Thiruchchikkaaran's Blog

பட்டர்களும் பல்லக்குகளும் – Part-1

Posted on: November 23, 2010


வட இந்தியாவோடு ஒப்பிடும்போது   தென்னிந்தியாவில் உள்ள கோவில்கள்  அதிகம், குறிப்பாக தமிழ்நாட்டில் மிகப் பெரிய கோவில்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. தமிழ் நாட்டில் உள்ள கோவில்கள் பலவற்றில் இன்னும் பரம்பரை முறையிலேயே அர்ச்சகர்கள் நியமிக்கப் பட்டு பணியாற்றி வருகின்றனர்.  வேலை வாய்ப்புகள் பெருகி விட்ட கால கட்டத்தில் அரச்சகர்களின்  மகன்களுக்கு பல பணிகளுக்கு செய்யும் வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும் விடாமல் இவர்கள நாங்கள் தான் பூசனை செய்வோம் என்று அடம் பிடிப்பது ஏன் என்பதுபுரியாத  புதிராக உள்ளது.இந்து மதத்தை பின் பற்றிய மக்கள்,  பல நூறு வருடங்களாக சாதீய சமுதாய முறையை பின்பற்றி வந்ததால் இந்து மதமும் இந்த சாதீய முறைக்கு உட்பட்டு பின்பற்றப் பட்டது . 
 
 
 இந்தியாவில் சாதீயக் கட்டுப்பாடுகள் உடைவைதை பயன்படுத்தி இந்து மதமும் தன்னுடைய ஒளிக் கற்றை களை   அனைவரின் மீதும் பாய்ச்சி வருகிறது.  எந்த இந்து மதத்தின் மீது சாதீயக் குற்றச் சாட்டு வலுவாக வைக்கப் பட்டதோ, அதே இந்து மதத்தின் முக்கியக் கோவில்களில் இன்று யாரும் சாதி வித்யாசம் பார்ப்பதும் இல்லை, தனக்கு அருகில் நின்று கும்பிடுபவன் எந்த சாதி என்று நினைப்பதும் இல்லை.
இப்படி இந்து மதம் அதன் இயல்பின் படியே சுதந்திர மாக யாரும் தங்கள் கருத்துக்களை முன் வைக்கவும், அனைவரும் பங்கு பெரும் ஜனநாயக மதமாகவும் முழுமையாக மலர்ந்து வருகிறது.
 
இத்தகைய கால கட்டத்திலே அனைத்து பிரிவை சார்ந்தவர்களும், முறையாக பயிற்சி பெற்று அர்ச்சகர் ஆவது  ஒன்று பட்ட சமத்துவ ஹோமோஜீனியஸ்   சமுதாயம் உருவாக வழி வகுக்கும்.  இதை வழி நடத்தி செல்ல வேண்டிய பொறுப்பு இப்போதைய அர்ச்சகர்களுக்கு உண்டு. சுவாமி விவேகானந்தர் தெளிவாக சொன்னது போல – பிராமணர்கள் என்று சொல்லப் படுபவர்கள தங்கள் பண்பாட்டையும், அறிவையும் எல்லோருக்கும் கொடுத்து, அனைத்து  சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்க்காக பாடுபட வேண்டும். அப்படி செய்பவனே பிராமணன். அப்படி செய்யாமல் காசுக்காக அலைந்து திரிபவன் பிராமணன் அல்ல, அப்படிப் பட்ட பிராமணனுக்கு தானம் செய்வது நரகத்துக்கே செல்ல வைக்கும்- என்று பொட்டில் அடித்தார் போல சொன்னதை நினைவு கூறுகிறோம்.  ஜெர்மானிய பேராசிரியர் மாக்ஸ் முல்லர் தனக்கு இன்னொரு பிறவி இருந்தால் கும்பகோணத்தில்  அமைதியான மனதுடன் வேதம் பயிலும் ஒரு அந்தண சிறுவனாக பிறக்க விரும்புவேன் என்று சொன்னதாக சொல்வார்கள்.
 
எனவே எல்லா பிரிவு மக்களும் முன்னேறி நாகரிக சமத்துவ சமுதாயத்தில் இணைப்பது பிராமணரின் கடமை.  ஆனால் இன்றைக்கு சுவாமி விவேகானந்தரோ, மாக்ஸ் முல்லரோ தமிழ் நாட்டுக்கு வந்தால் அவர்களால அப்படிப் பட்ட காசுக்காக அலையாத அமைதியான மனதுடன் ஆசையை விளக்கி அறிவைத் தேடும் பிராமணர்கள் யாரையாவது பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.
 
 
இப்படி எல்லா  பிரிவு மக்களையும் அறிவிலும், ஆன்மீகத்திலும், பண்பாட்டிலும் முன்னேற்ற வேண்டிய கடமையை அளிக்கப் பட்ட   பிராமணர்கள் என அழைக்கப் படுபவர்கள்  இன்றைக்கு தமிழ் நாட்டில் செய்வது என்ன? முக்காலே மூணு வீசம் பேர் சாப்ட் வேர் புரபசனல் ஆகி விட்டனர். சரி, அது அவர்களின் சுதந்திரம், நானா அவர்கள் எல்லோருக்கும் சோறு போட்டு துணி குடுக்கிறேன். அவரவர்கள தங்கள் வாழ்க்கையை நடத்த பல தொழில்களை செய்கின்றனர்.
 
இதிலே இன்னும் சிலர்  அர்ச்சகர்கள் ஆக இருப்பதோடு, அந்த பணியை விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பது போல தோன்றுகிறது.  ஏற்கனவே அர்ச்சகர் ஆக பணி செய்பவர்கள், அவர்கள் தங்கள் வாழ்க்கையில்  இத்தனை காலமும் இந்த தொழிலைத் தான் செய்து வந்துள்ளனர். அவர்கள்   இப்போது வேலையை விட்டு நீக்கப் பட்டால் அவர்கள சேல்ஸ் மேனாகவோ,  வாகன ஓட்டுனர் ஆகவோ புதிய தொழிலை கற்றுக் கொண்டு செய்ய முடியாது. எனவே ஏற்கனவே பணியில் இருக்கும் அர்ச்சகர்கள், தங்கள் பணி மூப்பு பெரும் வரை அந்தப் பணியிலே இருந்து கொண்டு, அதே நேரம் தங்களுக்குப் பிறகு அர்ச்சகர் பணிக்கு வர அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களையும் தயார் செய்வதுதான் சிறப்பான முறை.
 
 
 
இன்னும் சொல்லப் போனால், பக்தர்கள் அனைவரையும் கர்ப்ப கிரஹத்தினுள் அனுமதித்து ஆணடவனுக்கு மிக அருகில் நின்று அவர்கள் மனமார வணங்கும்படி செய்வதுதான் பக்தியை வளர்க்கும் முறையாகும். பக்தர்களே  தங்கள் கையால் பூப் போட்டு சந்தோசப் பட்டுக் கொள்வதுதான் அவர்களுக்கு மன நிறைவை அளிக்கும். ஒவ்வொரு பக்தனும் அவன் விரும்பினால் அர்ச்சகர் அவன் சார்பாக மந்திரங்களை சொல்லலாம், இல்லையேல் பக்தன் விரும்பினால் அவனே அவனுக்கு விருப்பமான வகையிலே செய்யுள்களையோ, கீர்த்தனங்களையோ பாடியோ, பேசியோ அவனுக்கு விருப்பமான முறையிலோ வணங்கிக்  கொள்ளலாம். அவனுக்கு உதவி தேவைப் பட்டால் அர்ச்சகர் அவனுக்கு சொல்லிக் கொடுக்கலாம். இவ்வாறாக அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு உதவும் வகையிலே , பக்தர்களுடன் சினேக பூர்வமாக இருப்பதே ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவும் வழியாகும்.
 
ஆனால் இதை செய்தார்களா அர்ச்சகர்கள்,  எல்லா பிரிவினரையும் அர்ச்சகர் ஆக  மனப்பூர்வமாக அனுமதித்து வழி காட்டினார்களா என்றால் இல்லை .  அதை விடுத்து கீழ் கோர்ட்டு, மேல் கோர்ட்டு , சுப்ரீம் கோர்ட்டு என்று இந்தியாவில உள்ள எல்லா கோர்ர்ட்டுகளிலும் ஸ்டே வாங்குவது  என்ன, மேல் முறையீடு  செய்வது என்ன என்று ஆன்மீகத்தை விட சட்ட த்திலே பயிற்சி பெற்றவர்கள்  போல போராடுகின்றனர்.
 
 
இப்படி அர்ச்சகர்கள் போராட்ட பாதையில் செயல்படுவது பல இயக்கங்களுக்கு தங்களின்  போராட்டத்தை நடத்த காரணமாக அமைகிறது. அர்ச்சகர்கள் நாளொரு கோர்ட், பொழுதொரு கேசு என்று செயல்பட பல இயக்கங்களும் அவர்களுக்கு எதிராக கருவறை நுழைவு போராட்டம்,  அந்தப் போராட்டம் இந்தப் போராட்டம் என்று வெளுத்துக் கட்டுகின்றனர். 
 
ஏனெனில் பிரதமர் மகன் பிரதமர், முதல்வர்  மகன் முதல்வர் , நடிகர்  மகன் நடிகன்….  என்பது போன்ற நவீன பரம்பரை    பார்ப்பனீயத்தை எதிர்த்துப் போராடுவது கொஞ்சம் ஆபத்தான … கொஞ்சமல்ல மிக ஆபத்தான போராட்டமாக அமையக் கூடும்.  
 
எனவே அரசியல் செல்வாக்கு, “மக்கள்” செல்வாக்கு,  “சமூக” செல்வாக்கு , “தொண்டர்” படை….. இப்படியான  ரத , கஜ , துரக, ஆட்டோ, உருட்டுகட்டையாதி , பாதாதி சேனை  எதுவும் இல்லாத அர்ச்சகர்கள் பரம்பரை உரிமை பார்ப்பனீயத்தை நடை முறைப் படுத்த முயன்றால், அவர்களை கூட எதிர்க்க முடியாத அளவுக்கு வலிமை குன்றிய நிலையில்  இல்லை நம்முடைய  இயக்கங்கள்.   
 
எனவே செலக்டிவாக பரம்பரை உரிமை கோரி கோர்ட்டுக்கு   போகும் அர்ச்சக பார்ப்பனீய வாதிகளை மட்டும் செலக்டிவாக  எதிர்ப்பதில் புரட்சி காரர்களுக்கு பெரிய பிரச்சினை இல்லை.
 
இந்த அர்ச்சகர்கள் – புரட்சிக்காரர்கள் போராட்ட சீரியலின் லேட்டஸ்ட் எபிசோடாக ஸ்ரீரங்கம் கோவிலில் பட்டர் பல்லக்கில் போகாமால்  காலாற நடந்து போகும்படிக்கான நிகழ்வை உருவாக்கி இருக்கிறது.
 
இந்தப் போராட்டத்தின் முக்கிய கர்த்தாக்கள்  மக்கள்  கலை இலக்கிய கழகத்தினர்  என்பதாக  தோழர் வினவு தளத்தின் மூலம் அறிகிறோம். அதே நேரம் இந்தப் பல்லக்கு இறக்கப் பெருமைக்கு திராவிடர் கழகமும்  உரிமை கொண்டாடுவதாகவும் அறிகிறோம்.
 
யார் காரணமாக இருந்தாலும், எந்த நோக்கமாக இருந்தாலும், பல்லக்கிலே பட்டர்கள்  பவனி வர பலர் அதை சுமக்கும் நிகழ்ச்சி நடைபெறாமல், பட்டர்கள்  காலாற நடந்து போன நிகழ்வை நாம் மனமார  வரவேற்கிறோம்.  இது பற்றிய மேலதிக கருத்துக்களை, விளக்கங்களை  வேறொரு கட்டுரையில் வழங்குவோம் .  பட்டர் – பல்லக்கு பற்றிய கட்டுரை இத்தோடு முடியவில்லை, இன்னும் இருக்கிறது என்பதை தெளிவு படுத்தி  இந்தக் கட்டுரையை முடிக்கிறோம்.
Advertisements

6 Responses to "பட்டர்களும் பல்லக்குகளும் – Part-1"

//அவரவர்கள தங்கள் வாழ்க்கையை நடத்த பல தொழில்களை செய்கின்றனர்//

தோழர் இன்று அனைவருமே உழைக்காமல் வாழ முடியாது.இன்றைய காலகட்டத்தில் சாதி கட்டுமானத்தின் மி(எ)ச்சங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவது காலத்தின் கட்டாயம்.
அருமையான பதிவு.

அன்புக்குரிய தோழர் தனராஜ் அவர்களே,

வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி! பாராட்டுக்கு மிக்க நன்றி.

நீங்கள் சொல்வது மிக்க சரி. சாதிப் பிரிவினைகள் நீங்கி ஒரே சமுதாயமாக மலர்வது காலத்தின் கட்டாயம்.

It is amusing when you talk of self respect and domination etc.How do you then justify people banned from even entering the streets where CMs live in the name of security.If in a democracy evevrybody is equal why should legislators or judiciary be given special privileges or exemption from rules applicable to other or from RTI act?Just to cause confusion and condemn religion these are all devious arguments.why all such fanfare in modern laws glorifying certain positions?

Welcome, Mr. Sundar, keep reading the articles and post your comments

திரு திருச்சிக்காரர் அவர்களே,

மீண்டும் ஒரு நல்ல பதிவு.

///இந்தியாவில் சாதீயக் கட்டுப்பாடுகள் உடைவைதை பயன்படுத்தி இந்து மதமும் தன்னுடைய ஒளிக் கற்றை களை அனைவரின் மீதும் பாய்ச்சி வருகிறது. எந்த இந்து மதத்தின் மீது சாதீயக் குற்றச் சாட்டு வலுவாக வைக்கப் பட்டதோ, அதே இந்து மதத்தின் முக்கியக் கோவில்களில் இன்று யாரும் சாதி வித்யாசம் பார்ப்பதும் இல்லை, தனக்கு அருகில் நின்று கும்பிடுபவன் எந்த சாதி என்று நினைப்பதும் இல்லை///

100 % சரியான வரிகள்.

ந‌ன்றி, திரு. த‌னபால் அவ‌ர்களே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: