Thiruchchikkaaran's Blog

இந்து மதம் பற்றிய கேள்விகளுக்கு பதில்!

Posted on: November 13, 2010


அன்புக்குரிய சகோதரர் ரசீன்  இந்து மதம் பற்றி சில கேள்விகளை கேட்டு இருக்கிறார்.  வரவேற்கிறோம்! அவருக்கு நமது விளக்கங்களை தருகிறோம்.

//ஒரு சகோதரரின் தளத்தில் நடந்த பின்னூட்ட கலந்துரையாடலில்,இஸ்லாம் மற்றும் ஹிந்துமதத்தின் வரையறைகளை பற்றி விவாதித்தோம்.

அப்போது எனக்கு ஹிந்துமதத்தின் வரையறை பற்றி எழும்பிய சில கேள்விகளுக்கு விளக்கம் கேட்டிருந்தேன்..பதில் இல்லை.எனவே அந்த கேள்விகளை பொதுவில் வைத்தால்,விருப்பம் உள்ள ஹிந்து சகோதரர்கள் பதில் தர ஏதுவாகுமே என அவற்றை இங்கே பதிக்கிறேன்…

உலகில் உள்ள எந்த மதமாகட்டும்,அல்லது இஸங்கள் ஆகட்டும்,சில கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்படுகிறது,அந்த கொளகையில் பிடிப்பு உள்ளவர் அந்த குறிப்பிட்ட மதத்தையோ,அல்லது அந்தந்த இஸங்களையோ சார்ந்தவராவார்.
இஸ்லாமும் ஒரு இஸ்லாமியனுக்கு சில அடிப்படைகளை வகுத்துள்ளது.அதை பின்பற்றுபவன் ஒரு அடிப்படை முஸ்லீம் என்ற தகுதியை பெறுகிறான்.அவனது மோட்ஷம் என்பது அவன் இஸ்லாத்தை அடிபிறழாமல் கடைப்பிடித்து,இறைப்பொருத்தம் அடைவதில் தான் இருக்கிறது.

ஒரு அடிப்படை முஸ்லீமாக இருப்பவன்,மோட்ஷம் அடைந்த முஸ்லீமின் தகுதியை எக்காலும் அடைய முடியாது,

எனவே ஒரு முஸ்லீமாக,இறைவனின் திருப்பொருத்தத்தை பெற,இஸ்லாம் வகுத்த வழியில் செல்வதே,அதை அடைய போதுமான நேரான வழியாக இருக்குமென்பது தெளிவு.அதுதான் சரியும் கூட.

சரி ஹிந்து மதத்தை பொருத்தவரை இவ்வாறு சொல்லப்படுகிறது….

//ஒருமதத்தில் இலக்கு மட்டுமே முக்கியம்,இலக்கை அடைய பல வழிகள் இருக்கின்றன,உனக்கு எது சரிப்படுகிறதோ அந்த வழியில் போகலாம்,எதுவும் சரிப்படவில்லை என்றால் நீயே ஒரு பாதையை உருவாக்கலாம் என்று சொல்கிறது//

இது எனக்கு ஏற்புடையதாக,மற்றும் சரியான வழிகாட்டுதலாகவும் தெரியவில்லை.ஹிந்து மதத்தில் கொள்கைகள்,கோட்பாடுகள் என்பன உண்டுதானே.பல வழிகள் உண்டு,எது வேண்டுமானாலும் எடுத்துக்கலாம்.ஏதும் புடிக்கலைனா நீயே ஒரு வழியில் போகலாம்.அப்டீன்னா? ஒன்னும் புரியல…ஹிந்துமதத்தின் வரையறைதான் என்ன???//

 

 

 

 

இலக்கை அடைய பல வழிகள் இருக்கின்றன,உனக்கு எது சரிப்படுகிறதோ……

பல வழிகள் இருக்கிறது என்றால் –  ஒரு மனிதனின் ஆன்மீக முயற்ச்சிக்கு உதவ,  மேலும் நல்லவனாக முன்னேற்ற பல வழிகள் உள்ளன   என்பதுதான் அதன் அர்த்தம் , தீமை பாதைக்கு போகலாம் என்பது அர்த்தம் அல்ல.

 கடமையை சரியாக செய்வதே ஒரு சிறந்த  ஆன்மீக வழி,  கர்ம  யோகம் எனப்படுகிறது.

இன்னும் பல வழிகளாக- செயல்களினால் கிடைக்கும் பலனகளை  தியாகம் செய்வது ,

  தியான யோகம், பக்தி யோகம்… இப்படியாக பல வழிகள் உள்ளன.

ஒருவன் எதை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்பதுதான் பல வழிகள் உள்ளன என்று சொல்வது. தீமைப் பாதைக்கு செல்வதை இந்து மதம் விரும்பவில்லை. ஒருவன் அறியாமையினாலே தீமைப் பாதைக்கு செல்கிறான் என்பதையும், எந்த அளவுக்கு அறியாமை நீங்கிய நிலையை அடைகிறானோ அந்த அளவுக்கு  அவன் நல்ல வழிக்கு வருவான் என்பதும் இந்து மதத்தின் கோட்பாடு.

சுவாமி  விவேகானந்தர் சிகாகோவில்  பேசும்போதே தெளிவாக சொல்லி இருக்கிறார்.   “மற்ற மதங்கள் எல்லாம் ஜாக், ஜான் , ஹென்றி என  எல்லோருக்கும் ஒரே அளவான சட்டையை தரும்போது, இந்து மதம் அவரவர்க்கு பொருத்தமான அளவுள்ள சட்டையை தருகிறது”  என்றார் சுவாமி  விவேகானந்தர்.

பக்தி வழிபாடுகளிலும் பல வழி முறைகள் உள்ளன.  

ரோட்டோர பிள்ளையார் கோவிலில் ஒரு நிமிடம் நின்று சாமி கும்பிடுபவனும் இந்துதான். ஒரு முழத் துணியுடன், இமய மலையில் தவம் செய்பவனும் இந்துதான்.

 ஆண்டவன் பற்றிய தேடல், ஆராய்ச்சியில்  எந்த அளவுக்கு  ஒருவன் ஈடுபட  விரும்புகிறானோ, அந்த அளவுக்கு அவன் ஈடுபட்டுக் கொள்ளலாம். சாமியே கும்பிடாதவனும் இந்துதான். கடவுளை தொழுதே ஆக வேண்டும் என்று என்ன கட்டாயம் ? கடவுளை கும்பிடாவிட்டால் உன்னை தண்டிப்பேன் என்று   எந்த இந்து மத நூலிலும் சொல்லவில்லை.

மேலும் கடவுள் இல்லை என்று சொல்லுபவருக்கும் இந்து மதத்தில் இடம் உண்டு.

ஏன் கடவுள் இல்லை என்று சொல்லக் கூடாது?

என்னவோ கடவுளை நமக்கு

காட்டி விட்டது போலவும்  

போலவும், அவரைப் பார்த்தும் கடவுள் இல்லை என்று சொல்லி விட்டது போலவும்,  ” கடவுள் இல்லை என்று சொல்கிறார்களே” என்று வருத்தப் படுகின்றனர்.

 கடவுளை பார்க்காததால்,  பார்க்கவில்லை, இல்லை,  என்கிறான்.  அவனை எதற்கு இந்து மதம் ஒதுக்க வேண்டும்?  

நாம்  அன்புக்குரிய சகோதரர் ரசீனுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், நீங்கள் உங்கள மார்க்கத்தையோ,   அல்லது வேறு மார்க்கத்தையோ நினைவில் வைத்துக் கொண்டு உலகில் உள்ள எல்லாம் அப்படி தான் இருக்க வேண்டும் என்று எதிர்பாரக்கிரீர்கள். 

இந்து மாலை போட்டுக் கொண்டு சபரி மலைக்கு செல்வான், அல்லது திருப்பதி போய் மொட்டை போடுவான். அல்லது எதுவுமே செய்யாமல் கூட இருப்பான்.

இந்து மதம் எதிர்பார்ப்பது என்னவென்றால்,  அடுத்தவருக்கு தீங்கு நினைக்காமல் இருக்க வேண்டும், கடமையை செய்ய வேண்டும், உண்மையை பேச வேண்டும் …. இது போன்றவைதான்.  இவற்றை எந்த அளவுக்கு ஒருவன் பின்பற்றுகிறானோ, அந்த அளவுக்கு அவன் இந்து தன்மை உடையவனாக இருக்கிறார். எந்த அளவுக்கு இது போன்ற தன்மைகளுக்கு மாறாக நடந்து கொள்கிறானோ அந்த அளவுக்கு அவன் இந்து தன்மை குறைந்தவனாக இருக்கிறான்.

கடவுளை கும்பிடுவதோ இல்லையோ அவரவர் விருப்பம். இந்து  மதம் சுதந்திரமான மதம்.  கட்டளைகளை போட்டு எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே ஒத்துக் கொள்ள வேண்டும் என்பது எல்லாம் இங்கே நடக்காது. அப்படி கேள்வி கேட்க அனுமதி இல்லாத கருத்தாக்கத்தில் பழகிப்போன நண்பர்கள், அதே மைன்ட்   செட்டோடு இந்து மதத்தையும் அணுகி, எனக்கு ஒப்பில்லை என்றால் என்ன செய்ய முடியும்?  

(தொடரும்)

Advertisements

3 Responses to "இந்து மதம் பற்றிய கேள்விகளுக்கு பதில்!"

திரு.திருச்சிக்காரர் அவர்களே,

அய்யா அருமையான விளக்கம்.இந்தப் பதிவை/ பதிலை நண்பர் நஜின் தளத்திலும் பதிக்கலாமே.

நல்ல விளக்கம். நன்றி.

Our Thanks to Mr. Dhanabal & Mr. Seenu

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Share this blog

Facebook Twitter More...

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 35 other followers

அண்மைய பின்னூட்டங்கள்

Top Rated

Categories

டிச‌ம்ப‌ர் 09

Advertisements
%d bloggers like this: