Thiruchchikkaaran's Blog

எத்தனை பெரிய மனிதனுக்கு, எத்தனை சிறிய மனமிருக்கு, எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய மனமிருக்கு!

Posted on: November 16, 2010


 

 
 கார்கில் போரில் நம் எல்லையைக் காக்கும் (மீட்கும்) பணியில் போரிட்டு இறந்த வீரர்களின் விதவைகளுக்கு, சிறந்த வீடுகளை கட்டி தருவதாக சொல்லி ஆரம்பிக்கப் பட்ட ஆதர்ஷ் குடியிருப்பில் அரசியல் வாதிகளும், போரில் ஈடுபடாத இராணுவ அதிகாரிகளுக்கும், இன்னும் இப்படி  அப்படி பல பெரிய மனிதர்களும், தங்கள் பினாமி பேரிலே பட்டா போட்டுக் கொண்டு விட்டனர். 
இந்த ஆதர்ஷ் குடியிருப்பு ஹை ரைஸ் (High rise )  உயர் வசதி குடி இருப்பாகும். மும்பையின் மிக அருமையான கொலாபா ஏரியாவிலே இந்த குடியிருப்பை அமைத்து உள்ளனர்.
இது தொடர்பாக இதில் சம்பந்தப் பட்டிருப்பதாக சொல்லப் பட்ட மகாராஷ்டிர முதல்வர் அசோக்  சவான்,  ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டார்.  அவருக்குப் பதிலாக இன்னும் சிலரை பரிசீலனை செய்த போது , அவர்களிலும் ஒரு சிலரும் பினாமி பேரில்  இங்கே பிளாட் பெற்று இருப்பது தெரிய வந்ததாம்.
 
இது தொடர்பான பத்திரிக்கை செய்திகள்: 

//Mumbai’s Colaba area is right in the midst of the metropolis. All around is sky-rise 30 to 40 plus floor buildings. The reason behind is to accommodate maximum houses in barest minimum piece of land. It is land that is gold in a coastal city like Mumbai. So, when someone conceived the idea of building a sky-scrapper in the name of Adarsh housing society to house the widows of Kargil war victims- certainly a good cause towards those who laid down their lives for the nation- things moved pretty fast. Clearance of land was so quick by the Revenue department. Ashok Chavan, the CM who quit post now, was then Revenue Minister), Urban development department even didn’t care to get coastal zone Regulation (CRZ) from the GOI, Ministry of Environment. Things move so fast in any projects where the real motive look so pious outwardly but when so many hidden agendas lies covered up inside. Now that the real intent and motive of this sky-rise – a 31 storied building is out wherein stakes of several top politicians, bureaucrats and military veterans are involved.//

//மும்பையில் கார்கில் வீரர்களுக்கென ஒதுக்கப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பு வீடுகளை, கார்கில் வீரர்களுக்குப் பதில் பொதுமக்களுக்கும் சாதாரண ராணுவ வீரர்களுக்கும் ஒதுக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கார்கில் வீரர்கள் என்ற பெயில் வெளியிடப்பட்ட பட்டியலே போலி என்றும், அதில் கார்கில் வீரர்கள் என்ற பெயரில் சாதாரண பொதுமக்கள் பெயர்களும் இடம் பெற்றது தெரிய வந்துள்ளது.

கார்கில் வீரர்களுக்கு மும்பையில் 31 மாடிகள் கொண்ட ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதில் பிரிவு வாரியாக வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. வீடுகள் ஒதுக்கி வெளியிடப்பட்ட முதல் பட்டியலில் 71 பெயர் இருந்தது. இதில் 34 பேர் பொது மக்கள், 29 பேர் ராணுவ அதிகாரிகள், வீரர்கள், 8 பேர் ராணுவ தளபதிகள் ஆவர்.

இந்தப் பட்டியலில் கார்கிலுக்கு சம்பந்தமில்லாத ராணுவ வீரர்களையும் கார்கில் தியாகிகள் என்று குறிபிட்டு வீடு ஒதுக்கியுள்ளனர்.

மேலும், போலி பெயர்களிலும் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

உயர் வீடுகள் பிரிவில் மேஜர் ராஜீவ்குமார், அசேலால் தாகூர் ஆகியோருக்கு கார்கில் வீரர்கள் பிரிவில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் விந்தை என்னவென்றால் இவ்விருவரும் கார்கில் போரில் கலந்து கொள்ளவேவில்லை. இது குறித்து விசாரணை நடத்தினால் இன்னும் பல போலி பெயர்கள் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.//

மொத்தத்திலே கார்கில் போரில் , போர் முனையில் வீர மரணம் அடைந்த ஒருவரின் விதவை மனைவிக்காவது ஒரு குடியிருப்பாவது அலாட்மென்ட் ஆனதா என்று இப்போது சந்தேகமாக உள்ளது.
  சிறுவனாக இருக்கும் போது,  வானிலே பிணம் தின்னிக் கழுகுகள் பறந்தால் அவற்றை நாங்கள் அருவறுப்புடன் நோக்குவோம். பிறகு உணர்ந்து கொண்டோம்,   அவற்றின் மீது எந்த தவறும் இல்லை. இயற்கை நியதிப் படி பிணம் தின்னிக் கழுகுகளின் வாழ்வு ஆதாரமே இறந்தவர்ரின்  உடலை உண்ணுவதுதான், இல்லாவிட்டால் பசியால் வாடி அவை இறந்து விடும். அவைகளால் நிலத்தை  உழுது பயிர் செய்ய இயலாது. 
ஆனால் நம்ப ” பெரிய மனிதர்களுக்கு” பல “வாழ்வாதாரங்கள்” உள்ளன. அவ்வளவும் இருந்தும், போரிலே நாட்டுக்காக உயிர்த் தியாகம் வீரர்களையும் விட்டு வைக்கவில்லை.  நல்ல வேளை, போரில் இறந்த வீரர்களின் இறந்த உடலில் இருந்து கிட்னியை திருடி விற்காமல் இருந்தார்களே என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்!
பிணந் தின்னிக்  கழுகுகள் மிகவும் நேர்மையானவை,  நல்லவை  என்று சொல்லலாமா? 

 எத்தனை பெரிய மனிதனுக்கு, எத்தனை சிறிய மனமிருக்கு, எத்தனை சிறிய பறவைக்கு  எத்தனை பெரிய மனமிருக்கு?  

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 33 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: