Thiruchchikkaaran's Blog

இந்துத்துவம் என்பது என்ன?

Posted on: November 17, 2010


‘நம் முன் உள்ள பணி’ என்ற தலைப்பில் சுவாமி விவேகானந்தர் சென்னையில் பேசிய பேச்சின் பகுதியை கட்டுரையில் குறிப்பிட்டு, பிறகு அதை  ஒட்டிய நம்முடைய கருத்தை தருகிறோம்.
நாம் எதையும் பிற நாடுகளுடன் ஒப்பிட்டு பார்பதற்காக வெளியே செல்லவில்லை. நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கும் செயல்பாடுகளை கவனிக்கவில்லை. இந்திய மனத்தின் வீழ்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணம். நீங்கள் பிற நாடுகளில் எந்த அளவிற்கு பயணம் செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுக்கு நல்லது, உங்கள் நாட்டிற்கும் நல்லது.
இதை நீங்கள் கடந்த நூற்றுகணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால், இன்று நீங்கள் உங்களை ஆள விரும்பும் ஒவ்வொரு நாடுகளுக்கும் அடிமையாக அவைகளின் கால்களில் வீழ்ந்து கிடக்க மாட்டீர்கள்.

நீங்கள் வாழவேண்டுமானால் கட்டாயம் விரிவு அடைய வேண்டும். நீங்கள் விரிவு அடையாமல் நிற்கின்ற அந்தக்கணமே மரணம் உங்கள் தலைக்கு வந்துவிட்டது. ஆபத்து அருகில் வந்து விட்டது.  வாழவேண்டுமானால் ஒவ்வொரு நாடும், நிச்சியம் எதையாவது கொடுத்தே ஆகவேண்டும். நாம் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம் என்பது உண்மை. அது எப்படி?

நாம் வாழ்ந்து வருவதற்கான காரணம் நாம் வெளி உலகிற்கு எப்போதும் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம் என்பது தான்.

மதம், தத்துவம், ஞானம், ஆன்மிகம் இவையே உலகிற்கு இந்தியா வழங்கும் கொடை, எனவே நாம் கொடுத்தாக வேண்டி இருந்தது. நாம் லண்டனில் இருந்தபொழுது ஒரு ஆங்கிலேய இளம்பெண் என்னிடம், ‘இந்துக்களாகிய  நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? ஒரு நாட்டைக்கூட நீங்கள் இதுவரை வெல்லவில்லையே!’ என்று கேட்டாள். வீரமும் தீரமும் உடைய க்ஷத்திரியர் ஆன ஆங்கிலேயர்களுக்கு இந்த கேள்வி சரிதான். ஒருவனை மற்றவன் வெல்வது தான் அவர்களை பொறுத்தவரை, பெருமைக்கு உரியது.இது அவர்களின் கண்ணோட்டத்தில் சரியானது.

ஆனால் நம் கண்ணோட்டம் இதற்கு மாறானது. இந்தியாவின் பெருமைக்கான காரணம் என்னவென்று என்னையே நான் கேட்டுகொண்டால் நாம் எப்போதும் யாரையும் வெல்லாததே என்று தான் பதில் சொல்வேன். அது தான் நமது பெருமை.

சில வேலைகளில் அரைகுறை ஆசான்கள் சில நமது மதத்தை பற்றி, அது  பிறரை வெல்கின்ற மதமாக இல்லை என்று குறைகூறுவதை நீங்கள் தினமும் கேட்கிறீர்கள். அவர்கள் கூறுகிற குறை தான் என்னை பொறுத்தவரையில் நமது நிறை. நமது மதம் பிற மதங்களை விட உண்மையாக இருப்பதற்கான காரணம் அது எப்போதும் யாரையும் வெற்றி கொள்ளவில்லை.

அது ஒருபோதும் ரத்தம் சிந்தவில்லை. அதன் உதடுகளிலிருந்து வாழ்த்து சொற்களே,  அமைதியும் அன்பும் கனிவும் நிறைந்த வார்த்தைகளே எப்போதும் வந்தன.

இங்கு, இங்கு மட்டும் தான் சகிப்பு தன்மை பற்றிய இலட்சியங்கள் முதலில் பிரச்சாரம் செய்யப்பட்டன.

இங்கு, இங்கு மட்டும் தான் சகிப்பு தன்மை அனுதாபம் முதலியவை செயல் படுத்தப்பட்டன. மற்ற எல்லா நாடுகளிலும் இவை வெறும் கொள்கை அளவில் தான் இருக்கின்றன.

இங்கு, இங்கு மட்டும் தான் இந்துக்கள் முகமதியர்களுக்கு மசூதிகளையும், கிறிஸ்தவர்களுக்கு சர்சுகளும் கட்டுகிறார்கள்.

*******************

இதுதான் அச்சு அசலான , உண்மையான,  இந்துத்துவம்,  இந்து தன்மை, இந்து மனப்பாங்கு!

பாப்ரி மஸ்ஜிதை இடித்தவர்களும், அந்த இடிப்பை ஆதரிப்பவர்களும், சுவாமி சொன்னதை நன்கு கவனிக்க வேண்டும். நீங்கள் உருவத்தில் இடித்தது பாப்ரி மசூதியை. உண்மையில் இடித்தது இந்து மதத்தை.

இன்று சுவாமி விவேகானந்தர் நம்முடன் இருந்திருந்தால் பாப்ரி மஸ்ஜித்தை இந்துக்கள இடித்தார்கள் என்று கேள்விப் பட்டவுடன் மிக்க வருத்தம் அடைந்தது மட்டுமல்லாமல் மிக்க கோவமும் அடைந்து இருப்பார்.

சுவாமி விவேகானந்தர், ஆதி சங்கரர், கிருஷ்ணர் இவர்கள்  எல்லாம் மிக முக்கியமாக நடத்திக் காட்டிய – (இவர்கள் மட்டுமல்ல- நான்கு வேதங்களும் அத்ரி பிருகு முதலான எல்லா ரிஷிகளும் ஒரு இடத்தில் கூட பிற மதங்களின் மீது ஒரு இடத்தில் கூட வெறுப்பைக் காட்டவில்லை – நல்ல கருத்துக்கள எங்கிருந்தும் வரலாம் என்றனர்)  மத நல்லிணக்கத்தை அழிப்பது இந்து மதத்தை அழிப்பது போலத்தான் என்பதை நினைவு படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.  பிற மதங்களின் மீது வெறுப்புணர்ச்சியைக் காட்டுவது இந்து தன்மையை இழப்பதாகவே இருக்கிறது என்பதியே நாம் சுவாமியின் கருத்துக்களில் இருந்து அறிகிறோம்

இனிமேலாவது  பிற மதங்களின் மீது வெறுப்புணர்ச்சி பாராட்டுவதை விட்டு விட்டு, இந்து மதத்தின் அசலான அமைதியான ஆன்மீகப் பாதைக்கு  , சகிப்புத் தன்மைக்கு, அனுதாபத்திற்கு இடம் கொடுங்கள் .

இந்துக்கள தங்கள் சம உரிமைக்காக , தங்கள் கோவில் நிலங்களுக்காக போராடுவது என்பது ஒரு விடயம், அதை செய்யும்போது பிற மதத்தவருக்கு எவ்விதத்திலும்  மனம் புண்படும்படியோ, அநியாயமாக நடந்ததாக கருதும்படியோ செய்வது சரி அல்ல.

Advertisements

4 Responses to "இந்துத்துவம் என்பது என்ன?"

விவேகானந்தர் கருத்துக்களுக்கு மாறு சொல்ல நாம் யார்? ஆனால் அதே சமயம் இந்தக் கருத்துக்களை நம் நாட்டு தாம் மதச்சார்பற்றிருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் பயங்கொள்ளிகளையும் வோட்டு வேட்டைக்காரர்களையும் வேஷதாரிகளையும் அது இந்த தலைமுறையில் பிறப்பித்து விட்டிருக்கிறது. இந்து என்றால் திருடன் என்று சொல்லும் மதச்சார்பின்மைக்கு என்ன சொல்வது? இவர்களது மதச்சார்பின்மை கயமை அல்லவா.

இந்து மத அபிமானம் பாப்ரி மஸ்ஜிதை இடிக்கச் செய்யவேண்டாம். ஆனால் அது ஒரு ஹிந்து கோயிலை இடித்துக் கட்டப்பட்டது, முஸ்லீம் மத வெறியர்களால் கட்டப்பட்டது என்ற உண்மை எல்லா இந்தியர்களுக்கும் எந்நாளும் நினைவுறுத்தும்படி செய்திருக்க வேண்டும். குதப்மினார் போவீர்களானால் அது இருந்த இடத்தில் முன்னர் இருந்த கோவிலைப் பற்றிய செய்தி சொல்லும் தொல்பொருள் ஆராய்ச்சியினரின் பலகை ஒன்று இருக்கும். அப்படி ஒரு போர்டை அங்கு தொங்க விட்டிருக்கலாம். நமது சரித்திரத பாடப் புத்தகங்களில் அது பற்றிச் சொல்லலாம். இஸ்லாம் ஒரு அமைதிமார்க்கம்ம் என்று சொல்லிக்கொண்டே வன்முறையில் இறங்கிக்கொண்டிருப்பவர்களுக்கும் அதை காலம் காலமாக நினைவுறுத்திக்கொண்டிருக்க வேண்டும். அது ம்சூதியே இல்லை. அது மசூதியாக பயன்படுத்தப்படவும் இல்லை. மசூதியாக இருந்த ஒன்று கைவிடப்பட்டது. வெறும் பாழ் கட்டிடம் தான் அது.

மசூதி மசூதி என்று இப்போது தான் 1991 க்கும்ப் பிறகு கூச்சலிடத் தொடங்கியிருக்கிறார்கள்.

மசூதியை இடித்தது, பல பொய்மைகளுக்கு பல வேஷதாரிகளுக்கு பிறப்பளித்திருக்கிறது.

பிற மதத்தினரைப் புண்படுத்தாது இருக்க நாம் முஸ்லீம்களுக்கும் கிறித்துவ மதப் பிரசாரகர்களுக்கும் சொல்ல் வேண்டும். ஹிந்துக்களுக்கு மாத்திரம் அல்ல. பெந்தகோட்ஸ்துக்காரகள் போடும் மதப் பிரசாரக் கூச்சல்களைக் கேட்டிருக்கிறார்களா யாராவது? அவர்களுக்குச் சொல்லவேண்டும் இதை. ரோடை அடைத்துக்கொண்டு மக்களும் வாகங்னக்ங்களும் போக விடாது, “நாங்கள் தொழுகை நடத்துகிறோம்” என்ற் அடாவடித்தனம் பண்ணும் முஸ்லீம்களை என்ன சொல்வது< இது தான் அமைதி மார்ககமா என்ன? அடாவடித்தனம். இந்த்ஃ அடாவடித்தனம் செல்லுபடியாவது மதச்சார்பின்மை போசும் பயங்கொள்ளி அரசியல் வாதிகள் காரணமாகத்தான்.

அன்புக்குரிய திரு. வெங்கட் சாமி நாதன் ஐயா அவர்களே, இந்தக் கட்டுரையைப் படித்து உங்களின் விரிவான கருத்தைப் பதிவு செய்துததற்க்கு எங்களின் உண்மையான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நீங்கள் பல முக்கிய கருத்துக்களை தெரிவித்து உள்ளீர்கள்!

//இந்து மத அபிமானம் பாப்ரி மஸ்ஜிதை இடிக்கச் செய்யவேண்டாம்.

இது ஒரு சிறந்த கருத்து . இதை அனைவரும் படிக்க வேண்டும்!

//இந்து என்றால் திருடன் என்று சொல்லும் மதச்சார்பின்மைக்கு என்ன சொல்வது? இவர்களது மதச்சார்பின்மை கயமை அல்லவா.//

உலகிலே தன்னை மத அடிப்படையில் இழிவு படுத்தும் போதும் பொறுமையாக இருப்பவன் இந்து ஒருவனே. இந்த சகிப்புத் தன்மையையும் பொறுமையையும் உலகம் முழுவதும் பரப்ப வேண்டும். இந்து திருடனா என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தியாவிலே வந்து இந்துவிடம் திருடிக் கொண்டு போனது யார், கொள்ளை அடித்துக் கொண்டு போனது யார், எத்தனை முறை கொள்ளை அடித்தார்கள் என்பது எல்லாம் வரலாற்றிலே உள்ளது. ஆனாலும் நீங்கள் சொல்வது போல ஓட்டு வேட்டையாட இந்துவை திருடன் என்று திட்டுகின்றனர். இதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனாலும் நீங்கள் சொல்வது போல ஓட்டு வேட்டையாட இந்துவை திருடன் என்று திட்டுகின்றனர். இதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஓட்டுக்காக மத சார்பின்மை என்ற பெயரில் இந்து மதத்தை மட்டும் திட்டி பலர் போலி மத சார்பின்மையாக செயலபடுகினறனர். ஆனால் சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, பாரதி ஆகியோர் போதித்தது எல்லா மதங்களையும் ஆக்க பூர்வமாக அணுகி அவற்றை அரவணைக்கும் உண்மையான நல்லிணக்கப் பாதை. போலி மத சார்பின்மையை எதிர்க்க உண்மையான மத நல்லிணக்கத்தைக் கைவிட முடியுமா?

//அது ம்சூதியே இல்லை. அது மசூதியாக பயன்படுத்தப்படவும் இல்லை. மசூதியாக இருந்த ஒன்று கைவிடப்பட்டது. வெறும் பாழ் கட்டிடம் தான் அது.

மசூதி மசூதி என்று இப்போது தான் 1991 க்கும்ப் பிறகு கூச்சலிடத் தொடங்கியிருக்கிறார்கள்.//

ஆனால் அது மசூதியோ இல்லையோ மசூதியைப் போல டோம் (dome) வைத்து கட்டப் பட்டு உள்ளது. அதை ஏன் இடிக்க வேண்டும், முறையான சட்ட அனுமதியின்றி இடிப்பது சரியா?

//பிற மதத்தினரைப் புண்படுத்தாது இருக்க நாம் முஸ்லீம்களுக்கும் கிறித்துவ மதப் பிரசாரகர்களுக்கும் சொல்ல் வேண்டும். ஹிந்துக்களுக்கு மாத்திரம் அல்ல. பெந்தகோட்ஸ்துக்காரகள் போடும் மதப் பிரசாரக் கூச்சல்களைக் கேட்டிருக்கிறார்களா யாராவது? //

பிற மதத்தினருக்கு சகிப்புத் தன்மையை , பிற மதங்களை வெறுக்காத மன நிலையை கற்றுத் தரக் கூடிய நிலையில் இருப்பவன் இந்துவே. அவன் கற்றுத் தருவதை விட்டு விட்டு அவனும் சகிப்புத் தன்மையை இழந்தால் அவன் இந்துத்துவத்தை இழப்பதாகத் தானே அர்த்தம்.

//ரோடை அடைத்துக்கொண்டு மக்களும் வாகங்னக்ங்களும் போக விடாது, “நாங்கள் தொழுகை நடத்துகிறோம்” என்ற் அடாவடித்தனம் பண்ணும் முஸ்லீம்களை என்ன சொல்வது< இது தான் அமைதி மார்ககமா என்ன? அடாவடித்தனம்.//

திருச்சியிலோ சென்னையிலோ இஸ்லாமியர்கள் ரோடை அடைத்துக் கொண்டு தொழுகை நடத்தி நான் பார்த்தது இல்லை. முஹர்ரம் நாளின் போது சேப்பாக்கம் பகுதில் வூர்வலமாக சாட்டையில் அடித்துக் கொண்டு செல்வதை பார்த்து இருக்கிறேன். அப்படி அவர்கள் ரோடை அடைத்துக் கொண்டு தொழுகை நடத்தினால் கூட அதிலே பெரிய பிரச்சினை இல்லை. அவர்கள் பிற மதங்களை வெறுக்காத மன நிலைக்கு, சகிப்புத் தன்மையுடன் கூடிய மனநிலைக்கு, வந்தால் அதுவே போதும் என்பதுவே என் கருத்து.

//உலகிலே தன்னை மத அடிப்படையில் இழிவு படுத்தும் போதும் பொறுமையாக இருப்பவன் இந்து ஒருவனே// அப்படி இருக்க வேண்டிய அவசியம் என்ன?

விமரிசனத்தை பொறுத்துக் கொள்ளும் மன நிலை மிக உயர்வானது. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை என்றார் வள்ளுவர். இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்றும் சொல்லி இருக்கிறார். தன்னுடைய கணவனுக்காக தன சுகங்களை துறந்து வனம் சென்ற சீதையை ,அவதூறு செய்தார் ஒரு குடிமகனார். இராமரோ ஆட்சியில், இலக்குவன், பரதன் … இவர்களோடு அரசாங்கக் இயந்திரமும் இருந்தது, அனுமன் உள்ளிட்டோரும் இருந்தனர். ஆனால் இராமரோ , வேறு யாருமோ அந்த குடி மகனுக்கு சிறு தீங்கும் செய்யவில்லை. இராமர் தவறு செயாத சீதையை தண்டித்து, தன்னையும் தண்டித்துக் கொண்டார். மற்றவருக்கு எடுத்துக் காட்டாக வாழ வேண்டிய தலைவனாக அரசன் இருக்க வேண்டும் என்பதால் இராமர் அப்படி செய்தார், இதுதான் இந்துத்துவம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: