Thiruchchikkaaran's Blog

தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா…

Posted on: November 19, 2010 
தமிழ் ஒரு சிறந்த மொழி, தமிழ் மொழி இலக்கியங்களில் உள்ள கருத்துக்கள் மிக சிறப்பானவை.  எந்த ஒரு அழிவுக் கருத்தோ, வெறுப்புணர்ச்சிக்  கருத்தோ தமிழ் இலக்கியங்களில் கிடையாது. ஆனால் சமீப காலமாக தமிழ் மொழியை உபயோகப் படுத்தி,  தேன்  போன்ற வாரத்தைகளை வைத்து, முதுகொடிய உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை சுரண்டும் அநியாயத்தை நியாயப்  படுத்தி, மக்களின் கவனத்தி திசை திருப்புகின்றனர். அப்படிப் பட்ட வசனங்களில் ஒன்றுதான், “தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?” என்பது.

இன்றைய தேதியில் ஆட்சி அதிகாரத்தை முறைகேடாகப் பயன் படுத்தி சொத்து குவிப்பது சர்வ சகஜமாகி விட்டது.  தமிழ் நாட்டில் இந்த வூழலை நியாயப் படுத்தி, ஆட்சிக்கு வருவதே துட்டு சம்பாரிக்கத் தான் என்கிற சித்தாந்தத்தை கொண்டு வந்து , விஞ்ஞான முறையில் வூழல செய் ஆரம்பித்தது கழகங்களின் கையில் தமிழகம் சென்ற பின் தான்.

காமராஜ் , கக்கன் போன்றவர்கள் சொத்து சேர்க்கவும் இல்லை, தங்கள் வாரிசை பதவியில் வைக்கவும் இல்லை. ஆனால் இன்று தமிழ் நாட்டில் இவர் காந்தியைப் போன்றவர் அம்பேத்கார் போன்றவர், ஜீவா போன்றவர்- மக்கள் பணத்தை தான் அபகரிக்க  நினைக்காதவர், என்று யாரையாவது சொல்ல முடியும் என்றால் நீங்களே சொல்லுங்கள்.

இன்றைக்கு தமிழ் நாட்டை சேர்ந்த ராஜா என்கிற எம். பி. மத்திய அமைச்சரவையில் தொலை தொடர்பு  துறை அமைச்சராக இருந்து , பல முறை கேடுகளை செய்ததாக குற்றம் சாட்டப் பட்டு பதவியை  விட்டு விலகி இருக்கிறார். 

இராஜாவின் பேரில் எந்த தவறும் இல்லை என்றால், அவர் என் பதவி விலக வேண்டும். சரி, பதவி விலக சொல்லி விட்டார்கள், பதவி விலகி விட்டார்

.

அவரால் இந்திய நாட்டுக்கு ஒரு கோடியல்ல, இரு கோடியல்ல, பத்து கோடியல்ல, நூறு கோடியல்ல, ஆயிரம் கோடியல்ல, பத்தாயிரம் கோடியல்ல, ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி இழப்பு ஆகி இருக்கிறதாம்.

மக்கள் கேட்கிறோம். பதில் சொல்லுங்கள். இந்தியாவில் உள்ள கோடிக் கணக்கான மக்கள் ஓட்டுப் போட்டுதானே அங்கே ஆளப் போனீர்கள. அதனால் நாங்கள் கேட்கிறோம்.

ஏன்  இராஜா  தான் ஸ்பெக்டிரம் ஒதுக்கீட்டினால் தான்  ஒரு ரூபாய் கூட லாபம் அடையவில்லை என்று சொல்வதை தவிர்க்கிறார்?

நாங்கள் இராஜாவை குற்றம் சாட்டவில்லை, ஆனால் தன்னை பல பத்திரிகையாளர்களும்,  எதிர்க் கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டும் போது, திரும்ப திரும்ப பர்ஸ்ட் கம் பர்ஸ்ட் சர்வுடு என்றுதான் சொல்கிறார் தவிர, “என்னுடைய மனசாட்சி தெளிவாக இருக்கிறது, நான் ஸ்பெக்டிரம்  ஒதுக்கிஈட்டினால் ஒரு பைசா கூட லாபம் அடையவில்லை” என்று சொல்லாமல் இருப்பதை நாம் சுட்டிக் காட்டுகிறோம்.   ஆனால் இராஜா சொல்கிறார், “வூழலை பற்றி பேச ஜெயலலிதாவுக்கு உரிமை இல்லை” என்று. சரி, ஜெயலலிதாவும் வூழல் கலையில் இவர்களே பிரமிக்கும் படியான வகையிலே பல  வழக்குகளை சந்தித்து வருகிறார்.  ஜெயலலிதா  கேட்பது இருக்கட்டும்.

பர்ஸ்ட் கம் பர்ஸ்ட் சர்வுடு என்பதற்கு இது என்ன கல்யாணப் பந்தியா? சீல் செய்யப் பட்ட கவரில் ஒப்பந்தப் புள்ளிகளை வழங்க சொல்லி அதிக விலைக்கு கேட்டவர்களுக்கு ஒப்பந்தத்தை அளித்து இருந்தால் அரசாங்கத்துக்கு பல இலட்சம் கோடிகள் வருவாய் வந்திருக்குமே.  சும்மா நீ கேட்பது போல் கேள், நான் தருவேன் என்பதற்கு இது ஒன்றும் கழக உறுப்பினர் அட்டை அல்லவே! 

ஒரு ரூபாய்க்கு அரிசி, இலவச வண்ணப் பெட்டி, இலவச அடுப்பு…. இப்படியாக சில நூறு கோடிகளை அள்ளித் தெளித்து மக்களின் வாயைப் பிளக்க வைத்து, இப்போது பார்த்தால், ஒரு லட்சத்து எழுபதினாயிரம் கோடிகள் என்று சொல்கிறார்களே, நாங்கள் சொல்லவில்லை, நாடு சொல்லுகிறது, மக்கள சொல்லுகிரார்கள. அதற்கு உங்கள் பதில் என்ன?  

இப்போது இந்த பதவி நீக்கம் கூட அவ்வளவு எளிதாக நடந்திருக்க வாய்ப்பில்லை. இராஜாவை அசைக்க முடியாது, காங்கிரசுடனான நட்பு அவ்வளவு உறுதியாக இருக்கிறது , போன காசு போனதுதான், சுரண்டப்  பட்டே அழிவதுதான் அப்பாவி இந்தியனின் தலை எழுத்து,  என்றே பலரும் எண்ணினார்கள. ஆனால் துணிவு உள்ள சிலர் சாதித்து  விட்டனர்.

தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா என்பது உங்களின் பஞ்ச் டையலாக். இந்த முறை  முழுத் தேனடையையும் எடுத்து விட்டது போல தோன்றுகிறது என மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

 உங்கள் பதில் என்ன? அடுத்த பஞ்ச் டயலாக்கை ரெடி பண்ணி வையுங்கள்.

Advertisements

8 Responses to "தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா…"

நல்ல கருத்துக்கள் மக்கள் மத்தியில் சமூக சிந்தனைகள் அரசியல் அறிவு வளர்ந்து போராட்ட குணங்கள் வந்தால் தான் நாட்டை காக்க முடியும் . ஆனால் இன்று மக்கள் மத்தியில் சுயநலமே மிஞ்சி இருக்கிறது . யார் எப்படி போனால் என்ன நான் நல்லா இருந்த போதும் . இந்த குணங்கள் தான் ஊழல் வாதிகளை ஊக்குவிக்கிறது . அன்புடன் சுரேஷ்

மிக்க நன்றி திரு. சுரேஷ் அவர்களே. சரியாக சொன்னீர்கள்!

திரு திருச்சிக்காரர் அவர்களே,

மிக நன்றாகக் கூறியிருக்கிறீர்கள்.நல்ல பதிவு.

///உங்கள் பதில் என்ன? அடுத்த பஞ்ச் டயலாக்கை ரெடி பண்ணி வையுங்கள்.///

“”அந்தப்!?!? பணத்தை, ஓட்டுக்காக கைநீட்டி வாங்கிவிட்டு, அதைப் பற்றிப் பேச, மக்களாகிய உங்களுக்கு, என்ன உரிமை இருக்கிறது.”””

தனபால் சார், கலக்கலாக இருக்கிறது உங்கள் பஞ்ச் டயலாக். தலைமைக் கழகம் பக்கம் வந்தால் உங்களையே அதிரடி கருத்து பரப்பு செயலாளர் ஆக்கி விடுவார்கள். அது சரி , பொது மக்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளுவது சட்டப் படி தவறா?

திருச்சி சார்,

உங்கள் பாராட்டுக்கு நன்றி சார்.அன்பளிப்புக் குடுப்பதோ,வாங்குவதோ தவறு இல்லை தான் .ஆனால் ????

பஞ்ச டயலாக் (கொஞ்ச நீளம் )no .2 .

ராசா செய்த ஊழல் பணம் உங்களுக்கு வேண்டுமென்றால் மிக பெரிய தொகையாக தெரியலாம் ஆனால், வடநாட்டான் ஒருவன் ஒன்றுமில்லாத புண்ணாக்கிலேயே 900 கோடி சுருட்டும் போது, நாட்டின் வளர்ச்சியின் பெரும் பங்கு வகிக்கும் தகவல் தொழில் நுட்பத்துறையில் ராஜா சுருட்டிய பணம் மிகக் குறைவே.(இன்னும் அதிகம் சுருட்டி இருக்கலாம்…..)வடநாட்டானை விட நம் திராவிட-தமிழன் ஒன்றும் குறைந்து விடவில்லை.

தமிழன் மானம் காத்த ராசாவே நீ வாழ்க.

பஞ்ச டயலாக் (கொஞ்சம் நீளம் ) 3 .

***ராஜா குற்றவாளி என்றால்.அந்த ஊழல் பணத்தைப் மக்களின் முக்கிய ஜனநாயகக் கடமையான ஓட்டிற்காக பெற்ற தமிழர்களே!!! நீங்களும் குற்றவாளிகளே, நீங்களும் உங்கள் வேலை, மற்றும் உங்கள் குடும்பப்பொறுப்பை ராஜினாமா செய்யுங்கள்.***

Makkal: Esssssscccccccaaaaaaapppee………

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 32 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

%d bloggers like this: