தை அமைப்பதில் இன்னும் தொடர்ந்து முன்னேறக இயலாதா?  

அப்படி  அவர்கள் கோவில் கட்ட முன் வந்தால் நம்மைப் போன்ற சாமானியர்களும்,  நம்மால முயன்ற அளவுக்கு உதவி செய்ய தயாராக இருப்போம் அல்லவா? அதோடு அந்தக் கோவிலுக்கு குடும்பம், உற்றார், நண்பர்களுடன் சென்று வழிபடவும் தயாராக இருக்கிறோம். அர்ச்சகப்    பயிற்சி பெற்ற இளம் அர்ச்சகர் பூசனை செய்யும் போது நாம்சந்நிதியில் நின்று  வணங்க விருப்பமாக இருக்கிறோம். இது சமத்துவ சமுதாயத்தை உருவாக்க உதவுமே.

அதோடு தமிழ் நாட்டிலே எத்தனயோ கோவில்கள்,  விளக்கில் விட எண்ணைக்கு  கூட  வழியில்லாமல்,  என்னைப் பார், உன்னைப் பார் என்கிற நிலையிலே, பல அர்ச்சகர்கள் வெறும்  தேங்காய் மூடி, வாழைப் பழத்தோடு  நடையைக் கட்டுகின்றனர். இன்னும் பல கோவில்களில் பராமரிப்பே இன்றி இழுத்து மூடும் நிலையில் உள்ளது. இளம் அர்ச்சகர்கள் இது போன்ற கோவில்களுக்கு சென்று, கணீரென்று பாடி அந்தக் கோவில்களுக்கு புத்துணர்ச்சி தரக் கூடாதா?

ஆனால் கோடிக் கணக்கில் வருமானம் வரும் கோவில்களுக்கு தான் பிரச்சினை வருகிறது. ஒரு வேளை தேனடை  எங்கே  இருக்கிறதோ , அங்கே தான்  தேனீ  இருக்கும் என்கிற தமிழ் நாட்டின் மாபெரும் தேன் சித்தாந்த செயல் பாடா என்பதுவும் தெரியவில்லை.

வகுப்பு வாரி  பிரதிநிதித்துவ  சித்தாந்தத்தை தன்னுடைய முக்கிய கோட்பாடு போல காட்டிய திராவிடர் கழகம், தன்னுடைய 85 வருட வரலாற்றில் இரண்டே இரண்டு பேரை மட்டுமே தலைமைப் பொறுப்பில்  எல்லா அதிகாரங்களோடும், சொத்து பத்துகளுக்கு அதிபதியாக்கி அழகு பார்க்கிறது. ஏன் வகுப்பு வாரி பிரதி நிதித்துவத்தின் படி எல்லா பிரிவினரையும் தலைவராக்கி  அழகு பார்க்கக் கூடாது. இரண்டே இரண்டு சமுதாயத்தினர் மட்டும்தான் திராவிடர் கழகத்தின் முன்னேற்றத்துக்கு உழைத்தார் களா? மற்ற சமுதாயத்தினரின் பங்களிப்பே   இல்லையா?  இது வகுப்பு வாரி பிரதி நிதித்துவமாக இல்லையே?

ஆனால் இதை எல்லாம் கேட்க‌ கூடாது. பெரியாருக்கு எதிராக‌ எதுவும் சொல்ல‌க் கூடாது‍, அது சாமி குத்த‌த்தை போன்ற‌து என்கிற‌ ரேஞ்சிலெ பெரியார் பெய‌ரில் ஒரு ம‌த‌ம் போல‌ உருவாக்கி விட்டார்க‌ள். அப்ப‌ பெரியார் ம‌ட‌த்திலே, எல்லாப் பிரிவினைரையும் த‌ல‌மைப் பொறுப்புக்கு வ‌ழி விடாம‌ல் செய‌ல்ப‌டுவ‌து பார்ப்ப‌னீய‌ம் இல்லியா? தானே எல்லாம், த‌ன‌க்கு மேல் யாரும் சிந்திக்க‌ வேண்டிய‌தில்லை, என‌க்கு தேவை அடிமைக‌ள் தான் என்பதாக‌ சொல்ல‌ப் ப‌டுவ‌து பெரியாரின் பார்ப்ப‌னீய‌மா என்று சிந்த‌னையாள‌ர்க‌ள் சிந்திக்க‌ தொட‌ங்கி விட்ட‌ன‌ர்.

Advertisements

14 Responses to "கோவில் முற்றுகைப் போராட்டம் நடத்தும் இயக்கங்கள் தாங்களே கோவிலைக் கட்டி அதில் எல்லா பிரிவினரையும் அர்ச்சகர் ஆக்கி முன் மாதிரியாக செயல் படலாமே!"

kovil muttrukai poratam natathum anaivarumey kadavul illanu solravunga

Appadiya?
We welcome you to our blog. Thnaks for your comments.

ஆக, நீங்க தீண்டாமையை நடமுறைப்படுத்திக்கிட்டுதான் இருப்பீங்க.யாராவது கேள்வி கேட்டா நாங்க அப்படித்தான் இருப்போம்,ஒனக்கு வலிச்சா நீயே கோயில கட்டிக்கிட்டு எல்லாரையும் உள்ள விடுன்னு சொல்லுவீங்க.அதனால தீண்டாமை இந்து மத தர்மம்தான்னு நாங்க புரிஞ்சுக்கணும்.
அது என்னங்க இந்து மதம்? இங்க இருந்தா சிவனுக்கு பிள்ளை முருகன்.இந்துக்கள் வாழும் வட இந்தியாவுக்கு போனா முருகனா,எவண்டா அவன்னு கேக்குறாங்க.இந்து மதத்த பத்தி கொஞ்சம் சொல்லுங்க.

தோழர் வானம் அவர்களே,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. கட்டுரையை முழுதாகப் படித்தீர்களா?

எல்லா பிரிவினரும் அர்ச்சகர் ஆகலாம், அது அவசியம் என்பதை என்பதை மனப் பூர்வமான கருத்தாக தெரிவித்துக் இருக்கிறோம். எல்லா சமுதாயப் பிரிவினரும் கர்ப்பக் கிரஹத்தில் அர்ச்சகர் ஆக பூசனை செய்யட்டும், நாம் சந்நிதியில் நின்று வணங்குவோம் என்று தெளிவாக எழுதி இருக்கிறோம். இதிலே தீண்டாமை எங்கே இருந்து வந்தது? திருப்பதி கோவிலுக்கோ, சபரி மலைக்கோ சென்று பார்த்தால் அங்கே பலரும் ஒன்றாகக் கலந்து அருகருகே தொட்டபடி தான் செல்லுகின்றனர் தோழா. யாரும் அடுத்தவர் எந்த சாதி என்று நினைப்பது கூட இல்லை.

தீண்டாமையை இந்திய சமுதாயம் விட்டு விட்டதால் “அய்யயோ, என்னடா இவனுங்க தீண்டாமையை விட்டு விட்டா, நாம எதை சொல்லி இந்து மதத்தை திட்டுவது”, என்ற பதைபதைப்பில் சிலர் இன்னும் முக்கிய கோவில்களில் தீண்டாமை இருப்பது போலக் காட்ட முயலுகின்றனர். ஆனால் திருப்பதி, மதுரை உள்ளிட்ட
எல்லா பொதுக் கோவில்களிலும் கூட்டத்திலே எல்லோரும் இடித்துக் கொண்டு , முந்திக் கொண்டுதான் செல்லுகின்றனர்.

அதே நேரம் கிராமப் பகுதிகளில் இன்னும் சாதிப் பிரிவினைகளும், அதன் அடிப்படையில் தீண்டாமை கொடுமைகளும் முற்றாக நீங்கி விடவில்லை, சில நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன. அவற்றையும் முற்றாக ஒழிக்க பாடுபடுவோம். சமத்துவ சமுதாயம் அமைந்தே தீரும். இந்திய சமூகத்தில் சாதி வேறுபாடுகள் நீங்கப் போகின்றன, அதனால் தங்கள் பிழைப்பு கெடுமே என்று நினைப்பவர்கள் ஒப்பாரி வைத்துக் கொள்ளலாம்.

அது என்னாங்க இந்து மதம் என்று கேட்கிறீர்கள், பிற மதங்களை வெறுக்காத , பிற மதத்தவரை வெறுக்காத நல்லிணக்கப் பாதை இந்து மதம் இந்த உலகுக்கு தந்த முக்கிய நன்மைகளால் ஒன்று.

“எல்லோரும் கொண்டாடுவோம், அல்லாஹ்வின் பெயரை சொல்லி நல்லோரின் வாழ்வை எண்ணி” என்று நாம் கட்டுரை எழுதுகிறோம், “ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் நம் ஆண்டவர் தோன்றி விட்டார், இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்” என்றும் நாம் கட்டுரை எழுதுகிறோம், என்றால்- இவற்றை ஒப்புக்காக எழுதாமல் மனப் பூர்வமாக எழுதுகிறோம். அந்த அளவுக்கு எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களை பாராட்டவும், அவற்றில் உள்ள ஆன்மீக கோட்பாடுகளை புரிந்து கொள்ளவும், எல்லா மதங்களுடனும் நல்லிணக்கமாகவும் இருக்கும் சிந்தனையை செயல் பாட்டை நாங்கள் பெற்றது இந்து மதத்திடம் இருந்தே.

இந்துக்களின் முக்கிய நூலான கீதையில் முருகனைப் பற்றிய குறிப்பு “சேனாதிபதிகளில் நான் ஸ்கந்தன்”, என்று தெளிவான குறிப்பு இருக்கிறது. வட இந்தியாவில் இருப்பவர்களுக்கு முருகன் என்ற பெயரை விட கார்த்திக் என்ற பெயரிலேயே அதிகம் அறியப் படுகிறார். அப்படி அவர்கள் அறிந்திருக்காவிட்டாலும் பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை. இந்து மதத்தில் கடவுளை தொழுதே ஆக வேண்டும் என்றோ , தொழாவிட்டால் தண்டிக்கப் படுவாய் என்றோ கோட்பாடுகள் இல்லை.

இந்து ம‌தத்தைப் ப‌ற்றியோ இந்து என்றால் என்ன‌ என்றோ ஒரே ஒரு வாக்கிய‌த்தில் முடித்து விட‌ முடியாது.

கீழ்க்காணும் க‌ருத்துக்க‌ளை எந்த‌ அளவுக்கு ஒருவ‌ன் பின்ப‌ற்றுகிறானோ அவ‌ன் அந்த‌ அள‌வுக்கு சிற‌ந்த‌ இந்து என‌க் க‌ருத‌ப்ப‌ட‌லாம், என்ப‌தை ஆரம்ப‌க் க‌ருத்தாக‌ இங்கே சொல்கிறோம்.

//அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)

சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)

நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )

ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

ஸ ந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

யோகி (யோக நெறியில் நிற்பவன்)

யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)

த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )

ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்).//
இந்த‌ க‌ருத்துக்க‌ளை எந்த‌ அளவுக்கு ஒருவ‌ன் பின்ப‌ற்றுகிறானோ அவ‌ன் அந்த‌ அள‌வுக்கு சிற‌ந்த‌ இந்து என‌க் க‌ருத‌ப்ப‌ட‌லாம், என்ப‌தை ஆரம்ப‌க் க‌ருத்தாக‌ இங்கே சொல்கிறோம்.

கீழ்காணும் கட்டுரையையும் நீங்கள் படிக்கலாம்.

https://thiruchchikkaaran.wordpress.com/2010/11/13/hinduism-questions-about-hinduism/

இந்து மதம் தொடர்பான உங்களது சந்தேகங்களை இங்கே முன் வைக்கலாம். இந்து மதம் மட்டும் அல்ல, எல்லா மதங்களைப் பற்றியும் உங்களது கேள்விகளை முன் வைக்கலாம். எல்லா மதங்களிலும் உள்ள சிறந்த கருத்துக்களை எடுத்துக் காட்டி, எல்லா மதங்களையும் நல்லிணக்கப் பாதையில் இட்டு செல்வதே நமது நோக்கம்.

//“அய்யயோ, என்னடா இவனுங்க தீண்டாமையை விட்டு விட்டா, நாம எதை சொல்லி இந்து மதத்தை திட்டுவது”, என்ற பதைபதைப்பில் சிலர் இன்னும் முக்கிய கோவில்களில் தீண்டாமை இருப்பது போலக் காட்ட முயலுகின்றனர்// nice words.

//எல்லா மதங்களையும் நல்லிணக்கப் பாதையில் இட்டு செல்வதே நமது நோக்கம்.//

எல்லா மதங்களையும் என்று போடுகிறீகளே, கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் எங்கள் கடவுள் தான் கடவுள் மற்றவை எல்லாம் சாத்தானென்று கூறிக்கொண்டிருக்கும் போது நல்லினக்கத்திற்கு வருவார்களா என்ன?

தோழர் ராம் அவர்களே, கட்டுரையைப் படித்து விவாதத்தில் பங்கெடுத்தற்க்கு நன்றிகள்.

நாம் மத நல்லிணக்கத்தைப் பரப்ப முடியும் என்கிற நம்பிக்கை (confidence & hope) நம்மிடம் இருக்க வேண்டும். அது சுவாமி விவேகானந்தரிடம், மகாத்மா காந்தியிடம், ஆதி சங்கரிடம் … இன்னும் பல இந்திய இந்திய சிந்தனையாளர்களிடம் இருந்தது. அவர்கள் பல மக்களின் மனதில் நல்லிணக்கத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்று இருந்திருக்கிறார்கள். சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் அதிசயத் தக்க விதாமான வரவேற்ப்பை, ஆர்வத்தை பெறவில்லையா? அவர் இந்து துறவிதானே, அவர் மேலை நாடுகளில் வரவேற்ப்பு பெற்றது எப்படி என்று சிந்தித்து பாருங்கள். நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேறுங்கள், பரந்த சிந்தனை உடையவராக இருங்கள், சிந்தனையை கூர்மைப் படுத்துங்கள், எல்லோரையும் நேசியுங்கள், சுவாமி விவேகானந்தர் சொன்னது போல ரிஷித்துவம் அடைந்தவராக இருங்கள். அப்போது நீங்கள் சொல்வதை அவர்கள் தாமாகவே ஒத்துக் கொள்வார்கள். உலக அமைதிக்கு ஒரே வழி மத நல்லிணக்கமே.

மத வெறியால் கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் பல கோடி மக்கள் கொல்லப் பட்டதோடு, பல கோடி மக்கள் அச்சுறுத்தப் பட்டு இருந்திருக்கின்றனர். மத வெறியை நீக்கி மத நல்லிணக்கத்தை பரப்புவோம்.

உங்கள் பங்கெடுப்பிற்கு நன்றி, தொடர்ந்து பங்கெடுத்து வாருங்கள்.

இப்போ தமிழ் நாட்டுல இருக்கிற கோயில்கள்ல எத்தன கோயில் பார்ப்பானுங்க உடல் உழைச்சு கட்டினதுன்னு சொல்லமுடியுமா…….
உழைக்கிற மக்கள் அவங்க வழிபட கோயில் கட்டினா பார்ப்பனப் (edited)கள் உள்ள புகுந்துகிட்டு கடவுள் பெயர வச்சு கோயில் கட்டின மக்களையே சாதியின் பெயராலே உள்ள விடுறதில்ல, ஆனா அவங்க போடுற பிச்ச காசு மட்டும் வேணும் அதுல ஒன்னும் தீட்டு கிடயாது கொஞ்சம் கூட சூடு சொரனையே கிடையாது (edited)க்கு……..(edited)…………….

தோழர் கோகுல கிருஷ்ணர் அவர்களே, கட்டுரையைப் படித்து விவாதத்தில் பங்கெடுத்தற்க்கு நன்றிகள்.

பார்ப்பனர்கள் என்று அழைக்கப் படுவோர் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்று பட்ட சமத்துவ சமுதாயமாக இணைப்பதே நம்முடைய குறிக்கோள், சமுதாய இணைப்பு நடந்து கொண்டு இருக்கிறது. யாரையும் கட்டம் கட்டி, சாதிக் காழ்ப்புணர்ச்சி செய்வது , குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக சாதித் துவேசம் காட்டுவது சமூக இணைப்பிற்கு உதவாது, அது நாகரீகமும் அல்ல. எனவே நீங்கள் மக்கள் இணைப்பிற்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

//கோயில் கட்டின மக்களையே சாதியின் பெயராலே உள்ள விடுறதில்ல, //

எந்தக் கோவிலில் உள்ளே விடுவதில்லை. நீங்களோ நானோ மும்பை மகாலட்சுமி கோவிலுக்கோ, இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாதர் கோவிலுக்கோ, தஞ்சை பெரிய கோவிலுக்கோ சென்றால், யாராவது உள்ளே வரக் கூடாது என்று நம்மை தடுக்கிறார்களா?

//உழைக்கிற மக்கள் அவங்க வழிபட கோயில் கட்டினா பார்ப்பனப் (edited)கள் உள்ள புகுந்துகிட்டு //

உழைக்கிற மக்களென்றால் யார்? தாசில்தார் அலுவலகத்தில் சேரிலே உட்கார்ந்து கொண்டு கோர்ப்புகளைப் பார்க்கிறாரே, எழுத்தர் அவர் செய்வது உழைப்பு இல்லையா? அப்படி அவர் செய்வது உழைப்பு என்றால், அர்ச்சகர் நின்று கொண்டு உரத்த குரலில் மந்திரம் சொல்வது, தீபாராதனை காட்டுவது இவைஎல்லாம் உழைப்பு இல்லையா?

//இப்போ தமிழ் நாட்டுல இருக்கிற கோயில்கள்ல எத்தன கோயில் பார்ப்பானுங்க உடல் உழைச்சு கட்டினதுன்னு சொல்லமுடியுமா…….//

இப்போது நீங்கள் பணி செய்யும் அலுவலகத்தை நீங்கள் கல், மண் சுமந்து கட்டினீர்களா?

மற்றபடி எல்லா கோவில்களிலும் எல்லா பிரிவினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தி நாம் இதற்க்கு முன் எழுதிய கட்டுரையை படிக்குமாறு கோருகிறேன்.
https://thiruchchikkaaran.wordpress.com/2010/11/23/sreerangam-protest-against-pattar/

உங்கள் பங்கெடுப்பிற்கு நன்றி, தொடர்ந்து பங்கெடுத்து வாருங்கள்.

First of all, your topic itself is very biased and it clearly shows that you don’t know anything about How this PARPANA community did so many worst things for the society so far.

Agitation is not against Hindu Religion but its against on those who(PARPAN) declared themselves as a sole proprietary of Hindu Religion.

Go and Read Periyar’s Books…

what you reap is What you sow..

அன்புக்குரிய தோழர் மதுரைக்காரர் அவர்களே,

இந்திய சமுதாயத்தில் நிலவி வந்த சாதிய முறை பற்றி பல அறிஞர்களும் ஆராய்ந்து உள்ளனர். இந்தியாவின் சாதீய முறைக்கும் , அதனால் நசுக்கப் பட்ட பிரிவினருக்கு இழைக்கப் பட்ட அநீதிக்குமான பொறுப்பு அனைவருக்குமே உள்ளது. பார்ப்பனர்களை விட, விவசாயம் மற்றும் பிற தொழில்களில் ஈடு பட்ட வந்த சமூகத்தினரும், அரசு ஆளும் பிரிவினரும் சாதி முறையால் அதிக பலன் அடைந்து உள்ளனர். தங்களுடைய தொழிலுக்கு தேவையான வேலையாட்களை பெறுவதை உறுதி செய்து கொள்ள சாதீய முறை அவர்களுக்கு உதவியாக இருந்தது. பெரியாரின் கருத்துக்களில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியவை பல உண்டு, அவற்றை எடுத்துக் கொள்ள நான் தயங்குவதில்லை. . பெரியாரையும் என் ஆசிரியர்களில் ஒருவராகவே நான் கருதுகிறேன்.

ஆனால் பெரியாரின் செயல் மக்களை இணைப்பதை விட சாதி வெறுப்புணர்வை தூண்டி விட்ட செயலாகவே இருக்கிறது. அதனால் தான் இனரிக்கு தமிழ் நாட்டிலே ஒரு மனிதனின் வாயில் இன்னொரு மனிதனின் சாதி அடிப்படையில் மலம் திணிக்கும் கொடும் செயல் நடை பெறுகிறது.

உங்களின் கருத்துக்களில் சாதி வெறுப்புணர்ச்சியே மேலோங்கி உள்ளது. ஒருவர் தவறு செய்து இருந்தாலும், அவருடைய பத்தாவது தலை முறையை சேர்ந்தவனை தண்டிக்க வேண்டும் என்பது காட்டுமிராண்டிகள் கடை பிடித்த
கருத்தே. அது நாகரீகத்துக்கு பொருந்தாது.

சாதி அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் கட்டம் கட்ட நினைப்பது நாகரீகமல்ல என்பதை மக்கள் உணர ஆரம்பித்து விட்டனர். நீங்கள் ஒருவரிடம் போய் நாம் இருவரும் சேர்ந்து இன்னொருவனை கட்டம் கட்டலாம என்று சொல்லிப் பாருங்கள். அவர் உங்களை விட்டே எச்சரிக்கையாக விலகுவார். இன்னிக்கி இன்னொருத்த்தனை கட்டம் கட்ட நினைப்பவன் , நாளைக்கு நம்மையே கட்டம் கட்ட மாட்டான் என்பது என்ன நிச்சயம் என்று நினைப்பார். கட்டம் கட்ட நினைப்பவனே, கட்டமாகிப் போவான்.

உங்களின் சிந்தனைகளை விரிவுபடுத்தி மக்களை இணைக்கும் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள் . தொடர்ந்து நம்முடைய தளத்துக்கு வருகை தந்து, கட்டுரைகளைப் படித்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் எனக் கோருகிறோம்.

திரு திருச்சிக்காரர் அவர்களே,

மீண்டும் அரு அருமையான கட்டுரை,

///அப்படி இந்த போராட்ட இயக்கங்கள கோவில் கட்டி அனைவரையும் அர்ச்சகர் ஆக்கி வேறுபாடுகள் அற்ற சமத்துவ சமுதயத்தை அமைப்பதில்….///

அதில் அவர்களுக்கு உள்ள சிக்கல் என்னவென்றால், கடவுளே இல்லை என்று கூறுபவர்கள் கோவில் கட்டினால், அது கடுமையாக விமர்சிக்கப்படும் என்ற காரணமே ஆகும்.

அன்புக்குரிய திரு. தனபால் அவர்களே,
வருகைக்கும் பங்களிப்பிற்கும் நன்றி. இது பெரிய பிரச்சினை இல்லை.

கடவுள் இல்லை என்று சொல்லியவர்கள் கோவில் நிர்வாகத்தை நடத்தி உள்ளனர்.

மேலும் இந்துக்கள் கடவுளாக வழிபாடும் முருகன், இராமர், கிரிஷ்ணன் … உள்ளிட்டோர் மக்களோடு வாழ்ந்து , மக்களுக்காக போராடி, தங்களை தியாகம் செய்தவர்கள்தான். எனவே பெரியார், காமராஜ், இராஜாஜி.. போன்றோருக்கு மணி மண்டபம் கட்டி அவர்களின் சிலைக்கு மாலை மரியாதை செய்யும் போது, சமத்துவ சமுதாயத்தை அமைக்க கோவிலை கட்டி அதிலே எல்லா பிரிவினரையும் அர்ச்சகர் ஆக்குவது ஆக்க பூர்வமான செயலே. நான் கூடத்தான் கடவுள் இருக்கிறாரா என்று கேட்கிறேன். ஆனால் மக்கள் தாங்கள் இன்னல்களுக்கு விடிவு வேண்டும் என்று நினைக்கிறார்கள். கடவுள் இருக்கிறார் என்று நம்பி, அவர் நம்மைக் காப்பார் என்று ஆறுதல் அடைவது எளிதான வழியாக உள்ளது. ஆங்கிரசர், நசிகேதஸ், யாக்வல்ங்கர், காடு வெளி சித்தர், புத்தர், சங்கரர், விவேகானந்தர் போன்றவர்கள தங்களை தாங்களே வலிமைப் படுத்தி இன்னல்கள் தங்கள் மனதை பாதிக்காத நிலையை அடைந்தனர்.

ஆனால் நாத்தீகர்கள், மக்களின் இன்னல்களுக்கான காரணம், அதற்கான தீர்வு பற்றி எதுவும் சிந்திப்பது இல்லை. இது பற்றிய விரிவான கட்டுரை வெளியாகும்.

கோவில் மீது தங்களுக்கு அக்கறை இல்லை நம்பிக்கை இல்லை என்று சொன்னால் கோவிலுக்குள் நடப்பது பற்றி இவர்களுக்கு என்ன கவலை? கோவிலுக்கு வழிபாடு செய்ய வரும் யாரும் இதை ஆட்சேபிக்க வில்லையே? அப்படியானால் கோவிலுக்கு எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் கோவில் விடயத்தில் தலையிட வேண்டிய அவசியம் என்ன? மொத்தத்திலே கோவிலை முற்றுகை இடும் அளவுக்கு அந்த பிரச்சினை பற்றி அக்கறை கொள்பவர்கள் கோவிலை கட்டி தாங்களே முன் மாதிரியாக நடக்காதது ஏன், இவர்களிடம் பணம் இல்லையா? இவர்கள கோவில் கட்டினால் பலரும் நன்கொடை வழங்க
தயாராக இருப்பார்களே. நீங்களே கூட உங்களால முடிந்த அளவுக்கு நூறோ, இரு நூறோ, ஆயிரமோ குடுப்பீர்க்ள என நம்புகிறேன். மேலும் இப்படிக் கட்டி நடத்தப் படும் கோவில்களில் எல்லா பிரிவினரும் அர்ச்சகராக நியமிக்கப் படும்போது, நாம் சுற்றம் நண்பர்களோடு அந்தக் கோவிலுக்கு சென்று வணங்கவும் செய்கிறோம் என்றும் சொல்லி இருக்கிறோம். இவ்வாறாக நாம் சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் அமைப்பதில் உண்மையாகவும்., உறுதியாகவும் இருக்கிறோம். ஆனால் எப்படியாவது சாதியத்தை நிலை நிறுத்த வேண்டும் என்று சாதி சிந்தனை உடையவர்களாய் சாதிப் பிரிவினைகளை நிலை நிறுத்தும் வண்ணம், சாதிக் காழ்ப்புணர்ச்சி, சாதித் துவேசத்தை பரப்பிய வண்ணம் சிலர் செயல் படுகின்றனர்.

இவர்களின் இயக்கத்திலே இவர்கள் எல்லா பிரிவினருக்கும் தலைமைப் பொறுப்பை வழங்கி இருக்கிறார்களா? இந்த இயக்கங்களை தாங்கள் இயக்கத்தை ஆரம்பித்தது முதல் இரு வரை தலைமை தாங்கியவர்கள் யார், யார், எல்லா பிரிவினருக்கும் தலைமை பொறுப்பு வழங்கப் பட்டதா என்று தெரிவிப்பாரகலா? தன்னுடைய நாற்காலியை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும், தானே அதில் உட்கார்ந்து அதிகாரத்தை செலுத்த வேண்டும் என்று நினைப்பில் இருப்பதால், அதை மறைக்க அங்கும் இங்கும் மேடை போட்டு, இந்து மத்தத்தை திட்டுவதை சடங்காக செய்கிறார்கள

என்னதான் ஓநாய் ஆடு வேடம் போட்டாலும், அதோட கோரை பல் காட்டி அதை கொடுத்துவிடும் அது ஓநாய் தான் என்று.

வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி திரு . பிரதீப் அவர்களே, நீங்கள் சொன்ன அதே கருத்தை தான் நானும் கட்டுரையில் சொல்லி இருக்கிறேன். சாதி துவேசத்தை தூண்டி விட்டு, சாதீயத்தை நிலை நிறுத்தி அதன் மூலம் தாங்கள் வளம் பெற்று கோமானாக விரும்புவோரை மக்கள் இனம் கண்டு கொள்வார்க்ள.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 37 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: