Thiruchchikkaaran's Blog

நாத்தீக வெறியராய் இருப்பது மத வெறியராய் இருப்பதை விட மேலானது என்பது சரியா?

Posted on: November 22, 2010


நாத்தீகர்களில் பலவகை  உண்டு.  ஏதோ நம்ம பாட்டுக்கு இருப்போம், இந்த கடவுள் எல்லாம்… என்னத்துக்கு ஐயா டயம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு,  என்று தனிப்பட்ட முறையிலே எந்த இயக்கமும் சாராத பல நாத்தீகர்களை நான் சந்தித்து  இருக்கிறேன்.

கடவுளை பரப்புவதாக சொல்லி  காசு பணம் சம்பாதிப்பவரைப்  போல, கடவுள் இல்லை என்கிற கோட்பாட்டை வைத்து பல்லாயிரம்  கோடிக் கணக்கில் சொத்து சேர்த்து , அவற்றை பாதுகாக்க அதிகாரத்தில் யார் இருந்தாலும் அவர்கள் காது  கிழியும் வண்ணம் ஜால்ரா  போட்டு  ஜோக்கரைப் போல இங்கேயும் அங்கேயும் தாவும் காரியவாதிகளும் தங்களை நாத்தீகர்களாகவே  அடையாளம் காட்டிக் கொள்கின்றனர்.

இப்படி அல்லாமல் சிந்தனை அடிப்படையில் கடவுள் என்கிறவர் ஒருவர் இருக்கிறாரா என்று ஆராய்பவர்கள், தங்களின் ஆராய்ச்சியின் ஒரு நிலையாக கடவுள் இல்லை என்கிற கோட்பாட்டை முன் வைக்கின்றனர். கௌதம புத்தர் போன்ற இப்படிப்பட்ட  ஆன்மீக  சிந்தனையாளர்களையும் நாம் காண்கிறோம்.

மொத்தத்திலே பொதுவாக நாத்தீகர்கள் கடவுள் இல்லை என்னும் கோட்பாட்டை உடையவர்கள் ஆவார்கள.

நம்முடைய இன்றைய ஆராய்ச்சின் மற்றொரு  கட்சியினர்  மத  வெறிக் கோட்பாட்டில்மனம் சிக்கிய அப்பாவிகள்.  இவர்கள பெரும்பாலும் தாங்கள் வளரும் போது, வீட்டிலே தங்களை சுற்றியுள்ள சமூகத்திலே கேட்கப் படும் கருத்துக்களை. சில நூலகளில் சொல்லப் பட்டுள்ள கருத்துக்களை  அப்படியே ஏற்று அதை நம்புகிறவர்கள ஆவார்கள். 

 நாம் முன்பே பல முறை சொன்னது போல அமைதியாக தங்கள் வழிபாட்டை நடத்திக் கொள்பவர்களை நாம் குறை சொல்லவோ, புண்படுத்தவோ விரும்பவில்லை.  ஆனால் சிலர் தாங்கள் நம்புவதை உலகில் உள்ள எல்லோரும் நம்ப வேண்டும் , பின்பற்ற வேண்டும் என்கிற உணர்ச்சியில் மாட்டிக் கொள்கின்றனர். மெதுவாக ஒருவரை அணுகி அன்பாகப் பேசி, படைத்தவர் என்று ஒருவர் இருக்கிறார் என்று நம்ப வேண்டும் என்று ஆரம்பிக்கிறார்கள். பிறகு அந்த ” படைத்தவன்” தொடர்பாக அவர்கள் சொல்லும் அனைத்தையும் நம்ப வேண்டும் என்று அன்புக் கட்டாயத்தை அதிகப்  படுத்துகின்றனர்.

அவர்கள் சொல்லுவதை ஏற்க மறுத்தாலோ, எதிர்த்து சொன்னாலோ அவர்களால் அதை சகித்துக் கொள்ள இயலாத நிலைக்கு சென்று விடுகின்றனர். முதலில் மனதில் வருத்தம் உருவாகி, பிறகு ஆத்திரமும் கோவமும் அதிகமாகி வெறி பிடித்த நிலையை அடைகின்றனர்.

மனதிலே வெறி ஏற்பட்டால் சிந்திக்கும் தன்மை இல்லாமல் மனதிலே எல்லாம் மறைந்து, தான் நம்புவதை மற்றவன் ஒத்துக் கொள்ள செய்ய வேண்டும் என்கிற  எண்ணம் மட்டுமே அவனை ஆக்கிரமிக்க, எந்த அளவுக்கு வெறி அதிகமாகிறதோ அந்த அளவுக்கு அவன் ஆபத்தானவனாகிறான்.

நைச்சியமாகப் பேசிப் பார்ப்பது,  பொருளாதார ரீதியாக உதவி செய்வது, இதற்க்கெல்லாம் அவன் ஒத்து வராவிட்டால் அவனை திட்டுவது …இந்த ரீதியிலே  போய் மத வெறியர்கள் பிறரை  தாக்கவும் ஆரம்பித்து விடுகின்றனர். இதை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அன்று தொட்டு இன்று வரை மத  வெறிக்கு பலியான உயிர்களின் எண்ணிக்கை பல கோடிகள், அது இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இதை ஒப்பு நோக்கும் போது நாத்தீகர்கள் கடவுள் இல்லை என்பதை தங்கள் கருத்தாக சொல்லுகின்றனர்,  மேலும் நாத்தீகர்களும் பிறர் தங்கள் நாத்தீகக் கொள்கைகளை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் நாத்தீகக் கொள்கையை ஒத்துக் கொள்ளாதவர் மீது நாத்தீகர்கள், தனிப் பட்ட அளவிலே காசு குடுப்பதாக ஆசை காட்டுதல், மிரட்டுதல் போன்றவற்றில்  ஈடுபடுவதில்லை, ஆயுதம் தாங்கிய தாக்குதல் நடத்துவதில்லை. உலகில் உள்ள எல்லோரும் நாத்தீகக் கொள்கையை ஒத்துக் கொள்ள செய்ய வேண்டும் என்கிற வெறியுடன் அவர்கள் செயல்படுவதில்லை.    “ஏய், நீ நாத்தீகக் கொள்கையை நம்பவில்லை என்றால், நீ இறந்த பின் என் தலைவன் உன்னை நரகத்திலே தள்ளி எரியும் நெருப்பில் போட்டு வதக்குவான்” என்று சொல்ல நாத்தீகர்களால்  முடியாது. வேண்டுமானால், “ஏய் நீ நாத்தீகக் கொள்கையை ஒத்துக் கொள்ளவில்லை, உனக்கு இப்பவே பேஜாரக்கி விடுவோம்” என்று வேண்டுமானால் சொல்லலாம்.

நாத்தீகரும் நாத்தீக வெறிப் பாதைக்கு போவதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். ஒரு வேளை நாத்தீகரும் நாளை வெறிப் பாதைக்கு செல்லாலம். ஆனால் நாத்தீகர்கள் இந்த உலக வாழ்க்கையோடு தங்கள் உயிர் அழிந்து விடுகிறது என்று “நம்பு”வதால் , இந்த உலக வாழக்கையை அனுபவிக்க விரும்புகின்றனர். எனவே தாங்கள் காரு பங்களா … இன்ன பிற இனிய வாழக்கையை வாழவே அவர்கள் அதிக முனைப்பு காட்டுவதால், அடுத்தவரும் தன் நாத்தீக  நம்பிக்கையை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்களை பணிய வைப்பதில் அதிக முனைப்பு காட்டுவதில்லை. 

இந்தியாவில் தமாசு நாத்தீகம் நடத்தி கோடிகளைக் குவித்தவர்கள,  ஒரு காட்சியாக அவ்வப் போது   கடவுள்களை  திட்டி, அதன் மூலமாக தாங்கள் இருப்பதை நினைவு படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அதை வைத்துக் கொள்கின்றனர். அதே நேரம் தங்களின் பில்லியன்  கணக்கிலான சொத்துக்களின் மீது மக்களின் கண் பார்வை பட்டு விடாமல் இருக்கவும்  பல தமாசுகளை அரங்கேற்றி மக்களின் கவனத்தை திசை திருப்புகின்றனர்.

இதிலே கம்யூனிச கோட்பாடு தனியான ஒன்று. கம்யூனிசம் தன்னுடைய கோட்பாட்டில் ஒரு பகுதியாக கடவுள் மறுப்பை முன் வைத்தாலும், அது அரசியல் அதிகாரம், பொருளாதாரம் ஆகியவற்றில் அதிக முனைப்பு காட்டுகிறது. கம்யூனிச சித்தாந்திகள் ஆட்சிக்கு வந்த போது வழிபாட்டு சுதந்திதிரத்தை  தடை செய்ததை வரலாறு பதிவு செய்துள்ளது, இப்போதும் அது நடக்கிறது.

( தொடரும்)

Ref: Title: நாத்தீகராய் வெறியராய்  இருப்பது மத வெறியராய்  இருப்பதை விட  மேலானது என்பது சரியா?

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: